சூரா 31: லுக்மான் (லுக்மான்)
[31:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[31:1] அ.ல.ம.*
அடிகுறிப்பு

[31:2] (எழுத்துக்களாகிய) இவை ஞானம் நிறைந்த இப்புத்தகத்தின் சான்றுகளாக அமைகின்றன.
[31:3] நன்னெறியாளர்களுக்கு ஒரு வழிகாட்டியும் மேலும் ஒரு கருணையுமாகும்.
[31:4] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.
[31:5] அவர்கள் தங்கள் இரட்சகரிடமிருந்து வந்த வழிகாட்டலைப் பின்பற்றுகின்றனர், மேலும் அவர்களே வெற்றியாளர்கள்.
[31:6] மனிதர்கள் மத்தியில், அடிப்படையற்ற ஹதீஸ்களை, விடாப்பிடியாகப் பின்பற்றுபவர்கள் இருக்கின்றனர், மேலும் இவ்விதமாக அறிவின்றி மற்றவர்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திருப்புகின்றனர், மேலும் அதனை வீணாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு இவர்கள் உள்ளாகி விட்டனர்.
[31:7] மேலும் அவர்களில் ஒருவனுக்கு நமது வெளிப் பாடுகள் ஓதிக்காட்டப்படும் போது, அவற்றை அவன் ஒருபோதும் கேளாததைப் போலவும் அவனது காதுகள் செவிடானதைப் போலவும், ஆணவத்துடன் அவன் திரும்பிச் சென்று விடுகின்றான். வலிநிறைந்ததொரு தண்டனை யை அவனுக்கு வாக்களிப்பீராக.
[31:8] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர் பேரானந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதி பெற்று விட்டனர்.
[31:9] நிரந்தரமாக அங்கு அவர்கள் தங்கியிருப்பார்கள். இது கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதியாகும். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[31:10] நீங்கள் காணக்கூடிய வானங்களை அவர் தூண்கள் இன்றி படைத்தார். உங்களோடு சேர்ந்து பூமி உருண்டு விடாதிருக்கும் பொருட்டு அதன் மீது நிலைப்படுத்துபவைகளை (மலைகள்) அவர் நிர்மாணித்தார், மேலும் அனைத்து வகை உயிரினங்களையும் அதன் மீது அவர் பரப்பினார். அனைத்து வகையான அழகிய தாவரங்களையும் வளர்ப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.
[31:11] கடவுள்-ன் படைப்புகள் இத்தகையதே; அவருடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்கள் எதனைப் படைத்திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டுங்கள். உண்மையில், வரம்பு மீறுபவர்கள் வழிகேட்டில் வெகு தூரத்தில் இருக்கின்றனர்.

லுக்மானின் ஞானம்

[31:12] லுக்மானிற்கு நாம் ஞானத்தைக் கொடையளித் தோம்: “நீர் கடவுள்-க்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும்”. எவரொருவர் நன்றியுடைய வராக இருக்கின்றாரோ, அவர் தன் சொந்த நலனிற்காகவே நன்றியுடையவராக இருக் கின்றார். நன்றிகெட்டவர்களாக மாறிவிட்டவர் களைப் பொறுத்த வரை, கடவுள் எந்தத் தேவையு மற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.
[31:13] லுக்மான் தன்னுடைய மகனிடம், அவருக்கு உபதேசம் செய்தவராக, “என் மகனே, கடவுள்-உடன் இணைத்தெய்வங்கள் எதனையும் அமைத்துக் கொள்ளாதே; இணைத்தெய்வ வழிபாடு மிகப்பெரியதோர் அநீதியாகும்”* என்று கூறியதை நினைவு கூர்வீராக.
அடிகுறிப்பு

இரண்டாம் கட்டளை

[31:14] தன்னுடைய பெற்றோரைக் கண்ணியப்படுத்து மாறு மனிதனுக்கு நாம் கட்டளையிட்டோம். அவன் தாய் அவனைச் சுமந்தாள், மேலும் அந்தச் சுமை கனத்துடன் மேலும் கனம் கூடிக்கொண்டே சென்றது. பால்குடி மறக்கச் செய்யப்படும் வரை அதற்கு இரண்டு வருடங்கள்( தீவிர கவனம் ) எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கின்றது. நீங்கள் எனக்கும் மேலும் உங்களுடைய பெற்றோர்களுக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இறுதிவிதி என் வசமே உள்ளது.
[31:15] என்னுடன் ஏதேனும் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்ள அவர்கள் உம்மை நிர்பந்திக்க முயற்சித்தால், அவர்களுக்குக் கீழ்ப்படியாதீர். ஆனால் தொடர்ந்து அவர்களை இவ்வுலகில் நல்ல முறையில் நடத்துவீராக. எனக்கு அடிபணிந்தோருடைய பாதையை மட்டும் நீர் பின்பற்ற வேண்டும். இறுதியாக, நீங்கள் அனைவரும் என்னிடம் திரும்புவீர்கள், பின்னர் நான் உங்களுக்கு நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அறிவிப்பேன்.

லுக்மானின் அறிவுரை

[31:16] “என் மகனே, ஒரு பாறையின் ஆழத்தினுள் உள்ள, ஒரு கடுகின் வித்தளவு மிகச் சிறியதான ஒன்றாக இருந்தாலும், அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும், கடவுள் அதனைக் கொண்டு வருவார் என்பதை அறிந்து கொள். கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.
[31:17] “என் மகனே, நீ தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நீ நன்னெறியை ஆதரிப்பதுடன் மேலும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும், மேலும் இன்னல்களை எதிர் கொள்ளும்போது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். இவை மிகவும் கண்ணியமான பண்புகளாகும்.
[31:18] “நீ மக்களை ஆணவத்துடன் நடத்த வேண்டாம், அன்றி பெருமையாக பூமியில் சுற்றித் திரியவும் வேண்டாம். தற்பெருமையாக காட்டிக்கொள்பவர் களைக் கடவுள் நேசிப்பதில்லை.
[31:19] “பணிவாக நட, மேலும் உனது குரலைத் தாழ்த்திக் கொள்-குரல்களிலேயே அருவருப்பானது கழுதையின் குரலே ஆகும்”.
[31:20] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணி செய்வதற் காகக் கடவுள் ஆக்கியிருக்கின்றார் என்பதையும், மேலும் தன் அருட்கொடைகளை வெளிப் படையானதாகவும் மற்றும் மறைவானதாகவும் - உங்கள் மீது பொழிந்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், சில மனிதர்கள் அறிவில்லாமலும், வழிகாட்டல் இல்லாமலும், மேலும் தெளிவாக விளக்குகின்ற வேதமில்லாமலும் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக் கின்றனர்.

பெற்றோர்களைக் கண்மூடிப் பின்பற்றுதல்: ஒரு பொதுவான சோகம்

[31:21] “கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளைப் பின்பற்றுங்கள்”, என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “அல்ல, எங்கள் பெற்றோர்கள் எதனைச் செய்ய நாங்கள் கண்டோமோ அதனை மட்டுமே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறுகின்றார் கள். சாத்தான் அவர்களை நரக வேதனையின் பால் வழிநடத்தினாலுமா?

மிகவும் உறுதியான பிடிமானம்

[31:22] கடவுள்-க்கு முழுமையாக அடிபணிந்து, அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், மிகவும் உறுதியானதொரு பிடிமானத்தைப் பற்றிக் கொண்டு விட்டனர். ஏனெனில் கடவுள் அனைத்து விஷயங்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
[31:23] நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர் களுடைய நம்பிக்கையின்மையினால் கவலை க்குள்ளாகாதீர். அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம்மிடமே உள்ளது, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப்பற்றியும் நாம் அவர்களுக்கு அறிவிப்போம். ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[31:24] நாம் அவர்களைத் தற்காலிகமாகச் சுகமனுப விக்க விடுகின்றோம், பின்னர் அவர்களைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவோம்.

அவர்கள் கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றனர்

[31:25] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் யார்”, என அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது” என்று கூறுவீராக. இருப்பினும், அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[31:26] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குரியது. கடவுள் தான் மிக்க செல்வந்தர், மிகுந்த புகழுக்குரியவர்.

நமக்குத் தேவையான வார்த்தைகள் எல்லாம் இவைதான்

[31:27] பூமியின் மீதுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களாக ஆக்கப்பட்டாலும், மேலும் பெருங்கடல் மையை வழங்கினாலும், இன்னும் அது ஏழு பெருங்கடல்கள் கொண்டு அதிகரிக்கப் பட்டாலும், கடவுள்-ன் வார்த்தைகள் தீர்ந்து போய்விடாது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[31:28] உங்கள் அனைவருடைய படைப்பும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதலும் ஒரு நபருடையதைப் போன்றதேயாகும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.

கடவுள் மட்டுமே வழிபடத் தகுதியானவர்

[31:29] கடவுள் இரவைப் பகலினுள் ஒன்று சேர்க்கின்றார் மேலும் பகலை இரவினுள் ஒன்று சேர்க்கின்றார் என்பதையும், மேலும் சூரியனையும் சந்திரனையும் உங்களுடைய பணிக்கென ஆக்கியிருக்கின்றார் என்பதையும், ஒவ்வொன்றும் அதன் சுற்றுப் பாதையில் குறிப்பிடப்பட்டதொரு வாழ்க்கைத் தவணைக்கென ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதையும், மேலும் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[31:30] இது கடவுள் தான் சத்தியம் என்பதையும், அதே சமயம் அவருடன் அவர்கள் அமைத்துக்கொள் கின்ற எந்த இணைத்தெய்வமும் பொய்மையே யாகும் என்பதையும், மேலும் கடவுள் மிகவும் உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர் என்பதையும் நிரூபிக்கின்றது.
[31:31] அவருடைய சான்றுகளில் சிலவற்றை உங்களுக்குக் காட்டுவதற்காக, கடவுள்-ன் வாழ்வாதாரங்களைச் சுமந்து கொண்டு, கப்பல்கள் கடலில் சுற்றித் திரிவதை நீங்கள் பார்க்க வில்லையா? உண்மையில், உறுதிப்பாடும், நன்றியும் உடைய ஒவ்வொருவருக்கும் இவை போதிய சான்றுகளாக இருக்க வேண்டும்.
[31:32] உக்கிரமான அலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் பொழுது, தங்களுடைய பிரார்த் தனைகளை உண்மையாக அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் கடவுள்-ஐ இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றனர். ஆனால் அவர்களைக் காப்பாற்றி அவர் கரை சேர்த்த வுடன், அவர்களில் சிலர் பழைய நிலைக்கு திரும்பிச் சென்று விடுகின்றனர். நம்பிக்கைத் துரோகிகளாகவும், நன்றிகெட்டவர்களாகவும் இருப்பவர்களைத் தவிர எவரும் நம்முடைய வெளிப்பாடுகளைக் கைவிட்டு விடமாட்டார்கள்.
[31:33] மனிதர்களே, நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் ஒரு தந்தை தன் சொந்தப் பிள்ளைக்கு உதவ முடியாத, அன்றி ஒரு பிள்ளை தன் தந்தைக்கு உதவ முடியாத அந்நாளுக்கு அஞ்சிக் கொள்ளவும் வேண்டும். நிச்சயமாகக், கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும். ஆகையால், இந்த வாழ்க்கையினால் கவனம் திருப்பப் பட்டவராகி விடாதீர்கள்; வெற்று மாயைகளால் கடவுள்-இடமிருந்து கவனத்தைத் திருப்பி விடாதீர்கள்.

நாம் அறிந்திருக்கக் கூடிய மற்றும் அறியாமலிருக்கக் கூடிய விஷயங்கள்*

[31:34] அந்த நேரம் (உலக முடிவு)* பற்றிய அறிவு கடவுள்-இடமே உள்ளது. அவர்தான் மழையை இறக்கி அனுப்புகின்றவர், மேலும் கர்ப்பத்தில் உள்ளவற்றையும் அவர் அறிந்திருக்கின்றார். எந்த ஆன்மாவும் நாளை அதற்கு என்ன நிகழும் என்பதை அறியாது, மேலும் எந்த இடத்தில் அவனுக்கு அல்லது அவளுக்கு மரணம் நேரிடும் என்பதையும் எவர் ஒருவரும் அறியமாட்டார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.
அடிகுறிப்பு