சூரா 28க்குரிய அடிக்குறிப்புகள்

*28:1 குர்ஆனுடைய அற்புதமான கணிதக் குறியீட்டின் விபரங்களுக்கும், மேலும் இந்த குர்ஆனியத் தலைப்பு எழுத்துக்களின் அர்த்தம் அல்லது முக்கியத்துவத்திற்கும் பின்இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

*28:43 மோஸஸின் புத்தகம் உட்பட, இஸ்ரவேலரின் வேதம் வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து வேதங்களின் தொகுப்பே தோரா ஆகும். குர்ஆன் ஒரே சீராக, மோஸஸிற்கு ஒரு புத்தகம் அல்லது “சட்டப்புத்தகம்” கொடுக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றது, “தோரா” மோஸஸிற்கு வழங்கப்பட்டதாக குர்ஆனில் எங்கேயும் நாம் காணமுடியாது. ஆகையால், இன்றைய பழைய ஏற்பாடுதான் தோரா ஆகும் (3:50, 5:46 ஐ பார்க்கவும்).

*28:44 இந்த தூதரின் பெயரானது கணித ரீதியில் உறுதிப்படுத்தப்படுகின்றது: “ரஷாத் கலீஃபா”வின் எழுத்தெண்மதிப்பை (1230) அடுத்து இந்த வசன எண்ணை (44) நாம் அமைப்பதன் மூலம் நமக்குக் கிடைப்பது 123044 = 19 X 6476.