சூரா 25க்குரிய அடிக்குறிப்புகள்

*25:2 விண்வெளி வீரர்களை அண்டவெளிக்குள் நாம் மிதக்க விடும்போது, நாம் உணவு, தண்ணீர், பிராணவாயு மற்றும் பயணம் முழுவதற்குமான மற்றத் தேவைகளை மிகத் துல்லியமாக அளவிடுகின்றோம். அது போலவே, பூமியெனும் விண்கலத்தின் மீது அண்டவெளியில் கடவுள் நம்மை மிதக்க விட்டுள்ளார்-மேலும் நமக்கும் மற்றப் படைப்பினங்களுக்கும் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய அனைத்து வகை வாழ்வாதாரங்களையும், ஒரு மிகச் சரியான வடிவில் வடிவமைத்துள்ளார். உதாரணத்திற்கு, நமக்கும் தாவரங்களுக்கும் இடையில் உள்ள ஒன்றுக்கொன்று இசைவான கூட்டு வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்; கதிரவனின் ஒளியிலிருந்து ஒளிச்சேர்க்கை மூலம் அவை உருவாக்கும் பிராணவாயுவை நாம் பயன்படுத்துகின்றோம், அதே சமயம் சுவாசிக்கும் போது நாம் வெளிப்படுத்தும் கரியமிலவாயுவை அவை பயன்படுத்திக் கொள்கின்றன.

*25:5 முஹம்மதின் சமகாலத்தவர்கள், அவர் எழுதவும் படிக்கவும் தெரிந்த கல்வி கற்ற ஒருவர் என்பதை அறிந்திருந்தனர்; கடவுளின் வெளிப்பாடுகளை அவர் தன் சொந்தக் கரங்களால் எழுதிக் கொண்டார் (பின் இணைப்பு 28ஐ பார்க்கவும்).

*25:6 நம்ப மறுப்பவர்களின் கூற்றுக்களுக்கு, மறுக்க முடியாத பதிலான குர்ஆனின் அற்புதக் கணிதக் குறியீடு, 1400 வருடங்களாக தெய்வீகமாகப் பாதுகாக்கப்பட்டதோர் இரகசியமாக இருந்து வந்தது. கடவுளின் அனுமதிப்படி அதனைத் திரைவிலக்க, கடவுளின் உடன்படிக்கைத் தூதர் விதிக்கப்பட்டிருந்தார் (பின்இணைப்புகள் 1, 2 & 26).

*25:27-30 இந்த வசனம் கடவுளின் உடன்படிக்கை தூதரை “ரஷாத் கலீஃபா” என்ற அவருடைய பெயர் கணித அடிப்படையில் குறியீடு செய்யப்பட்டுள்ளதை குறிக்கின்றது. “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (505), தொடர்ந்து “கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725), தொடர்ந்து இந்தச் சூராவின் எண்ணையும் (25), தொடர்ந்து வசனங்கள் 27, 28, 29 ,மற்றும் 30, ஆகியவற்றையும் நாம் எழுதினால், இறுதியில் கிடைக்கும் எண் (5057252527282930) 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும் (விபரங்களுக்கு பின் இணைப்பு 2 மற்றும் 26ஐப் பார்க்கவும்). 25:30ல் உள்ளபடி தீர்ப்பு நாளின்போது வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதும் இத்தகையதொரு வாக்குமூலத்தை அளிப்பார்.

*25:56 “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), இந்த சூரா மற்றும் வசன எண்களை (25+56) நாம் கூட்டினால் கிடைக்கப் பெறும் கூட்டுத் தொகை 1230+25+56=1311=19 X 69.