சூரா 14: ஆப்ரஹாம் (இப்ராஹீம்)
[14:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[14:1] அ.ல.ர.* சர்வ வல்லமையுடைய, புகழுக்குரிய வரின் பாதையை நோக்கி-அவர்களுடைய இரட்சகரின் நாட்டத்திற்க்கு இணங்க-மக்களை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியினுள் வழிநடத்துவதற்காக, உமக்கு நாம் வெளிப் படுத்திய ஒரு வேதம்.
அடிகுறிப்பு

[14:2] கடவுள்(உடைய பாதை); வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் சொந்தமாகக் கொண்டிருக்கும் ஒருவர். நம்ப மறுப்பவர்களுக்குக் கேடுதான்; அவர்கள் ஒரு பயங்கரமான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

உங்களுடைய முன்னுரிமை எது?

[14:3] அவர்கள் மறுவுலகை விட மேலாக இந்த வாழ்விற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள், கடவுள்-ன் பாதையிலிருந்து விரட்டுபவர்கள், மேலும் அதனைக் கோணலாக்க முயலுபவர் கள்; அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டனர்.

தூதரின் மொழி

[14:4] விஷயங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு, (உபதேசம் செய்வதற்காக) அவருடைய சமூகத்தாரின் மொழியிலேயே அன்றி, எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை. பின்னர் தான் நாடுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் தான் நாடுவோரை வழிநடத்துகின்றார். அவர் சர்வ வல்லமையுடையவராகவும், ஞானம் மிக்கவராகவும் இருக்கின்றார்.

மோஸஸ்

[14:5] இவ்வாறே, “உம்முடைய சமூகத்தாரை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியினுள்ளே வழி நடத்துவீராக, மேலும் கடவுள்-ன் நாட்களைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக” எனக் கூறியவாறு, மோஸஸை நம்முடைய அற்புதங் களுடன் நாம் அனுப்பினோம். உறுதியோடும், நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இவை படிப்பினைகள் ஆகும்.

நன்றியுடையவர்களாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம்

[14:6] மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகன்களைக் கொன்று உங்கள் மகள்களை உயிரோடு விட்டு வைத்து, உங்கள் மீது மோசமான அடக்குமுறையைச் சுமத்திய ஃபேரோவின் சமூகத்தாரிடமிருந்து அவர் உங்களைக் காப்பாற்றினார். அது உங்கள் இரட்சகரிடமிருந்து ஒரு கடினமான சோதனை யாக இருந்தது” என்று கூறியதை நினைவு கூர்வீராக.

நன்றியுடையவர்களும் நன்றியற்றவர்களும் எதிரி நிலையில்

[14:7] உமது இரட்சகர்: “நீங்கள் எனக்கு எவ்வளவுக் கெவ்வளவு நன்றி செலுத்துகின்றீர்களோ, நான் உங்களுக்கு அவ்வளவுக்கவ்வளவு தருவேன்” என்று கட்டளையிட்டுள்ளார். ஆனால் நீங்கள் நன்றியற்றவர்களாக மாறி விட்டால், பின்னர் எனது தண்டனை கடுமையானதாகும்.
[14:8] மோஸஸ், “பூமியில் உள்ள அனைத்து மக்களு டனும் சேர்ந்து, நீங்கள் நம்ப மறுத்து விட்டாலும், கடவுள் தேவையற்றவர், புகழுக்குரியவர்” என்று கூறினார்.

அகம்பாவம் காரணமாக எதிர்ப்பது: ஒரு மனிதப்பண்பு

[14:9] உங்களுக்கு முன்னிருந்தவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா-நோவாவின் சமூகத்தார், ‘ஆது, தமூது’ மேலும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் இன்னும் கடவுள்-க்கு மட்டுமே அறிந்திருப்பவர்கள்? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் அவர்களை அவமரியாதையாக நடத்தினர், மேலும், “எதனைக் கொண்டு நீங்கள் அனுப்பப் பட்டுள்ளீர்களோ அதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம். உமது தூதுச் செய்தி குறித்து நாங்கள் சந்தே கத்தில் உள்ளோம்; முற்றிலும் ஐயப்பாடுடைய வர்களாக உள்ளோம்” என்று கூறினார்கள்.

நமது பெற்றோர்களைக் கண்மூடிப் பின்பற்றுதல்: ஒரு மாபெரும் மானிட சோகம்

[14:10] அவர்களுடைய தூதர்கள், “வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவரான; கடவுள்-ஐப்பற்றியா நீங்கள் சந்தேகங்கள் கொள்கின்றீர்கள்? உங்கள் பாவங்களை மன்னிப்பதற்காகவும், மேலும் உங்களை மீட்டுக் கொள்வதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அளிப்பதற்காகவும் மட்டுமே அவர் உங்களை அழைக்கின்றார்,” என்று கூறினார்கள். அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் வழிபட்டு வந்த வழிமுறையை விட்டும் எங்களைத் தடுக்க விரும்பும் நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை. ஆழ்ந்த அதிகாரம் எதையேனும் எங்களுக்குக் காட்டு வீராக” என்று கூறினார்கள்.
[14:11] அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் கூறினார்கள், “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகமாக எதுவு மில்லை, ஆனால் தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோருக்கு கடவுள் அருள் பாலிக் கின்றார். கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே அன்றி, எந்த விதமான அதிகாரப்பூர்வமானதையும் எங்களால் காட்ட இயலாது. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
[14:12] “எங்களுடைய பாதைகளில் அவர் எங்களை வழிநடத்தியிருக்கையில், கடவுள் மீது நாங்கள் ஏன் பொறுப்பேற்படுத்தாமல் இருக்க வேண்டும்? உங்கள் அடக்குமுறைகளுக்கெதிராக நாங்கள் உறுதியோடு விடாமுயற்சியுடன் இருப்போம். பொறுப்பேற்படுத்துபவர்கள் அனைவரும் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.”
[14:13] நம்ப மறுத்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்பி வராவிட்டால், எங்கள் நாட்டை விட்டு உங்களை நாங்கள் விரட்டி விடுவோம்” என்று கூறினார்கள். அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு உள்ளுணர்வளித்தார்: “தவிர்த்து விட முடியாதவாறு, வரம்பு மீறுவோரை நாம் அழித்து விடுவோம்.
[14:14] “மேலும், அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய நாட்டில் உம்மை வசிக்கச் செய்வோம். மேலும் எனது மாட்சிமையில் பயபக்தியுடன் இருந்தவர்களுக்கும், மேலும் எனது வாக்குறுதியில் பயபக்தியுடன் இருந்தவர்களுக்கும், இதுவே (வெகுமதி) ஆகும்”.
[14:15] அவர்கள் ஒரு சவால் விடுத்தனர், மேலும் அதன் விளைவாக, பிடிவாதமிக்க கொடுங்கோலன் ஒவ்வொருவனும் அழிக்கப்பட்டு முடிந்து போனான்.
[14:16] நரகம் அவனை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது, அங்கே அவன் கெட்ட நாற்றமடிக்கும் தண்ணீரையே குடிப்பான்.
[14:17] அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியா விட்டாலும், அவன் அதனை உள்ளே விழுங்கு வான், ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணம் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கும், ஆனால் அவன் ஒருபோதும் மரணிக்க மாட்டான். கடுமை யானதொரு தண்டனை அவனை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.*
அடிகுறிப்பு

[14:18] தங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளாத வர்களுக்கு உவமானமாவது: புயலடிக்கும் ஒரு நாளின் உக்கிரமான காற்றில், சாம்பல்களைப் போன்றதாகும். அவர்கள் சம்பாதித்தது எதுவாயினும் அதிலிருந்து அவர்கள் எந்த லாபமும் அடைய மாட்டார்கள்; வெகுதூரமான வழிகேடு என்பது இத்தகையதேயாகும்.

சர்வ சக்தியுடைய அந்த ஒருவரை மட்டுமே வழிபடுங்கள்

[14:19] வானங்கள், மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான் கடவுள் படைத்திருக் கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா? அவர் நாடினால், உங்களை அகற்றி விட்டு புதியதொரு படைப்பை உங்கள் இடத்தில் மாற்றிவிட அவரால் இயலும்.
[14:20] கடவுள்-க்கு, இது மிகவும் கடினமானதல்ல.

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று

[14:21] அவர்கள் அனைவரும் கடவுள் முன் நிற்கும் போது*, பின்பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம், “நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். கடவுள்-ன் தண்டனையிலிருந்து எங்களை ஒரு சிறிதேனும் உங்களால் காக்க முடியுமா?” என்று கூறுவார்கள். அவர்கள், “கடவுள் எங்களுக்கு வழியைக் காட்டியிருந்தால், நாங்கள் உங்களுக்கு வழிகாட்டியிருப்போம். இப்போது மிகவும் தாமதமாகி விட்டது, நாம் கவலைப்பட்டாலும் அல்லது பொறுமையாக இருந்தாலும் சரியே, வெளியேறுவதற்கு நமக்கு வழியெதுவும் இல்லை” என்று கூறுவார்கள்.
அடிகுறிப்பு

தன்னைப் பின்பற்றியவர்களைச் சாத்தான் கைவிட்டு விடுகின்றான்

[14:22] மேலும், தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட பின்னர் சாத்தான், “கடவுள் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தார், மேலும் நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன், ஆனால் நான் என் வாக்குறுதியை முறித்து விட்டேன். உங்கள் மீது நான் எந்த அதிகாரமும் கொண்டிருக்கவில்லை; நான் உங்களை அழைத்தேன், அவ்வளவுதான், நீங்கள் தான் எனது அழைப்பை ஏற்றுக் கொண்டீர்கள். ஆகையால், என்னைப் பழிக்காதீர்கள், மேலும் உங்களை மட்டுமே பழித்துக் கொள்ளுங்கள். என்னுடைய முறையீடுகள் உங்களுக்கு உதவி செய்ய இயலாது, அன்றியும் உங்களுடைய முறையீடுகள் எனக்கு உதவி செய்ய இயலாது. நீங்கள் என்னை இணைத்தெய்வமாக வழிபட்டதை நான் நிராகரித்து விட்டேன். வரம்பு மீறுபவர்கள் வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்” என்று கூறுவான்.
[14:23] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். அவர்களுடைய இரட்சகரின் நாட்டத் திற்கு ஏற்ப, அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். அங்கே அவர்களுடைய வாழ்த்துக் களாவது: “அமைதி” என்பதாகும்.

சத்தியமும், அசத்தியமும் எதிரி நிலையில்

[14:24] நல்ல வார்த்தைக்கு உதாரணமாக, உறுதியாகப் பதிந்திருக்கும் வேர்கள் கொண்ட மேலும் அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கும் ஒரு மரத்தை கடவுள் எடுத்துரைத்துள்ளார் என்பதை நீங்கள் காணவில்லையா?
[14:25] அதன் இரட்சகரால் திட்டமிட்டபடி, ஒவ்வொரு பருவத்திலும் அது அதன் விளைச்சலைத் தருகின்றது. கடவுள் இவ்விதமாக அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு, உதாரணங்களை மனிதர்களுக்கு எடுத்துரைக் கின்றார்.
[14:26] மேலும் கெட்ட வார்த்தைக்கு உதாரணம் பூமி மட்டத்திலேயே துண்டிக்கப்பட்டிருக்கும் கெட்ட தொரு மரம் ஆகும்; அதனை நிற்க வைப்பதற்கு வேர்கள் எதுவும் அதற்கு இல்லை.
[14:27] நிரூபிக்கப்பட்ட வார்த்தையைக் கொண்டு நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் இவ்வுல கிலும், மறுவுலகிலும் பலப்படுத்துகின்றார். மேலும் வரம்பு மீறுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார். அனைத்தும் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே உள்ளது.

கடவுளின் பாதுகாப்பிலிருந்து தங்கள் குடும்பத்தினரை அவர்கள் அகற்றி விடுகின்றனர்

[14:28] கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு, நம்ப மறுப் பதைக் கொண்டு மறுமொழி அளித்தவர்களை, மேலும் இவ்விதமாகத் தங்கள் சொந்தக் குடும் பங்களின் மீதே பேரழிவை வரவழைத்துக் கொண்டவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா?
[14:29] நரகம்தான் அவர்களுடைய விதியாகும், அங்கே அவர்கள் எரிவார்கள்; எத்தகையதொரு துக்ககர மான முடிவு!

இணைத்தெய்வ வழிபாடு: எல்லாப் பாவங்களுக்கும் தாய்

[14:30] கடவுள்-ஐப் போல் கருதப்படுவதற்காகவும், மேலும் மற்றவர்களை அவருடைய பாதையை விட்டுத் திருப்புவதற்காகவும் அவர்கள் போட்டி யாளர்களை அமைத்துக் கொள்கின்றனர். “சிறிது காலம் சுகமனுபவியுங்கள்; உங்கள் இறுதி விதி நரகமேயாகும்” என்று கூறுவீராக.

முக்கியக் கட்டளைகள்

[14:31] வர்த்தகமோ, அன்றி உறவுமுறைச் சலுகைகளோ இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன்னர், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து வருமாறும், மேலும் இரகசியமாகவும் மற்றும் பகிரங்கமாகவும், அவர்களுக்குரிய நம் வாழ் வாதாரங்களில் இருந்து (தர்மம்) கொடுத்து வருமாறும் நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் உபதேசிப்பீராக.
[14:32] வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் கடவுள் ஒருவர் தான், மேலும் உங்களுடைய ஊட்டத்திற்காக அனைத்து கனிவர்க்கங் களையும் விளைவிப்பதற்காக விண்ணி லிருந்து அவர் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார். அவருடைய கட்டளைக்கு இணங்க கடல் மீது, உங்களுக்கு பணியாற்றுவதற்காக கப்பல்களை அவர் ஆக்கினார். ஆறுகளையும் கூட உங்களுக்கு பணியாற்றுவதற்காகவே அவர் ஆக்கினார்.
[14:33] சூரியனையும் மற்றும் சந்திரனையும் தொடர்ந்து உங்களுடைய சேவைக்கென அவர் ஆக்கி னார். இரவையும் பகலையும் அவர் உங்களுக்கு பணியாற்றுவதற்காக ஆக்கினார்.
[14:34] இன்னும் நீங்கள் அவரிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்ற எல்லா வகையான விஷயங் களையும் அவர் உங்களுக்குத் தருகின்றார். கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் எண்ணினால், உங்களால் ஒரு போதும் அவற்றை முழுமையாக எண்ணிவிட முடியாது. உண்மையில், மனித இனம் வரம்பு மீறுகின்றதாகவும், நன்றி கெட்டதாகவும் இருக்கின்றது.

ஆப்ரஹாம்

[14:35] ஆப்ரஹாம் கூறியதை நினைவு கூர்வீராக, “என் இரட்சகரே, இதனை அமைதியானதொரு நிலப்பரப்பாக ஆக்குவீராக, மேலும் என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வழிபடுவ திலிருந்தும் காப்பீராக.
[14:36] “என் இரட்சகரே, அவை ஏராளமான மனிதர் களை வழிதவறச் செய்து விட்டன. என்னைப் பின்பற்றுவோரைப் பொறுத்தவரை, அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். எனக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களைப் பொறுத்தவரை, நீர் மன்னிப் பவர், மிக்க கருணையாளர்.
[14:37] “எங்கள் இரட்சகரே, நான், எனது குடும்பத்தின் ஒரு பகுதியை உமது புனித வீட்டின் அருகில், தாவரங்களற்ற இப்பள்ளத்தாக்கில் குடியேற்றி யிருக்கின்றேன். எங்கள் இரட்சகரே, அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) நிறை வேற்ற வேண்டியவர்களாக உள்ளனர், எனவே மனிதர்களைக் கூட்டமாக அவர்களோடு சந்திக்கச் செய்வீராக, மேலும் அவர்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கும் பொருட்டு, அனைத்துக் கனிவர்க்கங்களையும் அவர் களுக்கு வழங்குவீராக.
[14:38] “எங்கள் இரட்சகரே, நாங்கள் மறைத்து வைப் பவற்றையும் மேலும் நாங்கள் அறிவிப் பவற்றையும் நீர் அறிவீர்-பூமியின் மீதோ அன்றி வானங்களில் உள்ளவையோ, எந்த ஒன்றும் கடவுள்-க்கு மறைவானதல்ல.
[14:39] “என்னுடைய முதிர்ந்த வயதிலும், எனக்கு இஸ்மவேலையும், ஐசக்கையும் வழங்கியதற் காக, புகழ் அனைத்தும் கடவுள்-க்கு உரியது. என் இரட்சகர் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பவராக இருக்கின்றார்.

தொடர்புத்தொழுகைகள்: கடவுளிடமிருந்து பரிசு

[14:40] “என் இரட்சகரே, தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒருவராக என்னையும், அத்துடன் என் பிள்ளைகளையும் ஆக்குவீராக. எங்கள் இரட்சகரே, தயவு கூர்ந்து என் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பீராக.
[14:41] “என் இரட்சகரே, கேள்விக் கணக்கு நடைபெறும் நாளின்போது, என்னையும் என் பெற்றோரையும், மேலும் நம்பிக்கையாளர்களை யும் மன்னிப்பீராக.”
[14:42] வரம்பு மீறுபவர்கள் செய்பவற்றைக் கடவுள் அறியாமல் இருக்கின்றார் என்று ஒருபோதும் நீர் எண்ணிவிட வேண்டாம். கண்கள் திகிலில் நிலைகுத்தி நின்று விடும் அந்நாள் வரை அவர்களுக்கு அவகாசம் மட்டுமே அவர் அளிக்கின்றார்.
[14:43] (சமாதிகளில் இருந்து வெளியே) அவர்கள் விரைந்து வரும்போது, அவர்களுடைய முகங் கள் மேல்நோக்கியவாறு இருக்கும், அவர்களு டைய விழிகள் இமைக்கவும் செய்யாது, மேலும் அவர்களுடைய மனங்கள் திடுக்குற்றிருக்கும்.

கடவுள் தன் கட்டளைகளைத் தன் தூதர்கள் மூலம் அனுப்புகின்றார்

[14:44] அவர்களுக்கு தண்டனை வரும் அந்நாளைக் குறித்து மனிதர்களை நீர் எச்சரிக்க வேண்டும். வரம்பு மீறியவர்கள், “எங்கள் இரட்சகரே, மற்றுமொரு அவகாசத்தை எங்களுக்குத் தருவீராக. அப்போது நாங்கள் உமது அழைப்பிற்கு பதில் அளிப்போம், மேலும் தூதர்களைப் பின்பற்றுவோம்” என்று கூறுவார் கள். உங்களுக்கு முடிவே இல்லை என்று கடந்த காலத்தில் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்கவில்லையா?
[14:45] உங்களுக்கு முன்னர் இருந்த தங்களுடைய ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்ட வர்களுடைய வீடுகளில் நீங்கள் வசித்தீர்கள், மேலும் அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதை நீங்கள் தெளிவாகப் பார்த்தீர்கள். ஏராளமான முன்னுதாரணங்களை உங்களுக் காக நாம் அமைத்துள்ளோம்.
[14:46] அவர்கள் தங்களுடைய திட்டங்களைத் திட்ட மிட்டனர், மேலும் கடவுள் அவர்களுடைய திட்டங்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார். உண்மையில், அவர்களுடைய திட்டங்கள் மலை களைத் துடைத்து எடுத்துவிடும் அளவிற்கு இருந்தன.

கடவுளின் தூதர்களுக்கு வெற்றி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது

[14:47] கடவுள் தன் தூதர்களுக்கு அளித்த தனது வாக்குறுதியை எப்பொழுதேனும் முறித்து விடுவார் என்று எண்ணாதீர்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர்.

புதிய வானங்கள் மற்றும் புதிய பூமி*

[14:48] புதியதொரு பூமியால் இந்தப் பூமியும், மற்றும் அத்துடன் வானங்களும் மாற்றியமைக்கப்படும் அந்நாள் வரும். மேலும், ஒருவரானவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள்-க்கு முன்னால் அவர்கள் ஒவ்வொரு வரும் கொண்டு வரப்படுவார்கள்.
அடிகுறிப்பு

[14:49] மேலும் அந்நாளில் குற்றவாளிகளை விலங்கு களால் பிணைக்கப்பட்டவர்களாக நீர் காண்பீர்.
[14:50] அவர்களுடைய ஆடைகள் தார் கொண்டு செய்யப்பட்டதாக இருக்கும், மேலும் நெருப்பு அவர்களுடைய முகங்களை அழுத்திக் கொண்டிருக்கும்.
[14:51] ஏனெனில் கடவுள் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்ததற்கான கூலியைக் கொடுப் பார்; கடவுள் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவராக இருக்கின்றார்.
[14:52] இதனைக் கொண்டு எச்சரிக்கப்படுவதற் காகவும், மேலும் அவர் ஒருவர் தான் தெய்வம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்து வதற்காகவும், மேலும் அறிவுடையவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதற்காகவும், இது மனிதர்களுக்கு ஒரு பிரகடனமாகும்.