சூரா 13க்குரிய அடிக்குறிப்புகள்

*13:1 இந்த தலைப்பு எழுத்துக்கள், கடவுள்தான் இதன் ஆசிரியர் என்பதற்கு குர்ஆனின் உள்ளே கட்டமைக்கப்பட்டுள்ள சான்றான அந்த அற்புதக் குறியீட்டின் ஒரு முக்கிய அங்கமாக அமைகின்றன. பின் இணைப்பு 1 ஐ பார்க்கவும்.

*13:15 நம்ப மறுப்பவர்கள் கூட சிரம் பணிகின்றனர்; உதாரணத்திற்கு, அவர்களால் தங்களுடைய இதயத்துடிப்பையோ, தங்களுடைய நுரையீரலையோ, அல்லது குடல்களின் இயக்கத்தையோ கட்டுப்படுத்த இயலாது. சூரியன் மற்றும் சந்திரனின் சுற்றுப்பாதை, மேலும் நான்கு பருவகாலங்களுக்குக் காரணமாக அமையும் பூமிக்கிரகத்தின் விசேஷ வடிவம் ஆகியவற்றைக் கடவுள் வடிவமைத்த விதத்தால் நிழல்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டுள்ளன. சூரியக் கடிகாரங்களும், அவற்றின் நிழல்களும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் பூமி/சூரிய உறவின் பரிபூரணமான நுட்பம் நுட்பம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

*13:30 “ரஷாத்”தின் எழுத்தெண் மதிப்பையும் (505), “கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்பையும் (725), சூரா எண்ணையும் (13), வசன எண்ணையும் (30), நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 505+725+13+30=1273=19 X 67. கடவுள் இவ்விதமாகத் தனது தூதரின் பெயரைக் குறிப்பிடுகின்றார் (விபரங்களுக்குப் பின் இணைப்பு 2 ஐ பார்க்கவும்).

*13:37-38 இவ்வசனத்தின் எண்(38)=19 X 2. 13:37-38க்கு முன்“ரஷாத்” தின் எழுத்தெண் மதிப்பையும் (505) “கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்பையும் (725) வைக்கும்போது 505725133738 என்ற எண் கிடைக்கப் பெறுகின்றது. 505725133738=19 X 26617112302 (பின் இணைப்பு 2).