சூரா 29க்குரிய அடிக்குறிப்புகள்

*29:1 குர்ஆனுடைய கணிதக்கட்டமைப்பின் விபரங்களுக்கும், இதற்கு முன்னர் மர்மமாக இருந்து வந்த இந்தக் குர்ஆனியத் தலைப்பு எழுத்துக்களின் அர்த்தத்திற்கும் பின் இணைப்பு 1ஐ பார்க்கவும்.

*29:14 குர்ஆனுடைய அற்புதம் கணித ரீதியாக இருப்பதால், பிரத்தியேகமாக எண்கள், 19ன் அடிப்படையிலான குறியீட்டின் முக்கியப் பகுதியாக அமைகின்றன. இவ்விதமாக, குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களின் கூட்டுத்தொகை 162146 அல்லது 19 X 8534 ஆக உள்ளது (விபரங்களுக்கு பின் இணைப்பு 1ஐ பார்க்கவும்).

*29:19-20 பரிணாமம் என்பது தெய்வீகமாக வழிகாட்டப்பெற்ற ஒரு செயல்பாடாக அமைந்துள்ளது என்பதை நாம் குர்ஆனிலிருந்து கற்றுக் கொள்கின்றோம். விபரங்களுக்கு பின் இணைப்பு 31ஐ பார்க்கவும்.

*29:41-43 கருப்பு விதவைச் சிலந்தி தன் ஜோடியைக் கொன்று விடுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு மனிதர் அறிவைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். 29:41ல் சிலந்திக்கு பெண்பால் சொற்குறிப்பு பயன்படுத்தப்படுவது இவ்விதமாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது சிலந்தியின் வலை, இயல்பில் மிகவும் பலஹீனமானது என்ற உண்மைக்கு மேலும் வலுவூட்டுவதாகும்.

*29:45 உங்களுடைய மனங்களை அதிகமான நேரம் ஆக்கிரமித்திருப்பது எதுவாயினும் அதுவே உங்களுடைய தெய்வமாகும் (20:14 மற்றும் பின் இணைப்பு 27ஐ பார்க்கவும்).

*29:48-51 குர்ஆனை விட்டும், அச்சுறுத்துகின்ற கணித அற்புதத்தை 1400 ஆண்டுகள் பிரித்து வைக்க வேண்டும் என்பது ஞானம் மிக்கவருடைய நாட்டமாக இருந்தது. முஸ்லிம்கள் எப்படி முஹம்மதை ஒட்டு மொத்தமாக இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றனர் என்பதைக் காண்கையில், குர்ஆனுடைய கணித அற்புதமும் முஹம்மதின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், ஏராளமான மக்கள் அவரைக் கடவுளின் அவதாரமாகவே வழிபட்டிருப்பார்கள் என்பது கண்கூடானதாகும். இப்போதுள்ளபடி, குர்ஆனுடைய மகத்தான அற்புதம் (74:30-35) கணினி யுகம் வரை காத்திருக்க வேண்டும் என்றும், அவருடைய உடன்படிக்கைத் தூதர் மூலமாகத் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கடவுள் நாடியிருந்தார் (பின் இணைப்பு 1, 2 மற்றும் 26 ஐ பார்க்கவும்).

*29:53 40 வயதிற்கு முன்னர் மரணிக்கும் எவரொருவரும் சுவனம் செல்கின்றார், மேலும் எல்லோரும் இதற்குத் தகுதியுடையவர்களும் அல்ல. துஷ்டனான குற்றவாளி ஒருவன் சரியான நேரத்தில் மரணதண்டனைக்கு உட்படுத்த படவில்லையென்றால் சில சமயங்களில் மனிதர்கள் நீதியின் தாமதத்திற்காகப் புலம்புகின்றனர். சுவனத்திற்குத் தகுதியானவர்கள் யார் என்பதைக் கடவுள் அறிகின்றார் (46:15 மற்றும் பின் இணைப்பு 32 ஐ பார்க்கவும்).