சூரா 32க்குரிய அடிக்குறிப்புகள்

*32:1 இந்த எழுத்துக்களின் பொருள் அடுத்த வசனத்தில்: “ இந்தப் புத்தகம், ஒரு சந்தேகமுமின்றி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு வெளிப்பாடாகும்” என்று கொடுக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

*32:12 அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், அதே வரம்புமீறல்களையே செய்வார்கள். 6:28ன் அடிக்குறிப்பை பார்க்கவும்.

*32:13 பெரும்பாலான மக்கள், அவர்களை மீட்டுக் கொள்வதற்கான கடவுளின் அழைப்பை அலட்சியம் செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாக, நரகத்திற்குச் செல்வதை “ வலியுறுத்துகின்றனர்.” ஒரே ஒரு நபரை கூட கடவுள் நரகத்தில் போடுவதில்லை. இணைவழிபாட்டை வெளிப்படையாகக் கண்டனம் செய்து மேலும் கடவுளுக்கு மட்டும் தங்களையே அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம் தங்களுடைய ஆன்மாக்களை மீட்டுக்கொள்ளத் தவறி விட்டவர்கள், மேலும் நமது படைப்பாளரால் விதிக்கப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளின் மூலமாகத் தங்களுடைய ஆன்மாக்களை வளர்த்துக் கொள்ளத் தவறிவிட்டவர்கள், தங்களுடைய சுயமான விருப்பத்தின்படியே நரகத்தை நோக்கி ஓடியாக வேண்டும். கடவுளுடைய உடல் சார்ந்த சக்தியைத் தாங்கமுடியாதவாறு அவர்கள் மிகவும் பலஹீனமாக இருப்பார்கள்.

\