சூரா 10: ஜோனா (யூனுஸ்)
[10:0]கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[10:1]அ.ல.ர.* (எழுத்துக்களாகிய) இவை ஞானம் கொண்ட இந்த புத்தகத்தின் சான்றுகளாகும்.
அடிகுறிப்பு

[10:2]அவர்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நாம் உள்ளுணர்வளித்தது, மனிதர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளதா? அவர் “நீர் மக்களை எச்சரிக்க வேண்டும், மேலும் நம்பிக்கை கொண்டோருக்கு, அவர்கள் உயர்மதிப்பு மிக்கதோர் பதவியை தங்கள் இரட்சகரிடம் அடைந்து விட்டனர் என்ற நற்செய்தியை வழங்குவீராக”. (இவ்வாறு கூறும்படி உள்ளுணர்வளிக்கப்பட்டார்). நம்ப மறுப்போர், “இவர் ஒரு சாமர்த்தியமான மந்திரவாதி!” என்று கூறினார்கள்.
[10:3]உங்களுடைய ஒரே இரட்சகர் கடவுள் தான்; வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்துப், பின்னர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக் கொண்டவர். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்துகின்றார். அவருடைய நாட்டத்திற்கு இணங்கவே அன்றி, பரிந்துரைப்பவர் எவரும் இல்லை. உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அவரையே நீங்கள் வழிபடவேண்டும். நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?
[10:4]அவரிடமே உங்களுடைய, உங்கள் அனை வருடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது. இது கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதி யாகும். நம்பிக்கை கொண்டு நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்கு, நீதமாக வெகு மதியளிப்பதற்காக, அவர் படைப்பைத் துவங்கு கின்றார், பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். நம்ப மறுப்போரைப் பொறுத்த வரை, அவர்கள் அவர்களுடைய நம்ப மறுப்பின் காரணமாக நரகின் பானங்களுக்கும், வலி மிகுந்ததொரு தண்டனைக்கும் உள்ளா கின்றார்கள்.
[10:5]அவர்தான் சூரியனை ஒளிரக்கூடியதாகவும், சந்திரனை ஒரு விளக்காகவும் ஆக்கியவர், மேலும் வருடங்களை எண்ணும் முறையை நீங்கள் அறிந்து கொள்ளவும், மேலும் கணக் கிடவும் அதன் நிலைகளை அவர் வடிவமைத்தார். கடவுள் இவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அன்றிப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் மக்களுக்கு, இந்த வெளிப்பாடுகளை அவர் விவரிக்கின்றார்.
[10:6]நிச்சயமாக, இரவு மற்றும் பகலின் மாற்றங்களிலும், மேலும் வானங்கள் மற்றும் பூமியில் கடவுள் படைத்தவற்றிலும், நன்னெறியாளர் களான மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.

இவ்வுலகுடன் மூழ்கி விடுதல்

[10:7]நம்மைச் சந்திப்பதை எதிர்ப்பார்க்காதிருப் பவர்கள், மேலும் இவ்வுலக வாழ்வில் மூழ்கியிருப்பவர்கள் மேலும் அதனைக் கொண்டு திருப்தியடைந் தவர்கள், மேலும் நமது சான்றுகளைக் கவனத்தில் கொள்ள மறுப்பவர்கள்;
[10:8]இவர்கள், தங்களுடைய சொந்தச் செயல்களின் விளைவாக, தங்களுடைய இறுதியான தங்கு மிடமாக நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.

நம்பிக்கையாளர்களைக் கடவுள் வழிநடத்துகின்றார்

[10:9]நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர் களுடைய இரட்சகர், அவர்களுடைய நம்பிக்கை எனும் சீரிய பண்பினால், அவர்களை வழிநடத்துகின்றார். பேரானந்தமான தோட்டங் களில் அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.
[10:10]அங்கே அவர்களுடைய பிரார்த்தனையானது: “எங்கள் தெய்வமே, நீரே துதிப்பிற்குரியவர்”, அங்கே அவர்களுடைய வாழ்த்தானது, “அமைதி”, மேலும் அவர்களுடைய முடிவான பிரார்த்தனையானது: “பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்பதாக இருக்கும்.
[10:11]மனிதர்கள் உள்ளாகியிருக்கும் தண்டனையை, வாழ்வாதாரங்களை அவர்கள் கேட்கும் விதத்தைப் போல, கடவுள் துரிதப்படுத்தியிருப்பாராயின் நெடுங்காலத்திற்கு முன்னரே அவர்கள் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆயினும், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்களை, அவர்களுடைய வரம்பு மீறல்களில், குருட்டுத் தனமாகத் தவறுகள் செய்யும்படி நாம் விட்டு விடுகின்றோம்.
[10:12]துன்பம் மனிதனைத் தீண்டும் போது, அவன் படுத்த வண்ணமோ, அமர்ந்த வண்ணமோ, நின்ற வண்ணமோ நம்மிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான். ஆனால் நாம் அவனு டைய துன்பத்தை நிவர்த்தி செய்தவுடன், எந்தக் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்யும்படி நம்மிடம் ஒருபோதும் இறைஞ்சிப் பிரார்த்திக் காதவன் போல அவன் சென்று விடுகின்றான்! வரம்பு மீறுபவர்களின் செயல்கள், இவ்விதமாக அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன.

கடந்த காலத்திலிருந்து படிப்பினைகள்

[10:13]உங்களுக்கு முன்னிருந்த பல தலைமுறையினரை அவர்கள் வரம்பு மீறியபோது நாம் அழித்திருக் கின்றோம். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டனர். குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.

இப்போது உங்களுடைய முறை

[10:14]அதன் பின்னர், நீங்கள் எப்படிச் செய்யப் போகின்றீர்கள் என்பதைக் காண்பதற்காக, அவர்களுக்குப் பின்னால், உங்களை நாம் இந்த பூமிக்கு வாரிசாக்கினோம்.

ஒவ்வொரு எழுத்தும் கணக்கிடப்பட்டு, மேலும் தெய்வீகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

[10:15]நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் ஓதிக்காட்டப்படும்போது, நம்முடைய சந்திப்பை எதிர்பார்க்காதிருப்பவர்கள், “இது அல்லாத ஒரு *குர்ஆனைக் கொண்டு வாரும், அல்லது இதனை மாற்றி விடும்!” என்று கூறுகின்றார்கள். “நானே சுயமாக இதனை மாற்றிவிட எனக்குச் சாத்திய மில்லை. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். என் இரட்ச கருக்கு நான் கீழ்ப்படியாவிட்டால், அச்சமூட்டும் ஒரு நாளின் தண்டனைக்கு நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

[10:16]“கடவுள் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக்காட்டியிருக்க மாட்டேன், அன்றியும், இது குறித்து எதனையும் நீங்கள் அறிந்திருக்கவும் மாட்டீர்கள். இதற்கு முன்னர், ஒரு முழுமையான வாழ்வை உங்கள் மத்தியில் நான் வாழ்ந்திருக்கின்றேன் (மேலும் நீங்கள் என்னை புத்தியுள்ள, உண்மையான ஒரு மனிதனாக அறிந்திருக்கின்றீர்கள்). நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?” என்று கூறுவீ ராக.
[10:17]கடவுள்-ஐப்பற்றிப் பொய்களை இட்டுக்கட்டும் ஒருவனை விட, அல்லது அவருடைய வெளிப் பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவனை விடப் பெரிய பாவி யார்? மிக உறுதியாக, வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.
[10:18]கடவுள்-உடன் தங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயனளிக்கவோ சக்தியற்ற இணைத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர், மேலும் அவர்கள், “இவர்கள் கடவுள்-இடம் எங்களுக்கு பரிந்துரை செய்பவர்கள்!” என்று கூறுகின்றார்கள். “வானங்களிலோ அல்லது பூமியிலோ, கடவுள் அறியாத சிலவற்றை அவருக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா?”என்று கூறுவீராக. அவர் துதிப்பிற்குரியவர். பங்குதாரர்கள் தேவைப் படுவதை விட்டும், அவர் மிகவும் உயர்வானவர்.
[10:19]மனிதர்கள் ஒரே கூட்டத்தவராகவே இருந்து வந்தனர், பின்னர் அவர்கள் தர்க்கித்துக் கொண்டனர். உமது இரட்சகரிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வார்த்தை இல்லா திருந்தால், அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து உடனடியாக அவர்கள் தீர்ப்பளிக்கப் பட்டிருப்பார்கள்.

குர்ஆனின் அற்புதம் முஹம்மதிற்குப் பின்னரே திரை விலக்கப்பட இருந்தது

[10:20]அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு அற்புதம் எதுவும் இறங்கி வராதிருப்பது ஏன்?” என்று கூறுகின்றார்கள். எதிர்காலம் கடவுள்-க் குரியது; எனவே காத்திருங்கள், மேலும் நானும் உங்களுடன் காத்திருக்கின்றேன்” என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

கலகக்கார மனிதர்கள்

[10:21]துன்பம் அவர்களைத் தாக்கியதற்குப் பின்னர், மக்களின் மீது நாம் கருணையை அளிக்கும் போது, அவர்கள் உடனடியாக நமது வெளிப்பாடுகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர்! “கடவுள்-ன் திட்டம் மிக அதிகத் திறன் வாய்ந்தது. ஏனெனில் நமது தூதர்கள் உங்கள் சூழ்ச்சியான விஷயங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருக் கின்றனர்” என்று கூறுவீராக.
[10:22]அவர்தான் உங்களை தரையிலும் மற்றும் கடலிலும் பயணிக்கச் செய்கின்றார். நீங்கள் கப்பலில் ஏறிக் கொள்கின்றீர்கள், மேலும் அவை மிதமான நல்ல காற்றில் இதமாக மிதந்து செல்கின்றன. பின்னர் அதிலே மகிழ்ந்திருக்கும் சமயம், உக்கிரமான காற்று வீசுகின்றது, மேலும் அலைகள் அவர்களை ஒவ்வொரு புறத்திலிருந்தும் சூழ்ந்து கொள்கின்றது. இந்த வேளையில் தான் அவர்கள், உண்மையோடு தங்கள் பிரார்த்தனைகளை அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக கடவுள்-இடம்: “இந்த முறை மட்டும் எங்களை நீர் காப்பாற்றுவீரானால், என்றென்றும் நாங்கள் நன்றியுடன் இருப்போம்” என்று இறைஞ்சிப் பிரார்த்தனை செய்கின்றார்கள்.
[10:23]ஆனால் அவர்களை அவர் காப்பாற்றியவுடன், அவர்கள் பூமியில் வரம்பு மீறுகின்றனர், மேலும் சத்தியத்தை எதிர்க்கின்றனர். மனிதர்களே, உங்களுடைய வரம்பு மீறல்கள் உங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கு மட்டுமே கேடாகும். நீங்கள் இவ்வுலக வாழ்வில் முற்றிலும் மூழ்கியவர் களாகவே இருக்கின்றீர்கள், பின்னர் நம்மிடமே உங்கள் இறுதித் திரும்புதல் உள்ளது, அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்த ஒவ்வொன்றையும் நாம் உங்களுக்குத் தெரிவிப்போம்.
[10:24]இவ்வுலக வாழ்விற்குரிய உதாரணம் இது போன்றதேயாகும்: பூமியில் இருந்து எல்லா வகைத் தாவரங்களை முளைப்பிக்கவும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவு வழங்கவும் விண்ணிலிருந்து நாம் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றோம், பின்னர் பூமி பூரணமாக அலங்கரிக்கப்பட்டு, மேலும் அதன் மக்கள் அதன் மீது முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் போது, நம்முடைய தீர்ப்பு இரவிலோ அல்லது பகலிலோ* வருகின்றது, முந்திய நாளில் எதுவுமே இல்லாமலிருந்ததைப் போல, அதனை முற்றிலும் தரிசாக்கி விட்டு விடுகின்றது. சிந்திக்கும் மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை நாம் இவ்விதமாக விவரிக்கின்றோம்.
அடிகுறிப்பு

[10:25]கடவுள் உங்களை அமைதியான இல்லத்தின் பால் அழைக்கின்றார், மேலும் தான் நாடு வோரை நேரானதொரு பாதையில் வழிநடத்து கின்றார்.

சுவனமும் நரகமும் நிலைத்திருப்பவை

[10:26]நன்னெறியாளர்களுக்குரிய வெகுமதி, பன்மடங்காகப் பெருக்கப்படும். அவர்களு டைய முகங்கள் எவ்வித நஷ்டத்தையோ அல்லது கேவலத்தையோ ஒரு போதும் அனுபவிக்காது. இவர்கள்தான் சுவனவாசிகள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.
[10:27]பாவங்களைச் சம்பாதித்தவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய பிரதிபலன் அவர்களு டைய பாவங்களுக்குச் சரி சமமானதேயாகும். இழிவுதான் அவர்களுடைய பங்கு, மேலும் கடவுள்-ஐ அன்றி எவர் ஒருவராலும் அவர்களைக் காப்பாற்ற இயலாது. இருண்ட இரவின் இருள்குவியல்களால் அழுத்தப்பட்ட வையாக அவர்களுடைய முகங்கள் காணப் படும். அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.

இணைத்தெய்வங்கள் தங்களை வழிபடுபவர்களைக் கைவிட்டு விடும்

[10:28]அவர்கள் அனைவரையும் நாம் ஒன்றுகூட்டும் அந்நாளில், இணைத்தெய்வங்களை வழி பட்டவர்களிடம் நாம், “உங்கள் இணைத் தெய்வங்களுடன் சேர்த்து, உங்களை நாம் வரவழைத்திருக்கின்றோம்” என்று கூறுவோம். அவர்கள் ஒருவருக்கொருவரை எதிரெதிராக நாம் நிறுத்துவோம், மேலும் அவர்களுடைய இணைத் தெய்வங்கள் அவர்களிடம் கூறுவார்கள், “நீங்கள் எங்களை இணைத்தெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்தது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
[10:29]“எங்களை நீங்கள் வழிபட்டுக் கொண்டி ருந்ததைப் பற்றி நாங்கள் முற்றிலும் அறியாதவர்களாக இருந்தோம் என்பதற்கு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சாட்சியாக இருக்கக் கடவுள் போதுமானவர்.”
[10:30]அப்போது தான் ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த ஒவ்வொன்றையும் குறித்துப் பரிசீலித்துப் பார்க்கும். மேலும் அவர்களுடைய உரிமையுள்ள இரட்சகரும், எஜமானருமான, கடவுள்-இடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள், மேலும் அவர்கள் பொய்யாக உருவாக்கிய இணைத்தெய்வங்கள் அவர் களைக் கைவிட்டு விடுவார்கள்.
[10:31]“வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வழங்குபவர் யார்? செவிப்புலன் மற்றும் பார்வைப் புலன் அனைத்தையும் கட்டுப்படுத்து பவர் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ள வற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்த வற்றையும் வெளிக்கொண்டு வருபவர் யார்? அனைத்து விஷயங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் யார்?”என்று கூறுவீராக. அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “பின்னர் நீங்கள் ஏன் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை?” என்று கூறுவீராக.
[10:32]இவ்விதமானவர் கடவுள், உங்களுடைய உரிமையுள்ள இரட்சகர். சத்தியத்திற்கு அப்பால், பொய்மைகளைத் தவிர வேறென்ன இருக்கின்றது? இவை அனைத்தையும் நீங்கள் எப்படி அலட்சியப்படுத்த இயலும்?
[10:33]தீயவர்களாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து விட்டவர்களுக்கு உமது இரட்சகரின் முடிவால் ஏற்படுவது இதுதான்: அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.

உங்களுடைய இணைத்தெய்வங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்

[10:34]“உங்களுடைய இணைத் தெய்வங்களில் எவையேனும் படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்ய முடியுமா?” என்று கூறுவீராக. “கடவுள் படைப்பைத் துவங்கு கின்றார், பின்னர் அதனை மீண்டும் செய் கின்றார்,” என்று கூறுவீராக.
[10:35]“உங்களுடைய இணைத் தெய்வங்கள் எவை யேனும் சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றன வா?” என்று கூறுவீராக. “கடவுள் தான் சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றார். “பின்பற்றத் தகுதியுடையவர் சத்தியத்தின் பால் வழிநடத்தும் ஒருவரா அல்லது வழிகாட்டாத, மேலும் தனக்கே வழிகாட்டல் தேவைப்படக் கூடிய ஒருவரா? உங்களுடைய தீர்ப்பில் என்ன கோளாறு?” என்று கூறுவீராக.
[10:36]அவர்களில் பெரும்பாலோர் யூகத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, மேலும் யூகமானது சத்தியத்திற்கு எவ்வகையிலும் மாற்று அல்ல. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

கடவுள் மட்டுமே குர்ஆனை இயற்றியிருக்க இயலும்

[10:37]கடவுள்-ஐ அன்றி மற்றவரால் இந்தக் குர்ஆன் இயற்றப்பட்டிருக்கச் சாத்தியமில்லை. இது முந்திய எல்லாத் தூதுச் செய்திகளையும் உறுதிப் படுத்துகின்றது, மேலும் ஒரு முற்றிலும் விவரிக்கப் பட்ட வேதமாகத் திகழ்கின்றது. இது சந்தேகத் திற்கு அப்பாற்பட்டது; ஏனெனில் இது பிரபஞ்சத் தின் இரட்சகரிடமிருந்து வந்துள்ளது.
[10:38]“அவர் இதனை இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறினால், “நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், பின்னர் இவற்றைப் போன்ற ஒரு சூராவைக் கொண்டு வாருங்கள், மேலும் கடவுள்-ஐத் தவிர, நீங்கள் விரும்பியவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக.
[10:39]உண்மையில், அவர்கள் இதனை ஆய்வு செய்தும், பரிசீலித்தும் பார்க்காமல், மேலும் இதனைப் புரிந்து கொள்வற்கும் முன்னர், இதனை ஏற்க மறுத்து விட்டனர். அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இவ்விதமாகவே நம்ப மறுத்தனர். ஆகையால், வரம்பு மீறியவர்களுக்கான விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.
[10:40]அவர்களில் சிலர் (இந்த வேதத்தில்) நம்பிக்கை கொள்கின்றனர், அதே சமயம் மற்றவர்கள் இதில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். உமது இரட்சகர் பாவம் செய்பவர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[10:41]அவர்கள் உம்மை ஏற்க மறுத்தால், பின்னர், “என் செயல்கள் எனக்குரியது, உங்கள் செயல்கள் உங்களுக்குரியது. நான் செய்யும் எந்த ஒன்றிற் காகவும் நீங்கள் குற்றமற்றவர்கள் ஆவீர்கள், மேலும் நீங்கள் செய்யும் எந்த ஒன்றிற்கும் நான் குற்றமற்றவன் ஆவேன் ” என்று கூறுவீராக.
[10:42]அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துக் கேட்கின் றனர், ஆனால் அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத போது, செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் இயலுமா?

மனிதர்கள் தங்கள் பாதையைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கின்றனர்

[10:43]அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துப் பார்க்கின் றனர், ஆனால் அவர்களால் பார்க்கவே முடியாத போது, குருடர்களை வழிநடத்த உம்மால் இயலுமா?
[10:44]கடவுள் ஒருபோதும் மனிதர்களுக்கு அநீதம் இழைப்பதில்லை; மனிதர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதியிழைத்துக் கொள்கின்றனர்.
[10:45]அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்நாளில், இவ்வுலகில் அவர்கள் சந்தித்த காலத்தை, ஒரு நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் கழித்ததைப் போல் உணர்ந்துக் கொள்வார்கள். கடவுள்-ன் சந்திப்பில் நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களும், மேலும் வழிதவறுவதைத் தேர்ந்தெடுத்து கொண்டவர்களும், உண்மையில் நஷ்டவாளிகள் ஆவர்.
[10:46]அவர்களுக்கு நாம் வாக்களிக்கும் (தண்டனை யில்) சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலும், அல்லது அதற்கு முன்பே உமது வாழ்வை முடித்து விட்டாலும், அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம் வசமே உள்ளது. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக உள்ளார்.
[10:47]ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒரு தூதர். அவர்களுடைய தூதர் வந்துவிட்ட பின்னர், சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப் படுகின்றனர்.
[10:48]அவர்கள்: “நீர் உண்மை கூறுவதாக இருந்தால், இந்த முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும்?” என்று அறைகூவல் விடுகின்றனர்.

தூதர் எந்தச் சக்தியும் கொண்டவரல்ல

[10:49]“எனக்கே தீங்கிழைத்துக் கொள்ளவோ, அல்லது எனக்கே நன்மை செய்து கொள்ளவோ நான் எந்தச் சக்தியும் பெற்றிருக்கவில்லை; கடவுள் நாடுகின்றது மட்டுமே நிகழும்” என்று கூறுவீராக. ஒவ்வொரு சமூகத்திற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வாழ்க்கைக் கால அளவு உள்ளது. அவர்களுடைய தவணை முடிவிற்கு வந்து விட்டால், அவர்களால் அதனை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தவோ, அன்றி முற்படுத்தவோ இயலாது.
[10:50]கூறுவீராக, “அவருடைய தண்டனை இரவிலோ அல்லது பகலிலோ எதில் உங்களிடம் வருவதானாலும், வரம்பு மீறுபவர்கள் ஏன் இப்படி அவசரப் படுகின்றனர்?
[10:51]“அது நிகழ்ந்து விட்டால், அப்போது நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா? அப்போது ஏன் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்? அது வரட்டும் என்று நீங்கள் சவால் விட்டுக் கொண்டி ருந்தீர்களே?”
[10:52]வரம்பு மீறியவர்களிடம், “முடிவேயில்லாத தண்டனையைச் சுவையுங்கள். நீங்கள் எதனைச் சம்பாதித்தீர்களோ அதற்கான பிரதிபலனை மிகச்சரியாக கொடுக்கப்படுகின்றீர்கள் அல்ல வா? ” என்று கூறப்படும்.
[10:53]அவர்கள் உம்மிடம்: “ உண்மையில் இதுதான் நிகழப்போகின்றதா?” என்று முன்னறிவிப்பிற்கு சவால் விடுகின்றனர். “ஆம் உண்மையில், என் இரட்சகர் மீது ஆணையாக, இதுவே சத்தியமாகும், மேலும் நீங்கள் ஒருபோதும் தப்பித்து விட இயலாது” என்று கூறுவீராக.

விசுவாசத்திற்கு என்ன விலை

[10:54]எந்த ஒரு தீய ஆன்மாவேனும் பூமியில் உள்ள அனைத்தையும் சொந்தமாக வைத்திருந் தாலும், உடனடியாக அதனை மீட்புத் தொகை யாகக் கொடுக்கத் தயாராகி விடும். தண்டனையை அவர்கள் காணும் பொழுது குற்றமுணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்திற்கு அவர்கள் உள்ளாகிவிடுவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.
[10:55]நிச்சயமாக, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குரியது. நிச்சயமாக, கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமானதாகும், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
[10:56]அவர் வாழ்வையும், மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றார், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
[10:57]மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு இதிலே ஞான உபதேசமும், மேலும் உங்கள் இதயங்களைத் தொந்தரவு செய்யக் கூடிய எந்த ஒன்றிற்கும் நிவாரணமும், மேலும் வழிகாட்டலும், மேலும் நம்பிக்கையாளர்களுக்குக் கருணையும் வந்துள்ளது.

நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி

[10:58]“கடவுள்-ன் அருளைக் கொண்டும் மேலும் அவருடைய கருணையைக் கொண்டும் அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்” என்று கூறுவீராக. அவர்களால் சேகரிக்க முடிந்த எந்தச் செல்வத்தையும் விட இது மிகவும் மேலானது.

மனிதர்களால்-ஏற்படுத்தப்பட்ட உணவுத் தடைகள்

[10:59]“கடவுள் எவ்வாறு எல்லாவிதமான வாழ்வாதாரங்களையும் உங்களுக்கு இறக்கி அனுப்புகின்றார் என்பதையும், பின்னர் அவற் றில் சிலவற்றை நீங்கள் அனுமதிக்கபட்டதாக வும், மேலும் சிலவற்றை தடை செய்யப்பட்ட தாகவும் ஆக்கிக்கொள்கின்றீர்கள் என்பதை யும் நீங்கள் கவனித்துப்பார்த்தீர்களா?” என்று கூறுவீராக. “இதனைச் செய்வதற்குக் கடவுள் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளாரா? அல்லது, நீங்கள் பொய்களை இட்டுக்கட்டி அவற்றைக் கடவுள் மேல் சாட்டுகின்றீர்களா?” என்று கூறுவீராக.
[10:60]கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக் கட்டுபவர்களுக்கு, மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவரைச் சந்திக்க வேண்டுமே என்று எப்பொழுதாவது தோன்றுகின்றதா? மிக நிச்சயமாக, கடவுள் தன் அருளை மனிதர்கள் மீது பொழிகின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றிகெட்டவர்களாக இருக்கின்றனர்.

கடவுளை அறிந்து கொள்ளுதல்

[10:61]நீங்கள் எவற்றைச் செய்யும் பொழுதும் நாம் அவைகளுக்கு சாட்சிகளாக இல்லாமல், நீங்கள் எந்த சூழலுக்குள்ளும் நுழைவதில்லை, அன்றி எந்தக் குர்ஆனையும் நீங்கள் ஓதுவதில்லை, அன்றி எந்த விஷயத்தையும் நீங்கள் செய்வதில்லை. ஓர் அணுவின் எடைகூட உமது இரட்சகரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற் பட்டதல்ல, அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும் சரியே. அன்றி ஏதாவது ஒன்று அணுவை விடச் சிறியதோ, அல்லது பெரியதோ, ஆழ்ந்ததோர் பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை.

மகிழ்ச்சி: இப்பொழுதும் எப்பொழுதும்

[10:62]நிச்சயமாக, கடவுள்-ன் கூட்டணியினர் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
அடிகுறிப்பு

[10:63]அவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களாக இருக்கின்றனர்.
[10:64]அவர்களுக்கு, இவ்வுலகிலும், அவ்வண்ணமே மறுவுலகிலும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் உள்ளது. இது கடவுள்-ன் மாற்ற முடியாத சட்டமாகும். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[10:65]அவர்களுடைய பேச்சுக்களால் கவலை யடையாதீர். சக்தி அனைத்தும் கடவுள்-க் குரியது. அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[10:66]நிச்சயமாக, வானங்களில் உள்ள ஒவ்வொரு வரும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் கடவுள்-க்கு உரியவர்கள். கடவுள்-உடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள் உண்மையில் பின்பற்றுவது ஒன்றையுமில்லை. ஏதோ ஒன்றைப் பின்பற்றிக் கொண்டிருக் கின்றோம் என்று அவர்கள் எண்ணிக் கொள்ள மட்டுமே செய்கின்றனர். அவர்கள் யூகிக்க மட்டுமே செய்கின்றனர்.
[10:67]அவர்தான் இரவை உங்கள் ஓய்விற்கென ஆக்கினார், மேலும் பகலை ஒளியூட்டப் பட்டதாக ஆக்கினார். கேட்கக்கூடியவர் களுக்கு இவற்றில் சான்றுகள் உள்ளன.

மாபெரும் இறை நிந்தனை

[10:68]அவர்கள், “கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுத் திருக்கின்றார்!” என்று கூறினார்கள். அவர் துதிப்பிற்குரியவர். அவரே மிக்க செல்வந்தர். வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், இன்னும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது. இத்தகைய தொரு இறைநிந்தனைக்கு ஆதரவளி க்கும் சான்றுகள் எதுவும் உங்களிடம் இல்லை. கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாதவற்றை நீங்கள் கூறுகின்றீர்களா?
[10:69]“கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக்கட்டு பவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்” என்று பிரகடனம் செய்வீராக.
[10:70]இவ்வுலகில் அவர்களுடைய தற்காலிகப் பங்கை அவர்கள் பெறுவார்கள், அதன் பின்னர் நம்மிடமே அவர்களுடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது, அதன் பின்னர் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்ததற்காக அவர்களை நாம் கடுமையான தண்டனையில் கொண்டு சேர்த்து விடுவோம்.

நோவா

[10:71]நோவாவின் சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக் காட்டுவீராக. அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், “என் சமூகத்தாரே, எனது நிலையும் கடவுள்-ன் வெளிப்பாடுகளைப் பற்றி நான் நினைவூட்டுவதும் உங்களுக்கு மிகவும் அதிகமானதாக தென்படுமானால், அப்போது நான் எனது பொறுப்பைக் கடவுள்-இடம் ஒப்படைத்து விடுகின்றேன். நீங்கள் உங்கள் தலைவர்களுடன் ஒன்று கூடிக் கலந்து உங்களுக்கிடையில் ஓர் இறுதித் தீர்மானத்திற்கு ஒத்து வாருங்கள், பின்னர் தாமதமின்றி அதனை எனக்குத் தெரியப்படுத் துங்கள்.
[10:72]“நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி கடவுள்-இடமிருந்து வருகின்றது. அடி பணிந்த ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.”
[10:73]அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர் மேலும், அதன் விளைவாக, நாம் அவரையும் மரக்கலத்தில் அவரோடு சேர்ந்து கொண்டவர்களையும் காப் பாற்றினோம்; நாம் அவர்களை வாரிசுகளாக்கி னோம். மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர்களை மூழ்கடித்தோம். விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக; அவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.

மனிதர்கள் தங்களுடைய ஆதி பாவத்தை வற்புறுத்துகின்றார்கள்

[10:74]நாம் அவருக்குப் பின்னர் தூதர்களை, அவர்களுடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம், மேலும் அவர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் காட்டினார்கள். ஆனால் அவர்கள், கடந்த காலங்களில் எதை ஏற்க மறுத்து விட்டார்களோ, அதில் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்திருக்கவில்லை. இவ்விதமாக நாம் வரம்பு மீறுபவர்களின் இதயங்களில் முத்திரையிட்டு விடுகின்றோம்.

மோஸஸ் மற்றும் ஆரோன்

[10:75]அவர்களுக்குப் பின்னர் மோஸஸையும் ஆரோனையும் நமது சான்றுகளுடன், ஃபேரோ விடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் அனுப்பி னோம். ஆனால் அவர்கள் ஆணவம் கொண்டவர் களாக மாறிவிட்டார்கள்; மேலும் வரம்பு மீறும் மக்களாக இருந்தார்கள்.
[10:76]நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்த போது, அவர்கள், “இது தெளிவான மாயாஜாலமாகும்!” என்று கூறினார்கள்.
[10:77]மோஸஸ், “சத்தியம் உங்களிடம் வரும்போது அதைப் பற்றி இப்படித்தான் நீங்கள் விவரிப்பீர்களா? இதுவா மாயாஜாலம்? மந்திரவாதிகள் எவரும் எப்படி வெற்றி பெற இயலும்?” என்று கூறினார்.
[10:78]அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் செய்ய நாங்கள் கண்டவற்றை விட்டு எங்களை வழி திருப்பவும், உங்களுக்கென முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை அடைந்து கொள்ளவும் நீங்கள் வந்திருக்கின்றீர்களா? நாங்கள் ஒருபோதும் உங்களுடன் நம்பிக்கையாளர்களாகச் சேர்ந்து கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள்.

சத்தியம் வெல்கின்றது

[10:79]ஃபேரோ, “அனுபவமிக்க மந்திரவாதிகள் ஒவ்வொருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினான்.
[10:80] மந்திரவாதிகள் வந்தபோது, மோஸஸ் அவர் களிடம், “நீங்கள் எறியப்போவது எதுவானாலும் எறியுங்கள்” என்று கூறினார். 
[10:81]அவர்கள் எறிந்தபோது, மோஸஸ், “நீங்கள் உருவாக்கியிருப்பது மாயாஜாலமே, மேலும் கடவுள் அதனைத் தோல்வியடையச் செய்வார். வரம்பு மீறுபவர்களின் காரியங்களுக்குக் கடவுள் ஆதரவளிப்பதில்லை” என்று கூறினார்.
[10:82]குற்றவாளிகள் வெறுத்த போதிலும், கடவுள் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நிறுத்துகின்றார்.
[10:83]ஃபேரோ மற்றும் அவனுடைய பிரதானிகளின் கொடுங்கோன்மைக்கு அஞ்சிக் கொண்டிருந்த சமயத்தில், மோஸஸுடன் நம்பிக்கை கொண்டவர்களாக, அவருடைய சமூகத்தாரில் சிலரைத் தவிர, எவரும் இல்லை. நிச்சயமாக, ஃபேரோ மிகப்பெரும் ஆணவம் கொண்டவனாகவும், மேலும் மெய்யாகவே ஒரு கொடுங்கோலனாகவும் இருந்தான்.
[10:84]மோஸஸ், “என் சமூகத்தாரே, நீங்கள் மெய்யாகவே கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், மெய்யாகவே நீங்கள் அடிபணிந்தவர்களாக இருந்தால், அப்போது உங்களுடைய பொறுப்பு களை அவரிடமே ஒப்படையுங்கள்” என்று கூறினார்.
[10:85]அவர்கள் கூறினார்கள், “நாங்கள் கடவுள் மீது எங்கள் பொறுப்புகளை வைக்கின்றோம். எங்கள் இரட்சகரே, அடக்கு முறை செய்யும் இம்மக்களின் வன்கொடுமைகளிலிருந்து எங்களைக் காப்பீராக.
[10:86]“நம்ப மறுக்கும் மக்களிடமிருந்து, உம்முடைய கருணையால், எங்களைக் காப்பாற்றுவீராக.”
[10:87]நாம் மோஸஸிற்கும் அவருடைய சகோதரருக்கும், “தற்போதைக்கு எகிப்தில் உள்ள உங்களது வீடுகளைப்பராமரித்துக் கொண்டு உங்கள் வீடுகளையே ஆலயங்களாக ஆக்கிக் கொள்ளுங் கள், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) பேணிவாருங்கள். நம்பிக்கை கொண்டவர் களுக்கு நற்செய்தி வழங்குங்கள்” என்று உள்ளுணர்வு அளித்தோம்.
[10:88]மோஸஸ், “எங்கள் இரட்சகரே, ஃபேரோவிற்கும் அவனுடைய பிரதானிகளுக்கும் இவ்வுலகில் ஆடம்பரங்களையும், மேலும் செல்வத்தையும் நீர் வழங்கியிருக்கின்றீர். எங்கள் இரட்சகரே, அவர்கள் உமது பாதையிலிருந்து மற்றவர்களைத் துரத்துவதற்கு மட்டுமே அவற்றைப் பயன் படுத்துகின்றனர். எங்கள் இரட்சகரே, அவர் களுடைய செல்வத்தைத் துடைத்தெடுத்து விடுவீராக, மேலும் வலிமிகுந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை, நம்பிக்கை கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் வண்ணம் அவர்களுடைய இதயங்களைக் கடினமாக்கி விடுவீராக” என்று கூறினார்.
[10:89]அவர், “(மோஸஸ் மற்றும் ஆரோனே), உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிக்கப் பட்டு விட்டது, எனவே உறுதியோடிருப்பீர்களாக, மேலும் அறியாதவர்களின் வழியைப் பின்பற்றாதீர்கள்” என்று கூறினார்.
[10:90]நாம் இஸ்ரவேலின் சந்ததியினரை கடலைக் கடக்கச் செய்து காப்பாற்றினோம். வலுச்சண்டை செய்பவர்களாகவும், மேலும் பாவகரமாகவும், ஃபேரோவும் அவனுடைய படையினரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மூழ்கிவிடுதல் அவனுக்கு ஒரு நிச்சயமானதாக ஆனபோது, அவன், “இஸ்ரவேலின் சந்ததியினர் நம்பிக்கை கொண்டிருக்கும் அந்த ஒருவரைத் தவிர, வேறு தெய்வம் இல்லை என நான் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
[10:91]“மிகவும் தாமதம்*! ஏனெனில், ஏற்கனவே நீ கலகம் செய்துவிட்டாய், மேலும் வரம்பு மீறிய ஒருவனாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாய்.
அடிகுறிப்பு

ஃபேரோவின் சடலம் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது

[10:92]“இன்று, எதிர்காலத் தலைமுறையினருக்கு உன்னை ஒரு படிப்பினையாக ஆக்குவதற்காக, உனது சடலத்தை நாம் பத்திரப் படுத்துவோம்*. துரதிஷ்டவசமாக, மனிதர்களில் அதிகமானோர் நமது அத்தாட்சிகளைப் பற்றி முற்றிலும் கவனமின்றி இருக்கின்றனர்.
அடிகுறிப்பு

[10:93]இஸ்ரவேலின் சந்ததியினருக்கு கண்ணிய மானதொரு அந்தஸ்தைக் கொண்டு நாம் கொடையளித்தோம், மேலும் நல்ல வாழ்வாதாரங் களைக் கொண்டு அவர்களுக்கு அருள்பாலித் தோம். இருப்பினும், இந்த அறிவு அவர்களிடம் வந்த போது, அவர்கள் தர்க்கம் செய்து கொண்டனர். அவர்கள் தர்க்கித்துக் கொண்ட ஒவ்வொன்றைக் குறித்தும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உமது இரட்சகர் அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்.

தூதரின் சந்தேகம்

[10:94]உமது இரட்சகரிடமிருந்து உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றைக் குறித்து உமக்கு ஏதேனும் சந்தேகமிருக்குமாயின், அப்போது முந்திய வேதங்களைப் படிப்பவர்களிடம் கேட்பீராக. உண்மையில், உமது இரட்சகரிடமிருந்து சத்தியம் உமக்கு வந்திருக்கின்றது. சந்தேகம் கொள்வோருடன் இருந்துவிடாதீர்.
[10:95]அன்றியும், நஷ்டவாளிகளுடன் நீர் இல்லா திருக்கும் பொருட்டு, கடவுள்-ன் வெளிப் பாடுகளை ஏற்க மறுப்போருடன் நீர் சேர்ந்து விட வேண்டாம்.
[10:96]நிச்சயமாக, உமது இரட்சகரிடமிருந்து ஓர் ஆணையின் மூலம் கண்டனம் செய்யப்பட்டவர் களால் நம்பிக்கை கொள்ள இயலாது.
[10:97]வலிமிகுந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை, எவ்விதமான சான்றை நீர் அவர்களிடம் காட்டினாலும் ஒரு பொருட்டல்ல, (அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது).

நம்பிக்கை கொள்ளும் தேசங்கள் வளமடையும்

[10:98]நம்பிக்கை கொள்ளும் எந்தச் சமூகத்திற்கும் நம்பிக்கை கொண்டதற்கான வெகுமதி நிச்சய மாகக் கொடுக்கப்படும். உதாரணமாக, ஜோனா வின் சமூகத்தார்: அவர்கள் நம்பிக்கை கொண்ட போது, இவ்வுலகில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இழிவான தண்டனையை நாம் அகற்றினோம், மேலும் அவர்களை நாம் வளமானவர்களாக ஆக்கினோம்.
[10:99]உமது இரட்சகர் நாடியிருந்தால், பூமியில் உள்ள எல்லா மக்களும் நம்பிக்கை கொண்டுவிட்டிருப் பார்கள்.*நம்பிக்கையாளர்களாகும்படி மக்களை நிர்ப்பந்திக்க நீர் விரும்புகின்றீரா?
அடிகுறிப்பு

நம்ப மறுப்பவர்கள் தடுக்கப்பட்டு விட்டனர்*

[10:100]கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே தவிர எந்த ஆன்மாவும் நம்பிக்கை கொள்ள இயலாது. ஏனெனில், புரிந்து கொள்ள மறுப்பவர்கள் மீது அவர் ஒரு சாபத்தை வைத்து விடுகின்றார்.
[10:101]“வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து அத்தாட்சிகளையும் கவனித்துப் பாருங்கள்”. எல்லாச் சான்றுகளும், மேலும் எல்லா எச்சரிக் கைகளும், நம்ப மறுப்பதென்று முடிவெடுத்து விட்ட மக்களுக்கு ஒருபோதும் உதவி செய்ய இயலாது என்று கூறுவீராக.
[10:102]கடந்த காலங்களில் அவர்களைப் போன்றவர் களுக்கு நேர்ந்த விதியையன்றி மற்றொன்றை இவர்கள் எதிர்பார்க்க முடியுமா? “சற்று காத்திருங்கள், மேலும், உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கின்றேன்” என்று கூறுவீராக.

உத்திரவாதமான வெற்றி

[10:103]நாம் இறுதியாக, நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றி விடுகின்றோம். நம்பிக்கையாளர்களை நாம் காப்போம் என்பது நம்முடைய மாற்ற முடியாத சட்டமாகும்.
[10:104]“மனிதர்களே, எனது மார்க்கம் குறித்து நீங்கள் ஏதேனும் சந்தேகம் கொண்டிருப்பீர்களாயின், கடவுள்-உடன் நீங்கள் வழிபடுவதை நான் வழிபடுவதில்லை. நான் கடவுள்-ஐ மட்டுமே வழிபடுகின்றேன்; உங்கள் வாழ்வுகளை முடிவிற்கு கொண்டு வருபவர் அவரே. நம்பிக்கை கொண்ட ஒருவராக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.
[10:105]எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது:“ஏகத்துவ மார்க்கத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராக இருக்க வேண்டும்; இணைத் தெய்வ வழிபாட்டை நீர் அனுஷ்டிக்க வேண்டாம்.
[10:106]“உமக்குப் பயனளிக்கவோ அல்லது தீங்கி ழைக்கவோ சக்தியற்றவற்றைக் கடவுள்-உடன் நீர் வழிபட வேண்டாம். நீர் அதனை செய்தால், நீர் வரம்பு மீறியவராகிவிடுவீர்.”

சக்திகள் அனைத்தும் கடவுளுக்குரியவை

[10:107]கடவுள் ஒரு கஷ்டத்தைக் கொண்டு உம்மைத் தீண்டுவாராயின், அவரைத் தவிர வேறெவரும் அதனை நிவர்த்தி செய்ய இயலாது. மேலும் அவர் உமக்கு அருள்பாலிக்கும் போது, எந்தச் சக்தியும் அவருடைய அருளைத் தடுத்து விட முடியாது. அவர் தன் அடியார்களுக்கு மத்தியிலிருந்து அவர் தேர்ந்தெடுப்பவர்கள் மீது அதனை வழங்குகின்றார். அவர் தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[10:108]“மனிதர்களே, இதில் உங்கள் இரட்சகரிட மிருந்து சத்தியம் உங்களுக்கு வந்துள்ளது. வழிகாட்டப்பட்டவர் எவராயினும், அவர் தன்னு டைய சொந்த நலனிற்காகவே வழிகாட்டப் படுகின்றார். மேலும் வழிதவறிச் செல்பவர் எவராயினும் அவர் தன்னுடைய சொந்த கேட்டிற் காகவே வழிதவறிச் செல்கின்றார். நான் உங்கள் மீது ஒரு பாதுகாவலர் அல்ல” என்று பிரகடனம் செய்வீராக.
[10:109]உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றைப் பின்பற்று வீராக, மேலும் கடவுள் தனது தீர்ப்பை வெளி யிடும் வரை பொறுமையோடு இருப்பீராக; அவரே மிகச் சிறந்த நீதிபதி.