சூரா 3 இம்ரானின் குடும்பத்தினர்(ஆலி-இம்ரான்)
[3:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[3:1] அ.ல.ம.*

அடிகுறிப்பு

[3:2] கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை; ஜீவித்திருப்பவர், நிலைத்திருப்பவர்.

[3:3] அவர், உமக்கு இவ்வேதத்தை சத்தியத் துடனும், முந்தைய எல்லா வேதங்களையும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அனுப்பியுள் ளார், மேலும் அவர் தோரா மற்றும் சுவிஷேசத்தை அனுப்பினார்

[3:4] இதற்கு முன்பு மக்களை வழி நடத்துவதற்காக, மேலும் அவர் சட்டப்புத்தகத்தை அனுப்பினார். கடவுள்-ன் வெளிப்பாடுகளை நம்ப மறுப்ப வர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாகின் றார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர்.

[3:5] பூமியின் மீதோ, அல்லது வானத்திலோ, எந்த ஒன்றும் கடவுள்-க்கு மறைவானதல்ல.

[3:6] தான் நாடுகின்றபடி கருவறைகளில் உங்களை வடிவமைப்பவர் அவரே. அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை; சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[3:7] அவர் உமக்கு நேரடியான வசனங்களும் - அவை இவ்வேதத்தின் சாரமாக விளங்குபவை - மற்றும் பல பொருள் தரும் அல்லது உவமான வசனங்களும் கொண்டதாக இவ்வேதத்தினை அனுப்பியுள்ளார். தங்கள் இதயங்களில் சந்தேகங்களை கொண்டவர்கள் குழப்பத் தைத் தோற்றுவிப்பதற்காகவும் மேலும் குறிப் பிட்டதோர் அர்த்தத்தை வெளிக்கொணர் வதற்காகவும் பலபொருள் தரும் வசனங்களைப் பின்பற்றுவார்கள். கடவுள்-ஐயும் அறிவில் நன்கு ஊ

[3:8] “எங்கள் இரட்சகரே, இப்போது எங்களை நீர் வழிநடத்திவிட்டீர், பின்னர் எங்களுடைய இதயங்களைத் தடுமாற விட்டு விடாதீர். உம்முடைய கருணையை எங்கள் மீது பொழிவீராக; நீரே கொடையாளி.

[3:9] “எங்கள் இரட்சகரே, தவிர்த்து விடஇயலாத அந்த நாளில் மக்களை நிச்சயம் நீர் ஒன்று கூட்டுவீர். கடவுள் ஒருபோதும் வாக்கு றுதியை முறிக்கமாட்டார்”.

[3:10] நம்ப மறுப்பவர்கள் தங்களுடைய செல்வத் தினாலோ, அன்றி தங்களுடைய குழந்தை களினாலோ, கடவுள்-க்கு எதிராக ஒரு போதும் உதவி செய்யப்படமாட்டார்கள். அவர் கள் நரகிற்கு எரிபொருளாக இருப்பார்கள்.

[3:11] ஃபேரோவின் மக்களையும், அவர்களுக்கு முன்னிருந்தோரையும் போலவே, நம்முடைய வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்க மறுத்தார் கள், மேலும் அதன் விளைவாக, கடவுள் அவர்களது பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார், கடவுள் தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர்.

[3:12] நம்பமறுப்பவர்களிடம் “நீங்கள் தோற்கடிக்கப் படுவீர்கள், பின்னர் நரகில் ஒன்று சேர்க்கப் படுவீர்கள், என்ன ஒரு துன்பகரமான தங்கு மிடம் !” என்று கூறுவீராக.

நம்பிக்கையாளர்கள்: இறுதி வெற்றியாளர்கள்

[3:13] மோதிக் கொண்ட இருபடையினரில் உங்களு க்கு ஓர் உதாரணம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருபடை கடவுள்-க்காக சண்டையிட்டது, அதே சமயம் மற்றொன்றோ நம்ப மறுத்ததாக இருந்தது. அவர்கள் தங்களின் சொந்த கண்களால் அவர்களை தங்களைப் போல் இருமடங்காக இருக்கக் கண்டார்கள். கடவுள் தான் நாடுகின்றவர்களுக்கு அவருடைய வெற்றியைக் கொண்டு ஆதரவு அளிக்கின்றார். பார்வையுடையோருக்கு இது ஒரு உத்தரவாதத்தை அளிக்க வ

மாறுபட்ட முன்னுரிமைகள்

[3:14] உலக இன்பங்களான பெண்கள், மக்கட்பேறு, தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல் கள், பயிற்றுவிக்கப்பட்ட குதிரைகள் கால் நடைகள், மற்றும் பயிர்கள் ஆகியவை மக்களுக்கு அலங்காரமாக்கப்பட்டுள்ளன. இவை இவ்வுலகின் பொருட்கள் ஆகும். கடவுள் - இடத்தில் மிகச் சிறந்த தங்குமிடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

[3:15] “மிகச் சிறப்பான ஒரு வியாபாரத்தைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கின்றேன்: நன்னெறியானதொரு வாழ்வு நடத்து வோருக்கு, அவர்களுடைய இரட்சகரிடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்கள், தூய்மையான துணை கள், மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளால் மகிழ்ச்சி ஆகியவை தயாராக உள்ளன” என்று கூறுவீராக. கடவுள் தன்னை வழிபடுவோரைப் பார்ப்பவராக உள்ளார்.

[3:16] அவர்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம், ஆகையால் எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பீராக, மேலும், எங்களை நரக நெருப்பின் வேதனை யிலிருந்து காத்திடுவீராக”என்று கூறுகின்றார்கள்.

[3:17] அவர்கள் உறுதியானவர்கள், உண்மை யாளர்கள், அடிபணிந்தவர்கள், பெருந்தன்மை யாளர்கள், இன்னும் அதிகாலையில் தியானிப் பவர்கள்.

மிகவும் முக்கியமான கட்டளை

[3:18] தன்னைத் தவிர வேறுதெய்வம் இல்லை, என்று கடவுள் சாட்சி அளிக்கின்றார், வானவர்களும், அறிவுடையவர்களும், அவ்வாறே செய்கின்றனர். உண்மையாகவும் மேலும் நீதமாகவும், அவரே பரிபூரணமான தெய்வம் ஆவார்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை, சர்வ வல்லமையுடை யவர், ஞானம் மிக்கவர்.

அடிகுறிப்பு

அடிபணிதல்: ஒரே மார்க்கம்

[3:19] கடவுள்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் “அடிபணிதல்” ஆகும். அதற்கு நேர்மாற்றமாக வேதத்தைப் பெற்றவர்களோ தாங்கள் அறிவைப் பெற்றிருந்த போதிலும், பொறாமை காரணமாக இவ்வுண்மையை மறுக்கின்றனர். கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கும் இத்தகையவர்களை கணக்கிடுவதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.

[3:20] அவர்கள் உம்முடன் தர்க்கித்தால், அப்போது, “நான் கடவுள்-க்கு மட்டும் அடிபணிந்து விட்டேன்; நானும் என்னைப் பின்பற்றுவோரும்”, என்று கூறுவீராக. வேதத்தைப் பெற்றவர் களுக்கும் மற்றும் பெறாதவர்களுக்கும், “நீங்கள் அடிபணிவீர்களா?” என்று நீர் பிரகடனம் செய்ய வேண்டும் அவர்கள் அடிபணிந்தால், அப்போது அவர்கள் வழிகாட்டல் பெற்று விட்டார்கள். ஆனால் அவர்கள் திரும்பிவிட்டால், உம்முடைய ஒர

[3:21] கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து விட்டவர்கள், மேலும் வேதம் வழங்கப்பட்டவர் களை நீதமின்றிக் கொன்றவர்கள், மேலும் மக்கள் மத்தியில் நீதத்தை ஆதரித்தவர்களைக் கொன்றவர்கள்,ஆகியவர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை வாக்களிப்பீராக.

[3:22] இந்த வாழ்வு மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டிலும் அவர்களின் செயல்கள் பயனற்றதாக ஆக்கப்பட்டுவிட்டன, மேலும் அவர்கள் எந்த உதவியாளரையும் பெற மாட்டர்கள்.

[3:23] கடவுள்-ன் இவ்வேதத்தை ஆதரிக்கவும் மேலும் அவர்களின் சொந்த வாழ்வுகளில் இதனைப் பிரயோகிக்கவும் வேதத்தின் பகுதி கொடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்படு கின்றனர் என்பதையும், அப்போது அவர்களில் சிலர் வெறுப்பினால் திரும்பி விடுவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?`

[3:24] இது ஏனெனில், அவர்கள், “ஒரு சில நாட்கள் தவிர நரக நெருப்பு எங்களை தீண்டாது”, என்று கூறியதே. இவ்விதமாக அவர்கள் தங்களின் மார்க்கத்தில் தங்களுடைய சொந்தக் கற்பனைகளால் ஏமாற்றப்பட்டனர்.

[3:25] தவிர்க்க இயலாத அந்நாளில் அவர்களை நாம் வரவழைக்கும் போது அது அவர்களுக்கு எப்படி இருக்கும்? ஒவ்வொரு ஆன்மாவிற்கும் சிறிதளவும் அநீதமின்றி, அது சம்பாதித்த வற்றிற்காக சன்மானம் கொடுக்கப்படும்.

கடவுளின் தன்மைகள்

[3:26] கூறுவீராக,“எங்கள் தெய்வமே: எல்லா ஆட்சியதி காரங்களையும் கொண்டவரே. நீர் தேர்ந்தெடுக் கின்றோருக்கு நீர் ஆட்சியை வழங்குகின்றீர், நீர் தேர்ந்தெடுக்கின்றோரை நீர் ஆட்சியிலிருந்து நீக்குகின்றீர், நீர் தேர்ந்தெடுக்கின்றோருக்கு நீர் கண்ணியம் வழங்குகின்றீர் மேலும், நீர் தேர்ந்தெடுக்கின்றோரை, இழிவிற்குள்ளாக்கு கின்றீர். வாழ்வாதாரங்கள் அனைத்தும் உம்கரங் களிலேயே உள்ளன. நீர்

[3:27] “நீர் இரவைப் பகலினுள் புகுத்துகின்றீர், மேலும் பகலை இரவினுள் புகுத்துகின்றீர். நீர் இறந்த வற்றிலிருந்து உயிருள்ளவற்றை உருவாக்கு கின்றீர், மேலும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை உருவாக்குகின்றீர். இன்னும் நீர் தேர்ந்தெடுக்கின்றோருக்கு கணக்கின்றி வழங்குகின்றீர்.”

உங்கள் நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்

[3:28] நம்பிக்கையாளர்கள், ஒரு போதும் நம்பிக்கையாளர்களுக்குப் பதிலாக நம்ப மறுப்பவர்களுடன் நட்புக் கொள்ள மாட்டார்கள். இதைச்செய்கின்ற எவரும் கடவுள்-இடமிருந்து வெளியேற்றப்பட்டவராக இருக்கின்றார். துன்புறுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக நிர்பந்திக் கப்பட்ட நிலையில் இதைச் செய்பவர்கள் விலக் களிக்கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் அவரிடம் மட்டுமே நீங்கள் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று உங்கள

[3:29] “உங்களின் உள்ளார்ந்த எண்ணத்தை நீங்கள் மறைத்தாலும் சரி, அல்லது அறிவித்தாலும் சரி, கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்திருக் கின்றார்,” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[3:30] ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த எல்லா நற்காரியங்களும் முன்னால் கொண்டு வரப்பட்டுக் காணும் அந்நாள் வரும். தீய காரியங்களைப் பொறுத்தவரை, அவை வெகுதூரம் விலகிச் சென்றிருக்க வேண்டும் என்று அது விரும்பும். கடவுள் அவரிடம் மட்டுமே நீங்கள் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று உங்களை எச்சரிக்கின்றார். கடவுள் மக்கள் மீது இரக்கமுள்ளவர் ஆவார்.

[3:31] “நீங்கள் கடவுள்-ஐ நேசிப்பீர்களானால், நீங்கள் என்னைப்பின்பற்ற வேண்டும்” என்று பிரகடனம் செய்வீராக. அப்போது கடவுள் உங்களை நேசிப்பார், உங்கள் பாவங்களை மன்னிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[3:32] “நீங்கள் கடவுள்-க்கும் தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும்” என்று பிரகடனம் செய்வீராக. அவர்கள் திரும்பி விட்டால், நம்ப மறுப்பவர் களைக் கடவுள் நேசிப்பதில்லை.

மேரியின் பிறப்பு

[3:33] கடவுள் ஆதாம், நோவா, ஆப்ரஹாமின் குடும் பத்தினர், மற்றும் இம்ரானின் குடும்பத்தினர் ஆகியோரை மக்களுக்கு (தூதர்களாக) தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

[3:34] அவர்கள் ஒரே சந்ததியரில் உள்ளவர்களாவர். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[3:35] இம்ரானின் மனைவி, “ என் இரட்சகரே, என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உமக்கு நான் முற்றிலும் அர்ப்பணித்து விட்டேன், எனவே என்னிடமிருந்து ஏற்றுக் கொள்விராக. நீரே செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறினார்.

[3:36] அவர், அவரை பெற்ற பொழுது, “என் இரட்சகரே, நான் ஒரு பெண்ணைப் பெற்றிருக் கின்றேன்” - அவர் கருக்கொண்டிருந்தது எது என்பதைக் கடவுள் நன்கறிந்திருந்தார் - “ஆணானது பெண்னைப் போன்றதல்ல. நான் அவளுக்கு மேரி என்று பெயரிட்டிருக்கின் றேன், மேலும் அவளுக்கும் அவளின் சந்ததி யினருக்கும் விரட்டப்பட்ட சாத்தானிடமிருந்து உம்முடைய பாதுகாப்பை நான் வேண்டுகின் றேன்” என்று அவர் கூறினார்.

[3:37] அவருடைய இரட்சகர் ஒரு அழகான ஏற்றுக் கொள்ளுதலாக அவரை ஏற்றுக் கொண்டார், மேலும் ஜக்கரியாவின் பாதுகாப்பின் கீழ் ஒரு அழகான வளர்ப்பினால் அவரை வளர்த்தார், ஜக்கரியா அவருடைய சரணாலயத்தில் நுழை யும் போதெல்லாம் அவருடன் ஆகாரங்களைக் கண்டார். அவர்”மேரி, இதனை நீ எங்கிருந்து பெற்றாய்?” என்று கேட்பார். அவர், “ இது கடவுள் இடமிருந்து வந்தது. கடவுள் அவர் தேர்தேடுக்கின்றவர்களுக்கு கணக்

ஜானின் பிறப்பு

[3:38] அப்பொழுதே ஜக்கரியா தன் இரட்சகரிடம் “என் இரட்சகரே, இதுபோன்ற ஒரு நல்ல குழந்தையை எனக்குத் தருவீராக; நீர் பிரார்த்தனைகளைச் செவியேற்பவர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.

[3:39] சரணாலயத்தில், அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்த போது வானவர்கள் அவரை அழைத்தனர்: “கடவுள் ஜானைப் பற்றிய நற்செய்தியை உமக்கு தருகின்றார். கடவுள்-ன் வார்த்தையில் நம்பிக்கை கொண்டவர், கண்ணியமானவர், ஒழுக்கமானவர், இன்னும் ஒரு நன்னெறியாளரான வேதம் வழங்கப்பட்டவர்.”

[3:40] அவர், “நான் இவ்வளவு வயதானவனாக இருக்கும் போது, மேலும் என் மனைவி மலடாக இருக்கும் போது, நான் எவ்வாறு ஒரு மகனைப் பெற இயலும்?” என்று கூறினார் “அவர், “கடவுள் தான் நாடுகின்றதைச் செய்கின் றார்”என்று கூறினார்.

[3:41] அவர், “என் இரட்சகரே, எனக்கு ஒரு அடையாளத்தை தாரும்.” என்று கூறினார். அவர் “உமது அடையாளமானது மூன்று நாட்களுக்கு சைகைகளைக் கொண்டே தவிர மக்களிடத்தில் நீர் பேசமாட்டீர். உம் இரட்சகரை அதிகமதிகம் போற்றிக் கொண்டிரும்; இன்னும் இரவும் பகலும் அவரைத் தியானிக்கவும்,” என்று கூறினார்.

மேரி மற்றும் இயேசு

[3:42] வானவர்கள் கூறினர், “மேரியே கடவுள் உம்மைத் தேர்ந்தெடுத்து இன்னும் உம்மைத் தூய்மைப்படுத்தி விட்டார். பெண்கள் அனைவரிலும் உம்மை அவர் தேர்ந்தெடுத்தார்.

[3:43] “மேரியே, உம்முடைய இரட்சகருக்கு நீர் அடிபணிய வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சிரம்பணிந்தும், குனிந்தும் வழிபட வேண்டும்.”

[3:44] இது, கடந்த கால செய்தியிலிருந்து உமக்கு நாம் வெளிப்படுத்தியவை. மேரியின் பொறுப் பாளரைத் தேர்வு செய்யத் தங்கள் சீட்டுக்களை குலுக்கி எடுத்தபோது நீர் அங்கு இருக்க வில்லை. அவர்கள் ஒருவர் மற்றவரோடு விவாதித்த போது நீர் அங்கு இருக்கவில்லை.

[3:45] வானவர்கள் கூறினர், “மேரியே, கடவுள் உமக்கு நற்செய்தி தருகின்றார்: அவரிட மிருந்துள்ள ஒரு வார்த்தையாக, அவரின் பெயர் ‘மெசையாஹ், மேரியின் மகன் இயேசு’. அவர் இந்த வாழ்விலும், மறுவுலகிலும் பிரசித்தி பெற்றவராக, இன்னும் எனக்கு நெருக்க மானவர்களில் ஒருவராக இருப்பார்.

[3:46] “தொட்டிலிலும், அதேபோல் வாலிபத்திலும் அவர் மக்களிடம் பேசுவார்; அவர் நன்னெறி யாளர்களில் ஒருவராக இருப்பார்.”

[3:47] அவர், “என் இரட்சகரே, எந்த மனிதரும் என்னைத் தொடாதிருக்கும் போது எவ்வாறு நான் ஒருமகனைப் பெறுவேன்?” என்று கூறினார். அவர் கூறினார், “இவ்விதமாக கடவுள் தான் நாடுகின்றதை படைக்கின்றார். எதையேனும் நிகழ்த்த வேண்டுமாயின், அவர் அதன்பால் கூறுவதெல்லாம், ‘ஆகு’ என்பதே, உடன் அது ஆகிவிடுகின்றது.

[3:48] “அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் தோரா மற்றும் சுவிஷேசம் ஆகியவற்றையும் அவர் போதிப்பார்.”

[3:49] இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஒரு தூதராக: “நான் உங்கள் இரட்சகரிடமிருந்து ஒரு அத்தாட்சியுடன்  உங்களிடம் வந்துள்ளேன் - நான் உங்களுக்காக களி மண்ணிலிருந்து ஒரு பறவை உருவத்தை உருவாக்கி, பின்னர் நான் அதனுள் ஊதுவேன், மேலும் அது கடவுள்-ன் அனுமதி கொண்டு உயிருள்ள பறவையாக ஆகிவிடும். நான் குருடர்களின் பார்வையை மீளவைப்பேன், குஷ்டர்களை குணமாக்கு வேன், இன்னும் நான் இறந்தவர்களை கடவ

[3:50] “நான் முந்திய - வேதமான தோராவை - மெய்ப்பிக்கின்றேன். மேலும் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சில தடைகளை நான் ரத்து செய்கின்றேன். நான் உங்கள் இரட்சகரிட மிருந்து போதுமான சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். ஆகையால், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவும், மேலும் எனக்குக் கீழ்படியவும் வேண்டும்.

[3:51] “கடவுள் தான் எனது இரட்சகரும் உங்கள் இரட்சகரும் ஆவார்*, நீங்கள் அவரை மட்டுமே வழிபட வேண்டும். இதுவே சரியான பாதை.”

அடிகுறிப்பு

[3:52] அவர்களுடைய நம்பிக்கையின்மையை இயேசு உணர்ந்தபோது அவர் “ கடவுள்-ன் பாதை யில் எனக்கு ஆதரவாளர்கள் யார்? என்று கூறினார். அந்த சீடர்கள் கூறினர், “நாங்கள் கடவுள்-ன் ஆதரவாளர்கள்; நாங்கள் கடவுள் மேல் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் அடிபணிந்தவர்கள் என்று சாட்சியம் கூறுகின்றோம்.

[3:53] “எங்கள் இரட்சகரே, நீர் இறக்கி அனுப்பியதன் மேல் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” மேலும் நாங்கள் தூதரையும் பின்பற்றுகின்றோம்; சாட்சியாளர்களுடன் எங்களைக் கணக்கிடு வீராக”.

இயேசுவின் மரணம்

[3:54] அவர்கள் திட்டமிட்டனர், மேலும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் கடவுள்-ம் அவ்வாறே செய்தார், இன்னும் கடவுள் திட்டமிடுவதில் மிகச் சிறந்தவர்.

அடிகுறிப்பு

[3:55] இவ்விதமாக, கடவுள் கூறினார், “இயேசுவே, நான் என்பால் உம்மை உயர்த்தி உம்முடைய வாழ்வை முடிவிற்குக் கொண்டு வருகின்றேன், நம்ப மறுப்பவர்களிடம் இருந்து உம்மை விடுவிக்கின்றேன். உம்மைப் பின்பற்றுவோரை நம்ப மறுப்பவர்களை விட மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை நான் மேலாக்கி வைப்பேன். பின்னர் உங்கள் அனைவருடைய இறுதித்தீர்வும் என்னிடமே உள்ளது, பின்னர் உங்களுடைய தர்க்கங்கள்

அடிகுறிப்பு

[3:56] “நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை,நான் அவர்களை இவ்வுலகிலும் இன்னும் மறுவுல கிலும், வலிமிகுந்த தண்டனையில் ஆழ்த்து வேன். அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இல்லை.”

[3:57] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அவர் முழுமையாக வெகுமதியளிப்பார். கடவுள் நீதமற்றவர்களை நேசிப்பதில்லை.

[3:58] இவை, நாம் உம்மிடம் ஓதிக்காட்டும் ஞானம் நிரம்பிய ஒரு செய்தியை வழங்கும் வெளிப்பாடு களாகும்.

கணிதரீதியான உறுதிப்பாடு

[3:59] கடவுள்-ஐப் பொறுத்தமட்டில் இயேசுவின் உதாரணம், ஆதாமைப் போன்றதே ஆகும்; அவர் அவரைத் தூசியிலிருந்து படைத்து, பின் அவரிடம் “ஆகுவீராக” என்று கூறினார், உடன் அவர் ஆகிவிட்டார்.

அடிகுறிப்பு

[3:60] இது உம் இரட்சகரிடமிருந்துள்ள சத்தியமாகும், எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம்.

நம்ப மறுப்பவர்களிடம் சவால் விடுதல்

[3:61] நீர் அறிவைப் பெற்றிருக்கும் நிலையில் எவரேனும் உம்மிடம் தர்க்கித்தால், அப்பொழுது “எங்களுடைய குழந்தைகளையும், உங்களு டைய குழந்தைகளையும், எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும், எங்களையும் உங்களையும் நாம் வரவழைத்து, பின்னர் பொய்யர்களின் மீது கடவுள்-ன் சாபத்தை நாம் பிரார்த்திப்போம்” என்று கூறுவீராக.

[3:62] நிச்சயமாக, இது சத்தியத்தின் வரலாறு ஆகும். நிச்சயமாக, கடவுள்-ஐத் தவிர வேறு தெய்வம் இல்லை. நிச்சயமாக, கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[3:63] அவர்கள் திரும்பி விட்டால், அப்போது கடவுள் தீமை செய்பவர்களை நன்கறிந்திருக்கின்றார்.

எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் அழைப்பு

[3:64] “வேதத்தைப் பின்பற்றுவோரே, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே அறிவுப் பூர்வமான தொரு ஒப்பந்தத்திற்கு நாம் வருவோம். அது கடவுள் -ஐ அன்றி நாம் வழிபடமாட்டோம்; அதாவது அவருடன் வேறு எந்த இணைத்தெய்வங்களையும் நாம் ஒரு போதும் அமைத்துக் கொள்ளமாட்டோம், அன்றியும் , கடவுள்-உடன் எந்த மனிதர்களையும் இரட்சகர்களாக அமைத்துக் கொள்ள மாட்டோம்” என்று கூறுவீராக அவர்கள் திரும்பிவிட்டால், “நாங்

[3:65] வேதத்தைப் பின்பற்றுவோரே, ஆப்ரஹாமிற்குப் பின்னரேயன்றி தோராவும் சுவிசேஷமும் வெளிப்படுத்தப்படவில்லை எனும் போது, அவரைப்பற்றி நீங்கள் ஏன் தர்க்கிக்கின்றீர்கள்? நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

[3:66] உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் பற்றி நீங்கள் விவாதித்தீர்கள்; உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி நீங்கள் ஏன் விவாதிக்கின்றீர்கள்? நீங்கள் அறியமாட்டீர்கள் அதே சமயம், கடவுள் அறிகின்றார்.

[3:67] ஆப்ரஹாம் யூதராகவோ, அன்றி கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. அவர் ஒரு அடிபணிந்த ஏகத்துவவாதியாகவே இருந்தார். அவர் ஒரு போதும் இணைத்தெய்வவழிபாடு செய்பவராக இருந்ததில்லை.

[3:68] ஆப்ரஹாமிடத்தில் மிகவும் மதிப்பிற்குரிய வர்கள் அவரைப் பின்பற்றியோரும் இந்த வேதம் வழங்கப்பட்டவரும், நம்பிக்கை கொண் டோருமே ஆவர். கடவுள் தான் நம்பிக்கை யாளர்களின் இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார்.

[3:69] வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலர் உங்களை வழிகெடுக்க விரும்புகின்றனர், ஆனால், அவர்கள் உணர்ந்து கொள்ளாவண்ணம் தங்களையே வழிகெடுத்துக் கொள்கின்றனர்.

[3:70] வேதத்தைப் பின்பற்றுவோரே, (இதுதான் சத்தியம் என்பதற்கு) நீங்கள் சாட்சியளிக்கின்ற போதும் ஏன் நீங்கள் கடவுள்-ன் வெளிப்பாடு களை ஏற்க மறுக்கின்றீர்கள்.

[3:71] வேதத்தைப் பின்பற்றுவோரே, ஏன் உண்மை யை பொய்மையைக் கொண்டு குழப்பு கின்றீர்கள். மேலும், தெரிந்து கொண்டே, உண்மையை மறைக்கின்றீர்கள்?

[3:72] வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலர் கூறு கின்றனர், “நம்பிக்கையாளர்களுக்கு கொடுக் கப்பட்டதை காலையில் நம்பி மாலையில் நிராகரித்து விடுங்கள், அதனால் அவர்களும் ஒரு நாள் பழைய நிலைக்கு திரும்பிவிடக்கூடும்.

[3:73] “மேலும் உங்கள் மார்க்கத்தைப் பின்பற்று வோரைப் போலவே அன்றி நம்பிக்கை கொள்ளா தீர்கள்.” “உண்மையான வழிகாட்டுதல் கடவுள்-ன் வழி காட்டுதலே”, என்று கூறுவீராக. அதே வழிகாட்டுதலைத் தாங்களும் கொண்டிருப்பதாக அவர்கள் உரிமை கோரினாலோ, அல்லது உங்களின் இரட்சகரைக் குறித்து உங்களுடன் விவாதித்தாலோ, “அருள் அனைத்தும் கடவுள்-ன் கரத்திலேயே உள்ளன. அவர் அதனைத் தான் நாடுகின்றவருக்கு வழங்குகி

[3:74] அவர், தன் கருணையை, தான் நாடு வோருக்கென வரையறுத்துள்ளார். கடவுள் எல்லையில்லாத அருளை உடையவர். எல்லா

எல்லா மக்களிடமும் நாணயமாக இருங்கள்

[3:75] வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலரை எவ்வளவு பொருளுக்கும் நம்பலாம், மேலும் அவர்கள் அதனை உங்களிடம் திருப்பி தந்து விடுவார்கள். அவர்களில் மற்றவர்களை ஒரே ஒரு தீனாருக்குக் கூட நம்பஇயலாது; அவர்களைத் தொடர்ந்து கேட்டால் ஒழிய உங்களிடம் அவர்கள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள்.“பிறசமயத்தவர்களுடன்* கொடுக்கல், வாங்கல் செய்யும் போது நாம் நாணயமாக இருக்க தேவையில்லை” என்று அவர்கள் கூ

அடிகுறிப்பு

[3:76] உண்மையில், தங்களின் கடமைகளை நிறை வேற்றுபவர்கள், மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள், கடவுள் நன்னெறி யாளர்களை நேசிக்கின்றார்.

[3:77] கடவுள்-ன் உடன்படிக்கையை மேலும் தங்கள் கடமைகளை, ஒருமலிவான விலைக்கு வியாபாரம் செய்பவர்களை பொறுத்தவரை, மறுவுலகில் அவர்கள் எந்தப் பங்கையும் பெற மாட்டார்கள், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் கடவுள் அவர்களுடன் பேசவும் மாட்டார், அன்றி அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டார், அன்றி அவர் அவர்களைத் தூய்மையாக்கவும் மாட்டார். அவர்கள் வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ள

[3:78] வேதத்தில் இல்லாத போதும், அது வேதத்தில் உள்ளதுதான் என்று நீங்கள் எண்ணும் பொருட்டு, வேதத்தைப் போன்று தோற்ற மளிக்க தங்கள் நாவுகளைச் சுழற்றுபவர்கள் அவர்களில் உள்ளனர். மேலும் அது கடவுள்-இடமிருந்து இல்லாத போதே அது கடவுள் -இடமிருந்து உள்ளதுதான் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இவ்விதமாக அவர்கள் தெரிந்து கொண்டே, பொய்களைக் கூறி அவற்றைக் கடவுள் மேல் கற்பிக்கின்றார்கள்.

[3:79] மக்களிடம் “கடவுள்-உடன் என்னையும் வழிபடுங்கள்” என்று வேதத்தையும் அதன் தூதுத்துவத்தையும் கொண்டு கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட ஒரு மனிதர் ஒரு போதும் கூற மாட்டார். அதற்குப் பதிலாக, நீங்கள், போதனை செய்யும் வேதம் மற்றும் நீங்கள் கற்றுக் கொள்ளும் படிப்பினைகளுக்கு இணங்க, “உங்கள் இரட்சகருக்கு மட்டுமே முற்றிலுமாக உங்களை அர்ப்பணியுங்கள்” (என்றே அவர் கூறுவார்).

[3:80] அன்றி வானவர்களையும், வேதம் வழங்கப்பட்ட வர்களையும் இரட்சகர்களாக வழிபாடு செய்யும்படி உங்களிடம் அவர் கட்டளையிடமாட்டார். அடிபணிந்தவர்களாக ஆன பின்னர் நம்பமறுக் கும்படி அவர் உங்களுக்கு உபதேசிப்பாரா?

முக்கியமான முன்னறிவிப்பு நிறைவேறியது: கடவுளின் உடன் படிக்கைத் தூதர்

[3:81] கடவுள் வேதம் வழங்கப்பட்டவர்களிடம், “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுப்பேன். அதன் பின்னர் இருக்கக் கூடிய எல்லா வேதங்களையும் உறுதிப்படுத்த ஒரு தூதர் வருவார். அவரை நீங்கள் நம்ப வேண்டும், இன்னும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறியவராக ஒரு உடன் படிக்கை எடுத்தார். “இதை நீங்கள் ஒப்புக் கொள் கின்றீர்களா மேலும் இந்த உடன்படிக்கையை நிறைவேற்ற உறுதி அளிக்கின்

அடிகுறிப்பு

கடவுளின் உடன்படிக்கை தூதரை ஏற்கமறுப்பவர்கள் நம்ப மறுப்பவர்களே

[3:82] (குர்ஆனின் முன்னறிவிப்பான) இதை எவர்கள் ஏற்க மறுக்கின்றார்களோ, அவர்கள் தீயவர் களே.

[3:83] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ் வொன்றும் விரும்பியோ, விரும்பாமலோ அவருக்கு அடிபணிந்து மேலும் அவரிடமே அவை திரும்பிச் செல்ல இருக்கும்போது, கடவுள்-ன் மார்க்கம் அல்லாததையா அவர்கள் தேடுகின்றனர்?

கடவுளின் தூதர்களுக்கிடையில் பாகுபாடு காட்ட வேண்டாம்

[3:84] “நாங்கள் கடவுள் மீதும், இன்னும் எங்களுக்கு இறக்கப்பட்டதையும் இன்னும் ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப், மற்றும் குலத்தலைவர்களுக்கு இறக்கப்பட்டதையும், இன்னும் மோஸஸ், இயேசு, மற்றும் அவர்களின் இரட்சகரிடமிருந்து வந்த வேதம் வழங்கப்பட்ட வர்களுக்கு இறக்கப் பட்டதையும், நம்பிக்கை கொள்கின்றோம், நாங்கள் அவர்களில் எவர்களுக்கிடையிலும் பாகுபாடு காட்டு வதில்லை. நாங்கள் அவருக்கு

கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது ஒரே ஒரு மார்க்கம்தான்

[3:85] எவர் ஒருவர் அடிபணிதல் அல்லாததை தனது மார்க்கமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அது அவரிடமிருந்து ஏற்று கொள்ளப்படமாட்டாது, இன்னும் மறுவுலகில் அவர் நஷ்டவாளிகளுடன் இருப்பார்.

[3:86] தூதர் உண்மையாளர் தான் என்பதைப் பார்த்த பின்பும், மேலும் திடமானசான்றுகள்* அவர்களு க்கு வழங்கப்பட்ட பின்பும், நம்பிக்கை கொண்ட பின்னர் நம்பமறுத்து விட்ட மக்களுக்கு கடவுள் ஏன் வழிகாட்ட வேண்டும்? கடவுள் தீயவர்களை வழி நடத்தமாட்டார்.

அடிகுறிப்பு

[3:87] இவர்கள் கடவுள் , வானவர்கள் மற்றும் எல்லா மக்களின் தண்டித்தலுக்கும் உள்ளாகி விட்டார்கள்.

[3:88] அதிலே அவர்கள் என்றென்றும் தங்கி இருப் பார்கள்; வேதனை அவர்களுக்கு ஒரு போதும் இலேசாக்கப்படவோ, அன்றியும் அவர்களுக்கு ஒத்திப்போடப்படவோ மாட்டாது.

[3:89] இதன் பின்னர் வருந்தித்திருந்தி, மேலும் சீர்திருத்திக் கொள்பவர்கள் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

வருந்தித்திருந்துதல் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படாது

[3:90] நம்பிக்கை கொண்டபின்னர், நம்பமறுத்து அதன் பின்னர், நம்பிக்கையின்மையில் ஆழமாக மூழ்கியவர்களுக்கு அவர்களுடைய, வருந்தித்திருந்துதல் அவர்களிடமிருந்து, ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, அவர்கள்தான் மெய்யாகவே வழிதவறியவர்கள்.

[3:91] எவர்கள் நம்பமறுத்து, மேலும் நம்ப மறுத்தவர் களாகவே மரணித்து விடுகின்றார்களோ அவர் களால் ஒரு பூமியளவு தங்கத்தை ஈட்டுத் தொகையாக தர முடிந்தாலும் அவர்கள் எவரிட மிருந்தும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் வலிமிக்க தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள். அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.

[3:92] உங்களுக்கு பிரியமானவற்றிலிருந்து நீங்கள் தர்மம் வழங்காத வரை நீங்கள் நன்னெறியினை அடைய இயலாது. தர்மமாக எதை நீங்கள் வழங்கினாலும், கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

அனுமதிக்கப்பட்டவற்றை தடை செய்யாதீர்கள்

[3:93] தோரா வழங்கப்படுவதற்கு முன்பு இஸ்ரவேலர்கள் தங்கள் மீது சில குறிப்பிட்ட தடைகளைச் சுமத்திக்கொள்ளும்வரை, எல்லா உணவுகளும் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால்,தோராவைக் கொண்டு வந்து அதனை வாசியுங்கள்,” என்று கூறுவீராக.

[3:94] இதன் பிறகும் எவர்கள் பொய்யான தடைகளை கற்பனை செய்து இன்னும் அவற்றைக் கடவுள் மீது இட்டுக்கட்டுகின்றார்களோ அவர் கள் தான் உண்மையில் தீயவர்கள்.

[3:95] “கடவுள் சத்தியத்தை பிரகடனம் செய்து விட்டார்: நீங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் - ஏகத்துவம். அவர் ஒரு போதும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருந்த தில்லை” என்று கூறுவீராக.

[3:96] மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மிக முக்கிய மான புண்ணிய ஸ்தலம் ஒன்று பெக்காவில் உள்ளது; மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட ஒரு வழிகாட்டி.

அடிகுறிப்பு

[3:97] அதில் தெளிவான அடையாளங்கள் உள்ளன, அது ஆப்ரஹாமின் இடமாகும். அதில் நுழையும் எவரொருவருக்கும் பாதுகாப்பான வழி வழங்கப்பட வேண்டும். மக்கள் தங்களால் இயலும்போது இந்த புனிதமான இடத்திற்கு, ஹஜ்ஜைக் கடைபிடிப்பது கடவுள்-க்கு செய்ய வேண்டிய கடமை ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, கடவுள்-க்கு எவருடைய தேவையும் இல்லை.

[3:98] “வேதத்தைப் பின்பற்றுவோரே, நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக இருக்கும் போது, கடவுள்-ன் இந்த வெளிப் பாடுகளை ஏன் நீங்கள் ஏற்க மறுக் கின்றீர்கள்?” என்று கூறுவீராக.

[3:99] “வேதத்தைப் பின்பற்றுவோரே, நீங்கள் சாட்சிகளாக இருந்தும், நம்பிக்கை கொள்ள விரும்புகின்றவர்களை கடவுள்-ன் பாதையி லிருந்து ஏன் விரட்டுகின்றீர்கள், இன்னும் அதனை சீர்குலைக்க நாடுகின்றீர்கள்?” என்று கூறுவீராக. நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் கடவுள் ஒரு போதும் அறியாதவரில்லை.

[3:100] நம்பிக்கை கொண்டோரே, வேதத்தையுடைய மக்களில் சிலருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், அவர்கள் உங்களை நம்பிக்கை கொண்ட பிறகு நம்ப மறுப்பவர்களாக பழைய நிலைக்கு திருப்பி விடுவார்கள்.

[3:101] கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகள் உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டும், மேலும் அவருடைய தூதர் உங்களுக்கிடையில் இருந்து கொண்டும் இருக்கும் போது எவ்வாறு நீங்கள் நம்ப மறுக்க இயலும்? கடவுள் - ஐ எவர் உறுதியாகப் பற்றிக் கொள்கின்றாரோ அவர் சரியான பாதையில் வழி நடத்தப்படுவார்.

[3:102] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ஐ எவ்வாறு கவனத்தில் கொள்ள வேண்டுமோ, அவ்வாறு அவரை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அடிபணிந்தவர்களாகவே அன்றி மரணிக்காதீர்கள்.

நம்பிக்கையாளர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்

[3:103] நீங்கள் கடவுள்-ன் கயிற்றை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும், நீங்கள் அனை வருமாக, மேலும் நீங்கள் பிளவுபட்டிருக் காதீர்கள். உங்கள் மீது கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவு கூருங்கள் - நீங்கள் பகைவர்களாக இருந்தீர்கள் மேலும் அவர் உங்கள் இதயங்களை ஒன்று சேர்த்தார். அவரது அருளால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள், மேலு

[3:104] நல்லதின் பால் அழைத்து, நன்னெறியை ஆதரித்து மேலும் தீமையைத் தடுக்கும் ஒரு சமூகம் உங்களில் இருக்கட்டும். இவர்களே வெற்றியாளர்கள்.

[3:105] தங்களுக்குத் தெளிவான சான்றுகள் வழங்கப் பட்ட பின்னரும், பிளவுபட்டு மேலும் தர்க்கித் துக் கொண்டவர்கள் போன்று நீங்கள் இருக்கா தீர்கள். ஏனெனில் இவர்கள் பயங்கரமான தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.

[3:106] சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பிரகாசமாகவும், அதே சமயம் மற்ற முகங்கள் (துக்கத்தால்) இருண்டுபோயும் இருக்கும் அந்நாள் வரும். முகங்கள் இருண்டு போனவர்களைப் பொறுத்த வரை, அவர்களிடம் கேட்கப்படும் - “நம்பிக்கை கொண்ட பின்னர் நீங்கள் நம்ப மறுத்து வீட்டீர்கள் இல்லையா? ஆகையால், உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.”

[3:107] பிரகாசமான முகங்கள் உடையவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கடவுள்-ன் கருணை யில் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

[3:108] இவை கடவுள்-ன் வெளிப்பாடுகள் ஆகும்; அவற்றை உண்மையுடன் நாம் உமக்கு ஓதிக்காட்டுகின்றோம். கடவுள் மக்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் விரும்புவதில்லை.

[3:109] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் எல்லா விஷயங்களும் கடவுள்-ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மிகச் சிறந்த சமூகம்

[3:110] மக்களின் மத்தியில் தோன்றிய சமூகங்களி லேயே நீங்கள் தான் மிகச் சிறந்த சமூகம்: நீங்கள் நன்னெறியை ஆதரித்து மேலும் தீமையைத் தடுக்கின்றீர்கள், இன்னும் கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதத்தைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மேலானதாக இருக்கும். அவர்களில் சிலர் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தீயவர்கள்தான்.

[3:111] உங்களை அவமரியாதை செய்வதைத்தவிர, வேறு எந்தத்தீங்கும் அவர்களால் ஒரு போதும் உங்களுக்கு செய்து விட இயலாது. உங்களுடன் அவர்கள் சண்டையிட்டால், அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடிவிடுவார்கள். அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.

[3:112] கடவுள்-ன் உடன்படிக்கையையும், அத்துடன் உங்களுடனான சமாதான உடன்படிக்கையையும், அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிக்காதவரை, அவர்களுடன் நீங்கள் சண்டையிட நேரும் போதெல்லாம் அவர்கள் இழிவு செய்யப்படு வார்கள். அவர்கள் கடவுள்-ன் கடும் கோபத்திற்கு உள்ளாகிவிட்டார்கள், மேலும் அதன் விளைவாக, அவர்கள் தலைகுனிவிற்கு ஆளானார்கள். இதன் காரணமாவது அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து

நன்னெறியாளர்களான யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள்

[3:113] அவர்கள் அனைவரும் சமமல்ல: வேதத்தைப் பின்பற்றுவோர் மத்தியிலும்-நன்னெறியாளர்கள் இருக்கவே செய்கின்றனர். இரவு முழுவதும் அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஓதுகின்றனர். மேலும் சிரவணக்கம் செய்கின்றனர்.

[3:114] அவர்கள் கடவுள் மீதும் இன்னும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர், அவர்கள் நன்னெறியினை ஆதரித்து தீமை யைத் தடுக்கின்றனர் இன்னும் அவர்கள் நன்னெறியான காரியங்களைச் செய்ய விரைகின்றனர். இவர்களே நன்னெறி யாளர்கள்.

[3:115] அவர்கள் செய்யும் எந்த நல்லதும் வெகுமதி யளிக்கப்படாமல் போகாது. கடவுள் நன்னெறி யாளர்களை முற்றிலும் அறிந்தவர்.

[3:116] நம்பமறுத்தவர்கள் கடவுள்-க்கு எதிராக அவர்களின் செல்வத்தைக் கொண்டோ, அல்லது அவர்களின் குழந்தைகளைக் கொண் டோ உதவி செய்யப்படமாட்டார்கள். அவர்கள் நரகத்திற்கு உள்ளாகிவிட்டார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.

[3:117] இவ்வுலகில் அவர்கள் சேகரித்ததற்கு உதாரணம், தங்களின் ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்ட மக்களின் அறுவடை யினை ஒரு கொடுங்காற்று தாக்கி பின்பு அதனைத் துடைத்தெடுத்து விடுவது போன்ற தாகும். கடவுள் அவர்களுக்குத் தீங்கிழைக்க வில்லை. மாறாக அவர்கள்தான் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டனர்.

நயவஞ்சகர்களுடன் தோழமை கொள்ளாதீர்கள்

[3:118] நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்குத் தீங்கிழைக்க விரும்புவதை ஒரு போதும் நிறுத் தாத வெளியாட்களுடன் நீங்கள் தோழமை கொள்ளாதீர்கள்; இன்னும் நீங்கள் துன்பம் அடைவதைக் காணவும் அவர்கள் விரும்பு கின்றனர். வெறுப்பு அவர்களின் வாய்களில் நிரம்பி வழிகின்றது, மேலும் அவர்களின் நெஞ்சங்களில் அவர்கள் மறைத்து வைத் திருப்பதோ அதைவிட கொடியதாகும். நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், இவ்விதமாக ந

[3:119] அவர்கள் உங்களை நேசிக்காத அதே சமயம் இங்கு நீங்கள் அவர்களை நேசிக்கின்றீர்கள், இன்னும் நீங்கள் வேதத்தில் அனைத்தையும் நம்புகின்றீர்கள் அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது “நாங்கள் நம்பிக்கை கொள் கின்றோம்” என்று கூறுகின்றனர், ஆனால் அவர்கள் விலகிச் சென்றவுடன் உங்கள் மேல் உள்ள கோபத்தால் தங்களுடைய விரல்களைக் கடித்துக் கொள்கின்றனர். “உங்கள் கோபத்திலேயே இறந்துவிடுங்கள்” என்று

[3:120] நல்லது எதுவும் உங்கள் வழியில் வரும் போது அவர்கள் வருந்துகின்றனர், மேலும் உங்களு க்கு ஏதேனும் தீங்கு நேரும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உறுதியாய், விடாமுயற்சியுடன் நன்னெறியினைப் பேணி வந்தால், அவர்களின் சூழ்ச்சிகள் உங்களை ஒரு போதும் காயப்படுத்தாது. கடவுள் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் முற்றிலும் அறிந்தவர்.

பத்ர் யுத்தம்

[3:121] (முஹம்மதே) யுத்தத்தில் நம்பிக்கையாளர் களுக்கு அவர்களின் நிலைகளை நீர் நிர்ணயம் செய்வதற்காக உம் சமூகத்தார் மத்தியில் நீர் இருந்ததை நினைவு கூர்வீராக. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[3:122] உங்கள் மத்தியில் இருபிரிவினர் கிட்டத்தட்ட தவறிவிட்டனர், ஆனால் கடவுள் அவர்களின் இரட்சகராக இருந்தார். கடவுள் மீதே நம்பிக்கையாளர்கள் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.

[3:123] பத்ரில், நீங்கள் பலஹீனமாக இருந்தபோதும், கடவுள் உங்களுக்கு வெற்றியை வழங்கினார். ஆகையால், உங்கள் நன்றியைத் தெரிவிப் பதற்காக நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவேண்டும்.

கடவுளின் வானவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு உதவுகின்றனர்

[3:124] நீர் நம்பிக்கையாளர்களிடம், “மூவாயிரம் வானவர்களைக் கீழே அனுப்பியது கொண்டு உங்கள் இரட்சகர் உங்களுக்கு உதவி புரிவது போதாதா?” என்று கூறினீர்.

அடிகுறிப்பு

[3:125] உண்மையில், நீங்கள் உறுதியாய், விடா முயற்சியுடன் நன்னெறியைப் பேணி வந்தால், அப்பொழுது அவர்கள் உங்களைத் திடீரெனத் தாக்கினாலும், உங்கள் இரட்சகர் நன்கு பயிற்சி பெற்ற ஐந்தாயிரம்* வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி புரிவார்.

அடிகுறிப்பு

[3:126] உங்களுக்கு நற்செய்தி தந்து, மேலும் உங்கள் இதயங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு, கடவுள் இவ்வாறு உங்களுக்கு அறிவிக் கின்றார். சர்வ வல்லமையுடையவரும், ஞானம் நிரம்பியவருமான கடவுள்-இடமிருந்தே வெற்றி வருகின்றது.

[3:127] இவ்விதமாக அவர் சில நம்பமறுப்பவர்களை அழிக்கின்றார், அல்லது அவர்களை முடக்கி விடுகின்றார்; அவர்கள் எப்பொழுதும் தோல்வி யுற்றவர்களாகத்தான் முடிவடைவார்கள்.

[3:128] இது உம்மைப் பொறுத்தது அல்ல; அவர் அவர் களை மீட்டுக் கொள்ளவும் செய்யலாம் அல்லது அவர் அவர்களை அவர்களின் வரம்பு மீறல் களுக்காக தண்டிக்கவும் செய்யலாம்.

[3:129] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது அவர் தான் நாடுகின்றவர்களை மன்னிக்கின்றார், மேலும் தான் நாடுகின்றவர்களைத் தண்டிக் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

கடும் வட்டி தடை செய்யப்படுகின்றது

[3:130] நம்பிக்கை கொண்டோரே, பல்கிப் பெருகும் கடும் வட்டியினை நீங்கள் வாங்காதீர்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள்.

அடிகுறிப்பு

[3:131] நம்ப மறுப்பவர்களுக்காகக் காத்துக் கொண் டிருக்கும் நரக நெருப்பிற்கு நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.

[3:132] நீங்கள் கருணையை அடையும் பொருட்டு கடவுள்-க்கும் மற்றும் தூதருக்கும் கீழ்படிய வேண்டும்.

நன்னெறியாளர்களின் பண்புகள்

[3:133] உங்கள் இரட்சகரிடமிருந்து மன்னிப்பையும் மேலும் வானங்கள் மற்றும் பூமியை உள்ளடக்கும் அகலத்தை உடையதொரு சுவனத்தையும் நோக்கி நீங்கள் ஆர்வத்துடன் விரைய வேண்டும். அது நன்னெறியாளர் களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது,

[3:134] அவர்கள் நல்ல காலங்களிலும், அத்துடன் கெட்ட காலங்களிலும் தானம் வழங்குவார்கள், அவர்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள், மேலும் மக்கள் பிழைகளைப் பொறுத்துக் கொள்வார்கள். தர்மவான்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

[3:135] அவர்கள் பாவத்தில் விழுந்து விட்டாலோ, அல்லது தங்கள் ஆன்மாக்களுக்குத் தீங்கிழை த்துக் கொண்டாலோ, அவர்கள் கடவுள்-ஐ நினைவு கூர்ந்து தங்களுடைய பாவங்களுக் காகப் பாவ மன்னிப்புக் கேட்பார்கள் - மேலும் கடவுள்-ஐ அன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்?-இன்னும் அவர்கள் தெரிந்து கொண்டே பாவங்களில் தொடர்ந்து இருக்கமாட்டார்கள்.

[3:136] அவர்களின் வெகுமதி அவர்கள் இரட்சகரிட மிருந்துள்ள மன்னிப்பும், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களும் ஆகும்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள். பணி செய்பவர்களுக்கு எத்தகைய ஒரு அருள் பாலிக்கப்பட்ட வெகுமதி!

நன்னெறியாளர்களுக்கு வெற்றி

[3:137] கடந்தகாலங்களில் உங்களுக்கு முன்னு தாரணங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது; பூமியைச் சுற்றிப் பார்த்து நம்பிக்கையற்ற வர்களுக்கு நேர்ந்த விளைவுகளைக் கவனியுங்கள்.

[3:138] இது மக்களுக்கான ஒரு பிரகடனம் ஆகும், மேலும் நன்னெறியாளர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஞான உபதேசமும் ஆகும்.

[3:139] நீங்கள் தடுமாறவோ, அன்றி கவலை கொள்ளவோ வேண்டாம், ஏனெனில் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே இறுதி வெற்றியாளர்கள்.

[3:140] நீங்கள் கஷ்டத்தை அனுபவித்தால், பகைவரும் அதே போன்ற கஷ்டத்தை அனுபவிக்கவே செய்கின்றார்கள். வெற்றி மற்றும் தோல்வியின் நாட்களை நாம் தான் மக்கள் மத்தியில் மாறி மாறி வரச் செய்கின்றோம். கடவுள் இவ்விதமாக உண்மையான நம்பிக்கையாளர் களைச் சிறப்பித்து அடையாளங்காட்டுகின்றார், மேலும் உங்களில் சிலருக்கு வீரமரணம் கொண்டு அருள்பாலிக்கின்றார். அநீதமா னோரைக் கடவுள் வெறுக்கின்றார்.

[3:141] கடவுள் இவ்விதமாக நம்பிக்கையாளர்களை வலுப்படுத்தி, மேலும் நம்ப மறுப்பவர்களை இழிவிற்குள்ளாக்குகின்றார்.

நம் உரிமைக் கோரல்கள் பரிசீலிக்கப்பட்டாக வேண்டும்

[3:142] உங்களில் பாடுபடுபவர்கள் யார் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டாமலும் மேலும் உறுதியாய் இருப்பவர்கள் யார் என்பதை அடையாளங்காட்டாமலும் நீங்கள் சுவனத்தில் நுழைவதை எதிர்பார்க்கின்றீர்களா?

[3:143] அதனைச் சந்திப்பதற்கு முன்னர் நீங்கள் மரணத்தை மிகவும் விரும்பிக் கொண்டிருந் தீர்கள். இப்போது உங்கள் கண்களுக்கு நேரெதிரே, அதை நீங்கள் சந்திக்கின்றீர்கள்.

[3:144] முஹம்மது, அவருக்கு முன்பிருந்த தூதர் களைப் போன்ற ஒரு தூதராக இருந்தவரே அன்றி வேறில்லை. அவர் மரணித்து விட்டால், அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் உங்களின் குதிகால்களால் திரும்பிவிடு வீர்களா? எவர் ஒருவர் தனது குதிகால்களால் திரும்பி விடுகின்றாரோ, அவர் சிறிதளவும் கடவுள்-க்குத் தீங்கிழைத்து விடவில்லை. நன்றியுடையவர்களாக இருப்போருக்குக் கடவுள் வெகுமதி அளிக்கின்றார

மரண நேரம் முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது

[3:145] முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில், கடவுள்-ன் அனுமதியுடனே அன்றி எவர் ஒருவரும் மரணமடைவதில்லை. எவர் இவ்வுல கின் வீண் பெருமைகளைத் தேடுகின்றாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து வழங்குகின்றோம், மேலும் எவர் மறுவுலகின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து அருள்புரிகின்றோம். நன்றியுடையவர்களாக இருப்போருக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.

[3:146] வேதம் வழங்கப்பட்டவர் பலருக்கு,கடவுள்-ன் பாதையில் அவருடன் சேர்ந்து சண்டையிட, நெருக்கடியான தருணங்களிலும் கூட சற்றும் தடுமாறாத, பக்தி மிக்க மக்கள் இருந்தார்கள். அன்றியும் அவர்கள் தயக்கம் கொள்ளவோ அல்லது ஊக்கம் குறைந்து விடவோ இல்லை. கடவுள் உறுதியாய் இருப்பவர்களை நேசிக்கின்றார்.

[3:147] அவர்களின் கூற்றெல்லாம், “எங்கள் இரட்சகரே, எங்கள் பாவங்களையும் எங்கள் வரம்பு மீறல்களையும் எங்களுக்கு மன்னிப் பீராக, எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து வீராக, மேலும் நம்ப மறுப்பவர்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை வழங்குவீராக” என்பதாக மட்டுமே இருந்தது.

[3:148] அதன் விளைவாக, கடவுள் அவர்களுக்கு இவ்வுலகின் வெகுமதிகளையும், மேலும் மறுவுலகின் மேலான வெகுமதிகளையும் வழங்கினார். கடவுள் நன்மை செய்வோரை நேசிக்கின்றார்.

[3:149] நம்பிக்கை கொண்டோரே, நம்ப மறுப்பவர் களுக்கு நீங்கள் கீழ்படிவீர்களானால், அவர்கள் உங்களை உங்கள் குதிகால்களில் திருப்பி விடுவார்கள், பின்னர் நீங்கள் நஷ்டவாளி களாக ஆகி விடுவீர்கள்.

[3:150] கடவுள் மட்டுமே உங்கள் இரட்சகரும், எஜமான ரும் ஆவார், மேலும் அவரே மிகச் சிறந்த உதவியாளர் ஆவார்.

கடவுள் உங்களுடைய எதிரிகளைக் கட்டுப்படுத்துகின்றார்

[3:151] அவர்கள் கடவுள்-உடன் சக்தியற்ற இணைத் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டதிலிருந்து, நம்ப மறுப்பவர்களின் இதயங்களில் நாம் திகிலை எறிவோம். அவர்களுடைய விதி நரகம்தான்; வரம்பு மீறியவர்களுக்கான தங்குமிடம் எவ்வளவு துக்ககரமானது!

உஹத் யுத்தம்

[3:152] கடவுள் உங்களுக்களித்த அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார், மேலும் அவருடைய அனுமதியுடன் நீங்கள் அவர்களை தோல்வியுறச் செய்தீர்கள். ஆனால் பின்னர் நீங்கள் தடுமாறினீர்கள், உங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டீர்கள், மேலும் நீங்கள் மிகவும் விரும்பியதை (வெற்றியை) அவர் உங்களுக்கு காட்டியதன் பின்னரும் கீழ்ப்படிய மறுத்தீர்கள். ஆனால் பின்னர், உங்களில் சிலர் இந்த உலக இலா

[3:153] உங்களின் பின்னால் இருந்து தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருந்தபோதும், எவர் ஒருவரையும் கவனிக்காமல் நீங்கள் (போர்ப் பொருட்களின் பால்) விரைந்தோடியதை நினைவு கூருங்கள். அதன் விளைவாக, நீங்கள் இழந்து விட்ட எந்த ஒன்றிற்காகவும் வருந்தக்கூடாது என்பதற்காகவும், அல்லது நீங்கள் அனுபவித்த கஷ்டங்களினால் மிகுந்த வேதனை அடையக் கூடாது என்பதற்காகவும் ஒரு துன்பத்திற்கு மாற்றாக மற்றொன்றை

மரணத் தருணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது

[3:154] அந்தப்பின்னடைவிற்குப்பிறகு, அமைதியான நித்திரையை உங்கள் மீது அவர் அனுப்பினார். அது உங்களில் சிலரை சாந்தப்படுத்தியது. உங்களில் மற்றவர்கள் சுய நலத்தோடு தங்களை பற்றியே அக்கறை கொண்டார்கள். அவர்கள் கடவுள்-ஐ குறித்து சரியில்லாத அபிப்ராயங்களை, அவர்கள் அறியாமை நாட்களின் போது கொண்டிருந்த அதே அபிப்ராயங்களை கொண்டிருந்தனர். இவ் விதமாக அவர்கள் “எங்கள் பங்கு ஏதேனும் உள்ளதா?” என

[3:155] நிச்சயமாக, இரண்டு படைகள் மோதிக் கொண்ட அந்நாளில் உங்களில் புறங்காட்டிச் சென்றவர்கள் சாத்தானால் ஏமாற்றப்பட்டனர். இது அவர்கள் செய்துவிட்ட (தீய) செயல்கள் சிலவற்றை பிரதிபலிக்கின்றது. கடவுள் அவர்களை மன்னித்து விட்டார். கடவுள் மன்னிப்பவர், கருணையாளர்.

[3:156] நம்பிக்கை கொண்டோரே, நம்ப மறுத்து மேலும் தங்களுடைய உறவினர்களில் போருக்காக பயணித்தவர்கள் அல்லது தயாரானவர்கள் குறித்து “ அவர்கள் எங்களுடன் தங்கியிருந்தால் அவர்கள் மரணித்திருக்கவோ அல்லது கொல்லப் பட்டிருக்கவோ மாட்டார்கள்” என்று கூறியவர் களைப் போல் இருக்காதீர்கள். கடவுள் இதனை அவர்களுடைய இதயங்களில் துக்கத்தின் ஒரு ஆதாரமாக ஆக்கினார். கடவுள் வாழ்வையும் மரணத்தையும் கட்டு

[3:157] நீங்கள் கடவுள் பாதையில் கொல்லப் பட்டாலும் அல்லது மரணித்தாலும் கடவுள்-இடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், கருணையும் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் எதனையும் விட மிகச் சிறந்ததாகும்.

[3:158] நீங்கள் மரணித்தாலும் அல்லது கொல்லப் பட்டாலும், கடவுள்-ன் முன்பு நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.

தூதரின் கனிவு

[3:159] அவர்கள் பால் நீர் இரக்கமுள்ளவராக ஆனது கடவுள்-இடமிருந்துள்ள கருணையினாலேயே ஆகும். நீர் கடினமானவராகவும் மேலும் குறுகிய மனப்பான்மை உடையவராகவும் இருந்திருந்தால், அவர்கள் உம்மை கைவிட்டிருப்பார்கள். ஆகையால், நீர் அவர்களது பிழைகளைப் பொறுத்திடுவீராக மேலும் அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்பீராக, மேலும் அவர்களை கலந்து ஆலோசிப்பீராக. நீர் ஒரு முடிவெடுத்துவிட்டால், உமது திட்டத்தை

அடிகுறிப்பு

[3:160] கடவுள் உங்களுக்கு ஆதரவளித்தால், எவராலும் உங்களை தோற்கடிக்க இயலாது. ஆனால் அவர் உங்களை கைவிட்டு விட்டால், எவரால் உங்களுக்கு ஆதரவு அளிக்க இயலும்? நம்பிக்கை யாளர்கள் கடவுள்-ன் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் ஒருவருமில்லை

[3:161] வேதம் வழங்கப்பட்டவராக இருந்த போதிலும் போரில் கைப்பற்றியப் பொருட்களில் அவருக்குரிய பங்கைத் தவிர அதிகமாக எடுக்க இயலாது. தனக்கு உரிமையுள்ள பங்கை விட அதிகமாக எடுக்கும் எவர் ஒருவரும் அதற்கான பதிலை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் கூற வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்ததற்கேற்ப, சிறிதளவும் அநீதமின்றிக் கொடுக்கப்படும்.

[3:162] கடவுள்-ன் திருப்தியைத் தேடும் ஒருவரும், கடவுள்-ன் கோபத்திற்குள்ளாகி மிகத் துன்பகரமான தங்குமிடமான நரகத்தை தன் விதியாக்கிக் கொள்ளும் ஒருவனும் சமமா வார்களா?

[3:163] அவர்கள் நிச்சயமாக கடவுள்-இடத்தில் வெவ்வேறு அந்தஸ்துகளை அனுபவிப்பார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக உள்ளார்.

[3:164] அவருடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்கும், மேலும் அவர்களை பரிசுத்தப்படுத்துவதற்கும், மேலும் வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்பிப்பதற்கும் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் எழச்செய்ததன் மூலம் நம்பிக்கை யாளர்களுக்கு கடவுள் அருள் புரிந்திருக் கின்றார்! இதற்கு முன்பு அவர்கள் முழுவதுமாக தவறான வழியில் சென்று விட்டனர்.

[3:165] நீங்கள் இருமடங்கு பாதிப்பை (உங்களின் எதிரிமீது) ஏற்படுத்திய போதும் கூட இப்பொழுது நீங்கள் ஒரு பின்னடைவால் பாதிக்கப்பட்டிருப் பதால் நீங்கள் “ எங்களுக்கு ஏன் இது நிகழ்ந்தது?” என்று கூறினீர்கள். “ இது உங்கள் சொந்த செயல்களின் விளைவு ஆகும்,” என்று கூறுவீராக. கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[3:166] இரண்டு படைகள் மோதிக்கொண்ட அந்த நாளில் உங்களை எது துன்புறுத்தியதோ, அது கடவுள்-ன் நாட்டத்திற்க்கு ஏற்பவும் மேலும் நம்பிக்கையாளர்களை மேன்மைபடுத்துவதற்காகவுமே ஆகும்.

[3:167] மேலும் “கடவுள்-ன் பாதையில் சண்டையிட வாருங்கள் அல்லது பங்களிப்பு தாருங்கள்” என்று கூறப்பட்டு, அவர்கள், “சண்டையிடுவது எப்படி என நாங்கள் அறிந்திருந்தால் நாங்களும் உங்களுடன் சேர்ந்திடுவோம்” என கூறிய நயவஞ்சகர்களை வெளிப்படுத்துவதற்காகவும். அவர்கள் நம்பிக்கையைக் காட்டிலும் பின்னர் நம்பிக்கை யின்மைக்கே நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களுடைய இதயங்களில் இல்லாததை அவர்களுடைய

[3:168] அவர்கள் பின் தங்கி இருந்தவர்களாக, தங்களு டைய உறவினர்களைப் பற்றி அவர்கள், “எங்களுக்கு அவர்கள் கீழ்படிந்திருந்தால் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். “நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், பின்னர் உங்களுடைய மரணத்தை நீங்கள் தடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக.

நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை

[3:169] கடவுள்-ன் பாதையில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் அவருடைய வாழ்வாதாரங்களை அனுபவித் தவர்களாக, தங்களுடைய இரட்சகரிடத்தில் உயிரோடிருக்கின்றார்கள்.

அடிகுறிப்பு

[3:170] அவர்கள் கடவுள்-ன் அருளில் மகிழ்ச்சியோடிருக் கின்றார்கள், மேலும் அவர்களுடன் மரணிக்காத தங்களுடைய தோழர்களுக்கு, அவர்கள் பயப்படுவதற்கு எதுவுமில்லை அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்ற நற்செய்தியை வைத்திருக்கின்றார்கள்.

[3:171] அவர்கள் கடவுள்-உடைய அருட்கொடைகளையும், மற்றும் அருளையும் மேலும் கடவுள் நம்பிக்கை யாளர்களுக்கு வெகுமதியளிக்க ஒருபோதும் தவறுவதில்லை என்ற நற்செய்தியையும் வைத்திருக்கின்றார்கள்.

[3:172] அடிக்கடி துன்புறுத்தலுக்குள்ளாகி கஷ்டப்பட்ட போதும், கடவுள்-க்கும், தூதருக்கும் பதிலளித்து, தங்களுடைய நற்செயல்களைத் தொடர்ந்து செய்து, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, ஒரு மகத்தான வெகுமதி உள்ளது.

[3:173] “உங்களுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு விட்டனர், நீங்கள் அவர்களுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்”, என மக்கள் அவர்களிடத்தில் கூறும்போது, இது அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவே செய்கின்றது, மேலும் அவர்கள் , “கடவுள் எங்களுக்கு போதுமானவர், அவரே மிகச் சிறந்த பாதுகாவலர்” என்று கூறுகின்றார்கள்.

பயம்: சாத்தானின் கருவி

[3:174] கடவுள்-ன் அருட்கொடைகளுக்கும் மற்றும் அருளுக்கும் அவர்கள் தகுதியடைந்து விட்டார்கள். கடவுள்-ன் அங்கீகாரத்தை அவர்கள் அடைந்து விட்ட படியால், அவர்களை எந்தத் தீங்கும் எப்பொழுதும் தீண்டாது. கடவுள் அளவில்லாத அருளை உடையவர்.

[3:175] அவனுக்கு கீழ்ப்படிந்தவர்களிடத்தில் பயத்தை ஏற்படுத்துவது சாத்தானின் வழிமுறை ஆகும். அவர்களுக்கு அஞ்சாதீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் எனக்கே அஞ்சுங்கள்.

[3:176] நம்ப மறுப்பதின் பால் விரைந்து செல்பவர்களால் துக்கமடைந்துவிடாதீர். அவர்கள் ஒரு போதும் சிறிதளவும் கடவுள்-க்கு தீங்கிழைக்க இயலாது. அதற்கு பதிலாக, அவர்களுக்கு மறுவுலகில் எந்தப்பங்கும் இருக்கக்கூடாது என கடவுள் நாடிவிட்டார். அவர்கள் ஒரு கடுமையான தண்டனைக்குள்ளாகி விட்டனர்.

[3:177] நம்பிக்கைக்கு பதிலாக நம்பிக்கையின்மையை தேர்ந்தெடுப்பவர்கள், சிறிதளவும் கடவுள்-க்கு தீங்கிழைப்பதில்லை. அவர்கள் வேதனை மிக்கதொரு தண்டனைக்குள்ளாகி விட்டனர்.

[3:178]  நம்ப மறுப்பவர்கள், நாம் அவர்களை, அவர் களுடைய சொந்த நன்மைக்காக வழி நடத்து கின்றோம் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். அவர்களுடைய பாவத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே நாம் அவர்களை வழி நடத்துகின்றோம். அவர்கள் இழிவானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[3:179]  நல்லதில் இருந்து கெட்டதைப் பிரித்து அடையாளங்காட்டாமல் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இருக்கும்படி நம்பிக்கையாளர் களை கடவுள் விட்டுவிடுவதில்லை. அன்றி உங்களுக்கு எதிர்காலத்தை பற்றியும் கடவுள் அறிவிப்பதில்லை, ஆனால் அவருடைய தூதர்களிலிருந்து* அவர் தேர்ந்தெடுப்பவர் களின் மீது அத்தகைய அறிவை கடவுள் வழங்கு கின்றார். ஆகையால், நீங்கள் கடவுள்-ன் மீதும் அவருடைய தூதரின் மீதும

அடிகுறிப்பு

[3:180] கடவுள் - ன் வாழ்வாதாரங்களை கொடுக்க மறுத்தும் மேலும் சேமித்தும் வைத்திருக்கக் கூடியவர்கள், அது அவர்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம்; அது அவர்களுக்கு கெட்டதாகும். ஏனெனில் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவர்கள் தாங்கள் சேமித்ததைத் தங்களுடைய கழுத்துக்களைச் சுற்றி சுமந்தவர்களாக இருப்பார்கள். வானங்கள் மற்றும் பூமியின் இறுதியான வாரிசு தாரராகக் கடவு

மனிதர்கள் தொடர்ந்து கடவுள் இடத்தில் சவால் விடுகின்றனர்

[3:181] “கடவுள் ஏழையாக இருக்கின்றார், அதே சமயம் நாங்களோ பணக்காரர்கள்” என்று கூறியவர்களுடைய கூற்றுக்களைக் கடவுள் கேட்டுக் கொண்டார். வேதம் வழங்கப்பட்டவர்களை அநியாயமாக அவர்கள் கொலை செய்ததை நாம் பதிவு செய்தது போலவே, அவர்கள் கூறிய அனைத்தையும் பதிவு செய்வோம், மேலும் நாம் கூறுவோம், “நரகத்தின் தண்டனையை அனுபவியுங்கள்.

[3:182] “இது உங்களுடைய சொந்த செயல்களின் விளைவேயாகும்”. கடவுள் ஒருபோதும் மக்களுக்கு அநீதி இழைப்பதில்லை.

[3:183] “நெருப்பால் உண்ணப்படக்கூடிய ஒரு பலியை அவர்காட்டும்வரை நாங்கள் எந்த ஒரு தூதரையும் நம்பக்கூடாது என எங்களுடன் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்”, என்று கூறியவர்கள் அவர்கள்தான்.“எனக்கு முன்னர் வந்த தூதர்கள் நீங்கள் கோரியவை உள்பட தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்திருந்தனர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், பின்னர் ஏன் அவர்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?”என்று க

[3:184] அவர்கள் உம்மை ஏற்க மறுத்தால், உமக்கு முன் பிருந்த தூதர்கள், சான்றுகள், சங்கீதம், மேலும் ஞானம் உபதேசிக்கும் வேதம் ஆகியவற்றைக் கொண்டு வந்த போதிலும் கூட அவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள்.

ஒரு மகத்தான வெற்றி

[3:185] ஒவ்வொரு நபரும் மரணத்தைச் சுவைப்பார், பின்னர் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் உங்கள் வெகுமதியை நீங்கள் பெறுவீர்கள். எவரொருவர் வெளிப்படையாக நரகத்தினின்றும் தப்பித்து மேலும் சுவனத்தை அடைகின்றாரோ அவர் ஒரு மகத்தான வெற்றியை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்வு ஒரு மாயையே அன்றி அதிகமாக எதுவுமில்லை.

தவிர்க்க இயலாத சோதனை

[3:186] உங்களுடைய செல்வம் மற்றும் வாழ்வுகளின் மூலம் நீங்கள் நிச்சயமாகச் சோதிக்கப்படு வீர்கள், மேலும் வேதத்தை பெற்றவர்களிட மிருந்தும், இன்னும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களிடமிருந்தும் ஏராளமான நிந்தனையை நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தினால், இது உங்களது விசுவாசத்தின் பலத்தை நிரூபிக்கும்.

அடிகுறிப்பு

[3:187] வேதத்தை பெற்றவர்களிடம் கடவுள்: “ நீங்கள் இதனை மக்களுக்கு பிரகடனம் செய்ய வேண்டும், மேலும் ஒருபோதும் இதனை மறைக்கக் கூடாது,” என்று ஓர் உடன்படிக்கை எடுத்துக் கொண்டார். ஆனால் அவர்கள் இதனை தங்கள் முதுகுகளுக்கு பின்னால் எறிந்து அலட்சியம் செய்தனர், மேலும் மலிவானதொரு விலைக்காக அதனை வியாபாரம் செய்தனர். எப்படிப்பட்டதொரு துக்ககரமான வியாபாரம்.

[3:188] எவர்கள் தங்களுடைய செயல்கள் பற்றி பெருமை பேசிக் கொள்கின்றார்களோ, மேலும் உண்மையிலேயே அவர்கள் செய்திடாத சிலவற்றிற்காக புகழப்பட வேண்டும் என விரும்புகின்றார்களோ, அவர்கள் தண்டனையி லிருந்து தப்பிவிட இயலும் என்று எண்ணிவிட வேண்டாம். அவர்கள் வேதனை மிக்கதொரு தண்டனைக்குள்ளாகிவிட்டனர்.

[3:189] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்கே உரியது. கடவுள் சர்வ சக்தியுடையவர்.

அறிவுத்திறன் உடையவர்கள்

[3:190] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுத்திறன் உடையவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன.

[3:191] அவர்கள் கடவுள்-ஐ* நின்ற நிலையிலும், உட் கார்ந்த நிலையிலும் மேலும் அவர்களின் சாய்ந்த நிலையிலும் நினைவில் கொள்கின்றனர். மேலும் அவர்கள் வானங்கள் மற்றும் பூமி ஆகிய வற்றின் படைப்பைக் குறித்து சிந்தனை செய்கின்றனர். “எங்கள் இரட்சகரே இவையனைத்தையும் வீணிற்காக நீர் படைக்கவில்லை. நீர் துதிப்பிற்குரியவர், நரகத்தின் தண்டனையிலிருந்து எங்களை காப்பாற்றுவீராக.

அடிகுறிப்பு

[3:192] “எங்கள் இரட்சகரே, நீர் எவரையெல்லாம் நரகத்தில் புகுத்துகின்றீரோ அவர்கள் உம்மால் கைவிடப்பட்டவர்கள். இத்தகைய வரம்பு மீறியவர்களுக்கு உதவியாளர்கள் கிடையாது.

[3:193] “எங்கள் இரட்சகரே, அழைப்பாளர் ஒருவர் விசுவாசத்தின் பால் அழைத்து: ‘நீங்கள் உங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்’ எனப் பிரகடனம் செய்ததை நாங்கள் செவியேற்றோம், மேலும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்கள் இரட்சகரே, எங்களை எங்கள் வரம்பு மீறல்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வீராக, மேலும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக.

[3:194] “எங்கள் இரட்சகரே, உம்முடைய தூதர்கள் மூலம் எங்களுக்கு நீர் வாக்களித்த அருட்கொடைகளை எங்கள் மீது பொழிவீராக, மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் எங்களைக் கைவிட்டு விடாதீர், நீர் ஒருபோதும் வாக்குறுதியை முறிப்பவர் அல்ல.”

கடவுள் பதிலளிக்கின்றார்

[3:195] அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு: “உங்களுக்கிடையில் உழைப்பவர் எவருக்கும், நீங்கள் செய்யும் எந்த உழைப்பிற்கும் வெகுமதி வழங்க நான் ஒரு போதும் தவறுவதில்லை, நீங்கள் ஆண் அல்லது பெண் எவராக இருந்தாலும் - நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் சமமே; இவ்விதமாக, எவர்கள் ஊரை விட்டு வெளியேறி, மேலும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, மேலும் என் பொருட்டு துன்புறுத்துதலுக்கு உள்ளாகி,

[3:196] நம்ப மறுப்பவர்களின் வெளிப்படையான வெற்றிகளால் நீங்கள் கவரப்படாதீர்கள்.

[3:197] அவர்கள் தற்காலிகமாக மட்டுமே சுகம் அனுபவிக்கின்றார்கள், பின்னர் நரகில் சென்று முடிவார்கள்; என்ன ஒரு துன்பகரமான விதி!

[3:198] தங்கள் இரட்சகரை கவனத்தில் கொள் வோரைப் பொறுத்தவரை, அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குத் தகுதியடைந்து விட்டார்கள். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். கடவுள்-ஆல் அவர்களு க்குக் கொடுக்கப்பட்ட தங்குமிடம் இத்தகைய தேயாகும். நன்னெறியாளர்களுக்காக கடவுள் -இடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்.

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்

[3:199] நிச்சயமாக, முந்திய வேதங்களைப் பின்பற்று வோரில் சிலர் கடவுள்-ன் மீதும், உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும் மேலும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர். அவர்கள் கடவுள்-இடம் பயபக்தியோடு இருப்பார்கள், மேலும் அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஒரு போதும் மலிவு விலைக்கு வியாபாரம் செய்துவிட மாட்டார்கள். இவர்கள் தங்கள் வெகுமதிய

[3:200] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் வெற்றிய டையும் பொருட்டு நீங்கள் உறுதியாய் இருக்க வேண்டும், நீங்கள் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும், நீங்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும்.