சூரா 11க்குரிய அடிக்குறிப்புகள்

*11:1குர்ஆனில் உள்ள அச்சுறுத்துகின்ற இரு அற்புத நிகழ்வுகளுக்குச் சாட்சியாகும் பாக்கியம் பெற்றதாக நம் தலைமுறை உள்ளது: (1) ஓர் அசாதாரணமான கணித குறியீடு (பின் இணைப்பு 1) ,மேலும் (2) சாத்தியமற்ற பரிமாணங்கள் கொண்ட ஓர் இலக்கிய அற்புதம். கணித அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு நூலை மனிதர்கள் எழுத முயற்சிக்கும் போது எண்களைக் குறிப்பிட்ட முறையில் அமைப்பதால் இலக்கியத்தரம் மோசமாகப் பாதிக்கப்படும். குர்ஆன் இலக்கியச் சிறப்பிற்கான மாதிரியை அமைக்கின்றது.

*11:7ஆறு நாட்கள் என்பது, ஏராளமான தகவல்களை நமக்கு வழங்கும் ஓர் அளவுகோல் அவ்வளவு தான். இவ்வாறாக, பரந்து விரிந்த, உயிரற்ற இந்த பௌதிகப் பிரபஞ்சம் இரு நாட்களில் படைக்கப்பட்டது அதே சமயம் மிகச் சிறிய துகளான “ பூமி” நான்கு நாட்களில் படைக்கப்பட்டது என்று நாம் அறிகின்றோம் (41: 10-12) . பூமியில் வசிப்பவர்களுக்கு வாழ்வாதாரமான உணவு, தண்ணீர் மற்றும் பிராணவாயு ஆகியவை மிகச்சரியாக கணக்கிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட வேண்டியதாக இருந்தது.

**11:7 பூமி துவக்கத்தில் தண்ணீரால் மூடப்பட்டதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து , நிலப்பரப்புகள் தோன்றின, மேலும் கண்டங்கள் மெதுவாக தனியே பிரிந்து ஒதுங்கின.

*11:13 குர்ஆனின் கணித அற்புதம், அதே மாதிரி செய்ய இயலாதது(பின் இணைப்பு 1ஐ பார்க்கவும்).

*11:17 குர்ஆனுடைய 19ன் அடிப்படையிலான கணித குறியீடு, இது கடவுளால் இயற்றப்பட்டது என்பதற்கான உள்ளமைந்த சான்றாக இருக்கின்றது. “ பய்யினஹ்” (சான்று) என்ற வார்த்தை குர்ஆனில் 19 முறை குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கதாகும்.

**11:17 இப்போது வெளிப்பட்டுள்ளபடி மோஸஸின் புத்தகமும் 19ஐப் பொது வகு எண்ணாகக் கொண்டு கணிதக் கட்டமைப்பு செய்யப்பட்டிருந்தது. 46:10ன் அடிக்குறிப்பு மற்றும் பின் இணைப்பு 1ஐ பார்க்கவும்.

*11:40&44 நோவாவின் படகு சாதாரணமான கயிறுகளால் ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட மரக்கட்டைகளால் ஆனது (54:13). பொதுவான கருத்திற்கு மாற்றமாக, அவ்வெள்ளம் இன்றைய சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகள் வரை மட்டுமே இருந்தது, மேலும் அந்தப் பிராணிகள் நோவாவின் கால் நடைகள் மட்டுமே, பூமியில் வாழ்ந்த எல்லாப் பிராணிகளும் அல்ல என்பது கடவுளின் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

*11:44 இதற்கு 11:40ன் அடிக்குறிப்பைக் பார்க்கவும்.

*11:46 பரிந்துரை என்பது மனிதர்களை இணைவழிபாட்டின் பால் மயக்கி இழுத்துச் செல்வதற்கு, சாத்தானின் திறன் மிக்கதொரு தூண்டில் இரையாகும். எப்படி இருப்பினும், ஆப்ரஹாம் தன் தந்தைக்கு உதவி செய்ய முடியவில்லை, அன்றி நோவா தன் மகனுக்கு உதவி செய்ய முடியவில்லை, அன்றி முஹம்மது தன் சொந்த உறவினர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை (2:254, 9:80& 114).

*11:119 நம்முடைய அசலான குற்றத்தை பகிரங்கமாகக் கைவிடுவதற்கும் மேலும் மீட்சி அடைவதற்கும் மற்றுமொரு சந்தர்ப்பத்தை நமக்குத் தருவதற்காக மிக்க கருணையாளராகிய அவர் இந்த பூமியில் நம்மைப் படைத்திருக்கின்றார். (அறிமுகவுரை மற்றும் பின் இணைப்பு 7 ஐப் பார்க்கவும்).

**11:119 கடவுள் எவர் ஒருவரையும் நரகில் போடுவதில்லை; அவர்களே தேர்ந்தெடுத்து மேலும் நரகத்திற்கு செல்வதை வலியுறுத்துகின்றனர்.