சூரா 14க்குரிய அடிக்குறிப்புகள்

*14:1 கி.பி. 1974ல் குர்ஆனின் கணிதக்குறியீடு கண்டுபிடிக்கப்படும் வரை இந்த தலைப்பு எழுத்துக்கள் தெய்வீகமாகப் பாதுகாக்கப்பட்ட ஓர் இரகசியமாக இருந்து வந்தது. இந்த தலைப்பு எழுத்துக்களின் அர்த்தத்திற்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

*14:17 கடவுளுக்கெதிராக நாம் கலகம் செய்து, சாத்தானுடன் இசைந்திருந்த அந்த மாபெரும் தர்க்கத்தின் போது (38:69) , நாம் நரகத்திற்கு வெளியேற்றப்பட வேண்டும் என வானவர்கள் யோசனை கூறினர் (பின் இணைப்பு 7). ஆனால் மிக்க கருணையாளர் நம்மை மீட்டுக் கொள்வதற்காக நமக்கு மற்றுமொரு வாய்ப்புத் தர முடிவு செய்தார். அவர் வானவர்களிடம், “உங்களுக்குத் தெரியாதது எனக்குத் தெரியும்” (2:30) என்று கூறினார். மனிதர்களில் பலர் நரகம் எவ்வளவு கெட்டதாக இருந்தது என்பதை சற்றும் அறியாதிருந்ததால், அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார். 14:17 மற்றும் 22:19-22 ஆகியவற்றில் நரகம் குறித்த அச்சுறுத்தும் வர்ணனைகள் இத்தகையதொரு ஆட்சேபத்தைச் செல்லாததாக ஆக்குகின்றது. இப்போது, நரகம் எவ்வளவு பயங்கரமானது என்பதைப் பற்றி நாம் மிக நன்றாக அறிந்திருக்கின்றோம்.

*14:21 மறுவுலகைப் பற்றிக் குர்ஆன் அடிக்கடி கடந்த காலச் சொற்கள் கொண்டு பேசுகின்றது. இது ஏனெனில் அவை கடவுளால் ஏற்கனவே காணப்பட்டு விட்ட எதிர்கால நிகழ்வுகள் ஆகும், மேலும் அவை நிச்சயமாக நிகழ்ந்தே தீரும்.

*14:48 “கடவுளின் வாக்குறுதிக்கு ஏற்ப, கடவுளின் நீதி வாசம் செய்யும் புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியை நாம் எதிர்நோக்கி இருக்கின்றோம்“ என்ற இந்த முன்னறிவிப்பு பழைய ஏற்பாட்டிலும் (ஏசையா 65:17 & 66:22) மற்றும் புதிய ஏற்பாட்டிலும் காணப்படுகின்றது. (2 பீட்டர் 3:13).