சூரா 15க்குரிய அடிக்குறிப்புகள்

*15:1 & *15:9 குர்ஆனுடைய தெய்வீக ஆதாரமும், மேலும் அதன் பரிபூரணமான பாதுகாப்பும் குர்ஆனின் கணிதக் குறியீட்டின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது (பின் இணைப்பு 1). இந்த மாபெரும் அற்புதத்தின் திரையை விலக்குவதற்கெனக் கடவுளின் உடன்படிக்கைத் தூதர் விதிக்கப்பட்டிருந்தார் .“ திக்ர்” என்ற வார்த்தை பல வசனங்களில் குர்ஆனின் குறியீட்டைக் குறிக்கின்றது ( 15:6, 21:2, 26:5, 38:1, 38:8, 74:31). “ ரஷாத் கலீஃபா” வின் எழுத்தெண்மதிப்பு (1230)+15+9=1254, 19 X 66 .

*15:20 விண்வெளி வீரர்களை நாம் அண்டவெளிக்குள் அனுப்பும் போது, உணவு, தண்ணீர் மற்றும் பிராணவாயு ஆகியவற்றை மிகச் சரியாக அளவிட்டு நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். பணிபுரிந்து மேலும் இனப்பெருக்கம் செய்யக் கோடிக்கணக்கான விண்வெளி வீரர்களுடன் இந்தப் பூமி எனும் விண்கலத்தைக் கடவுள் படைத்தார்; பிராணவாயு, புத்தம் புதிய தண்ணீர், மேலும் ஏராளமான வகைகளில் சுவையான உணவு மற்றும் பானங்களைத் தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் கொண்ட ஓர் ஒழுங்கு முறையை அவர்களுக்கு அவர் வழங்கினார்.

*15:85-88 கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் பணிகளில் ஒன்று, கி.பி.2280ல் இந்த உலகம் முடிந்து போகும் என்ற குர்ஆனின் உறுதியான அறிவிப்பைச் சேர்ப்பிப்பதாகும் (20:15, 72:27 மற்றும் பின்இணைப்பு 25).

*15:99 உறுதிப்பாட்டை அடைவதற்கு வழிபாட்டு வழிமுறைகளே நம்முடைய உபாயங்கள் ஆகும் (பின் இணைப்பு 15).