சூரா 2: பசுங்கன்று (அல்-பகறாஹ்)
[2:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[2:1] அ.ல.ம.*
அடிகுறிப்பு

[2:2] இந்த வேதம் தவறிழைக்காததாகவும்; நன்னெறியாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கின்றது;

மூன்று வகையான மனிதர்கள் (1) நன்னெறியாளர்கள்

[2:3] அவர்கள் காண முடியாதவற்றை நம்புபவர்கள். தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்)* கடைப்பிடிப்பவர்கள், மேலும் அவர்களுக்கான நம்முடைய** வாழ்வாதாரங்களில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.
அடிகுறிப்பு

[2:4] மேலும் அவர்கள் உமக்கு என்ன வெளிப் படுத்தப்பட்டதோ, அதில் உள்ளதையும் மற்றும் உமக்கு முன்னர் என்ன வெளிப்படுத் தப்பட்டதோ,* அதில் உள்ளதையும் நம்பிக்கை கொள்வார்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் பரிபூரணமான உறுதியோடிருப்பார்கள்.
அடிகுறிப்பு

[2:5] இவர்கள்தான் தங்களுடைய இரட்சகரால் வழிநடத்தப்படுகின்றவர்கள், இவர்களே வெற்றியாளர்கள்.

(2) நம்பமறுப்பவர்கள்

[2:6] நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை எச்சரிக்கா விட்டாலும் அது அவர்களுக்கு சமமேயாகும்; அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.*
அடிகுறிப்பு

[2:7] கடவுள் அவர்களுடைய இதயங்களிலும், அவர்களுடைய செவிப்புலன்களிலும் முத்திரை இடுகின்றார், மேலும் அவர்களுடைய கண்கள் திரையிடப்பட்டுள்ளன. அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

(3) நயவஞ்சகர்கள்

[2:8] இன்னும், அவர்கள் நம்பிக்கை கொண்ட வர்களாக இல்லாத அதே சமயம்,“நாங்கள் கடவுள்-ஐயும் மற்றும் இறுதி நாளையும் நம்புகின்றோம்,” என்று கூறுபவர்களும் உள்ளனர்.
[2:9] கடவுள்-ஐயும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுக்கின்ற முயற்சியில், அவர்கள் உணர்ந்து கொள்ளாது தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
[2:10] அவர்களுடைய மனங்களில் ஒரு நோய் உள்ளது. அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய நோயை அதிகப்படுத்துகின்றார், அவர்களுடைய பொய்மைக்காக வலிமிகுந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[2:11] “தீமைகள் செய்யக்கூடாது” என அவர்களிடம் கூறப்படும் பொழுது, “ஆனால் நாங்கள் நன்னெறி யாளர்கள்!” என்று அவர்கள் கூறுகின்றனர்.
[2:12] உண்மையில், அவர்கள் தீமை செய்பவர்கள், ஆனால் அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
[2:13] “நம்பிக்கை கொண்ட மக்களைப் போல் நம்பிக்கை கொள்ளுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் பொழுது, “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?” என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் தான் மூடர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் அறிந்து கொள்வதில்லை.
[2:14] நம்பிக்கை கொண்டவர்களை அவர்கள் சந்திக்கும் பொழுது, “நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்கள் சாத்தான்களுடன் தனித்திருக்கும் பொழுது, “நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம்; நாங்கள் பரிகாசம் மட்டுமே செய்து கொண்டிருந்தோம்.” என்று அவர்கள் கூறுகின்றனர்.
[2:15] கடவுள் அவர்களைப் பரிகாசம் செய்கின்றார், மேலும் அவர்களுடைய வரம்பு மீறல்களில், பெருந்தவறுகள் செய்யும் வண்ணம் அவர்களை வழி நடத்துகின்றார்.
[2:16] இவர்கள்தான் வழிகாட்டலை விற்று வழிகேட்டை வாங்கிக் கொண்டவர்கள், இத்தகைய வணிகம் ஒரு போதும் வளம் தராது. அன்றியும் எந்த வழிகாட்டலையும் அவர்கள் பெறுவதில்லை.
[2:17] அவர்களுடைய உதாரணம் ஒரு நெருப்பை மூட்டியவர்களைப் போன்றது, பின்னர் அவர் களைச் சுற்றி, அது ஒளி சிந்தத் துவங்கும் பொழுது, கடவுள் அவர்களுடைய ஒளியை எடுத்து விடுகின்றார், பார்க்க இயலாதவர்களாக அவர்களை இருளில் விட்டுவிடுகின்றார்.
[2:18] செவிடர், ஊமையர் மற்றும் குருடர்; அவர்கள் திரும்புவதற்குத் தவறிவிடுகின்றனர்.
[2:19] மற்றொரு உதாரணம்: வானத்திலிருந்து இருள், இடி, மற்றும் மின்னலைக் கொண்டதொரு புயல் மழை. மரணத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு அவர்கள் தங்கள் காதுகளுக்குள் தங்கள் விரல்களை வைத்துக் கொள்கின்றனர். கடவுள் நம்பமறுப்பவர்களை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

நம்பிக்கையின் ஒளி

[2:20] மின்னலானது கிட்டத்தட்ட அவர்களுடைய கண் பார்வையைப் பறிக்கின்றது. அவர்களுக்காக அது ஒளிரும் போது, அவர்கள் முன்னோக்கி நகர்கின்றார்கள், மேலும் அது இருளாக மாறும்பொழுது, அவர்கள் அசையாமல் நின்று விடுகின்றார்கள். கடவுள் நாடினால், அவர் களுடைய கேட்கும் திறனையும், மேலும் அவர்களுடைய கண்பார்வையையும் எடுத்துவிட அவரால்* இயலும். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
அடிகுறிப்பு

[2:21] மனிதர்களே, நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு -உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர் களையும் படைத்தவராகிய - உங்கள் இரட்சகர் ஒருவரை மட்டுமே வழிபடுங்கள்.
[2:22] அவர்தான் பூமியை உங்களுக்கு வசிக்கத் தக்கதாகவும், மேலும் வானத்தை ஒரு விதானமாகவும் ஆக்கியவர். உங்களுடைய வாழ்வாதாரங்களுக்காக அனைத்துக் கனிவகைகளையும் விளைவிப்பதற்கு, அவர் வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்பு கின்றார்.இப்போது நீங்கள் அறிந்திருப்பதால், கடவுள்-க்குப் போட்டியாக இணைத்தெய்வங்களை அமைத்துக்கொள்ளவேண்டாம்.

கணிதரீதியிலான அறை கூவல்

[2:23] நம்முடைய அடியாருக்கு* நாம் வெளிப்படுத் தியவற்றைக் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமேயானால், நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், பின்னர் இவற்றைப் போன்ற ஒரு சூராவை உருவாக்குங்கள், மேலும் கடவுள்-க்கு எதிராக உங்கள் சொந்த சாட்சிகளை அழைத்துக் கொள்ளுங்கள்.
அடிகுறிப்பு

நரகின் உருவக வர்ணனை

[2:24] உங்களால் இதனைச் செய்ய இயலாது போனால் - மேலும் உங்களால் ஒரு போதும் இதனைச் செய்ய இயலாது - பின்னர் மனிதர்கள் மற்றும் கற்பாறைகளை எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பைப் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள்; அது நம்ப மறுப்பவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றது.

சுவனத்தின் உருவக வர்ணனை

[2:25] நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, அவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களைப் பெறுவார்கள் என்று நற்செய்தி அளிப்பீராக. அங்கு கனிகளைக் கொண்டு உணவு வழங்கப்படும்பொழுது “இதுதான் இதற்கு முன்னரும் எங்களுக்கு வழங்கப்பட்டது” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்விதமாக அவர்களுக்கு உதாரண-வர்ணனைகள் வழங்கப்படுகின்றன. அங்கே அவர்கள் தூய்மையான துணைகளைப் பெற்றிருப்பார்கள், மேலும் அவர்கள் அங்கே என்றென்றும் வசித்திருப்பார்கள்.
[2:26] மிகச் சிறிய கொசு முதல் அதைவிடப் பெரியதான எந்த விதமான உதாரணத்தை* எடுத்துக் கூறுவதிலிருந்தும் கடவுள் வெட்கப் படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, இது தங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் என்பதை அவர்கள் அறிவார்கள், நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை அவர்கள் “இத்தகையதொரு உதாரணத்தைக் கொண்டு கடவுள் கூற நாடுவது என்ன? என்று கூறுகின்றார்கள். அதன் மூலமாக அவர் பலரை வழிதவறச் செய்கின்றார், மேலும் பலரை வழிநடத்துகின்றார். ஆனால் அதன் மூலமாக தீயவர்களைத்தவிர எவரையும் அவர் ஒருபோதும் வழிதவறும்படி செய்வதில்லை,
அடிகுறிப்பு

[2:27] கடவுள்-ன் உடன்படிக்கையை உறுதியாகக் கடைப்பிடிப்பதாக வாக்களித்து விட்டு பின்னர் அதனை மீறுபவர்கள், சேர்த்து வைக்கும்படி கடவுள் கட்டளையிட்டிருப்பதை துண்டித்து விடுபவர்கள், மேலும் தீமைப் புரிகின்றவர்கள். இவர்கள்தான் நஷ்டவாளிகள்.

நம்ப மறுப்பவர்களுக்கு இரண்டு மரணங்கள் மற்றும் இரண்டு வாழ்வுகள்*

[2:28] நீங்கள் மரணித்தவர்களாக இருந்தபொழுது அவர் உங்களுக்கு வாழ்வு அளித்தார், பின்னர் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார், பின்னர் உங்களை மீண்டும் வாழ்விற்கு கொண்டுவருகின்றார், பின்னர் அவரிடமே நீங்கள் இறுதியாகத் திரும்ப வேண்டி இருக்கும் பொழுது எவ்வாறு நீங்கள் கடவுள்-ஐ நம்ப மறுக்க இயலும்?
அடிகுறிப்பு

[2:29] அவர்தான் பூமியில் மீது ஒவ்வொன்றையும் உங்களுக்காகப் படைத்தார், பின்னர் வானத்தின் பால் திரும்பி, அங்கு* ஏழு பிரபஞ் சங்களை குறையின்றிச் செய்து முடித்தார், மேலும் அவர் எல்லா விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
அடிகுறிப்பு

சாத்தான் : ஒரு தற்காலிக “தெய்வம்”*

[2:30] உமது இரட்சகர் வானவர்களிடம், “பூமியில் ஒரு பிரதிநிதியை (ஒரு தற்காலிக தெய்வம்) நான் அமைக்கின்றேன்,” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள், “நாங்கள் உம் புகழினைப் பாடிக்கொண்டும், உம்மைத் துதித்துக் கொண்டும், உமது முழுமையான அதிகாரத்தை உறுதியாகக் கடைப்பிடித்துக் கொண்டும் இருக்கும்பொழுது, தீமையைப் பரப்பி மேலும் இரத்தம் சிந்த வைப்பவனையா அங்கு நீர் அமர்த்தப்போகின்றீர்? என்று கூறினார்கள். அவர் “நீங்கள் அறியாததை நான் அறிவேன்” என்று கூறினார்.
அடிகுறிப்பு

சோதனை துவங்குகின்றது

[2:31] அவர் ஆதாமிற்கு பெயர்கள்* அனைத்தையும் கற்றுக்கொடுத்தார், பின்னர் வானவர்களிடம் “நீங்கள் சரியானவர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்குத் தாருங்கள்” என்று கூறியவராக அவற்றை எடுத்து வைத்தார்.
அடிகுறிப்பு

[2:32] அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர், நீர் எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு எந்த அறிவும் இல்லை, நீரே எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.” என்று கூறினார்கள்.
[2:33] அவர், “ஆதாமே, அவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறுவீராக,” என்று கூறினார். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறியபொழுது, அவர், “வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? நீங்கள் அறிவிப்பவற்றையும் மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் நான் அறிவேன்” என்று கூறினார்.
[2:34] “ஆதாமின் முன்னே சிரம் பணியுங்கள்,” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர; அவன் மறுத்தான், மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், மேலும் ஒரு நம்ப மறுப்பவனாகவும் இருந்தான்.
[2:35] நாம், “ஆதாமே, உமது மனைவியுடன் சுவனத்தில் வசிப்பீராக, மேலும் நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக உண்ணுவீராக, மேலும் நீங்கள் பாவம் செய்யாமலிருக்கும் பொருட்டு, இந்த மரத்தை நெருங்காதிருப்பீராக” என்று கூறினோம்.
[2:36] ஆனால் சாத்தான் அவர்களை ஏமாற்றி விட்டான், மேலும் அங்கிருந்து அவர்கள் வெளியேறக் காரணமாகிவிட்டான். நாம், “ஒருவருக்கொருவர் விரோதிகளாகக் கீழே செல்லுங்கள். சிறிதொரு காலத்திற்காக உங்களுடைய வசிப்பிடமும், மற்றும் வாழ்வாதாரமும் பூமியின் மீது இருக்க வேண்டும்”, என்று கூறினோம்.

பிரத்யேகமான வார்த்தைகள்*

[2:37] பின்னர், ஆதாம் தன்னுடைய இரட்சகரிட மிருந்து வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார், அதன் மூலம் அவர் தன்னை மீட்டுக் கொண்டார். அவர் தான் மீட்சி அளிப்பவர், மிக்க கருணையாளர்.
அடிகுறிப்பு

[2:38] நாம் கூறினோம், “நீங்கள் அனைவரும் இங்கிருந்து கீழே செல்லுங்கள். என்னிடமிருந்து வழிகாட்டல் உங்களுக்கு வருகின்றபொழுது, என்னுடைய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[2:39] “நம்பமறுத்து மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள் அங்கே அவர்கள் என்றென்றும் வசித்திருப்பார்கள்”.

யூதர்கள் அனைவருக்கும் தெய்வீகக் கட்டளைகள்: “நீங்கள் இந்தக் குர்ஆனில் நம்பிக்கை கொள்ளவேண்டும்”

[2:40] இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளை நினைவில் கொள்ளுங்கள், மேலும் உடன்படிக்கையின் எனது பங்கை நான் பூர்த்தி செய்யும் பொருட்டு, உடன்படிக்கையின் உங்கள் பங்கை பூர்த்தி செய்யுங்கள், மேலும் என்னிடம் பயபக்தியோடிருங்கள்.
[2:41] உங்களிடம் உள்ளதை உறுதிப்படுத்திய வண்ணம், இதிலே நான் வெளிப்படுத்தி யிருப்பவற்றில் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், இதனை நிராகரிப்போரில் முதன்மையானவர்களாக ஆகி விடாதீர்கள். என் வெளிப்பாடுகளை மலிவான விலைக்கு வியாபாரம் செய்துவிடாதீர்கள். மேலும் என்னை கவனத்தில் கொள்ளுங்கள்.
[2:42] சத்தியத்துடன் அசத்தியத்தைச் சேர்த்துக் குழப்பிவிடாதீர்கள், அன்றி அறிந்து கொண்டே நீங்கள் சத்தியத்தை மறைக்கவும் செய்யாதீர்கள்.
[2:43] நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்க வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சேர்ந்து குனிந்து வழிபட வேண்டும்.
[2:44] நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டிருக் கும் நிலையில், உங்களை மறந்துவிட்டு மக்களை நன்னெறியாளர்கள் ஆகும்படி நீங்கள் உபதேசிக்கின்றீர்களா? நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[2:45] உறுதிப்பாடு மற்றும் தொடர்புத் (ஸலாத்) தொழுகைகளின் மூலம் நீங்கள் உதவி தேட வேண்டும். இது உண்மையில் கடினமானதே, எனினும் பயபக்தியுடையோருக்கு அல்ல,
[2:46] அவர்கள் தங்கள் இரட்சகரை சந்திப்போம் என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்; இறுதியாக அவரிடமே அவர்கள் திரும்புவார்கள்.
[2:47] இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளையும் மேலும் மற்றெந்த மக்களையும் விட அதிகமாக உங்களுக்கு அருள் புரிந்ததையும் நினைவில் கொள்ளுங்கள்.
[2:48] எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவிற்கு உதவி செய்ய இயலாத, எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத, எந்த ஈட்டுத் தொகையும் செலுத்த இயலாத, அன்றி எவரொருவரும் உதவி செய்யப்பட இயலாத அந்த நாள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.
[2:49] உங்கள் மகன்களைக் கொலை செய்து மேலும் உங்கள் மகள்களை விட்டு வைத்து, உங்களை மிக மோசமான வேதனைக்கு உள்ளாக்கிய ஃபேரோவின் சமூகத்தாரிடம் இருந்து உங்களை நாம் காப்பாற்றியதை நினைவு கூருங்கள். அது உமது இரட்சகரிட மிருந்துள்ள ஒரு கடுமையான சோதனையாக இருந்தது.
[2:50] உங்களுக்காக நாம் கடலைப் பிளந்ததை நினைவு கூருங்கள்; நாம் உங்களைக் காப்பாற்றி உங்கள் கண்களுக்கு எதிரிலேயே ஃபேரோவின் மக்களை மூழ்கடித்தோம்.
[2:51] இருப்பினும், நாற்பது இரவுகளுக்காக மோஸஸை நாம் வரவழைத்தபோது, அவர் இல்லாத சமயம் நீங்கள் கன்றுக்குட்டியை வழிபாடு செய்தீர்கள் மேலும் தீயவர்களாக மாறிவிட்டீர்கள்.*
அடிகுறிப்பு

[2:52] அவ்வாறிருந்தும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அதன்பின்னர் உங்களை நாம் மன்னித்தோம்.
[2:53] நீங்கள் வழிகாட்டப்படும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தையும், சட்டப் புத்தகத்தையும் வழங்கியதை நினைவு கூருங்கள்.

உங்கள் அகந்தையைக் கொல்லுங்கள்*

[2:54] மோஸஸ், தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தாரே, கன்றுக்குட்டியை வழிபட்டதன் மூலம் நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டீர்கள், நீங்கள் உங்கள் படைப்பாளரிடம் வருந்தித்திருந்தியாக வேண்டும், உங்கள் அகந்தைகளை நீங்கள் கொல்ல வேண்டும். உங்கள் படைப்பாளரின் பார்வை யில் இது உங்களுக்கு சிறந்ததாகும்”என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர் உங்களை மீட்டுக் கொண்டார், அவர்தான் மீட்பவர், மிக்க கருணையாளர்.
அடிகுறிப்பு

கண் கூடான ஆதாரம்*

[2:55] நீங்கள், “மோஸஸே, கடவுள்-ஐ, நாங்கள் கண் கூடாகக் காணும்வரை நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அதன் விளைவாக நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே மின்னல் உங்களைத் தாக்கியது.
அடிகுறிப்பு

[2:56] நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு, நீங்கள் மரணித்துவிட்ட பின்னர், உங்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தோம்.

சினாயில்

[2:57] (சினாயில்) நாம் மேகங்களைக் கொண்டு உங்களுக்கு நிழல் தந்தோம், மேலும் உங்களுக்கு மன்னாவையும், காடைகளையும் இறக்கி அனுப்பினோம், “ நாம் உங்களுக்கு வழங்கிய நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள்” (கலகத்தின் மூலம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை; அவர்கள் தங்கள் சொந்த ஆன்மாக்களுக்குத்தான் தீங் கிழைத்துக் கொள்கின்றனர்.

கடவுள் மேல் நம்பிக்கை குறைவு : அவர்கள் ஜெருசலேமில் நுழைய மறுக்கின்றனர்

[2:58] நாம், “இந்நகரத்திற்குள் நுழையுங்கள், அதில் நீங்கள் விரும்பியவாறு ஏராளமான வாழ்வாதாரங்களை நீங்கள் காண்பீர்கள். அப்படியே அடக்கத்துடன் நுழைவாயிலுக்குள் நுழையுங்கள், மேலும் மனிதர்களை நல்ல முறையில் நடத்துங்கள், பின்னர் நாம் உங்களது பாவங்களை மன்னிப்போம், மேலும் பக்தியுடையோரின் வெகுமதியை அதிகரிப் போம்” என்று கூறியதை நினைவு கூருங்கள்.
[2:59] ஆனால் அவர்களில் இருந்த தீயவர்கள் அவர் களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கு மாறான கட்டளைகளைச் செயல்படுத்தினர். அதன் விளைவாக, வரம்பு மீறியவர்களின் மீது அவர்களுடைய தீமைகளுக்காக விண்ணி லிருந்து தண்டனையை நாம் இறக்கி அனுப்பி னோம்.

அதிகமான அற்புதங்கள்

[2:60] மோஸஸ் தன் சமூகத்தாருக்கு தண்ணீரைத் தேடியதை நினைவு கூருங்கள். நாம், “உமது கைத்தடியால் பாறையை அடியும்” என்று கூறினோம். அப்போது அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி எழுந்தன. ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்குரிய தண்ணீரை அறிந்திருந்தனர். கடவுள்-ன் வாழ்வாதாரங்களில் இருந்து உண்ணுங்கள், பருகுங்கள், மேலும் சீர்குலைப்பவர்களாக பூமியைச் சுற்றித் திரியாதீர்கள்.

இஸ்ரவேலர்கள் கலகம் செய்கின்றனர்

[2:61] நீங்கள், “மோஸஸே, ஒரே வகை உணவை எங்களால் இனியும் சகித்துக் கொள்ள இயலாது. உமது இரட்சகரிடம் அவரைக்காய், வெள்ளரி, பூண்டு, தட்டைப்பயிறு, மற்றும் வெங்காயம் போன்ற பூமியின் பயிர்களை எங்களுக்காக விளைவிக்குமாறு பிரார்த்தனை செய்யும்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர், “நல்லவற்றிற்குப் பகரமாக தாழ்ந்தவற்றை மாற்றிக் கொள்ள விரும்புகின்றீர்களா? எகிப்திற்கு இறங்கிச் செல்லுங்கள் அங்கே நீங்கள் கேட்டவற்றை காண்பீர்கள்,” என்று கூறினார். அவர்கள் தண்டனைக்கும், இழிவிற்கும் அவமானத்திற்கும் உள்ளானார்கள், மேலும் தங்கள் மீதே கடவுள்-ன் கோபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை மறுத்துக் கொண்டும், வேதம் வழங்கப்பட்டவர்களை அநீதமாக கொலை செய்து கொண்டும் இருந்தததே இதற்கு காரணம் ஆகும். இது ஏனெனில், அவர்கள் கீழ்படிய மறுத்ததாலும், வரம்புமீறிக் கொண்டு இருந்ததனாலுமாகும்.

அடிப்பணிந்தோர் அனைவரின் ஒற்றுமை

[2:62] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டோரும், யூதர்களாக இருப்போரும், கிறிஸ்தவர்களும், மேலும் மாறியவர்களும், எவர் ஒருவர் (1) கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (2) இறுதி நாளின் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

இஸ்ரவேலர்களிடம் உடன்படிக்கை

[2:63] “நாம் உங்களுக்குக் கொடுத்திருப்பதை நீங்கள் திடமாக ஆதரிக்கவேண்டும், மேலும் நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு அதில் உள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும்” என்று சினாய் மலையை உங்களுக்கு மேலாய் உயர்த்தியவாறு நாம் உங்களிடம் ஒரு உடன்படிக்கை செய்தோம்.
[2:64] ஆனால் அதன் பின்னரும் நீங்கள் திரும்பிச் சென்றுவிட்டீர்கள். கடவுள்-ன் அருளும், கருணையும் மட்டும் உங்கள் மீது இல்லா திருந்தால் நீங்கள் அழிக்கப்பட்டிருப்பீர்கள்.
[2:65] உங்களில் ஸப்பத்தின் புனிதத்தை மீறியவர் களை நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். “வாலில்லாக் குரங்குகளைப் போல இழிவடைந் தோராகி விடுங்கள்” என்று நாம் அவர்களிடம் கூறினோம்.
[2:66] அவர்களுடைய தலைமுறையினருக்கும், அவர் களுக்குப் பின்னர் வந்த தலைமுறையினருக்கும் ஓர் உதாரணமாகவும், நன்னெறியாளர்களுக்கு ஓர் அறிவூட்டலாகவும் அவர்களை நாம் அமைத்தோம்.

பசுங்கன்று*

[2:67] மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “கடவுள் ஒரு பசுங்கன்றைப் பலியிடுமாறு உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்று கூறினார். அவர்கள், “எங்களைக் கேலி செய்கின்றீரா?” என்று கூறினர். அவர், “அறிவில்லாத ஒருவரைப் போல் நான் நடந்து கொள்வதை விட்டும் கடவுள் காக்க வேண்டும்” என்று கூறினார்.
அடிகுறிப்பு

[2:68] அவர்கள், “எந்த ஒன்று என எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரை பிரார்த்தனை செய்யும்.” என்று கூறினார்கள். “அது அதிகக் கிழடுமல்லாத, இளையதுமல்லாத இரண்டிற்கும் இடைப்பட்ட பசுங்கன்றாகும் என்று அவர் கூறுகின்றார், இப்போது உங்களுக்கிடப்பட்ட கட்டளையைச் செயல்படுத்துங்கள்” என்று அவர் கூறினார்.
[2:69] அவர்கள், “அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரைப் பிரார்த்தனை செய்யும், என்று கூறினார்கள். அவர், “அது ஒரு மஞ்சள் நிறமுடைய பசுங்கன்றாகும், பிரகாசமான நிறமுடையது, பார்ப்பவரைப் பரவசப்படுத்தும், என்று அவர் கூறுகின்றார்”, என்று கூறினார்.
[2:70] அவர்கள், “எந்த ஒன்று என எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரைப் பிரார்த்தனை செய்யும். எங்களுக்கு கன்றுகள் எல்லாம் ஒன்று போலவே தோன்றுகின்றன. மேலும் கடவுள் நாடினால் நாங்கள் வழிகாட்டப்படுவோம்” என்று கூறினார்கள்.
[2:71] அவர், “நிலத்தை உழுதோ அல்லது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சியோ இழிவு செய்யப்படாத ஒரு பசுங்கன்று; எந்த ஒரு வடுவுமில்லாதது என்று கூறுகின்றார்” என்று அவர் கூறினார். அவர்கள், “இப்போது நீர் சத்தியத்தைக் கொண்டு வந்தீர்” என்று கூறினார்கள். இந்நீண்ட தயக்கத்திற்குப் பின்னர், இறுதியில் அதனைப் பலியிட்டனர்.

பசுங்கன்றுக்குரிய நோக்கம்

[2:72] நீங்கள் ஒரு ஆன்மாவைக் கொலை செய்தீர்கள், பின்னர் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் மறைக்க முயற்சி செய்ததைக் கடவுள் வெளிப்படுத்த இருந்தார்.
[2:73] நாம், “அதன் (பசுங்கன்றின்) பகுதியைக் கொண்டு (பலியானவரை) அடியுங்கள்” என்று கூறினோம். அப்போது, கடவுள் பலியானவரை உயிர்ப்பித்தார், மேலும் நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு அவரது அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டினார்.
[2:74] இதன் பின்னரும், உங்கள் இதயங்கள் கற் பாறைகளைப்போன்று, அல்லது அதைவிடவும், இறுகிவிட்டன. ஏனெனில் ஆறுகள் பொங்கி வழிந்தோடும் கற்பாறைகளும் உண்டு, மற்றவை வெடிப்புற்று மெல்லிய ஓடைகளை வெளிப்படுத்துகின்றன, இன்னும் சிலபாறைகள் கடவுள்-க்காக பயபக்தியினால் அஞ்சி ஒடுங்குகின்றன. கடவுள் நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் அறியாதிருப்பவர் அல்ல.

கடவுளின் வார்த்தையைச் சிதைத்தல்

[2:75] அவர்களில் சிலர் கடவுள்-ன் வார்த்தை கயைக் கேட்டு அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு, பின்னர் வேண்டுமென்றே அதனைச் சிதைப்பவர்களாக இருக்கும் போது, உங்களைப்போல் அவர்கள் நம்பிக்கை கொள் வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

கடவுளின் வார்த்தையை மறைத்தல்

[2:76] மேலும் நம்பிக்கையாளர்களை அவர்கள் சந்திக்கும் போது அவர்கள், “நாங்கள் நம்பு கின்றோம்,” என்று கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒன்று சேரும் போது, “உங்கள் இரட்சகரைப் பற்றிய அவர்களுடைய வாதங்களுக்கு ஆதாரத்தைக் கொண்டு அவர்களுக்கு நீங்கள் வழங்கி விடாதிருக்கும் பொருட்டு கடவுள்-ஆல் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள செய்தியை (நம்பிக்கையாளர்களுக்கு) தெரிவிக்காதீர்கள். நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?” என்று அவர்கள் கூறுகின்றனர்.
[2:77] அவர்கள் மறைக்கும் அனைத்தும் மேலும் அவர்கள் அறிவிக்கும் அனைத்தும் கடவுள் -க்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?
[2:78] வதந்திகளின் மூலமேயன்றி வேதத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருந்து கொண்டு, பின்னர் தாங்கள் அறிந்திருக்கின்றோம் என்று எண்ணிக்கொள்வோரும் வேதம் வழங்கப் படாதவர்களில் உள்ளனர்.
[2:79] ஆகையால், அற்பப் பொருளாதார லாபங்களைத் தேடியவர்களாக தங்கள் கரங்களாலேயே வேதத்தைச் சிதைத்து விட்டுப் பின்னர் “ இது தான் கடவுள் வெளிப்படுத்தியது,” என்று கூறுவோருக்குக் கேடுதான். இவ்வாறு சிதைத்ததால் அவர்களுக்குக் கேடுதான், மேலும் சட்ட விரோதமான அவர்களுடைய லாபங்களினாலும் அவர்களுக்கு கேடுதான்.

சுவனம் மற்றும் நரகத்தின் நிலைத்த தன்மை*

[2:80] குறைவான எண்ணிக்கையிலான நாட்களே தவிர, நரகம் எங்களைத் தீண்டாது என்று சிலர் கூறிஉள்ளனர். “அத்தகையதொரு வாக் குறுதியைக் கடவுள்-இடமிருந்து பெற்றிருக் கின்றீர்களா - கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிக்கமாட்டார் - அல்லது கடவுள்-ஐ பற்றி நீங்கள் அறியாதவற்றைக் கூறுகின்றீர்களா?” என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

[2:81] உண்மையில், எவர்கள் பாவத்தைச் சம்பாதித்து, மேலும் தங்கள் தீய காரியங்களினால் சூழப்படு கின்றார்களோ, அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள்; அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
[2:82] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள்; அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.

கட்டளைகள்

[2:83] இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம்: “கடவுள் -ஐ தவிர எவரையும் நீங்கள் வழிபடக்கூடாது , உங்களுடைய பெற்றோரை கண்ணியப்படுத்த வேண்டும். உங்கள் உறவினர்களை, அநாதை களை, மற்றும் ஏழைகளை மதிக்க வேண்டும். மக்களை நீங்கள் இணக்கத்துடன் நடத்த வேண்டும். நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வரவும் வேண்டும்”, என்று ஓர் உடன்படிக்கை செய் தோம். ஆனால், உங்களில் சிலரைத் தவிர, நீங்கள் திரும்பி விட்டீர்கள், மேலும் வெறுப் புற்றவர்களாக ஆகிவிட்டீர்கள்.
[2:84] நீங்கள் உங்கள் இரத்தத்தைச் சிந்தவோ, உங்களில் ஒருவரை ஒருவர் உங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றவோ கூடாதென்று உங்களி டம் நாம் ஓர் உடன்படிக்கை செய்தோம். நீங்கள் ஏற்றுக்கொண்டு சாட்சியம் அளித்தீர்கள்.
[2:85] இருப்பினும், இங்கே நீங்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றீர்கள், மேலும் உங்களில் சிலரை பாவகரமாகவும் கெட்ட எண்ணத் தோடும் அவர்களுக்கெதிராக ஒன்றுசேர்ந்து கொண்டு, அவர்களுடைய வீடுகளைவிட்டும் வெளியேற்றுகின்றீர்கள். அவர்கள் சரணடைந் தாலும் அவர்களிடம் ஈட்டுத்தொகை கேட்கின் றீர்கள். முதலில் அவர்களை வெளியேற்றுவதே உங்களுக்குத் தடுக்கப்பட்டதாக இருந்தது. நீங்கள் வேதத்தின், ஒரு பகுதியை நம்பி ஒரு பகுதியை நம்ப மறுக்கின்றீர்களா? உங்களில் இதனைச் செய்வோருக்கு இவ்வுலகில் இழிவும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் மிக மோசமான தண்டனையும் தவிர வேறென்ன தண்டனை இருக்க இயலும்? நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் கடவுள் ஒருபோதும் அறியாதவர் அல்ல.
[2:86] இவர்கள்தான் மறுவுலகை செலவு செய்து, கீழான இந்த வாழ்வை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். அதன் விளைவாக, தண்டனை அவர்களுக்கு ஒரு போதும் குறைக்கப்படாது, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

இஸ்ரவேலரின் வேதம் வழங்கப்பட்டவர்கள்

[2:87] மோஸஸிற்கு நாம் வேதத்தை வழங்கினோம், மேலும் அவரைத் தொடர்ந்து மற்றத் தூதர் களை நாம் அனுப்பினோம், மேலும் மேரியின் மகனாகிய இயேசுவிற்கு ஆழ்ந்த அற்புதங்களை வழங்கினோம், மேலும் பரிசுத்த ஆவியைக் கொண்டு அவருக்கு ஆதரவளித் தோம். ஒவ்வொரு முறையும் நீங்கள் விரும்பாத எதையேனும் தூதர்கள் கொண்டு வரும் போது நீங்கள் ஆணவம் கொண்டவர்களாக ஆக உங்கள் அகந்தை காரணமானது என்பது உண்மை இல்லையா? அவர்களில் சிலரை நீங்கள் ஏற்க மறுத்தீர்கள், மேலும் அவர்களில் சிலரை நீங்கள் கொன்று விட்டீர்கள்.

சோகமான வாக்குமூலம்: “என் மனம் முடிவெடுத்து விட்டது!’’

[2:88] சிலர், “எங்கள் மனங்கள் முடிவெடுத்து விட்டன” என்று கூறுவார்கள், அவ்வாறல்ல, இது அவர்களுடைய நம்பிக்கையின்மையின் விளை வாக கடவுள்-இடம் இருந்து வந்த சாபம் ஆகும். இது அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்களை நம்பிக்கை கொள்வதை விட்டும் தடுக்கின்றது.

குர்ஆன் அனைத்து வேதங்களையும் முழுமைபடுத்துகின்றது

[2:89] அவர்களிடம் உள்ளதை ஒப்புக்கொள் வதாகவும் மேலும் அதனை உறுதிப்படுத்து வதாகவும் இது இருந்த போதிலும், மேலும் நம்ப மறுப்போருடன் உரையாடும்போது இதன் வருகையை அவர்கள் முன்னறிவித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுடைய முன்னறிவிப்பு நடந்தேறி கடவுள்-இடம் இருந்து இந்த வேதம் அவர்களிடம் வந்த போது அவர்கள் இதனை நம்ப மறுத்துவிட்டனர். கடவுள்-ன் தண்டித்தலானது இவ்விதமாக நம்ப மறுப்போரை வேதனைக்கு உள்ளாக்கு கின்றது.
[2:90] தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தவர்கள் மீது கடவுள் தன்அருட்கொடையைப் பொழிந் ததற்காக ஆத்திரம் கொண்டு கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளை ஏற்கமறுத்து - தங்கள் ஆன்மாக்களை விற்று அவர்கள் எதனைப் பெற்றுக் கொண்டார்களோ, அது உண்மையில் துக்ககரமானது. அதன் வினளவாக, அவர்கள் கோபத்தின் மேல் கோபத்திற்கு உள்ளானார்கள். நம்பமறுப்பவர்கள் இழிவுபடுத்துகின்றதொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள்.
[2:91] “கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளில் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “எங்களுக்கு இறக்கப்பட்டவற்றில் மட்டுமே நாங்கள் நம்பிக்கை கொள்வோம் என்று கூறுகின்றனர். இவ்விதமாக, அது அவர் களுடைய இரட்சகரிடமிருந்து வந்த சத்தியமாக இருந்த போதிலும், மேலும் அவர்களிடம் உள்ளதை அது உறுதிப்படுத்திய போதிலும் அதனைத் தொடர்ந்த வெளிப்பாடுகளில் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்திருந் தால் ஏன் கடவுள்-ன் வேதம் வழங்கப்பட்ட வர்களை கொலை செய்தீர்கள்?” என்று கூறுவீராக.

இஸ்ரவேலின் சரித்திரத்தில் இருந்து கற்றுக்கொள்ளுதல்

[2:92] ஆழ்ந்த அற்புதங்களுடன் மோஸஸ் உங்களிடம் வந்தார், இருப்பினும் அவர் இல்லாத போது நீங்கள் கன்றுக்குட்டியை வழிபட்டீர்கள், மேலும் தீயவர்களாக மாறிவிட்டீர்கள்.
[2:93] “நாம் உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற கட்டளைகளை நீங்கள் திடமாக ஆதரிக்க வேண்டும், மேலும் கவனத்துடன் செவியேற்க வேண்டும்,” என்று சினாய் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தியவண்ணம் உங்களிடம் ஓர் உடன் படிக்கை செய்தோம். அவர்கள், “நாங்கள் செவியேற்கின்றோம், ஆனால் நாங்கள் கீழ்படிய மாட்டோம்” என்று கூறினார்கள். அவர் களுடைய நம்பிக்கையின்மையின் காரணமாக, கன்றுக்குட்டியின் மேல் உள்ள பக்தியால் அவர்களுடைய நெஞ்சங்கள் நிறைந்திருந்தது. “உங்களுக்கு ஏதேனும் நம்பிக்கை இருக்கு மானால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதனைக் கட்டளையிடுகின்றதோ அது உண்மையில் துக்ககரமானது”என்று கூறுவீராக.
[2:94] “மற்ற எல்லா மக்களையும் தவிர்த்து, மறுவுலகின் வீடானது கடவுள்-இடம் உங்களுக்கென்று தயார் செய்து வைக்கப் பட்டிருக்குமாயின், நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், நீங்கள் மரணத்தை மிகவும் விரும்ப வேண்டும், என்று கூறுவீராக.
[2:95] அவர்களுடைய கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக, அவர்கள் ஒருபோதும் அதனை விரும்ப மாட்டார்கள் கடவுள் தீயவர்களை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[2:96] உண்மையில், வாழ்வின் மீது பேராசை கொண்டவர்களாக அவர்களை நீர் காண்பீர், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களை விடவும் மிக அதிகமாக, அவர்களில் ஒவ்வொருவனும் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமென்று விரும்புகின் றான். ஆனால் அவன் எத்தனை நீண்ட காலம் வாழ்ந்தாலும் அவனுடைய தண்டனை எதையும் அது குறைத்துவிடாது. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.

வெளிப்பாட்டின் நடுவில் கப்ரியேலின் பங்கு

[2:97] “கப்ரியேலை எதிர்க்கின்ற எவர்ஒருவரும், அவர்தான் கடவுள்-ன் நாட்டத்திற்கிணங்க, முந்திய வேதங்களை உறுதிப்படுத்துகின்ற, மேலும் நம்பிக்கை கொண்டோருக்கு வழிகாட்டல் மற்றும் நற்செய்தியை வழங்குகின்ற இதனை (குர்ஆன்) கொண்டு வந்து உமது இதயத்தில் இறக்கி வைத்திருக்கின்றார், என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுவீராக.
[2:98] கடவுள்-ஐயும், அவருடைய வானவர்களையும், மேலும் அவருடைய தூதர்களையும், கப்ரியேலையும், மைக்கேலையும் எதிர்க்கின்ற எவர் ஒருவரும், நம்பமறுப்பவர்களை கடவுள் எதிர்க்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
[2:99] இத்தகைய தெளிவான வெளிப்பாடுகளை நாம் உமக்கு இறக்கி இருக்கின்றோம், மேலும் தீயவர்கள்மட்டுமே இவற்றை ஏற்கமறுப்பார்கள்.
[2:100] ஓர் உடன்படிக்கை செய்து அதனை நிறை வேற்றுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண் டால், அவர்களில் சிலர் எப்போதும் அதனை அலட்சியம் செய்கின்றார்கள், என்பது உண்மை இல்லையா? உண்மையில் அவர்களில், பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

கடவுளின் வேதத்தைப் புறக்கணித்தல்

[2:101] இப்போது கடவுள்-இடம் இருந்து ஒரு தூதர் அவர்களிடம்* வந்துள்ளார் மேலும் அவர், அவர்களுடைய சொந்த வேதத்தையே நிரூபிக்கவும் உறுதிப்படுத்தவும் செய்த போதிலும் வேதங்களைப் பின்பற்றும் சிலர் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்) தங்களிடம் வேதங்கள் எதையும் ஒரு போதும் கொண்டிருக்காதவர்கள் போல், கடவுள்-ன் வேதத்தைத் தங்கள் பின்புறமாக எறிந்து விடுகின்றனர்.
அடிகுறிப்பு

மாந்திரீகம் கண்டனம் செய்யப்படுகின்றது

[2:102] அவர்கள் ஸாலமனின் சாம்ராஜ்யம் சம்பந்தமாக சாத்தான்கள் கற்றுக்கொடுத்ததைப் பின் தொடர்ந்தனர், எனினும் ஸாலமன் நம்பிக்கை யற்றவராக இருக்கவில்லை, ஆனால் சாத்தான்கள் தான் நம்பிக்கையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் மனிதர்களுக்கு மாந்திரீகத்தையும், மேலும் பாபிலைச் சேர்ந்த ஹாரூத், மாரூத் என்ற இருவானவர்கள் மூலம் இறக்கப்பட்டவற்றையும் கற்றுக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் “இது ஒரு சோதனையாகும், இத்தகைய அறிவை நீங்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது” என்பதைச் சுட்டிக்காட்டாமல் இப்படிப்பட்ட அறிவை வெளிப்படுத்தவில்லை. ஆனால் மக்கள், திருமணங்களை முறிப்பது போன்ற தீய சூழ்ச்சிகளுக்கு அதனைப் பயன்படுத்தினர். கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக அவர்கள் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் தீங்கிழைக்க இயலாது. இவ்விதமாக அவர்கள் தங்களுக்கு தீங்கு விளைவிப்பதையே கற்றுக் கொண்டனர், அவர்களுக்குப் பலன் அளிப்பதை அல்ல, மேலும் மாந்திரீகத்தைப் பயில்வோருக்கு மறுவுலகில் எந்தப் பங்கும் இல்லை என்பதை அவர்கள் முற்றிலும் அறிந்திருக்கின்றனர். அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், தங்கள் ஆன்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது உண்மையில் துக்ககரமானது ஆகும்.
[2:103] அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், அவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தினால் கடவுள்-இடம் இருந்து உள்ள வெகுமதி மிகவும் சிறந்ததாகும்.

பிரார்த்தனைகளின் வார்த்தைகளைத் திரித்தல்

[2:104] நம்பிக்கை கொண்டோரே, “ ராஇனா”* (எங்கள் மேய்ப்பராக இருப்பீராக) என்று சொல்லாதீர்கள். மாறாக, “உன்ளுர்னா”(எங்களைக் கண் காணிப்பீராக) என்று நீங்கள் கூற வேண்டும், மேலும் கவனிக்க வேண்டும். நம்ப மறுப்பவர்கள் வலிமிக்கதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
அடிகுறிப்பு

பொறாமை கண்டனம் செய்யப்படுகின்றது

[2:105] வேதத்தைப் பின்பற்றுவோரில் உள்ள நம்பமறுப் பவர்களோ, அன்றி இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களோ, உங்கள் மீது உங்கள் இரட்சகரிடமிருந்து எந்த அருட்கொடையும் இறக்கப்படுவதைக் காண விரும்பமாட்டார்கள். ஆயினும் கடவுள் தான் தேர்ந்தெடுத் தோர் மீது தன் அருட்கொடைகளைப் பொழிகின்றார். கடவுள் அளவில்லாத அருளைத் தன் வசம் வைத்துள்ளார்.

முடிவான அற்புதம்: குர்ஆனின் கணிதக் குறியீடு*

[2:106] ஏதேனும் ஓர் அற்புதத்தை நாம் ரத்துச் செய்தா லோ அல்லது மறக்கும்படிச் செய்தாலோ, அதை விடச் சிறந்த அற்புதத்தையோ அல்லது குறைந்த பட்சம் அதைப் போன்ற ஒன்றையோ நாம் உருவாக்குவோம். கடவுள் சர்வ சக்தியுடையவர் என்ற உண்மையை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?
அடிகுறிப்பு

[2:107] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள் வசமே உள்ளது என்ற உண்மையையும் கடவுள்-உடன் வேறெவரும் உங்களுக்கு இரட்சகராகவும், எஜமானராகவும் இல்லை என்பதையும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?
[2:108] கடந்தகாலத்தில் மோஸஸிடம் கேட்கப் பட்டவைப் போன்று நீங்கள் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகின்றீர்களா? எவர் ஒருவர் நம்பிக்கை கொள்வதற்கு மாற்றாக நம்பிக்கை கொள்ள மறுப்பதைத் தேர்ந்தெடுக்கின்றாரோ, அவர் சரியான பாதையிலிருந்து மெய்யாகவே விலகிச்சென்று விட்டார்.
[2:109] இப்போது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப் பதால், வேதத்தைப் பின்பற்றுவோரில் பலரும் நீங்கள் அதி சீக்கிரம் நிராகரிப்பிற்குத் திரும்பி விடுவதைக் காணவே விரும்புகின்றனர். இது ஏனெனில், உண்மை அவர்களுக்குத் தெளி வானதன் பின்னர் அவர்கள் கொண்ட பொறாமையினாலேயே ஆகும். கடவுள் அவருடைய தீர்ப்பை வழங்கும்வரை நீங்கள் அவர்களை மன்னித்து அவர்களைத் தனியே விட்டு விட வேண்டும், கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[2:110] நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும். மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும் வேண்டும். உங்கள் ஆன்மாவிற்காக எந்த நன்மையை நீங்கள் முற்படுத்தி அனுப்பினாலும் அதனை நீங்கள் கடவுள்-இடம் காண்பீர்கள். கடவுள் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.

நம்பிக்கை கொண்டோர் அனைவரும் மீட்டுக் கொள்ளப்படுவர், அவர்களுடைய மார்க்கத்தின் பெயர் ஒரு பொருட்டல்ல

[2:111] சிலர், “யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களைத் தவிர வேறு எவரும் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்” என்று கூறி உள்ளனர். அவர் களுடைய ஆசை மிக்க எண்ணங்கள் இத்த கையதே ஆகும். “நீங்கள் சரியானவர்களாக இருந்தால் உங்களுடைய சான்றை எங்களுக்கு காட்டுங்கள்”, என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

அடிபணிதல்:ஒரே மார்க்கம்

[2:112] உண்மையில், எவர்கள் கடவுள்-க்கு மட்டும் தங்களை முற்றிலும் அடிபணியச் செய்து அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றனரோ அவர்கள் தங்களுக்குரிய வெகுமதியைத் தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்; அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்*.
[2:113] “கிறிஸ்தவர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை,” என்று யூதர்கள் கூறினார்கள், அதே சமயம்,” யூதர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை,” என்று கிறிஸ்தவர்கள் கூறினார்கள். இருப்பினும் அவர்கள் இருவரும் வேதத்தைப் படிக்கின்றார்கள். இவ்விதமானவை அறிவு இல்லாதவர்களின் கூற்றுக்களே ஆகும். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் அவர்களுடைய தர்க்கங்கள் குறித்துக் கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.

மஸ்ஜிதிற்கு நீங்கள் அடிக்கடி செல்ல வேண்டும்

[2:114] கடவுள்-ன் பெயர் துதிக்கப்படும் மஸ்ஜிதுகளைப் புறக்கணித்து, அவற்றைப் பாழ்படுத்தத் துணை செய்பவனை விட அக்கிரமக்காரன் வேறுயார்? அச்சத்துடனேயன்றி அவர்கள் அதிலே நுழையக் கூடாது. அவர்கள் இந்த வாழ்வில் இழிவை அனுபவிப்பார்கள், மேலும் மறுவுலகில் பயங்கரமானதொரு வேதனையை அனுபவிப் பார்கள்.
[2:115] கிழக்கும் மேற்கும் கடவுள்-க்கு உரியவை; எங்கே நீங்கள் சென்றாலும் கடவுள் அங்கே இருக் கின்றார். கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர்.

மாபெரும் இறை நிந்தனை

[2:116] அவர்கள், “கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்!” என்று கூறினர். ஒரு போதும் இல்லை! அவர் துதிப்பிற்குரியவர்; வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியவை; அனைத்தும் அவருக்கு கீழ்படிந்து நடப்பவையே ஆகும்.
[2:117] வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். எதையேனும் செய்து முடிக்க வேண்டு மென்றால் அவர் அதனை “ஆகு” என்று மட்டும் கூறுவார், அது ஆகிவிடும்.
[2:118] “கடவுள் மட்டும் நம்முடன் பேசமுடிந்தால், அல்லது சில அற்புதங்கள் நம்மிடம் இறங்கி வந்தால்!” என்று அறிவில்லாதவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இது போன்ற கூற்றுக்களை கூறி இருக்கின்றனர். அவர்களுடைய மனங்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. உறுதியை அடைந்துவிட்ட மக்களுக்கு நாம் அற்புதங்களை வெளிப்படுத்திக்காட்டவே செய்கின்றோம்.
[2:119] நற்செய்தியைக் கொண்டு செல்பவராகவும், அதே சமயம் எச்சரிப்பவராகவும் நாம் உம்மைச் சத்தியத் துடன் அனுப்பியுள்ளோம்*. நரகிற்கு உள்ளா வோருக்கு நீர் பொறுப்பாளி அல்ல.
அடிகுறிப்பு

[2:120] யூதர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அவர்க ளுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றினாலே அன்றி உம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “கடவுள்-ன் வழிகாட்டலே உண்மையான வழிகாட்டல் ஆகும்” என்று கூறுவீராக. நீர் பெற்றுள்ள அறிவிற்குப் பின்னரும் அவர்களுடைய விருப்பத்திற்கு நீர் இணங்கினால் கடவுள்-க்கு எதிராக உமக்கு உதவி செய்யக் கூடிய நண்பரையோ அல்லது ஆதரவாளரையோ நீர் காணமாட்டீர்.
[2:121] எவர்கள் வேதத்தைப் பெற்று, அதனை அறிய வேண்டிய முறையில் அறிந்திருக்கின்றனரோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள் நம்ப மறுப்போரைப் பொறுத்தவரை அவர்கள் தான் நஷ்டவாளிகள்.
[2:122] இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்கு வழங்கிய என் சலுகையையும் மேலும் மற்ற மக்களை விட அதிகமான அருட்கொடைகளை உங்களுக்கு நான் வழங்கியதையும் நினைவில் கொள்ளுங்கள்.
[2:123] எந்த ஒரு ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவிற்கு உதவி செய்யாத, எவ்வித ஈட்டுத் தொகையும் ஏற்றுக் கொள்ளப்படாத, எந்தப் பரிந்துரையும் பயன் தராத, மேலும் எவரும் உதவி செய்யப் படாத அந்த நாள் குறித்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.

ஆப்ரஹாம்

[2:124] சில குறிப்பிட்ட கட்டளைகளின் மூலம் ஆப்ரஹாம் அவருடைய இரட்சகரால் சோதனையில் ஆழ்த்தப் பட்டதை நினைவு கூருங்கள், மேலும் அவர் அவற்றை நிறைவேற்றினார். (கடவுள்) “ நான் உம்மை மனிதர்களுக்கு இமாமாக நியமனம் செய்கின்றேன்” என்று கூறினார். அவர், “என் சந்ததியினரையும் கூடத்தானே?” என்று கூறினார். அவர், “என்னுடைய உடன்படிக்கை வரம்பு மீறியவர்களை உட்படுத்தியதில்லை” என்று கூறினார்.
[2:125] நாம் புண்ணிய ஸ்தலமாகிய (கஃபாவை) மக்களுக்காக ஒரு கூடுமிடமாகவும் மேலும் ஒரு பாதுகாப்பான புகலிடமாகவும் ஆக்கினோம். நீங்கள் ஆப்ரஹாமின் புண்ணிய ஸ்தலத்தை ஒரு வழிபாட்டு ஸ்தலமாக உபயோகிக்கலாம். நாம் ஆப்ரஹாம் மற்றும் இஸ்மவேலிடம் என்னுடைய வீட்டை நீங்கள் அங்கு வருபவர்களுக்காகவும், அங்கு வசிப்பவர்களுக்காகவும், மேலும் குனிபவர்கள் மற்றும் சிரம்பணிபவர்களுக்காகவும் சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டோம்.
[2:126] ஆப்ரஹாம்: “என் இரட்சகரே, இதனை ஒரு அமைதி நிரம்பிய பிரதேசமாக்குவீராக, மேலும் இதன் மக்களுக்கு கனிகளை வழங்குவீராக. கடவுள்-ன் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கும் வழங்குவீராக, “என்று பிரார்த்தித்தார். (கடவுள்) “நம்ப மறுப்பவர் களுக்கும் நான் வழங்குவேன். தற்காலிகமாக அவர்களைச் சுகம் அனுபவிக்கும் படி நான் விடுவேன், பின்னர் நரக தண்டனையிலும் மேலும் துக்ககரமான விதியிலும் புகுத்துவேன்.” என்று கூறினார்.

அடிபணிதலின் (இஸ்லாம்) அனைத்து செயல் முறைகளையும் ஆப்ரஹாம் ஒப்படைத்தார்

[2:127] புண்ணியஸ்தலத்தின் அஸ்திவாரங்களை உயர்த்தியபடியே, ஆப்ரஹாம் இஸ்மவேலுடன் இணைந்து (அவர்கள் பிரார்த்தித்தனர்): “எங்கள் இரட்சகரே, எங்களிடமிருந்து இதனை ஏற்றுக்கொள்வீராக நீர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[2:128] “எங்கள் இரட்சகரே, உம்மிடம் அடிபணிந்தவர் களாக எங்களை ஆக்குவீராக, மேலும் எங்களுடைய சந்ததியினரில் இருந்தும், உமக்கு அடிபணிந்தவர்களின் ஒரு சமூகம் இருக்கும்படி செய்வீராக. எங்கள் மார்க்கச் சடங்குகளை எங்களுக்கு கற்றுத் தருவீராக. மேலும் எங்களை மீட்டுக்கொள்வீராக. நீரே மீட்பவர், மிக்க கருணையாளர்.
[2:129] “எங்கள் இரட்சகரே, மேலும் உம்முடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்கும், வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுத்தருவதற்கும் மேலும் அவர்களை தூய்மைப்படுத்துவதற்கும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே, எழுப்புவீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.”
[2:130] தன்னுடைய சொந்த ஆன்மாவையே ஏமாற்று பவனைத்தவிர, ஆப்ரஹாமின் மார்க்கத்தை யார் கைவிடக் கூடும்? இந்த உலகில் நாம் அவரை தேர்ந்தெடுத்தோம், மேலும் மறுவுலகில் நன்னெறியாளர்களுடன் அவர் இருப்பார்.
[2:131] அவருடைய இரட்சகர் அவரிடத்தில், “அடிபணி வீராக” என கூறிய போது, அவர், “பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு நான் அடிபணிகின்றேன்,”என்று கூறினார்.
[2:132] இன்னும் ஆப்ரஹாம் அவருடைய பிள்ளை களையும் அவ்வாறு செய்யுமாறு உபதேசித்தார். மேலும் ஜேக்கப்பும் அவ்வாறே செய்தார். “என்னுடைய பிள்ளைகளே, கடவுள் உங்க ளுக்கான மார்க்கத்தைச் சுட்டிக்காட்டி விட்டார், அடிபணிந்தவர்களாகவே தவிர மரணித்துவிடாதீர்கள்.”
[2:133] ஜேக்கபை அவருடைய மரணப்படுக்கையில் நீர் பார்த்து இருப்பீரேயானால்; அவர் அவருடைய பிள்ளைகளிடத்தில் “நான் இறந்த பிறகு நீங்கள் யாரை வழிபடுவீர்கள்?” என்று கூறினார். அவர்கள், “நாங்கள் உம்முடைய தெய்வமும், உம்முடைய தந்தையராகிய ஆப்ரஹாம், இஸ்மவேல் மற்றும் ஐசக் ஆகியோருடைய தெய்வமுமாகிய அந்த ஒரே தெய்வத்தை வழிபடுவோம். அவருக்கே நாங்கள் அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
[2:134] கடந்த காலத்திலிருந்துள்ள ஒரு சமூகம் இவ்விதமானதே. அவர்கள் சம்பாதித்த வற்றிற்கு அவர்களே பொறுப்பாளர்கள், மேலும் நீங்கள் சம்பாதித்தவற்றிற்கு நீங்களே பொறுப்பாளர்கள், அவர்கள் செய்த எந்த ஒன்றிற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்ல.

அடிபணிதல் (இஸ்லாம்): ஆப்ரஹாமுடைய மார்க்கம்*

[2:135] அவர்கள், “நீங்கள் வழிகாட்டப்பட வேண்டு மென்றால் யூதராகவோ அல்லது கிறிஸ்த வராகவோ இருக்க வேண்டும்.” என்று கூறினார்கள். “நாங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தையே பின்பற்றுகின்றோம்-ஏகத்துவம்-அவர் ஒருபோதும் இணைத்தெய்வ வழிபாடு செய்தவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

கடவுளின் தூதர்களுக்கிடையில் பேதம் பாராட்டக்கூடாது

[2:136] “நாங்கள் கடவுள்-ன் மீதும், மேலும் எங்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டதன் மீதும், மேலும் ஆப்ரஹாம் , இஸ்மவேல், ஐசக்,ஜேக்கப் மற்றும் குலத்தலைவர்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டதன் மீதும்; மேலும் மோஸஸ், இயேசு மற்றும் அனைத்து வேதம் வழங்கப் பட்டவர்களுக்கும், அவர்களுடைய இரட்சகரிட மிருந்து கொடுக்கப்பட்டதன் மீதும் நம்பிக்கை கொள்கின்றோம். அவர்களுக்கிடையில் நாங்கள் எந்த பேதமும் பாராட்டமாட்டோம். அவருக்கு மட்டுமே நாங்கள் அடிபணிந்தவர்கள்” என்று கூறுவீராக.
[2:137] நீங்கள் கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால், பின்னர் அவர்களும் வழி நடத்தப்படுவர். ஆனால் அவர்கள் திரும்பி விட்டால், பின்னர் அவர்கள் எதிர்க்கக் கூடியவர்களே, கடவுள் அவர்களுடைய எதிர்ப்பிலிருந்தும் உங்களை காப்பாற்றுவார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[2:138] கடவுள்-ன் வழிமுறை இவ்விதமானதே, மேலும் எவருடைய வழிமுறை கடவுள்-உடையதை விடச் சிறந்தது? “அவரை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்’’.
[2:139] “கடவுள் எங்களுடைய இரட்சகராகவும், மேலும் உங்களுடைய இரட்சகராகவும் இருக்கும் பொழுது, அவரைப்பற்றி எங்களுடன் நீங்கள் வாதிடுகின்றீர்களா? எங்களுடைய செயல் களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள், மேலும் உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளிகள். அவருக்கு மட்டுமே நாங்கள் அர்ப்பணித்தவர்கள்” என்று கூறுவீராக.
[2:140] ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப் மற்றும் குலத்தலைவர்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்று நீங்கள் கூறுகின்றீர்களா? “ கடவுள்-ஐ விட நன்கு தெரியுமா உங்களுக்கு? கடவுள்-இடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு அத்தாட்சியை மறைப்பவனை விட மிக தீயவன் யார்? நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் கடவுள் அறியாதவர் அல்ல,” என்று கூறுவீராக.
[2:141] அது கடந்த காலத்தில் இருந்த ஒரு சமூகம் ஆகும். அவர்கள் சம்பாதித்தவற்றிற்கு அவர்கள் பொறுப்பாளிகள், மேலும் நீங்கள் சம்பாதித்தவற்றிற்கு நீங்கள் பொறுப்பாளிகள். அவர்கள் செய்த எந்த ஒன்றிற்கும், நீங்கள் பொறுப்பாளிகள் அல்ல.

மதவெறி மற்றும் பாரபட்சம் ஆகியவற்றை ரத்து செய்தல்*

[2:142] மக்களுக்கிடையிலுள்ள மூடர்கள் “அவர் களுடைய கிப்லாவின் திசையை * அவர்கள் ஏன் மாற்றினார்கள்?” என்று கூறக்கூடும், “கிழக்கும், மேற்கும் கடவுள்-க்கே உரியது; நேர்வழியை விரும்புகின்ற எவரையும் அவர் வழி நடத்துகின்றார்” என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

[2:143] இவ்விதமாக மக்களுக்கிடையில் சாட்சியாளர் களாக நீங்கள் பணியாற்றும் பொருட்டும், மேலும் உங்களுக்கிடையில் சாட்சியாளராக தூதர் பணியாற்றும் பொருட்டும், நாம் உங்களை ஒரு நடு நிலையான சமூகமாக ஆக்கினோம். தூதரை விட்டும் தங்கள் குதிகால்களின் மீது திரும்பிவிடுவோரி லிருந்து, தூதரை உடனடியாகப் பின்பற்றக் கூடியவர்களைப் பிரித்தறிவிப்பதற்காகவே நாம் உம்முடைய முதல் கிப்லாவின் திசையை மாற்றினோம். அது ஒரு கடினமான சோதனை தான் எனினும் கடவுள்-ஆல் வழி நடத்தப் பட்டோருக்கல்ல. கடவுள் உங்களுடைய வழிபாட்டை ஒரு போதும் வீணாக்கி விடுவதில்லை. கடவுள் மனிதர்கள் பால் மிக்க இரக்கமிக்கவராக, மிக்க கருணையாளராக உள்ளார்.

கிப்லா மெக்காவிற்கு மீண்டும் திருப்பப்பட்டது

[2:144] (சரியான திசையைத் தேடிக் கொண்டிருந்த நிலையில்) நீர் உமது முகத்தை வானத்தின் பக்கம் திருப்புவதை நாம் கண்டோம். உம்மை திருப்திபடுத்தும் ஒரு கிப்லாவை நாம் இப்பொழுது நியமிக்கின்றோம். இனிமேல் புனித மஸ்ஜிதை நோக்கி உமது முகத்தை திருப்பிக் கொள்ளவேண்டும். நீங்கள் எங்கிருந்த போதிலும், நீங்கள் அனைவரும் அதனை நோக்கியே உங்களது முகங்களை திருப்பிக் கொள்ள வேண்டும். முந்திய வேதத்தைப் பெற்றவர்கள் இது அவர்களுடைய இரட்சகரிட மிருந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள். அவர்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் கடவுள் அறியாதவர் அல்ல.
[2:145] வேதத்தை பின்பற்றுபவர்களிடம் எல்லா வகை யான அற்புதங்களையும் நீர் காட்டிய போதி லும், உங்களுடைய கிப்லாவை அவர்கள் பின்பற்றமாட்டார்கள். அன்றி அவர்களுடைய கிப்லாவை நீங்களும் பின்பற்ற வேண்டாம். அவர்கள்கூட ஒருவர் மற்றவருடைய கிப்லாவை பின்பற்றுவதில்லை. அறிவு உம்மிடம் வந்து விட்ட பிறகும் நீர் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கினால், நீர் வரம்பு மீறியவர்களுடன் சேர்ந்தவராவீர்.

வேதத்தை துஷ்பிரயோகம் செய்தல்: தேர்ந்தெடுக்கின்ற முக்கியத்துவமும், மறைத்தலும்

[2:146] வேதத்தை பெற்றவர்கள் இதில் உள்ள உண்மையை, தங்களுடைய சொந்தக் குழந்தைகளை அறிவது போல் அவர்கள் அறிவார்கள், ஆயினும், அவர் களில் சிலர் அறிந்து கொண்டே, உண்மையை மறைக்கின்றார்கள்.
[2:147] இது உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும்; எந்த விதமான சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.
[2:148] நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றுவதற்கு திசையைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்; நீங்கள் நன்னெறியை நோக்கி விரைந்து செல்ல வேண்டும். நீங்கள் எங்கிருந்த போதிலும், கடவுள் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

கிப்லா மீண்டும் மெக்காவிற்கு திருப்பப்பட்டது

[2:149] நீர் எங்கு சென்றாலும், நீர் உம்முடைய முகத்தை புனித மஸ்ஜிதை* நோக்கி (ஸலாத்தின்போது) திருப்பிக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும். நீங்கள் அனைவரும் செய்யும் எந்த ஒன்றையும் ஒருபோதும் கடவுள் அறியாதவர் அல்ல.
அடிகுறிப்பு

[2:150] நீர் எங்கு சென்றாலும், நீர் உம்முடைய முகத்தை (ஸலாத்தின்போது) புனித மஸ்ஜிதை நோக்கி திருப்பிக் கொள்ள வேண்டும், நீங்கள் எங்கிருந்த போதிலும் அதனை நோக்கி (ஸலாத்தின்போது) உங்கள் முகங்களை திருப்பிக்கொள்ள வேண்டும். இவ்விதமாக, அவர்களில் உள்ள வரம்பு மீறியவர்களைத்தவிர மக்களிடத்தில், உங்களுக்கெதிராக தர்க்கம் இருக்காது. அவர்களுக்கு அஞ்சாதீர், பதிலாக எனக்கே அஞ்சுவீராக, உங்கள் மீதான என்னுடைய அருட்கொடைகளை நான் பின்னர் பூர்த்தி செய்வேன், நீங்கள் வழிகாட்டப் பட்டவராகலாம்.
[2:151] நம்முடைய வெளிப்பாடுகளை உங்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காகவும், உங்களை பரிசுத்தப்படுத்துவதற்காகவும், வேதத்தையும், ஞானத்தையும் உங்களுக்கு கற்பிப்பதற் காகவும் மேலும் நீங்கள் ஒருபோதும் அறியா திருந்தவைகளை உங்களுக்கு கற்பிப்பதற் காகவும் உங்களுக்கிடையிலிருந்து ஒரு தூதரை அனுப்புவது (அருட்கொடைகள்) ஆகும்.
[2:152] நான் உங்களை நினைவு கூரும் பொருட்டு என்னை நீங்கள் நினைவு கூர வேண்டும். மேலும் எனக்கு நன்றியுடையவர்களாக இருங்கள்; நன்றி கெட்டவர்களாக இருக்காதீர்கள்.
[2:153] நம்பிக்கை கொண்டோரே, உறுதிப்பாடு மற்றும் தொடர்பு தொழுகைகளைக் (ஸலாத்) கொண்டு உதவி தேடுங்கள். உறுதியான நிலையில் தொடர்ந்து இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.

இங்கிருந்து நாம் எங்கே செல்கின்றோம்?

[2:154] கடவுள்-ன் காரணமாக கொல்லப்பட்டவர் களை, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள் அவர்கள், தங்கள் இரட்சகரி டத்தில் உயிருடனிருக்கின்றார்கள், எனினும், நீங்கள் உணர* இயலாது.
அடிகுறிப்பு

[2:155] ஓரளவு பயம், பசி மேலும் செல்வம், உயிர்கள் மற்றும் பயிர்களின் இழப்பு கொண்டு நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம், உறுதியோடிருப் பவருக்கு * நற்செய்தியளியும்.
அடிகுறிப்பு

[2:156] அவர்களுக்கு ஒரு துன்பம் நேரும் போது, “நாங்கள் கடவுள்-க்கு உரியவர்கள், மேலும் அவரிடமே நாங்கள் திரும்பிச் செல்கின்றோம்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
[2:157] இத்தகையோர் தங்கள் இரட்சகரிடத்தில் இருந்து அருட்கொடைகளுக்கும் கருணை க்கும் தகுதி பெற்றுவிட்டனர். இவர்களே நேர்வழியில் செலுத்தப்பட்டவர்கள்.

ஹஜ் புனிதப் பயணம்

[2:158] ஸபா மற்றும் மர்வா குன்றுகள் கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட சடங்குகளில் உள்ளவை, ஹஜ் அல்லது உம்ரா செய்கின்ற எவர் ஒருவரும் அவற்றிற்கிடையில் உள்ள தூரத்தைக் கடந்து செல்வதால் எந்தக்குற்றமும் செய்து விடுவதில்லை, ஒருவர் தாமாகவே முன்வந்து நன்னெறியான காரியங்களை அதிகமாகச் செய்தால், அப்போது கடவுள் பாராட்டுபவராகவும்,எல்லாம் அறிந்தவராகவும் இருக்கின்றார்.

பெருங்குற்றம்

[2:159] நம்முடைய வெளிப்பாடுகளையும், வழிகாட்ட லையும் மக்களுக்காக வேதத்தில் அவைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் மறைக்கின்ற வர்கள் கடவுள்-ஆல் கண்டனம் செய்யப் படுகின்றார்கள். கண்டனம் செய்பவர்கள் அனைவராலும் அவர்கள் கண்டனம் செய்யப்படுகின்றார்கள்.
[2:160] வருந்தித்திருந்தி, சீர்திருத்தி மேலும் பிரகடனம் செய்கின்றவர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களை மீட்டுக் கொள்கின்றேன் . நானே மீட்பவர், மிக்க கருணையாளர்.
[2:161] நம்ப மறுத்து, மேலும் நம்ப மறுத்தவர்களாகவே மரணித்தவர்கள், கடவுள், வானவர்கள் மற்றும் எல்லா மக்களின் கண்டனத்திற்கும் (தீர்ப்பு நாளின் போது) உள்ளாகிவிட்டனர்.
[2:162] அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள். வேதனை ஒரு போதும் அவர்களுக்கு இலேசாக்கப்படவோ அல்லது அவர்களுக்கு ஒத்திப்போடப்படவோ மாட்டாது.
[2:163] உங்களின் தெய்வம் ஒரே தெய்வம், அவரைத் தவிர தெய்வம் இல்லை, மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

திணறடிக்கின்ற கடவுளின் அத்தாட்சிகள்

[2:164] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களின் பயன்பாட்டிற்காக பெருங்கடலில் சுற்றிவரும் கப்பல்களிலும், இறந்த நிலத்தை உயிர்ப்பித்து அதில் எல்லா வகையான உயிரினங்களையும் பரவவிட வானிலிருந்து கடவுள் கீழே அனுப்பும் தண்ணீரிலும், காற்றுகள் கையாளப்படுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் நடுவில் வைக்கப்பட்டுள்ள மேகங்களிலும், புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

இணைத்தெய்வங்கள் தங்களை இணைவைத்து வழிபடுவோரை கைவிடுகின்றனர்*

[2:165] இருப்பினும், சில மனிதர்கள் கடவுள்-க்குப் போட்டியாக இணைத்தெய்வங்களை அமைத்து மேலும் அவர்களைக் கடவுள்-ஐப் போல் நேசிக் கின்றார்கள். நம்பிக்கையாளர்களோ கடவுள்-ஐ அதிகம் நேசிக்கின்றார்கள். தண்டனையைக் காணும் சமயம் வரம்பு மீறுபவர்கள் மட்டும் தங்களையே காண முடிந்தால்! அதன் பின்னர் கடவுள்-க்கு மட்டுமே அனைத்து வல்லமையும் உரியது என்றும், மேலும் கடவுள்-ன் தண்டனை அச்சமூட்டத்தக்கது என்றும் கண்டு கொள்வார்கள்.
அடிகுறிப்பு

[2:166] தங்களைப் பின்பற்றியவர்களை, பின்பற்றப் பட்டவர்கள்* கைவிட்டு விடுவார்கள். அவர்கள் தண்டனையைக் காண்பார்கள், மேலும் அவர்களுக்கிடையில் எல்லாத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிடும்.
[2:167] பின்பற்றியவர்கள், “மற்றொரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தால் அவர்கள் இப்பொழுது எங்களை கைவிட்டது போல், நாங்களும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்” என்று கூறுவார்கள். இவ்விதமாக கடவுள், அவர்களுடைய செயல்களின் விளைவுகள் துக்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை அவர்களுக்கு காட்டுவார். அவர்கள் ஒருபோதும் நரகில் இருந்து வெளியேற மாட்டார்கள்.

சாத்தான், அனுமதிக்கப்பட்ட பொருட்களைத் தடுக்கின்றான்

[2:168] மக்களே, பூமியின் விளைச்சல்களில் அனுமதிக்கப்பட்டதும் மற்றும் நல்லதும் ஆனவற்றிலிருந்து உண்ணுங்கள், மேலும், சாத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள், அவன் உங்களின் மிகத் தீவிரமான எதிரியாவான்.
[2:169] அவன் உங்களை பாவம் மற்றும் மானக்கேட்டை செய்யும்படியும் மேலும் கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாதவற்றைக் கூறும்படியும் மட்டுமே கட்டளையிடுகின்றான்.

அந்தஸ்தை பேணிக்காப்பது: ஒரு மனித சோகம்

[2:170] “கடவுள் இதில் வெளிப்படுத்தியுள்ளதை பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப் பட்டால், அவர்கள், “எங்களுடைய பெற்றோர் எதனைச் செய்ய நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறுகின்றார்கள். என்ன அவர்களுடைய பெற்றோர் விளங்காதவர்களாகவும் வழி காட்டப்படாதவர்களாக இருந்தாலுமா?
[2:171] இத்தகைய நம்ப மறுப்பவர்களின் உதாரணம், தாங்கள் செவியுறும் சப்தங்கள் மற்றும் அழைப்புக்களைப் புரிந்து கொள்ளாமலே திரும்பத் திரும்பக் கூறும் கிளிகளுக்கு ஒப்பாகும். செவிடர், ஊமையர், மற்றும் குருடர், அவர்களால் புரிந்து கொள்ள இயலாது.

நான்கு உணவுகள் மட்டுமே தடை செய்யப்பட்டவை*

[2:172] நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு அளித்துள்ள நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள், இன்னும் அவரை மட்டுமே நீங்கள் வழிபடுவீர்களானால், கடவுள்-க்கு நன்றியுடன் இருங்கள்.
அடிகுறிப்பு

[2:173] நீங்கள் உண்ணுவதற்கு (மனிதக்குறுக்கீடின்றி) தாமாகவே செத்த பிராணிகளை, இரத்தத்தை, பன்றிகளின் இறைச்சியை, மேலும் கடவுள் அன்றி மற்றவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகளை மட்டுமே அவர் தடை செய்கின் றார். பாவநோக்கிலோ, அல்லது வேண்டு மென்றோ இல்லாமல் (இவற்றை உண்ண) ஒருவர் நிர்பந்திக்கப்பட்டால், அவர் எந்தப்பாவத் திற்கும் உள்ளாவதில்லை. கடவுள் மன்னிப் பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.

சீர்கெட்ட மார்க்கத் தலைவர்கள் குர்ஆனின் அற்புதத்தை மறைக்கின்றனர்*

[2:174] ஒரு மலிவான உலக லாபத்திற்குப் பகரமாக, கடவுள்-ன் வெளிப்பாடுகளை மறைப்பவர்கள், தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் உண்ணு கின்றார்கள். மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படும் நாளில், கடவுள் அவர்களுடன் பேச மாட்டார், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டார். அவர்கள் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.
அடிகுறிப்பு

[2:175] அவர்கள் தான் வழிகாட்டலுக்குப் பதிலாக வழி கேட்டினையும், மேலும் மன்னிப்பிற்கு பதிலாக தண்டனையையும் தேர்வு செய்து கொண்டவர் கள். அதன் விளைவாக அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருந்தாக வேண்டும்.
[2:176] இது ஏனெனில், கடவுள் சத்தியத்தைத் தாங்கியதாக, இவ்வேதத்தை, வெளிப்படுத்தியுள்ளார், மேலும் எவர்கள் இவ்வேதத்தினை மறுக்கின்றார்களோ அவர்களே மிகவும் தீவிரமான எதிரிகள் ஆவர்.

நன்னெறி விவரிக்கப்படுகின்றது

[2:177] நன்னெறி என்பது, உங்கள் முகங்களை கிழக்கையோ அல்லது மேற்கையோ, நோக்கித் திருப்புவதில் இல்லை. நன்னெறியாளர்கள் என்பவர்கள் கடவுள்-ஐ, இறுதிநாளை, வானவர்களை, வேதத்தினை, மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களை, நம்பிக்கை கொண்ட வர்கள். இன்னும் அவர்கள் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், தேவையுள்ளோருக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுவிப் பதற்கும், மகிழ்ச்சியுடன் பணம் தருவார்கள், இன்னும் அவர்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள்,கடமையான தர்மத்(ஜகாத்) தையும் தருவார்கள், இன்னும் அவர்கள் வாக்குக் கொடுத்த போதெல்லாம் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவார்கள், இன்னும் அவர்கள் அடக்குமுறை, கஷ்டம் மற்றும் போர் இவற்றை எதிர் கொண்டால் உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பார்கள். இவர்களே உண்மையாளர்கள்; இவர்களே நன்னெறி யாளர்கள்.

மரணதண்டனை ஊக்குவிக்கப்படவில்லை*

[2:178] நம்பிக்கை கொண்டோரே, கொலை விஷயத் தைக் கையாளும்போது சமநீதியே சட்டம் என்பது உங்களுக்கு விதிக்கப் பட்டுள்ளது -சுதந்திரமானவருக்குச் சுதந்திரமானவர், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். பலியானவரின் சுற்றத்தாரால் ஒருவருக்கு தண்டனை மன்னிக்கப்பட்டால், பாராட்டுகின்ற வகையில் ஒரு பிராயச்சித்தம் வழக்கத்தில் உள்ளது. மேலும் நியாயமானதொரு நஷ்டஈடு செலுத்தப்பட வேண்டும். இது உங்கள் இரட்சகரிடமிருந்துள்ள துன்பத்துடைப்பும் மற்றும் கருணையுமாகும். இதற்கு மேலும் எவரேனும் வரம்பு மீறினால் வலிமிகுந்ததொரு தண்டனைக்குள்ளாவார்.
அடிகுறிப்பு

[2:179] அறிவுத்திறன் உடையவர்களே, நீங்கள் நன்னெறியாளர்களாக ஆகும் பொருட்டு சமநீதி என்பது உங்களுக்கு உயிர்காக்கும் ஒரு சட்டமாகும்.

ஓர் உயில் எழுதுக

[2:180] மரணம் நெருங்கி வரும் போது பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலன் கருதி நீங்கள் நீதத்துடன் ஓர் உயில் எழுத வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. இது நன்னெறி யாளர்கள் மீது ஒரு கடமையாகும்.
[2:181] எவரேனும் தான் செவியேற்ற ஓர் உயிலினை மாற்றியமைத்தால் அதை மாற்றிய பாவம் அத்தகைய மாற்றுதலுக்குப் பொறுப்பானவர் கள் மீதே சாரும். கடவுள் செவியேற்பவர், அறிபவர்.
[2:182] பெரும் அநீதியையோ அல்லது பாரபட்சத்தை யோ உயிலளித்தவரின் பக்கம் ஒருவர் கண்டு, உயிலின் பால் நீதியை மீட்டுக் கொண்டு வர சரி செய்யும் நடவடிக்கை எடுத்தால், அவர் தவறு எதுவும் செய்யவில்லை . கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

நோன்பிருத்தல் வலியுறுத்தப்படுகின்றது மற்றும் மாற்றி அமைக்கப்படுகின்றது*

[2:183] நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போல, நோன்பிருத்தல் உங்கள் மீதும் விதிக்கப் படுகின்றது, அதன் மூலம் நீங்கள் மீட்சியடைய லாம்.
அடிகுறிப்பு

[2:184] குறிப்பிட்ட நாட்கள் (நோன்பிருத்தலுக்கென நியமிக்கப்பட்டுள்ளது); ஒருவர் நோயிலோ, பிரயாணத்திலோ இருந்தால், ஒரு சமமான எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக் கொண்டு பகரமாக்கி கொள்ளலாம். நோன்பி ருக்க முடிந்தவர்களாயினும், மிகுந்த கஷ்டப் படுவார்கள் என்றால், நோன்பை முறிக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ஏழை நபருக்கு உணவளிப்பது கொண்டு பகரமாக்கலாம். ஒருவர் (அதிக நன்னெறியான காரியங்களில்) தாமாக முன்வந்தால், அது சிறப்பே ஆகும். ஆயினும் நீங்கள் அறிவீர்களாயின் நோன்பிருத் தலே உங்களுக்கு மிகவும் சிறந்தது.
[2:185] ரமலான் மாதம், அதில்தான் மக்களுக்கு வழிகாட்டல் வழங்குகின்றதாகவும், தெளிவான படிப் பினைகள் கொண்டதாகவும் மற்றும் சட்டப் புத்தகமாகவும் குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது. உங்களில் இம்மாதத்தைக் காண்கின்றவர்கள், அதிலே நோன்பிருக்க வேண்டும். நோயிலோ அல்லது பிரயாணத்திலோ இருப்பவர்கள் அதே எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக் கொண்டு பகரமாக்கிக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் கடமைகளை நிறைவேற்றவும், மேலும் உங்களை வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக கடவுள்-ஐத் துதிக்கவும் மேலும் உங்களுடைய நன்றியுணர்வை வெளிக்காட்டவும், கடவுள் உங்களுக்கு விரும் புவது சுலபத்தையே அன்றி கஷ்டத்தை அல்ல.

“தன்னுடைய அடியார்களின்” பிரார்த்தனைகளுக்கு கடவுள் பதில் அளிக்கின்றார்

[2:186] என் அடியார்கள் உம்மிடம் என்னைப்பற்றிக் கேட்கும் போது, நான் எப்பொழுதும் அருகிலேயே உள்ளேன். அவர்கள் என்னிடம் பிரார்த்திக்கும் போது, நான் அவர்களின் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கின்றேன். வழிகாட்டல் பெறும் பொருட்டு மக்கள் எனக்கு பதில் அளிக்க வேண்டும். மேலும் என் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
[2:187] நோன்பு கால இரவுகளின் போது உங்கள் மனைவியருடன் தாம்பத்ய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது. அவர் கள் உங்களின் இரகசியங்களைப் பேணிக்காப் பவர்கள், நீங்கள் அவர்களின் இரகசியங்களை பேணிக்காப்பவர்கள். நீங்கள் உங்களின் ஆன்மாக்களுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவர் உங்களை மீட்டுக் கொண்டார், மேலும் உங்களைப் பிழை பொறுத்துக் கொண்டார். இனிமேல் கடவுள் உங்களுக்கு அனுமதித்ததைத் தேடியவர்களாக, நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். அதிகாலை வெளிச்சத்தின் வெள்ளை நூல், இரவின் கருப்பு நூலிலிருந்து தனியாகத் தெரியும் வரை நீங்கள் உண்ணலாம், பருகலாம். அதன்பின் சூரிய அஸ்தமனம் வரை நீங்கள் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் (ரமலானின் கடைசிப் பத்து நாட்களில்) மஸ்ஜிதில் தங்கி இருக்கத் தீர்மானித்தால் தாம்பத்ய உறவு தடை செய்யப்படுகின்றது. இவை கடவுள்-ன் சட்டங்கள், அவற்றை நீங்கள் மீறக்கூடாது. கடவுள் தன் வெளிப்பாடுகளை மக்களுக்கு அவர்கள் ஆன்மா மீட்சியடையும் பொருட்டு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்.

லஞ்சம், ஊழல் கண்டனம் செய்யப்படுகின்றது

[2:188] நீங்கள் தெரிந்தே மற்றவர்களுடைய செல்வத் தை சட்ட விரோதமான முறையில் எடுத்துக் கொள்ளவோ, அன்றி மற்றவர்களின் சில உரிமைகளை சட்ட விரோதமாக அபகரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தரவோ கூடாது.

சுற்றி வளைத்து பேசக்கூடாது

[2:189] நிலவின் நிலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள், “அவை மக்களுக்கு காலங் காட்டும் கருவியாகவும், ஹஜ்ஜின் காலத்தை நிர்ணயிப்பதாகவும் விளங்குகின்றது” என்று கூறுவீராக. சுற்றி வளைத்து பேசுவது நன்னெறி யன்று*, நன்னெறி கட்டளைகளை உறுதியாகக் கடைபிடிப்பதன் மூலம் மற்றும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் அடையப்படுகின்றது. நீங்கள் கடவுள்-ஐ கருத்தில் கொள்ள வேண்டும், அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.
அடிகுறிப்பு

யுத்த விதி முறைகள்*

[2:190] உங்களைத் தாக்குபவர்களுக்கெதிராக நீங்கள் கடவுள்-ன் பாதையில் சண்டை யிடலாம், ஆனால் வலுச்சண்டைக்கு செல்லாதீர்கள். வலுச்சண்டையிடுபவர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.
அடிகுறிப்பு

[2:191] உங்களுக்கெதிராக யுத்தம் புரிவோரை நீங்கள் கொல்லலாம், இன்னும் உங்களை அவர்கள் வெளியேற்றிய அவ்விடத்திலிருந்து அவர் களை நீங்கள் வெளியேற்றலாம். அடக்கு முறை செய்வது கொலையைவிட மோசமானது. புனித மஸ்ஜிதின் அருகில் அவர்கள் உங்களைத் தாக்கினால் தவிர அவர்களிடம் அங்கே சண்டையிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாக்கினால், நீங்கள் அவர்களைக் கொல்லலாம். இதுதான் நம்ப மறுப்பவர்களுக்கு சரியான தண்டனையாகும்.
[2:192] அவர்கள் விலகிக் கொண்டார்கள் எனில் அதன் பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[2:193] அடக்குமுறையினை களைவதற்கும், கடவுள்-ஐ சுதந்திரமாக வழிபடுவதற்கும் நீங்கள் அவர்களிடம் சண்டையிடலாம். அவர்கள் விலகிக்கொண்டால் நீங்கள் வலுச்சண்டை செய்ய வேண்டாம், வலுச்சண்டை செய்வோருக்கு எதிராக மட்டுமே வலுச்சண்டை அனுமதிக்கப் பட்டுள்ளது.
[2:194] புனித மாதங்களின் போது வலுச்சண்டையை ஒரு சமமான பதிலடியால் எதிர்கொள்ளலாம். அவர்கள் உங்களைத் தாக்கினால், ஒரு சமமான தண்டனையால் துன்புறுத்துவது கொண்டு பழிவாங்கலாம். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ள வேண்டும் மேலும் கடவுள் நன்னெறியாளர்களுடன் இருக்கின் றார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
[2:195] நீங்கள் கடவுள்-ன் பாதையில் செலவிட வேண்டும்; உங்கள் சொந்தகரங்களாலேயே உங்களை அழிவில் எறிந்துவிடாதீர்கள். நீங்கள் தர்மம் செய்பவர்களாக இருக்க வேண்டும்; கடவுள் தர்மம் செய்பவர்களை நேசிக்கின்றார்.

ஹஜ் மற்றும் உம்ரா புனிதப்பயணம்*

[2:196] நீங்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் அனைத்துச் சடங்குகளையும் கடவுள்-க்காக கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் தடுக்கப்பட்டால், நீங்கள் ஓர் அர்ப்பணப்பொருளை அனுப்பி வைக்க வேண்டும், மேலும் உங்களுடைய அர்ப்பணப்பொருள் அது சேருமிடத்தை அடைவது வரை, உங்கள் முடியை வெட்டுவதைத் தொடராதீர்கள். நீங்கள் நோயில் இருந்தாலோ, அல்லது தலைக்காயத்தால் அவதியுற்றாலோ (நீங்கள் உங்கள் முடியை வெட்ட வேண்டி இருந்தால்) நோன்பிருத்தல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது ஏதேனும் வேறு வழிபாட்டு முறையால் நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சகஜமான ஹஜ்ஜின் காலத்தின் போது, ஹஜ் மற்றும் உம்ராவுக் கிடையில் நீங்கள் இஹ்ராம் எனும் (புனித) நிலையை முறித்தால் ஒரு பிராணியைப் பலியிட்டு அர்ப்பணம் செய்வது கொண்டு நீங்கள் பரிகாரம் தேட வேண்டும். உங்களால் அதற்குச் செலவு செய்ய இயலாவிட்டால், நீங்கள் புனித மஸ்ஜிதிற்கு அருகில் வசிக்காத பட்சத்தில், ஹஜ்ஜின் போது மூன்று நாட்கள், இன்னும் வீடு திரும்பும் போது ஏழு என-இதை பத்தாக பூர்த்தி செய்து-நீங்கள் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ள வேண்டும், இன்னும் தெரிந்து கொள்ளுங்கள் கடவுள் தண்டனையை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர்.
அடிகுறிப்பு

ஹஜ்ஜின் நான்கு மாதங்கள் (ஜுல்-ஹிஜ்ஜாஹ், முஹர்ரம், ஸபர், மற்றும் ரபியுல்அவ்வல்)

[2:197] குறிப்பிடப்பட்ட மாதங்களில் ஹஜ் * கடைப் பிடிக்கப்பட வேண்டும். ஹஜ்ஜை கடைப்பிடிக்க பயணத்தைத் துவங்குபவர்கள், தாம்பத்ய உறவு, தவறான நடத்தை, மற்றும் வாக்கு வாதங்கள் இவற்றிலிருந்து ஹஜ் பயணம் முழுவதும் விலகியிருக்க வேண்டும். எந்த நல்லதை நீங்கள் செய்தாலும், கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவர். பிரயாணத்திற் காக தேவையான பொருட்களை நீங்கள் தயார் செய்யும் நிலையில் மிகச்சிறந்த பொருள் நன்னெறியே ஆகும். அறிவுத்திறன் கொண்டோரே நீங்கள் என்னைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அடிகுறிப்பு

[2:198] (வணிகத்தின் வாயிலாக) உங்கள் இரட்சகரிட மிருந்து வாழ்வாதாரங்களை தேடுவதால் நீங்கள் எந்தத் தவறும் செய்து விடவில்லை. அரஃபாத்திலிருந்து நீங்கள் அணிவகுக்கும் போது, புனிதஸ்தலம் (முஸ்தலிபா) அருகில் கடவுள்-ஐ நீங்கள் நினைவில் கொண்டு போற்ற வேண்டும். உங்களை வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக நீங்கள் அவரை நினைத்துப் போற்ற வேண்டும். இதற்குமுன்பு நீங்கள் வழிதவறிப் போயிருந்தீர்கள்.
[2:199] அணிவகுக்கும் மற்ற மக்களுடன் சேர்ந்து நீங்கள் அணிவகுக்க வேண்டும் மேலும் கடவுள்-இடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[2:200] உங்கள் சடங்குகளை நீங்கள் பூர்த்தி செய்த வுடன், உங்கள் சொந்த பெற்றோரை நீங்கள் நினைவு கூர்வது போன்று அல்லது அதைவிட இன்னும் அதிகமாக கடவுள்-ஐ தொடர்ந்து நினைவு கூருதல் வேண்டும். மறுவுலகில் எந்த பங்கும் இல்லாத நிலையில் மக்கள் சிலர் “எங்கள் இரட்சகரே, இவ்வுலகிலேயே எங்களுக்குக் கொடுங்கள்” என்று கூறுவார்கள்.
[2:201] மற்றுமுள்ளோர் “எங்கள் இரட்சகரே, இவ்வுலகில் நன்னெறியையும் மற்றும் மறுவுலகில் நன்னெறியையும் எங்களுக்குத் தாருங்கள், மேலும் நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காத்திடுங்கள்” என்று கூறுவார்கள்.
[2:202] இவர்களில் ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதித்த பங்கைப் பெறுவர். கடவுள் கணக்கிடுவதில் மிகத்திறன் வாய்ந்தவர்.

மினா: ஹஜ்ஜின் கடைசி சடங்குகள்

[2:203] (மினாவில்) சில எண்ணிக்கையிலான நாட்கள் நீங்கள் கடவுள்-ஐ நினைவுகூர வேண்டும். இதை எவரேனும் விரைவாக இரண்டு நாட் களில் செய்தாலும் அவர் பாவம் செய்தவராக மாட்டார், மேலும் நன்னெறியில் நிலைத்து இருக்கும் வரையில் எவரேனும் அதிகமாக தங்கினாலும் அவர் மீது குற்றமில்லை. நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் நீங்கள் அவர் முன்னால் ஒன்று திரட்டப் படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தோற்றங்கள் ஏமாற்றலாம்

[2:204] மக்களிடையே ஒருவன், இவ்வுலக வாழ்க்கை யைப் பற்றிய தன் கூற்றுக்களால் உங்களை கவரக்கூடும், மேலும் அவன் மிகவும் கடுமை யான எதிரியாக இருக்கக்கூடிய அதே சமயம், தன் ஆழ்மனதின் எண்ணங்களுக்கு கடவுள் -ஐயே கூட சாட்சியாக அழைக்கக்கூடும்.
[2:205] அவன் வெளியேறியவுடன், சொத்துக்களை யும், உயிர்களையும் அழித்து அவன் பூமியில் சீர்கெட்டவனாக சுற்றித்திரிகின்றான். கடவுள் சீர்கேட்டை நேசிப்பதில்லை.
[2:206] கடவுள்-ஐ கவனத்தில் கொள் என்று அவனிடம் கூறப்பட்டால், கர்வத்துடன் கோபம் கொள்கின்றான். அதன் விளைவாக அவனுக் குரிய ஒரே விதி நரகமே; என்ன ஒரு துன்பகரமான வசிப்பிடம்.
[2:207] இன்னும் கடவுள்-க்கு சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களும் உள்ளார்கள். இத்தகைய வணக்கசாலிகளின் மீது கடவுள் இரக்கமுடையவராக இருக் கின்றார்.
[2:208] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுமை யான அடிபணிதலை தழுவிக்கொள்ள வேண்டும். சாத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவன் உங்களுடைய மிகக் கடுமையான விரோதியாவான்.
[2:209] தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்ததன் பின்னர், உங்கள் மார்க்கத்தை விட்டு நீங்கள் திரும்பி விட்டால் அறிந்து கொள்ளுங்கள் கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[2:210] அடர்ந்த மேகங்களுக்குள் இருந்து வானவர் கள் புடை சூழ கடவுள் வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றார்களா? இது நிகழும் போது சகல காரியமும் முடிந்திருக்கும். மேலும் அனைத்தும் கடவுள்-இடம் திரும்பக் கொண்டு வரப்படும்.*
அடிகுறிப்பு

அற்புதங்கள் அதிகமான பொறுப்புகளை கொண்டுவருகின்றன*

[2:211] நாம் எத்தனை ஆழ்ந்த அற்புதங்களை காட்டினோம் என்று இஸ்ரவேலின் சந்ததியினரைக் கேட்பீராக! ஏனெனில் தங்கள் மீது கடவுள் வழங்கிய அருட்கொடைகளை அலட்சியம் செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.
அடிகுறிப்பு

குறுகிய பார்வை

[2:212] இந்த உலக வாழ்வு நம்ப மறுப்பவர்களின் கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றார்கள். எப்படியிருப்பினும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளில் நன்னெறியாளர்கள், அவர்களை விட மிகவும் மேலாக இருப்பார்கள். கடவுள் தான் நாடியவர்களுக்கு அளவின்றி அருள்புரிகின்றார்.

பேராபத்தான பொறாமை

[2:213] நற்செய்திகளுடனும், அதே சமயம் எச்சரிக்கை செய்பவர்களாகவும் வேதம்வழங்கப்பட்டவர் களைக் கடவுள் அனுப்பிய போது மக்கள் ஒரே சமூகமாகவே இருந்தனர். மக்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் தீர்ப்பு அளிப் பதற்காக, அவர் அவர்களுடன் உண்மையைக் கொண்ட வேதத்தை இறக்கி அனுப்பி வைத் தார். எதிர்மறையாக, எவர்கள் வேதத்தைப் பெற்றார்களோ, அவர்களுக்கு தெளிவான சான்றுகள் கொடுக்கப்பட்ட போதிலும், புதிய வேதத்தை ஏற்க மறுத்தனர். இதற்கு அவர் களிடமிருந்த பொறாமையே காரணம். கடவுள் அவருடைய நாட்டத்திற்கு இணங்க, மற்றவர்கள் அனைவராலும் மறுக்கப்படுகின்ற சத்தியத்தின் பால் நம்பிக்கை கொண்டோரை வழி நடத்து கின்றார். எவர் நேர்வழியை * நாடுகின்றாரோ அவரைக் கடவுள் வழிநடத்துகின்றார்.
அடிகுறிப்பு

[2:214] உங்களுக்கு முன்னிருந்தோர் சோதிக்கப் பட்டது போல் சோதிக்கப்படாமல் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அவர்கள் துன்பத்தைக்கொண்டும், இன்னல்களைக் கொண்டும் சோதிக்கப்பட்டார்கள். மேலும் தூதரும், அவருடன் நம்பிக்கைகொண்டோரும் “கடவுள்-ன் வெற்றி எங்கே”? என்று கூறும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். கடவுள்-ன் வெற்றி அருகிலேயே உள்ளது.

தர்மம் பெறுவதற்கு உரியவர்கள்

[2:215] கொடுப்பதைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்: “நீங்கள் கொடுக்க கூடிய தர்மம், பெற்றோர்களுக்கும் உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் மற்றும் வழிப்போக்கர்களுக்கும் சென்றடைய வேண்டும்” என்று கூறுவீராக. எந்த நல்லதை நீங்கள் செய்தாலும் கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

நம்பிக்கையாளர்கள்: இறுதி வெற்றியாளர்கள்

[2:216] நீங்கள் விரும்பாத போதும் சண்டையிடுவது உங்கள் மீது சுமத்தப்படலாம். ஆனால் உங்களு க்கு நன்மையான சிலவற்றை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும் உங்களுக்கு தீமையான சிலவற்றை நீங்கள் விரும்பக் கூடும். நீங்கள் அறியாத பொழுதும் கடவுள் அறிவார்.

அடக்குமுறை தண்டனைக்குரியது

[2:217] புனித மாதங்களைப் பற்றியும், அவற்றில் சண்டையிடுவது பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்: “அவற்றில் சண்டையிடுவது அதன் புனிதத்தை அவமதிப்பதாகும். ஆயினும் கடவுள்-ன் பாதையை விட்டு தடுப்பதும் மேலும் அவரையும், புனித மஸ்ஜிதின் புனிதத்தையும் நம்ப மறுப்பதும் மேலும் அதன் மக்களை வெளியேற்றுவதும், கடவுள்-ன் பார்வையில் அதைவிடப் பெரும் பாவச் செயலாகும். அடக்குமுறை கொலையை விட மோசமானதாகும்,” என்று கூறுவீராக. அவர்களால் முடியுமேயானால் உங்களை, உங்கள் மார்க்கத்தை விட்டு திருப்புவதற்காக எப்போதும் சண்டையிடுவார்கள். உங்களுக் கிடையில் தங்கள் மார்க்கத்தை விட்டும் திரும்பியவர்களாகவும், மேலும் நம்பமறுத்தவர் களாகவும் இறந்துவிடுபவர்கள், இந்த வாழ்விலும் மேலும் மறுவுலகிலும் தங்கள் செயல்களை பயனற்றதாக்கி கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் நரகவாசிகளாவார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[2:218] எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் எவர்கள் ஊரைவிட்டு வெளியேறி கடவுள்-க்காக பாடுபடுகின்றார்களோ அவர்கள் கடவுள்-ன் கருணைக்கு தகுதியடைந்து விட்டார்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

போதை ஊட்டக்கூடிய பொருட்களும், சூதாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது*

[2:219] அவர்கள் போதை ஊட்டக் கூடிய பொருட்கள் மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றார் கள்; “அவற்றில் ஒரு பெரும் பாவமும், மேலும் மக்களுக்கு சில பயன்களும் உள்ளது. ஆனால் அவற்றில் உள்ள பயன்களை விடவும் பாவம் அதிக கனமானதாகும்” என்று கூறுவீராக. இன்னும் எவற்றை தர்மம் செய்வது என்றும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்; “தேவைக்கு மேல் மிஞ்சி இருப்பதை”, என்று கூறுவீராக. நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, கடவுள் இவ்வாறு தன் வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றார்,
அடிகுறிப்பு

[2:220] இந்த வாழ்வையும் மேலும் மறுவுலகையும் குறித்து. மேலும் அவர்கள் அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள்: நன்னெறியான நபர்களாக அவர்களை வளர்ப்பதே அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடியவற்றில் மிகச் சிறந்ததாகும். அவர்களுடைய சொத்துக்களை உங்களுடைய துடன் நீங்கள் கலந்துவிட்டால் அவர்களை நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் போல் நடத்த வேண்டும்” என்று கூறுவீராக. கடவுள் நன்னெறியாளர்களையும், மேலும தீயவர் களையும் அறிகின்றார். கடவுள் நாடியிருந்தால் உங்கள் மீது கடுமையான சட்டங்களை சுமத்தி இருக்க இயலும். கடவுள் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.

இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களை திருமணம் செய்யாதீர்கள்

[2:221] இணைத்தெய்வ வழிபாடு செய்யும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொண்டாலே தவிர நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்; நீங்கள் அவளை விரும்பினாலும், இணைத்தெய்வ வழிபாடு செய்யும் பெண்ணை விட நம்பிக்கை கொண்ட பெண் சிறந்தவளாவாள். அன்றியும் இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொண்டாலே தவிர உங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம். நீங்கள் அவனை விரும்பினாலும், ஒரு இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஆணை விட ஒரு நம்பிக்கை கொண்ட ஆண் சிறந்தவனாவான். கடவுள் அவருடைய நாட்டப்படி சுவனத்திற்கும், பாவ மன்னிப்பிற்கும் அழைக்கின்ற அதே சமயம் இவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றார்கள். மக்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு அவர், அவருடைய வெளிப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றார்.

மாதவிடாய்

[2:222] மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின் றார்கள்; “அது உபாதையானது; மாதவிடாயின் போது பெண்களுடன் தாம்பத்ய உறவை தவிர்த்துக் கொள்ளுங்கள்; அதை விட்டு அவர்கள் நீங்கும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அதைவிட்டு அவர்கள் நீங்கியவுடன் கடவுள் அமைத்த முறையில் நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். வருந்தித்திருந்துபவர்களை கடவுள் நேசிக்கின்றார் மேலும் அவர் தூய்மையுடையோரை நேசிக்கின்றார்” என்று கூறுவீராக .
[2:223] உங்களுடைய பெண்கள் உங்களுடைய வித்தைச் சுமப்பவர்கள். இவ்விதமாக, நீங்கள் நன்னெறியை கடைபிடித்துக் கொண்டிருக்கும் வரை, இச்சிறப்புரிமையை நீங்கள் விரும்பிய வாறு அனுபவிக்கலாம். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் அவரை நீங்கள் சந்திப்பீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கைகொண்டோருக்கு நற்செய்தி அளியுங்கள்.

கடவுளின் பெயரை வீணாக பிரயோகிக்காதீர்கள்

[2:224] நீங்கள் நன்னெறியாளர்களாகவும், பக்திமான் களாகவும் காட்டிக் கொள்வதற்காகவோ அல்லது மக்களிடையே நம்பிக்கையை அடைவதற்காகவோ, உங்களுடைய தற்செயலான சத்தியங்களில் கடவுள்-ன் பெயரை பிரயோகிக்காதீர்கள். கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.
[2:225] சாதாரண பிரமாணங்களின் வார்த்தைக்கு கடவுள் உங்களை பொறுப்பாளி ஆக்குவ தில்லை, உங்களின் உள்ளார்ந்த நோக்கங் களுக்கு அவர் உங்களை பொறுப்பாளி ஆக்குகின்றார். கடவுள் மன்னிப்பவர், இரக்கம் மிக்கவர்.

விவாகரத்தின் சட்டங்கள்

[2:226] எவர்கள் தங்கள் மனைவியரை விவாகரத்து செய்ய எண்ணுகின்றார்களோ, அவர்கள் நான்கு மாதங்கள் (கோபம்தணிய) காத்திருத்தல் வேண்டும்; அவர்கள் தங்கள் மனங்களை மாற்றிக்கொண்டு மேலும் சமாதானமாகி விட்டால், அப்போது கடவுள் மன்னிப் பவராகவும், கருணையாளராகவும் இருக்கின்றார்.
[2:227] அவர்கள் விவாகரத்து செய்து கொண்டால், பின்னர் கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.
[2:228] விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்(வேறொரு ஆணை திருமணம் செய்வதற்கு முன்) மூன்று மாதவிடாய் காலங்கள் காத்திருக்க வேண்டும். அவர்கள் கடவுள் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களானால், அவர்களின் கருவறைகளில் கடவுள் படைத்திருப்பதை மறைப்பது சட்ட விரோதமானது. (கர்ப்பம் தரித் திருந்தால்), கணவன் அவளை மறுமணம் செய்ய விரும்பினால் மனைவியின் விருப்பத்தை விட கணவனின் விருப்பமே மேலாக இருக்க வேண்டும். நியாயமான உரிமைகளும் அதே நேரம் கடமைகளும், பெண்களுக்கு உண்டு. இவ்விதமாக, ஆணின் விருப்பங்களே (கர்ப்பம் தரித்திருந்தால்) மேலோங்கி நிற்கும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[2:229] விவாகரத்து இருமுறை திரும்ப பெற்றுக் கொள்ளப்படலாம். விவாகரத்து செய்யப்பட்ட பெண் அதே வீட்டில் இணக்கமாக வாழவோ அல்லது இணக்கமாக வெளியேறவோ அனுமதிக்கப்பட வேண்டும். கணவன் அவளுக்கு கொடுத்த எதையும் திருப்பி எடுத்துக் கொள்வது சட்ட விரோதமானது. இருப்பினும் தம்பதியினர், தாங்கள் கடவுள்-ன் சட்டங்களை மீறி விடக்கூடும் என்று அஞ்சக்கூடும். அவர்கள் கடவுள்-ன் சட்டங்களை மீறக்கூடும் என்ற அச்சமிருப்பின் மனைவி தன் விருப்பத்துடன், தான் தேர்ந்தெடுத்த எதையும் திரும்பக் கொடுத்தால் அவர்கள் எந்த தவறும் செய்தவர்கள் ஆக மாட்டார்கள். இவை கடவுள்-ன் சட்டங்கள்; இவற்றை மீற வேண்டாம். எவர்கள் கடவுள்-ன் சட்டங் களை மீறுகின்றார்களோ அவர்கள் நேர்மை யற்றவர்களே.
[2:230] அவன், அவளை (மூன்றாவது முறை) விவாகரத்து செய்து விட்டால், அவள் வேறு ஒருவனை மணந்து அதன் பிறகு, அவன் அவளை விவாகரத்து செய்யாத நிலையில், இவன் அவளை மறுமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாகும்., அவர்கள் கடவுள்-ன் சட்டங்களை கடைப்பிடித்த நிலையில் முதல் கணவன் மீண்டும் அவளை மறுமணம் செய்து கொள்ள இயலும். இவை கடவுள்-ன் சட்டங்கள், அறியக் கூடிய மக்களுக்கு அவர் இவற்றை விவரிக்கின்றார்.

விவாகரத்து செய்யப்பட்டவர்களை தெருக்களில் வீசி விடாதீர்கள்

[2:231] நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து விட்டால் அவர்கள், அவர்களுடைய தவணைக் காலத்தை (மூன்று மாதவிடாய் காலம்) நிறைவு செய்தவுடன் அவர்களை இணக்கமாக அதே வீட்டில் வாழவோ அல்லது அவர்களை இணக்க மாக வெளியேறவோ நீங்கள் அனுமதிக்க வேண்டும். பழிவாங்கு வதற்காக அவர்களை அவர்கள் விருப்பத்திற்கு எதிராக தங்கி இருக்கும்படி நிர்ப்பந்திக்காதீர்கள். எவர் ஒருவர் இதைச் செய்கின்றாரோ அவர் தன் சொந்த ஆன்மாவிற்கு தவறிழைக்கின்றார். கடவுள்-உடைய வெளிப்பாடுகளை வீணாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது கடவுள்-உடைய அருட்கொடைகளையும் மேலும் உங்களுக்கு அறிவூட்டுவதற்காக வேதத்தையும் ஞானத் தையும் இறக்கி அனுப்பியதையும் நினைவு கூருங்கள். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் கடவுள் எல்லாவற் றையும் தெரிந்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
[2:232] நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து விட்டால், அவர்கள் அவர்களுடைய தவணைக் காலத்தை நிறைவு செய்தவுடன், அவர்கள் ஒருவருக்கொருவர் சமாதானமாகி இணங்கினால் தங்கள் கணவர்களை அவர்கள் மீண்டும் திருமணம் செய்வதை தடுக்க வேண்டாம். உங்களில் யார் கடவுள்-ஐயும், இறுதி நாளையும் நம்புகின்றார் களோ அவர்களே இதைக் கவனத்தில் கொள்வார்கள். இது உங்களுக்கு தூய்மையானதும், மிகவும் நன்னெறியானதுமாகும். நீங்கள் அறியாத பொழுதும் கடவுள் அறிவார்.
[2:233] விவாகரத்து செய்யப்பட்ட தாய்மார்கள் குழந்தை களுக்கு அவர்களின் தந்தை விரும்பினால் இரண்டு முழு வருடங்கள் பாலூட்ட வேண்டும். தந்தை அந்த தாய்க்கு உணவும், உடையும் நியாயமான முறையில் வழங்க வேண்டும். எவர் மீதும் அவர் சக்திக்கு மீறிய சுமையை சுமத்தக் கூடாது. குழந்தையின் காரணமாக தாய் துன்புறுத்தப்படக்கூடாது, அவ்வாறே குழந்தையின் காரணமாக தந்தை துன்புறுத்தப்படக்கூடாது. (தந்தை இறந்து விட்டால்) அவருடைய வாரிசுதாரர் இந்தப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். நன்கு கலந்தாலோசித்த பின்னர் குழந்தையின் பெற்றோர் ஒருவருக்கொருவர் பிரிந்து விட ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்வதால் அவர்கள் தவறு செய்தவர்களாக மாட்டார்கள். நீங்கள் நியாயமானதை கொடுத்து பாலூட்டும் செவிலித் தாயாரை வாடகைக்கு அமர்த்திக் கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள் மேலும் கடவுள் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் பார்ப்பவராக இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் திருமணத்திற்கு முந்தைய தவணைக்காலங்களைக் கடைபிடியுங்கள்

[2:234] எவரேனும் தங்கள் மனைவியரை விட்டு விட்டு மரணித்துவிட்டால், அவர்களுடைய விதவைகள் (மறுமணம் செய்வதற்கு முன்) நான்கு மாதமும் பத்து நாட்களும் காத்திருக்க வேண்டும். அவர்கள் அவர்களுடைய தவணைக் காலத்தை நிறைவு செய்தவுடன் அவர்கள் செய்ய விரும்பும் எந்த நன்னெறியான செயல்களையும், அவர்களை செய்ய விடுவதால் நீங்கள் தவறு செய்தவர்களாக மாட்டீர்கள். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[2:235] பெண்களுடனான உங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதாலோ அல்லது இரகசியமாக வைப்பதாலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி நினைப்பீர்கள் என்பதை கடவுள் அறிவார். கலந்தாலோசனை செய்வதற்கு நன்னெறியான விஷயம் எதுவும் இருந்தாலன்றி அவர்களை நீங்கள் இரகசியமாக சந்திக்கக் கூடாது. அவர்களுடைய தவணைக்காலம் நிறை வடையும் வரை திருமணத்தை நிறைவேற்றக் கூடாது. உங்களின் ஆழ்மனதின் எண்ணங்கள் கடவுள்-க்கு தெரியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவரைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுள் மன்னிப்பவர், கருணையுடையவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

திருமண ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ளுதல்

[2:236] பெண்களைத் தீண்டுவதற்கு முன்னரோ அல்லது வரதட்சணைத் தொகையை கொடுப் பதற்கு முன்னரோ அவர்களை நீங்கள் விவா கரத்து செய்து விடுவதால் உங்கள் மீது குற்றம் இல்லை. இந்த விஷயத்தில் நீங்கள் அவர் களுக்கு இழப்பீடு செய்தாக வேண்டும். பணக் காரன் அவனால் இயன்றவரை, ஏழை அவனால் இயன்றவரை - ஒரு நியாயமான இழப்பீடு. நன்னெறியாளர்கள் மீது இது ஒரு கடமை யாகும்.
[2:237] அப்பெண்களை தீண்டுவதற்கு முன் - ஆனால் வரதட்சனைத் தொகை நிச்சயித்த பின் நீங்கள் விவாகரத்து செய்வீர்களாயின் அவர்கள் தாமாக அவர்களின் உரிமையை விட்டுக் கொடுத்தாலோ அல்லது விவாகரத்திற்கு காரணமானவர்கள் வரதட்சணைத் தொகையை விட்டுக்கொடுக்க முடிவு செய்தாலோ அன்றி இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்ட வரதட்சணைத் தொகையில் பாதியாகும். விட்டுக் கொடுப்பதே நன்னெறி க்கு நெருக்கமானதாகும். நீங்கள் உங்களுக் கிடையிலே சுமூகமான உறவைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன் றையும் கடவுள் பார்க்கின்றார்.

நீங்கள் தொடர்புத் தொழுகைகளை கவனத்துடன் கடைபிடிக்கவேண்டும்*

[2:238] நீங்கள் தொடர்பு தொழுகைகளை விடாது கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமாக நடுத் தொழுகையை,மேலும் கடவுள்-க்கு முழுமை யாக உங்களை அர்ப்பணித்து விடுங்கள்.
அடிகுறிப்பு

[2:239] அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நீங்கள் நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோ தொழுது கொள்ளலாம். நீங்கள் பாதுகாப்பை அடைந்தவுடன் நீங்கள் ஒரு போதும் அறிந்திராதவற்றை அவர் உங்களுக்கு கற்றுத்தந்துள்ளபடி கடவுள்-ஐ நீங்கள் நினைவு கூர வேண்டும்.

விதவைகளுக்கும், விவாகரத்து, செய்யப்பட்டவர்களுக்கும் ஜீவனாம்சம்

[2:240] எவர்கள் தங்கள் மனைவியரை விட்டு விட்டு இறந்து விடுகின்றனரோ அவர்களுடைய மனைவியர் அதே வீட்டில் ஓராண்டு காலம் தங்கியிருக்க தேவையான பொருட்கள், அவர் களுக்கு கிடைக்கும் படியாக மரணசாசனம் அவர்களுக்கு தரப்படவேண்டும். அவர்கள் வெளியேறினால், நன்னெறியில் நிலைத் திருக்கக்கூடிய நிலையில் அவர்கள் விரும்பியதை செய்து கொள்ள விடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[2:241] விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு நியாய மான வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும். நன்னெறியாளர்கள் மீது இது ஒரு கடமை யாகும்.
[2:242] நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு தன்னு டைய வெளிப்பாடுகளை கடவுள் இவ்விதமாக விளக்குகின்றார்.

கடவுளுக்காக பாடுபடுதல்

[2:243] அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்த போதிலும் - மரணபயத்தால் - தங்கள் வீடுகளை விட்டு தப்பியோடியவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? கடவுள் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினார், பின்னர் அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தார். கடவுள் மக்கள் மீது அவருடைய அருளைப் பொழிகின்றார், ஆனால் மக்களில் பெரும்பாலோர் சரியாக மதிப்பீடு செய்யாதவர்களாகவே இருக்கின்றனர்.
[2:244] நீங்கள் கடவுள்-க்காக சண்டையிட வேண்டும், மேலும் கடவுள் செவியேற்பவர், அறிந்தவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
[2:245] பன்மடங்காகப் பெருகி திரும்ப அவர்களுக்கே கிடைக்கக்கூடிய, நன்னெறி என்னும் கடனை கடவுள்-க்கு கொடுப்பவர்கள் யார்? கடவுள் தான் கொடுப்பவராகவும், நிறுத்திவைப் பவராகவும் இருக்கின்றார். மேலும் நீங்கள் அவரிடமே திரும்புவீர்கள்.

சவுல்*

[2:246] மோஸஸிற்குப் பின்னர் இஸ்ரவேலர்களின் தலைவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் “எங்களை வழி நடத்த ஒரு அரசனை நீங்கள் நியமித்தால் நாங்கள் கடவுள்-க்காக போராடுவோம்”, என்று தங்களுடைய வேதம் வழங்கப்பட்டவரிடம் கூறினார்கள். அவர், “போர் உங்கள் மீது விதிக்கப்பட்டால் போரிடக்கூடாது என்பது உங்களது நோக்கமா”? என்று கூறினார். அவர்கள், “எங்கள் வீடுகளையும் மேலும் எங்கள் குழந்தைகளையும் நாங்கள் இழந்து விட்ட போது, நாங்கள் ஏன் கடவுள்-க்காக போரிடக் கூடாது? என்று கூறினார்கள். இருப்பினும் போர் அவர்கள் மீது விதிக்கப்பட்ட போது சிலரைத் தவிர மற்றவர்கள் திரும்பி சென்று விட்டார்கள். வரம்பு மீறுபவர்களை கடவுள் அறிந்தவராக இருக்கிறார்.
அடிகுறிப்பு

கடவுளின் ஞானத்தைக் கேள்வி கேட்பது

[2:247] “கடவுள் தாலூத்தை (சவுல்) உங்களுக்கு அரசராக நியமித்திருக்கின்றார்”, என்று அவர் களுடைய வேதம் வழங்கப்பட்டவர் அவர் களிடம் கூறினார். அவர்கள், “அவரை விட அரசுரிமைக்கு நாங்கள் அதிக தகுதியுடைய வர்களாக இருக்கும் போது எவ்வாறு அவர் எங்கள் மீது அரசுரிமை கொள்ள இயலும், அவர் செல்வந்தர் கூட இல்லையே?”, என்று கூறினார்கள். அவர், “உங்களுக்கு மேலாக கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார். மேலும் அறிவாற்றலிலும் உடல் வலிமையிலும் அவருக்கு தாராளமாக அருளியிருக்கின்றார்”, என்று கூறினார். கடவுள் அவருடைய அரசுரி மையை தான் நாடுகின்றவருக்கு வழங்கு கின்றார். கடவுள் தாராளமானவர். எல்லாம் அறிந்தவர்.

உடன்படிக்கைப் பேழை

[2:248] அவர்களுடைய வேதம் வழங்கப்பட்டவர் அவர்களிடம், “அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாக உடன்படிக்கை பேழை உங்களிடம் திரும்ப வந்து சேரும், உங்கள் இரட்சகரிடமிருந்து உறுதிப்பாட்டை கொண்டு வரும். மேலும் மோஸஸின் மக்களும், ஆரோனின் மக்களும் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள் உங்களை வந்தடையும். அது வானவர்களால் சுமக்கப்படும். நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கையாளர்களாக இருந்தால், இது உங்களுக்கு திருப்திதரும் அடையாளமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

டேவிட்டும் கோலியாத்தும்

[2:249] படைக்கு சவுல் தலைமை ஏற்ற போது அவர், “கடவுள் உங்களை ஒரு நீரோடையைக் கொண்டு சோதிப்பார். எவர் ஒருவர் அதிலிருந்து அருந்துகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல - அதை சுவைக் காதவர்கள் மட்டும் என்னைச் சார்ந்தவர் - ஒருமிடறு தவிர”, என்று கூறினார். அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கள் அதிலிருந்து அருந்தினார்கள். நம்பிக்கை கொண்டவர்க ளோடு அதை அவர் கடந்தபோது அவர்கள், “இப்போது கோலியாத்தையும் அவனது படைகளையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமை எங்களுக்குக் குறைவாக உள்ளது” என்று கூறினார்கள். கடவுள்-ஐ சந்திப்போம் என்ற உணர்வோடிருந்தவர்கள், “கடவுள்-ன் அனு மதியுடன் பல சிறிய படையினர், பெரிய படையை தோற்கடித்திருக்கின்றனர். உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களோடு கடவுள் இருக்கின்றார்,” என்று கூறினார்கள்.
[2:250] கோலியாத்தையும் அவனது படையினரையும் அவர்கள் எதிர் கொண்டபோது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு உறுதிப் பாட்டை வழங்குவீராக, எங்கள் பாதங்களைப் பலப்படுத்துவீராக, மேலும் நம்பமறுக்கின்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு ஆதரவளிப் பீராக” என்றும் பிரார்த்தித்தார்கள்.
[2:251] அவர்கள் கடவுள்-ன் அனுமதியுடன் அவர்களை தோற்கடித்தனர், மேலும் டேவிட் கோலியாத் தைக் கொன்றார். கடவுள் அவருக்கு அரசுரி மையையும், ஞானத்தையும் கொடுத்தார், மேலும் தான் நாடியவற்றை அவருக்கு கற்றுக் கொடுத்தார். இவ்விதமாக சிலருக்கு எதிராக சிலமக்களுக்கு கடவுள் ஆதரவளித்திருக்கா விட்டால் பூமியில் குழப்பமே நிலவி இருக்கும். ஆனால் கடவுள் மனிதர்கள் மேல் தன் அருளைப் பொழிகின்றார்.
[2:252] இவை கடவுள்-ன் வெளிப்பாடுகள் ஆகும். இவற்றை உண்மையுடன் உம்* மூலமாக உரைக்கின்றோம். ஏனெனில் நீர் தூதர்களில் ஒருவராவீர்.
அடிகுறிப்பு

பல தூதர்கள் / ஒரே செய்தி

[2:253] இத்தூதர்கள்; இவர்களில் சிலருக்கு மற்றவர் களைவிட நாம் அதிகமாக அருள்புரிந்தோம். உதாரணமாக கடவுள் ஒருவரிடம் பேசினார், மேலும் அவர்களில் சிலரை உயர்ந்த பதவி களுக்கு நாம் உயர்த்தினோம் மேலும் மேரியின் மகன் இயேசுவிற்கு ஆழ்ந்த அற்புதங்களையும் மேலும் பரிசுத்த ஆவியை கொண்டு ஆதரவும் அளித்தோம். கடவுள் நாடி இருந்தால் அவர்களைப் பின்பற்றியவர்கள், தெளிவான சான்றுகள் தங்களிடம் வந்த பின்னர் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டார்கள், அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர். மேலும் சிலர் நம்ப மறுத்தனர். கடவுள் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். அனைத்தும் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே இருக்கின்றது.

பரிந்துரை இல்லை*

[2:254] நம்பிக்கை கொண்டோரே, எந்தக் கொடுக்கல் வாங்கலும், உறவுமுறை சலுகைகளும், பரிந் துரையும் இல்லாத அந்த நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் இருந்து நீங்கள் தர்மம் கொடுக்க வேண்டும். நம்ப மறுப்பவர்கள் தான் அநியாயக்காரர்கள்.
[2:255] கடவுள்: அவரைத் தவிர வேறெந்த தெய்வமும் இல்லை, அவர் என்றென்றும் ஜீவித்திருப்பவர், நிரந்தரமானவர். ஒரு நொடி கவனமின்மையோ, அல்லது சிறு தூக்கமோ அவரைப் பீடிக்காது. வானங்களில் உள்ள அனைத்தும் மேலும் பூமியில் உள்ள அனைத்தும் அவருக்கே உரியது. அவருடைய விருப்பத்திற்கு இணங்கவே அல்லாமல் யார் அவரிடம் பரிந்துரை செய்ய இயலும்? அவர் களுடைய கடந்த காலத்தையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர் அறிவார். அவர் நாடியவாறே அல்லாமல் எவர் ஒருவரும் எந்த அறிவையும் பெறுவதில்லை. அவருடைய அரசாட்சி வானங்களையும், பூமியையும் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் அவற்றை ஆள்வது அவருக்கு ஒரு போதும் சுமையாக இருப்பதில்லை. அவர்தான் மிகவும் உயர்ந்தவர், மகத்தானவர்.

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை

[2:256] மார்க்கத்தில் நிர்பந்தம் இருக்கக்கூடாது: சரியான பாதை, தவறான பாதையை விட்டும் முற்றிலும் பிரிக்கப்பட்டுவிட்டது. எவர் ஒருவர் சாத்தானுக்கு எதிராகப் பேசி, மேலும் கடவுள்-ன் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் ஒரு உறுதியான பிடிமானத்தை பிடித்துக் கொண்டார்; அது ஒரு போதும் உடைவதில்லை. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[2:257] கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுடைய இரட்சகர், அவர் அவர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் வழி நடத்துகின்றார். நம்ப மறுப்பவர்களை பொறுத்தமட்டில் அவர் களுடைய இரட்சகர்கள் அவர்களுடைய இணைத் தெய்வங்களே, அவை அவர்களை ஒளியில் இருந்து வெளியேற்றி இருளின் பால் வழி நடத்துகின்றன. அவர்கள் நரகவாசிகளாவார் கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.

ஆப்ரஹாமின் துணிச்சலான விவாதம்

[2:258] கடவுள் அவனுக்கு அரசுரிமையை தந்திருந்த போதிலும், ஆப்ரஹாமிடம் அவருடைய இரட்சகரைப் பற்றி தர்க்கம் செய்த ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா?, ஆப்ரஹாம்,“என் இரட்சகர் வாழ்வையும் மரணத்தையும் வழங்கு கின்றார்”, என்று கூறினார். அவன், “நானும் வாழ்வையும் மரணத்தையும் வழங்குகின்றேன்”, என்று கூறினான். ஆப்ரஹாம், “கடவுள் சூரியனை கிழக்கில் இருந்து கொண்டு வருகின்றார், அதை மேற்கிலிருந்து உன்னால் கொண்டு வர முடியுமா?”, என்று கேட்டார். நம்பமறுத்தவன் வாயடைத்துப்போனான். தீயவர்களை கடவுள் வழி நடத்துவதில்லை.

மரணத்தைப் பற்றிய பாடம்*

[2:259] பாழடைந்த ஒரு நகரை கடந்த போது ஒருவர், இது இறந்து விட்ட பின்னர் இதை எப்படி கடவுள்-ஆல் மீண்டும் உயிர்ப்பிக்க இயலும் என்று வியந்ததை எண்ணிப்பாருங்கள். அதன் பிறகு கடவுள் அவரை நூறு வருடங்கள் மரணத்தில் ஆழ்த்தினார் . பின் அவரை மீண்டும் உயிர்ப் பித்தார், அவர், “எவ்வளவு காலம் நீர் இங்கு தங்கி இருந்தீர்”, என்று கூறினார். அவர், “நான் இங்கே ஒரு நாளோ அல்லது நாளின் ஒரு பகுதியோ இருந்தேன்”, என்று கூறினார். அவர், “இல்லை நீர் இங்கே நூறு வருடங்கள் இருந்தீர். ஆயினும் உமது உணவையும் பானத்தையும் பாரும், அவை கெட்டுப் போகவில்லை. உம்முடைய கழுதையைப் பாரும் - இவ்வாறு நாம் உம்மை மக்களுக்கு ஒரு பாடமாக ஆக்கியுள்ளோம். இப்போது, எலும்புகளை நாம் எவ்வாறு கட்டுகின்றோம் என்பதையும் அதன்பிறகு சதைகளால் அவற்றை மூடுவதையும் கவனியும்,” என்று கூறினார். என்ன நடந்தது என்பதை அவர் தெளிவாக உணர்ந்த போது, அவர், “கடவுள் சர்வ சக்தியுடையவர் என்பதை இப்போது நான் அறிந்து கொண்டேன்”, என்று கூறினார்.
அடிகுறிப்பு

ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும் உறுதிப்பாடு தேவைப்படுகின்றது

[2:260] ஆப்ரஹாம், “என்னுடைய இரட்சகரே, இறந்த வற்றை நீர் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்கின்றீர் என்பதை எனக்கு காட்டும்” என்று கூறினார். அவர், “நீர் நம்ப வில்லையா?” என்று கூறினார். அவர், “ஆம், ஆனால் என் உள்ளத்தை உறுதிப்படுத்த நான் விரும்புகின்றேன்”, என்று கூறினார். அவர், “நான்கு பறவைகளை எடுத்து அவற்றின் அடையாளங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பறவையின் ஒரு பகுதியை எடுத்து ஒரு மலையின் உச்சியின் மேல் வைத்துவிட்டு, பின்னர் அவற்றை உம்மிடம் அழைப்பீராக. அவை உம்மிடம் விரைந்து வரும், கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர் என்பதை நீர் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

சிறந்த முதலீடு

[2:261] கடவுள்-க்காக தங்கள் பணத்தை செலவு செய்பவர்களுக்கு உதாரணம் ஒவ்வொரு கதிரிலும், நூறு தானியங்களோடு ஏழு கதிர் களை முளைப்பிக்கும் ஒரு தானியம் போன்றது. கடவுள் தான் நாடுகின்றவருக்கு இதனை பன்மடங்காகப் பெருக்குகின்றார். கடவுள் தாராளமானவர், அறிந்தவர்.
[2:262] எவர்கள் கடவுள்-க்காக தங்கள் பணத்தை செலவு செய்து, பின்னர் அந்த தர்மத்தை தொடர்ந்து அவமரியாதையோ, அல்லது தீங்கோ செய்யாமல் இருந்தால் அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[2:263] தொடர்ந்த அவமரியாதையோடு செய்யும் தர்மத்தைக் காட்டிலும், கனிவான வார்த்தை களும், இரக்கமும் சிறந்ததாகும். கடவுள் செல்வந்தர், இரக்கமிக்கவர்.
[2:264] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-ஐயும் இறுதி நாளையும் நம்பாத நிலையில் பிறருக்கு காட்டிக் கொள்வதற்காக தன்னுடைய பணத்தை செலவு செய்பவனைப் போல், நிந்தனையாலும், அவமரியாதையாலும் துன்புறுத்தி உங்கள் தர்மத்தை நீங்கள் பயனற்றதாக்கி விடாதீர்கள். அவனுக்கு உதாரணம் மெல்லிய மண்படலத் தினால் மூடப்பட்ட ஒரு பாறையைப் போன்ற தாகும், கனமழை பெய்தவுடன் அது அந்த மண்ணை கழுவி அதை ஒரு உபயோகமற்ற பாறையாக விட்டு விடுகின்றது. அவர்கள் தங்கள் முயற்சியினால் எந்த லாபமும் அடைவதில்லை. நம்பமறுக்கும் மக்களை கடவுள் வழி நடத்துவதில்லை.

தர்மம்

[2:265] கடவுள்-ன் பொருத்தத்தை தேடி, உண்மையான உறுதிப்பாட்டுடன் தங்கள் பணத்தை செலவு செய்பவர்களின் உதாரணமானது, உயர்ந்த வளமான மண்ணின் மேல் இருக்கும் ஒரு தோட்டம் போன்றதாகும்; கனமழை பெய்யும் போது அது இரு மடங்கு விளைச்சல் தருகின்றது, கனமழை இல்லை என்றாலும் ஒரு தூறல் அதற்குப் போதுமானது. நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.
[2:266] உங்களில் யாராவது ஒருவனுக்கு ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட வளமான விளைச்சல்களோடு, பேரீத்த மரங்களும், திராட்சையும் கொண்ட ஒரு தோட்டம் சொந்தமாக இருந்து, பின்னர் அவன் வயது முதிர்ந்து, அதே சமயம் அவனது பிள்ளைகள் இன்னும் அவனைச் சார்ந்திருக்கும் நிலையில், ஒரு பேரழிவு தாக்கி மேலும் அவன் தோட்டம் எரிந்து போவதை விரும்புவானா? நீங்கள் சிந்திக்கும் பொருட்டு கடவுள் வெளிப்பாடுகளை இவ்விதமாக உங்களுக்கு தெளிவாக்குகின்றார்.

எதைக் கொடுப்பது

[2:267] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சம்பாதிக்கும் நல்ல பொருட்களில் இருந்தும், மேலும் பூமியி லிருந்து உங்களுக்காக நாம் உருவாக்கிய வற்றில் இருந்தும் நீங்கள் தானம் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுப்பதற்காக கெட்டவை களை, அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்காதீர்கள், அத்தகைய பொருட்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் உங்கள் கண்கள் மூடி இருந்தாலேயன்றி அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். கடவுள் செல்வந்தர், புகழுக்குரியவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
[2:268] சாத்தான் வறுமையை உங்களுக்கு வாக்களித்து மேலும் தீமைகள் செய்யும் படி உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அதே சமயம் கடவுள் அவரிடமிருந்து மன்னிப்பையும் மேலும் அருளையும் உங்களுக்கு வாக்களிக்கின்றார். கடவுள் தாராளமானவர், எல்லாம் அறிந்தவர்.

ஞானம்: ஒரு பெரிய புதையல்

[2:269] அவர், தான் தேர்ந்தெடுக்கின்றவர்கள் மீது ஞானத்தை அளிக்கின்றார், மேலும் எவர் ஞானத்தை அடைகின்றாரோ அவர் மகத்தான பரிசை அடைந்து விட்டார். அறிவுத்திறன் உடையவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

மறைவான தர்மமே சிறந்தது

[2:270] எந்த தர்மத்தை நீங்கள் கொடுத்தாலும் அல்லது தர்மம் சம்பந்தமான வாக்குறுதியை நீங்கள் நிறைவு செய்தாலும், அவற்றைக் கடவுள் முற்றிலும் அறிகின்றார். தீயவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.
[2:271] உங்களுடைய தர்மத்தை, நீங்கள் வெளிப் படையாக செய்தாலும் நல்லது தான். ஆனால் அவற்றை மறைவாக வைத்து மேலும் அவற்றை ஏழைகளுக்கு கொடுத்தால் அது உங்களுக்கு சிறந்ததாகும், மேலும் உங்களுடைய அதிகமான பாவங்களுக்குப் பரிகாரமாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

கடவுள் ஒருவர் மட்டுமே வழி நடத்துபவர்

[2:272] எவர் ஒருவரையும் நேர்வழியில் நடத்துவதற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல. கடவுள் ஒருவர் மட்டுமே (நேர்வழியில் நடத்தப்படவேண்டும் என்று) தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களை வழி நடத்துகின்றார். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் உங்கள் சொந்த நன்மைக்கே ஆகும். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் கடவுள்-ன் பொருட்டே இருக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் எந்த தர்மமும் சிறிதளவும் அநீதமின்றி உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
[2:273] கடவுள்-ன் காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டு, மேலும் குடிபெயரஇயலாத ஏழைகளுக்கு தர்மம் போய்ச் சேர வேண்டும். அவர்களுடைய கண்ணியத்தைக் கண்டு விபரம் அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணக் கூடும். ஆனால் குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ள இயலும். அவர்கள் ஒரு போதும் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்கமாட்டார்கள். எந்த தர்மத்தை நீங்கள் கொடுத்தாலும் கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[2:274] எவர்கள் தர்மத்தை இரவிலும், பகலிலும், மேலும் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் கொடுக்கின் றார்களோ, அவர்கள் அதற்கான வெகுமதியைத் தங்கள் இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

கடும் வட்டி* தடுக்கப்படுகின்றது

[2:275] எவர்கள் கடும் வட்டியை வசூலிக்கின்றார்களோ, அவர்கள் சாத்தானுடைய ஆதிக்கத்தால் கட்டுப் படுத்தப்பட்டவர்களைப் போன்ற அதே நிலையில் இருக்கின்றார்கள். கடும் வட்டி வாங்குவதும், வியாபாரம் செய்வதும் ஒன்றே என்று அவர்கள் கூறியதே இதற்கு காரணம். ஆயினும் கடவுள் வியாபாரத்தை அனுமதிக்கின்றார், மேலும் கடும் வட்டியை தடை செய்கின்றார். இவ்விதமாக, எவர் தன் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த கட்டளையில் கவனம் செலுத்தி மேலும் கடும் வட்டி வாங்குவதை விட்டும் தவிர்த்துக் கொள் கின்றாரோ, அவர் அவருடைய கடந்த கால சம்பாத்தியத்தை வைத்துக் கொள்ளலாம். மேலும் அவருடைய தீர்ப்பு கடவுள்-இடம் இருக்கின்றது. தொடர்ந்து கடும் வட்டி வாங்குதலில் நீடிப் பவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் நரகத்திற் குள்ளாவார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
அடிகுறிப்பு

[2:276] கடவுள் கடும் வட்டியைக் கண்டனம் செய்து மேலும் தான தர்மங்களுக்கு அருள் புரிகின்றார். நம்ப மறுக்கும் குற்றவாளிகள் அனைவரையும் கடவுள் வெறுக்கின்றார்.

தெய்வீக உத்தரவாதம்

[2:277] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தி மேலும் தொடர்பு தொழுகைகளை (ஸலாத்) கவனமாக கடைப் பிடித்து மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுக்கின்றார்களோ, அவர்கள், அவர் களுடைய வெகுமதியை அவர்களுடைய இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[2:278] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் நம்பிக்கை யாளர்களாயின், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொண்டு மேலும், எல்லா விதமான கடும் வட்டியையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
[2:279] அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் பின்னர் கடவுள்-இடமிருந்தும் மேலும் அவருடைய தூதரிடமிருந்தும் ஒரு போரை எதிர்பார்த் திருங்கள். ஆனால், நீங்கள் வருந்தித்திருந்தி விட்டால் அநியாயம் செய்யாமலோ அல்லது அநியாயத்திற்கு ஆளாகாமலோ உங்கள் முதலீடுகளை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
[2:280] கடன்பட்டவர் கொடுக்க இயலாதவராக இருந்தால், ஒரு நல்ல தருணத்திற்காகக் காத்திருங்கள். நீங்கள் அறிந்திருப்பீர்களே யானால் அந்த கடனை தர்மமாக விட்டு விடுவது உங்களுக்கு சிறந்ததாகும்.
[2:281] நீங்கள் கடவுள்-இடம் திருப்பப்பட்டு, மேலும் ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த அனைத்து செயல்களுக்கும் , சிறிதளவும் அநீதமின்றி கூலி கொடுக்கப்படும் அந்த நாள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

பணம் சம்பந்தமான விவகாரங்களை எழுதிக் கொள்ளுங்கள்

[2:282] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் ஒரு கடனை எந்த தவணைக்கு கொடுக்கும் போதும் அதை நீங்கள் எழுதிக் கொள்ள வேண்டும். ஒரு பார பட்சமற்ற எழுத்தர் அதை எழுத வேண்டும். கடவுள்-ன் உபதேசங்களுக்கு இணங்க இச் சேவையை செய்வதற்கு எந்த ஒரு எழுத்தரும் மறுக்கக் கூடாது. அவர் எழுத வேண்டும், அதே சமயம் கடன் பெற்றவர் கால தவணையை கூற வேண்டும். அவர் தன் இரட்சகரான கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு போதும் ஏமாற்றக்கூடாது . கடன் பெற்றவர் மனநிலை சரியில்லாதவராகவோ, அல்லது உதவியற்றவராகவோ அல்லது எடுத்துச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் நியாயமான முறையில் அவருடைய பாதுகாவலர் சொல்ல வேண்டும்.* இரு ஆண்கள் சாட்சிகளாக பணி செய்ய வேண்டும். இரு ஆண்கள் இல்லாவிட்டால் ஒரு ஆண் மற்றும் அனைவரும்* ஏற்றுக் கொள்ளக்கூடிய சாட்சிகளான இரு பெண்கள். இவ்விதமாக, ஒரு பெண் ஒரு தலைப்பட்ச மானாலும் மற்றவள் அவளுக்கு நினைவு படுத்துவாள். சாட்சியாளர்கள் சாட்சியம் கூற அழைக்கப்பட்டால் அதை செய்வது சாட்சிகள் மீது கடமையாகும். எவ்வளவு நீளமானதாக இருந்தாலும், திருப்பிக் கொடுக்கப்படவேண்டிய நேரம் உட்பட அனைத்து விபரங்களையும் எழுதுவதற்குக் களைத்துவிட வேண்டாம். இது கடவுள்-ன் பார்வையில் நியாயமானதாகவும், சிறந்த சாட்சியத்திற்கு உறுதியளிப்பதாகவும், மேலும் உங்கள் உள்ளங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீக்கக் கூடியதாகவும்உள்ளது. நின்ற நிலையில் அவ்வப்போது நீங்கள் நிறைவேற்றும் வியாபார விவரங்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளத் தேவையில்லை, ஆனால் அவை களுக்கு சாட்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். எந்த எழுத்தரோ அல்லது சாட்சியோ அவருடைய பணியின் காரணமாக துன்புறுத்தப்படக்கூடாது. நீங்கள் அவர்களை துன்புறுத்தினால் அது உங்கள் புறமுள்ள பாவமாகும். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் கடவுள் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார், கடவுள் எல்லாம் அறிந்தவர்.
அடிகுறிப்பு

[2:283] நீங்கள் பிரயாணத்தில் இருந்து மேலும் எழுதுபவர் கிடைக்கவில்லை என்றால் திருப்பித் தருவதற்கு உத்தரவாதமாக ஒரு உறுதிப்பத்திரம் அனுப்பப் பட வேண்டும். இவ்விதமாக ஒருவர் நம்பப்பட்டால் கெடு முடியும் போது அவர் அந்த உறுதிப் பத்திரத்தை திருப்பி தந்துவிட வேண்டும். மேலும் அவர் அவருடைய இரட்சகராகிய கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சாட்சியளித்ததை மறைத்து எந்த ஒரு அத்தாட்சி யையும் நிறுத்தி வைத்துக் கொள்ளாதீர்கள். எவர் ஒருவர் ஒரு அத்தாட்சியை நிறுத்தி வைத்துக் கொள்கின்றாரோ அவர் மனதளவில் பாவியாக உள்ளார். நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[2:284] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. உங்கள் ஆழ் மனதின் எண்ணங்களை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அவற்றை மறைத்தாலும் அவற்றிற்கு கடவுள் உங்களை பொறுப்பாளி ஆக்குவார். அவர் தான் நாடுகின்றவரை மன்னிக்கின்றார். மேலும் தான் நாடுகின்றவரை தண்டிக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

கடவுளின் தூதர்களுக்கிடையில் நீங்கள் எந்தபேதமும் பாராட்டக் கூடாது

[2:285] தூதர் அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு என்ன இறக்கப்பட்டதோ அதை நம்புகின்றார், மேலும் நம்பிக்கை கொண்டோரும் அவ்வாறே செய்கின்றார்கள். அவர்கள் கடவுள்-ஐ, அவருடைய வானவர்களை, அவருடைய வேதத்தை, மேலும் அவருடைய தூதர்களை நம்புகின்றார்கள்; “நாங்கள் அவருடைய எந்த தூதர்களுக்கிடையிலும் வேற்றுமை பாராட்டுவ தில்லை.” அவர்கள், “நாங்கள் செவியேற்றோம் மேலும் கீழ்ப்படிந்தோம்.* எங்களுடைய இரட்சகரே, எங்களை மன்னிப்பீராக, இறுதிவிதி உம்மிடமே இருக்கின்றது”, என்று கூறுகின்றார்கள்.
அடிகுறிப்பு

[2:286] கடவுள் எந்த ஒரு ஆன்மாவிற்கும் அதன் சக்தி க்கு மீறிய சுமைகளை ஒரு போதும் சுமத்துவ தில்லை: அது என்ன சம்பாதிக்கின்றதோ அது அதற்கு வரவாகும். மேலும் அது என்ன செய்கின்ற தோ அது அதற்கு எதிராகும். “எங்கள் இரட்சகரே, நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறு செய்து விட்டாலோ, எங்களைத் தண்டித்து விடாதீர். எங்கள் இரட்சகரே, மேலும் எங்களுக்கு முன்னிருந்தோர் செய்தது போல் உமக்கெதிராக நிந்தனை செய்வதை விட்டும் எங்களை பாதுகாப் பீராக. எங்கள் இரட்சகரே, வருந்தித்திருந்துவதற்கு மிகவும் காலதாமதம் ஆகிவிடும் வரையிலும் பாவம் செய்து கொண்டிருப்பதை விட்டும் எங்களைப் பாதுகாப்பீராக. எங்களைப் பிழை பொறுப்பீராக மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே எங்களுடைய இரட்சகரும் எஜமானருமாவீர், நம்பிக்கையற்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை தருவீராக”.