சூரா 10க்குரிய அடிக்குறிப்புகள்

*10:1 இவ்வெழுத்துக்கள், அச்சுறுத்துகின்ற குர்ஆன் உடைய கணிதக் குறியீட்டில் பெரும்பங்கு வகிக்கின்றன, மேலும் இதன் ஆசிரியர் கடவுள் தான் என்பதற்கான சான்றாகவும் திகழ்கின்றன. விபரங்களுக்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

*10:15 குர்ஆன் என்ற வார்த்தை குர்ஆனில் 58 முறை கூறப்பட்டுள்ளது.,ஆனால் இவ்வசனம் “மற்றுமொரு குர்ஆன்” ஐக் குறிப்பிடுவதால் இது தவிர்த்துக் கொள்ளப்படவேண்டும்; ஆக “இந்தக் குர்ஆன்” என்பது குர்ஆனில் 57 முறை குறிப்பிடப்பட்டுள்ளது, 19 X 3.

*10:20 கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் போது, உண்மையில் “மகத்தான அற்புதங்களில் ஒன்று” (74:30-35) ஆன குர்ஆனின் அற்புதம், முஹம்மதிற்குப் பின் 14 நூற்றாண்டுகள் கழித்து வெளிப்படுத்தப்படவேண்டுமென கடவுளால் விதிக்கப் பட்டிருந்தது என்பதை நாம் காண்கின்றோம். பாரம்பரிய முஸ்லிம்களின் தற்போதைய நிலையைக் காணும்போது, முஹம்மதிற்கு இந்த அற்புதம் கொடுக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே கடவுளுடன் முஹம்மதை இணைத் தெய்வமாக்கி வைத்துக் கொண்டிருக்கும் இந்த முஸ்லிம்கள் கடவுளின் அவதாரமாகவே அவரை வழிபட்டிருப்பார்கள். கூடுதலாக, இந்த அற்புதமானது, கண்கூடாக, கணினி யுகத்திற்கென வடிவமைக்கப்பட்டதாகவும், மேலும் கணித அறிவில் முன்னேறிய தலைமுறையினரால் பாராட்டப்படக் கூடியதாகவும் உள்ளது.

*10:24 கடவுளுக்கு, அவருடைய தீர்ப்பு பகலில் வருமா அல்லது இரவில் வருமா என்பது தெரியும் தான். ஆனால் உலக முடிவு வரும் போது உலகில் பாதி பகலாகவும் பாதி இரவாகவும் தான் இருக்கப் போகின்றது. குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்களில் இது மற்றொன்று ஆகும்.

*10:62-64 நன்னெறிகளுக்குரிய வெகுமதியையோ, அல்லது பாவங்களுக்கான தண்டனையையோ பெறுவதற்காக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை காத்திருக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நம்பிக்கையாளர்களுக்கு இங்கே இவ்வுலகிலும், இப்பொழுதும் எப்பொழுதும் பரிபூரண மகிழ்ச்சிக்கு உத்தரவாதத்தைக் குர்ஆன் மீண்டும் மீண்டும் நிச்சயப்படுத்துகின்றது. அவர்களுடைய தவணைக்காலம் இங்கே முடிவுற்றவுடன், அவர்கள் நேரடியாகச் சுவனம் செல்கின்றனர் (பின் இணைப்பு 17ஐப் பார்க்கவும்).

*10:91 கடவுளின் மேல் நம்பிக்கை கொள்வதென்பது, முதல் படியே ஆகும். அதன் பின்னர், வழிபாட்டு அனுஷ்டானங்களின் மூலம் ஒருவர் தன் ஆன்மாவை ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது (பின் இணைப்பு 15 ஐ பார்க்கவும்).

*10:92 கடவுள் எகிப்தியர்களுக்கு சடலங்களைப் பதப்படுத்தும் பிரத்தியேகமான அறிவை கொடையளித்தார். இன்று, ஃபேரோவின் பதப்படுத்தப்பட்ட சடலம் கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 99.

*10:99-101 நம்முடைய ஆரம்பத் தீர்மானத்தின் மீது இறைக்குறுக்கீடு இல்லாத நிலையில், நாம் நம்முடைய இணைத் தெய்வ வழிபாட்டை நாமாகவே பகிரங்கமாகக் கண்டனம் செய்ய இச்சோதனை வலியுறுத்துகின்றது. நம்ப மறுக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்களைக் கடவுள் வெளியில் தடுத்து நிறுத்தி விடுகின்றார்.