சூரா 22க்குரிய அடிக்குறிப்புகள்

*22:5 குர்ஆனுடைய கணித அற்புதம் 19என்ற எண்ணின் அடிப்படையிலானது. இப்போது வெளிப்பட்டுள்ளபடி இந்த எண்ணானது, கடவுளுடைய படைப்புகள் மீது அவருடைய கையொப்பமாகத் திகழ்கின்றது. இவ்விதமாக, நீங்களும் நானும் நமது உடல்களில் 209 எலும்புகளைக் கொண்டிருக்கின்றோம் (209 = 19 X 11). ஒரு கருவின் முழுகர்ப்ப கால அளவானது, 266 நாட்களாகும் (19 X 14) (லாங்மன்ஸ் மெடிகல் எம்ப்ரையாலஜி T.W. சாட்லர், பக்கம் 88,1985).

*22:19-22 நரகத்திற்குச் செல்வதை வலியுறுத்திய மக்கள் தவிர்த்துவிட முடியாதவாறு: இது எவ்வளவு கெட்டது என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்போம் என்று புகார் கூறவே செய்வார்கள். அடையாளமான வார்த்தைகளாக இருந்த போதிலும், நரகின் பயங்கரங்கள் அவர்களுக்கு மிகவும் தத்ரூபமாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது என்று அவர்களிடம் கூறப்படும். சுவனமும், நரகமும் மாறாமல் ஒரே சீராக, இணைத்தே குர்ஆனில் குறிப்பிடப்படுவது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

*22:26-27 (இஸ்லாம்) அடிபணிதலின் ஆரம்பத் தூதர் ஆப்ரஹாமாவார். 22:78 மற்றும் பின் இணைப்பு 9 ஐ பார்க்கவும்.

*22:36 புனித யாத்திரிகர்களின் பிராணிப் பலியானது, புனித யாத்திரைத் தலத்திலுள்ள வளங்களைப் பாதுகாக்கின்றது. புனித யாத்திரையின் போது மக்காவில் ஏறத்தாழ 2,000,000 யாத்திரிகர்கள் குவிகின்றனர் என்பதைக் கவனிக்கவும்.

*22:49 இக்கட்டளை, கடவுளின் உடன்படிக்கைத் தூதரை நோக்கிக் குறிப்பாகக் கூறப்படுகின்றது. இந்த உண்மையும், மேலும் அத்தூதருடைய குறிப்பான பெயரும் குர்ஆனில் கணித ரீதியில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. மறுக்க முடியாத சான்றுகளுடன், விபரங்களை பின்இணைப்பு 2 மற்றும் 26ல் பார்க்கவும்.

*22:52 இந்த உலகம் சம்பந்தமான சோதனை முழுவதும், தனது கண்ணோட்டத்தை எடுத்துக்காட்ட சாத்தான் அனுமதிக்கப்படுகின்றான் (நமது உடல்களில் சாத்தானுடைய ஒரு பிரதிநிதியுடன் நாம் பிறக்கின்றோம்). கடவுளின் சாட்சியம் மற்றும் சாத்தானின் சாட்சியம் ஆகியவற்றிற்கிடையில், மக்கள் ஒன்றைத் தேர்வு செய்ய இது இடம் அளிக்கின்றது. சாத்தானின் சாட்சியங்கள் மாற்றமேயில்லாமல் பொய்களின் அடிப்படையிலானது. சாத்தானின் பிரதிநிதிகள் ஒவ்வொரு தூதருக் கெதிராகவும் மிகவும் அபத்தமான பொய்களையும், நிந்தனைகளையும், மற்றும் குற்றச்சாட்டுக்களையும் தொடர்ந்து கொண்டு வருகின்றனர் என்னும் உண்மையை இந்த வழிமுறை விவரிக்கின்றது. (6:33-34, 8:30, 17:76-77, 27:70 ஐ பார்க்கவும்).

*22:78“கடவுளை மட்டும் வழிபடுங்கள்,” என்ற அதே ஒரே செய்தியைத்தான் தூதர்கள் அனைவரும் உபதேசித்தனர் என்ற போதிலும், அடிபணிதல் (இஸ்லாம்) மற்றும் அடிபணிந்தவர் (முஸ்லிம்) என்னும் வார்த்தைகளை உருவாக்கிய முதல் தூதர் ஆப்ரஹாம் ஆவார் (2:128). அடிபணிதலுக்கு ஆப்ரஹாமின் பங்களிப்பு என்ன? அடிபணிதலின் மார்க்கக் கடமைகள் அனைத்தும் ஆப்ரஹாமின் மூலமாகவே வெளிப்படுத்தப்பட்டது என 16:123 லிருந்து நாம் கற்றுக் கொள்கின்றோம் (பின் இணைப்புகள் 9 & 26ஐ பார்க்கவும்).