சூரா 100: பாய்ந்தோடுபவை (அல்-ஆதியாத்)
[100:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[100:1] வேகமாகப் பாய்ந்தோடுபவற்றின் மீது சத்தியமாக.
[100:2] பற்ற வைக்கின்ற தீப்பொறிகள்.
[100:3] அதிகாலையில் (எதிரியின் மீது) படையெடுப் பவை.
[100:4] அங்கு திகிலை ஏற்படுத்துபவை.
[100:5] அவர்களுடைய பிரதேசத்தின் மையப்பகுதி யினுள் ஊடுருவுகின்றவை.
[100:6] மனிதன் தன் இரட்சகரிடம் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
[100:7] இந்த உண்மைக்கு அவன் சாட்சியாக இருக் கின்றான்.
[100:8] பொருள் சார்ந்த விஷயங்களை அவன் மிதமிஞ்சி நேசிக்கின்றான்.
[100:9] சமாதிகள் திறக்கப்படுகின்ற அந்நாள் வரும் என்பதை அவன் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா?
[100:10] மேலும் இரகசியங்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்படுகின்றவையாக இருக்கின்றன.
[100:11] அவர்களுடைய இரட்சகர் அவர்களைப் பற்றி முற்றிலும் நன்கறிந்தவராக இருந்திருக் கின்றார் என்பதை, அந்நாளில், அவர்கள் கண்டு கொள்வார்கள்.