சூரா 27க்குரிய அடிக்குறிப்புகள்

*27:1 குர்ஆனுடைய இந்த தலைப்பு எழுத்துக்களின் அர்த்தத்திற்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

*27:18-19 குறிப்பிட்ட சூராவில் எவ்வளவுக்கெவ்வளவு அசாதாரணமான நிகழ்வுகள் உள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு வலிமையான கணித ஆதாரங்கள் அவற்றிற்கு ஆதரவு அளிக்கின்றன. இத்தகைய வினோதமான அற்புத நிகழ்வுகள் கடவுளின் வல்லமையைச் சுட்டிக்காட்டுபவையாக உள்ளன என்பதை நாம் உறுதிப் படுத்திக் கொள்ள இது உதவுகின்றது. இந்த சூராவின் தலைப்பு எழுத்துக்களான த.ஸீ., குர்ஆனின் தலைப்பு எழுத்துக்களுடன் தொடர்புடைய கணித அற்புதத்தின் பின்னிப்பிணைந்த சிக்கலானதொரு அங்கமாக அமைகின்றது. இயேசுவின் அசாதாரணப் பிறப்பு மற்றும் அற்புதங்கள், ஐந்து தலைப்பு எழுத்துக்களைத் துவக்கத்தில் கொண்ட 19வது சூராவில் உள்ளது. விபரங்களுக்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

*27:30 இந்த வசனத்தில் உட்படுத்தப்பட்டுள்ள ‘பஸ்மலாஹ்’ 19 சூராக்களுக்கு முன்னதாக சூரா 9ல் இடம்பெறாத ‘பஸ்மலாஹ்’வை ஈடு செய்கின்றது. இது ‘பஸ்மலாஹ்’வின் மொத்த எண்ணிக்கையை மீண்டும் 114, 19 X 6 ஆக ஆக்குகின்றது. இந்த ‘பஸ்மலாஹ்’வுடன் இணைக்கப்பட்டுள்ள விரிவான ஆழ்ந்த அற்புதத்தின் விபரங்களுக்கு பின் இணைப்பு 29ஐப் பார்க்கவும்.

*27:82 (2+7+8+2=19) குர்ஆனுடைய கணித அற்புதத்தின் திரையை விலக்க கணினி அவசியமானதாக இருந்தது, மேலும் அதிகமான மனிதர்கள் கடவுளின் தூதுச் செய்தியைக் கைவிட்டு விட்டனர் என்பதை இது நிரூபித்தது. (பின்இணைப்புகள் 1 & 19 ஐ பார்க்கவும்).