சூரா 32: சிர வணக்கம் (அல்-ஸஜ்தா)
[32:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[32:1] அ.ல.ம.*
அடிகுறிப்பு

[32:2] இந்தப் புத்தகம், ஒரு சந்தேகமுமின்றி, பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு வெளிப்பாடாகும்.
[32:3] அவர்கள், “அவர் இதனை இட்டுக் கட்டிக் கொண்டார்” என்று கூறினார்கள். உண்மையில் இது, உமக்கு முன்னர் ஓர் எச்சரிப்பவரை ஒரு போதும் பெற்றிருக்காத மக்களை, அவர்கள் வழி காட்டப்பட்டவர்களாக இருக்கும் பொருட்டு, எச்சரிக்கை செய்வதற்காக உம் இரட்சகரிட மிருந்துள்ள சத்தியமாகும்.

கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் இடைத்தரகர் இல்லை

[32:4] கடவுள் தான் வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஆறு நாட்களில் படைத்து பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டவர். அவருடன் உங்களுக்கு இரட்சக ராக எவரும் இல்லை, அன்றி ஒரு பரிந்துரைப் பவரும் உங்களுக்கு இல்லை. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?
[32:5] வானங்கள் முதல் பூமி வரை அனைத்து விஷயங்களும் அவரால் கட்டுப்படுத்தப் படுகின்றன. அவரிடம், ஒரு நாள் என்பது உங்களுடைய ஆயிரம் வருடங்களுக்குச் சமமானதாகும்.
[32:6] அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவர்; சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.

மனிதனின் துவக்கம்

[32:7] அவர்தான் தான் படைத்த ஒவ்வொன்றையும் முழுமைப்படுத்தினார், மேலும் மனிதப் படைப் பைக் களிமண்ணிலிருந்து துவக்கினார்.
[32:8] பின்னர், குறிப்பிடப்பட்டதொரு தாழ்ந்த திரவத் தின் மூலமாக அவனுடைய இனவிருத்தியை அவர் தொடர்ந்தார்.
[32:9] அவர் அவனை உருவமைத்தார், மேலும் தன்னு டைய ஆவியிலிருந்து அவனுக்குள் ஊதினார். மேலும் அவர் உங்களுக்கு செவிப்புலன், பார்வை, மற்றும் மூளைகளைக் கொடுத்தார்; அரிதாகவே நீங்கள், நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்.
[32:10] அவர்கள், “பூமிக்குள் நாம் மறைந்துவிட்ட பிறகு, மீண்டும் புதிதாக நாம் படைக்கப்படுவோமா?” என்று வியக்கின்றார்கள். இவ்விதமாக, தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து, அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.
[32:11] “உங்களுக்கெனப் பொறுப்பேற்றுள்ள அந்த வானவரால் நீங்கள் மரணத்தில் ஆழ்த்தப் படுவீர்கள், பின்னர் உங்கள் இரட்சகரிடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்,”என்று கூறுவீராக.

மிகவும் தாமதம்

[32:12] குற்றவாளிகள் தங்களுடைய இரட்சகரின் முன் அவர்களுடைய தலைகளைக் குனிந்து கொண்டு இருக்கும்போது மட்டும் அவர்களை நீர் காணமுடிந்தால்: “ எங்கள் இரட்சகரே, இப்போது நாங்கள் பார்த்துவிட்டோம் மேலும் கேட்டு விட்டோம். எங்களைத் திருப்பி அனுப்பு வீராக, அப்போது நாங்கள் நன்னெறியாளர் களாக இருப்போம். இப்போது நாங்கள் உறுதிப்பாட்டை அடைந்து விட்டோம்.”*
அடிகுறிப்பு

[32:13] நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஆன்மா விற்கும் அதனுடைய வழிகாட்டலை நம்மால் கொடுத்திருக்க இயலும், ஆனால் ஜின்கள் மற்றும் மனிதர்கள் ஆகிய அனைவரையும் ஒன்று சேர்த்து நரகத்தை நான் நிரப்புவேன் என்பது முன்னர் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டு விட்டது.*
அடிகுறிப்பு

[32:14] இந்த நாளை நீங்கள் மறந்துவிட்டதன் விளைவு களைச் சுவையுங்கள்; இப்போது நாம் உங்களை மறந்து விட்டோம். உங்களுடைய சொந்தச் செயல்களுக்குப் பிரதிபலனாக நிரந்தரமான தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விட்டீர்கள்.
[32:15] உண்மையாகவே நமது வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட ஒரே மக்கள் யாரென்றால், அவற்றைச் செவிமடுக்கும் போது சிரம்பணிந்து விழுபவர்களேயாவர். அவர்கள் எந்த ஆணவமும் இன்றி, தங்கள் இரட்சகரைத் துதிக்கவும் மேலும் புகழவும் செய்கின்றனர்.
[32:16] பயபக்தி மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாக, தங்களுடைய இரட்சகரை வழிபடுவதற்காக, அவர்களுடைய விலாப்புறங்கள், முழு மனதுடன் அவர்களுடைய படுக்கைகளைத் துறக்கும், மேலும் நம்முடைய வாழ்வாதாரங்களில் அவர்களுக் குரியதில் இருந்து அவர்கள் தர்மம் செய்வார்கள்.

சுவனம்: விவரிக்க முடியாத அளவிற்கு அழகு நிறைந்தது

[32:17] உங்களுடைய (நன்னெறியான) காரியங்களுக்கு வெகுமதியாக எவ்வளவு ஆனந்தமும் மகிழ்ச்சியும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியாது.
[32:18] ஒரு நம்பிக்கையாளராக இருக்கும் ஒருவர் தீயவராக இருக்கும் ஒருவருக்குச் சமமாவாரா? அவர்கள் சமமானவர்கள் அல்ல.
[32:19] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நிரந்தரமான சுவனத்திற்குத் தகுதி பெற்று விட்டனர். அவர்களுடைய காரியங்களுக்குப் பிரதிபலனாக, அவர்களுடைய தங்குமிடம் இத்தகையதேயாகும்.
[32:20] தீயவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய விதி நரகமேயாகும். அதிலிருந்து வெளியேற அவர்கள் முயல்கின்ற ஒவ்வொரு முறையும், திரும்புவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப் படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் நம்ப மறுத்துக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.

குறிப்பறிந்து கொள்ளுங்கள்

[32:21] (மறுஉலகின்) மாபெரும் தண்டனைக்கு அவர்கள் உள்ளாவதற்கு முன்னர், அவர்கள் (குறிப்பறிந்து கொண்டு) சீர்திருந்தும் பொருட்டு, (இவ்வுலகின்) சிறிய தண்டனையை அவர்கள் சுவைக்கும்படி நாம் செய்வோம்.
[32:22] தன்னுடைய இரட்சகரின் இந்த வெளிப்பாடுகளால் நினைவூட்டப்பட்டும், அதன் பின்னர் அவற்றைப் புறக்கணிப்பதை வலியுறுத்தும் ஒருவனைவிட மிகத் தீயவன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளைத் தண்டிப் போம்.
[32:23] மோஸஸிற்கு நாம் வேதத்தைத் தந்தோம் - அவரைச் சந்திப்பதைப் பற்றி எந்த ஐயமும் கொள்ளாதீர் -மேலும் இஸ்ரவேலின் சந்ததி யினருக்கு ஒரு வழிகாட்டியாக அதனை நாம் ஆக்கினோம்.
[32:24] நம்முடைய கட்டளைகளுக்கு இணங்க வழிநடத்திய இமாம்களை அவர்களிலிருந்து நாம் நியமித்தோம், ஏனெனில் அவர்கள் உறுதியாய் விடா முயற்சியுடன் இருந்தனர், மேலும் நம் வெளிப் பாடுகளைப் பற்றிய உறுதிப்பாட்டை அடைந்தனர்.
[32:25] அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த ஒவ்வொன் றைப் பற்றியும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உம் இரட்சகர்தான் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.
[32:26] அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறை யினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்று எப்பொழுதாவது அவர்களுக்குத் தோன்று கின்றதா? அவர்களுடைய முன்னோர்களின் வீடுகளில் இப்போது அவர்கள் வசித்துக் கொண்டும் நடந்து கொண்டும் இருக்கின்றனர். இது போதுமான சான்றுகளை வழங்க வேண்டும். அவர்கள் செவியேற்க வில்லையா?
[32:27] வறண்ட நிலங்களின் பால் நாம் தண்ணீரை ஓட்டி, மேலும் அதனைக் கொண்டு அவர்களுடைய கால்நடைகளுக்கும், அவ்வண்ணமே அவர்க ளுக்கும் உணவளிப்பதற்காகப் பயிர்களை விளைவிக்கின்றோம், என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்iயா? அவர்கள் பார்க்கவில்லையா?
[32:28] அவர்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கே அந்த வெற்றி?” என்று சவால் விடுகின்றார்கள்.
[32:29] “அத்தகையதொரு வெற்றி வரும் நாளில், அதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதவர்கள் நம்பிக்கை கொள்வது பலனளிக்காது, அன்றி அவர்கள் மற்றொரு சந்தர்ப்பம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறுவீராக.
[32:30] ஆகையால், அவர்களைப் புறக்கணித்து விடுவீராக, மேலும் காத்திருப்பீராக, அவர்களும் காத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.