சூரா 33க்குரிய அடிக்குறிப்புகள்

*33:4 கணவனின் தாயைப் போன்று மனைவி இருக்கின்றாள் என்று அறிவித்துவிட்டு அவளை பிணையறுத்துக் கொள்ளுதல் அரேபியாவில் ஒரு சமூகவழக்கமாக இருந்து வந்தது. இத்தகையதொரு அநியாயமான பழக்கவழக்கம் இதில் ரத்து செய்யப்படுகின்றது.

*33:7 இந்த உடன்படிக்கை 3:81ல் விவரிக்கப் பட்டுள்ளது. கடவுள் வேதம் வழங்கப்பட்டவர்களிடம் அவர்களுடைய தூதுச்செய்திகளைத் தூய்மைப்படுத்தவும் ஒன்றிணைக்கவும் முஹம்மதிற்குப் பின் வர இருக்கின்ற அவருடைய உடன்படிக்கைத் தூதருக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று ஓர் உடன்படிக்கை எடுத்தார். உலகத்தைப் படைப்பதற்கு முன்னரே இந்த உடன்படிக்கை எடுக்கப்பட்டு விட்டது, மேலும் துல்ஹஜ்3, 1391 (டிசம்பர் 21, 1971) அன்று மக்காவில் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய வருடத்துடன் (12), நாள் (3) ஐக் கூட்டி, வருடம் (1391) ஐயும் கூட்டினால் கிடைக்கும் கூட்டுத்தொகை 1406, 19 X 74. ரஷாத் கலீஃபாவைக் கடவுளின் உடன்படிக்கைத் தூதராக அடையாளம் காட்டுகின்ற திணறடிக்கின்ற சான்றுகள் குர்ஆன் முழுவதிலும் வழங்கப்பட்டுள்ளன (பின் இணைப்பு 2மற்றும் 26).

*33:21 சாத்தான் இவ்வசனத்தை அதன் சூழ்நிலைக்குப் புறம்பாக வெளியே எடுத்து, மேலும் “ வேதம் வழங்கப்பட்டவரின் சுன்னத்து ” என்றழைக்கப்படுகின்ற அங்கீகாரமற்ற மேலும் நியாயமற்ற சட்டதிட்டங்களின் ஒரு முழுமையான தொகுப்பை புதுமைகளோடு உண்டு பண்ணச் செய்து வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதின் மீது கொண்டிருந்த இணைத்தெய்வ வழிபாட்டை மக்கள் நம்பும்படியாக செய்து விட்டான். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு மார்க்கத்தை உருவாக்கியது (42:21 மற்றும் பின் இணைப்பு 18 ஐ பார்க்கவும்).

*33:40 முஹம்மதைப் பற்றிய தெளிவான விளக்கமாக இது இருந்தபோதிலும், அதிகமான முஸ்லிம்கள் அவர் வேதம் வழங்கப் பட்டவர்களில் இறுதியானவர், மேலும் இறுதித் தூதராகவும் இருந்தார் என்று வலியுறுத்துகின்றனர். 40:34ல் நாம் காண்பதைப் போல இது ஒரு சோகமான மனிதப் பண்பாகும். கடவுள்மீது உடனடியாக நம்பிக்கைகொள்பவர்கள் வேதம் வழங்கப்பட்டவர்களில் இறுதியானவரான முஹம்மதிற்குப் பின்னால் கடவுள் தன்னுடைய தூய்மைப்படுத்துகின்ற மற்றும் ஒன்றிணைக்கின்ற உடன்படிக்கைத் தூதரை அனுப்புகின்றார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்கின்றனர் (3:81, 33:7).

*33:41-42 உங்களுடைய எண்ணங்களை அதிகமான நேரம் ஆக்கிரமித்திருக்கும் எதுவாயினும் அதுவே உங்களுடைய தெய்வமாகும். எனவே கடவுளை நினைவு கூர்வதற்கும், மேலும் இரவும் பகலும் அவரைத் துதிப்பதற்குமான கட்டளை இதுவாகும். பின் இணைப்பு 27 ஐ பார்க்கவும்.

*33:53 ஏற்கெனவே நம் தந்தையருக்கு மணமுடிக்கப்பட்டிருந்த பெண்களைத் திருமணம் புரிந்து கொள்வதிலிருந்து 4:22ல் நாம் தடுக்கப்பட்டுள்ளோம். அன்றி எந்தத் தந்தையும் தன் மகனுடைய விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது (4:23). இந்தத் தெய்வீகக் கட்டளை நம் தந்தையர்களுக்குரிய நமது மரியாதையையும் மேலும் அவர்களுடைய மிகவும் அந்தரங்கமான விவகாரங்களையும் பாதுகாக்கின்றது. அதே போல், வேதம் வழங்கப்பட்டவர் அவருடைய காலத்தில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்தார். அந்த நம்பிக்கையாளர்களின் நலனிற்காக, ஏற்கனவே வேதம் வழங்கப்பட்டவருக்கு மணமுடிக்கப்பட்டிருந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்வதிலிருந்து கடவுள் அவர்களைத் தடை செய்திருந்தார். திருமணம் என்பது ஒரு புனிதமான மேலும் மிகவும் அந்தரங்கமான உறவாகும், அத்துடன் வேதம் வழங்கப்பட்டவரின் அந்தரங்க வாழ்வை, அந்தரங்கமாக வைத்திருப்பதே மேலானதாகும்.

*33:56 “ வேதம் வழங்கப்பட்டவர்” (நபி) என்ற வார்த்தை ஒரே சீராக முஹம்மதை, அவர் உயிருடன் இருந்த போதுமட்டுமே குறிக்கின்றது. 33:41-42ல் கட்டளையிட்டுள்ளபடி கடவுளை நினைவு கூர்வதற்குப் பதிலாக, இடையறாது, முஹம்மதை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் வண்ணம் முஸ்லிம்களை மயக்குவதற்கு சாத்தான் இந்த வசனத்தைப் பயன்படுத்திக் கொண்டான்.

*33:63 ஓர் உதாரணத்திற்கு ஒரு நூற்றாண்டைவிடக் குறைந்த காலத்திற்கு முன்னர், தொலைக்காட்சி மற்றும் விண்வெளியின் செயற்கைக் கோள்களைப் பற்றிய அறிவைக் கடவுள் மட்டுமே கொண்டிருந்தார். முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் இந்த அறிவை அவர் வெளிப்படுத்தினார். அதைப் போலவே, இந்த உலகத்தின் முடிவிற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தைக் கடவுள் வெளிப்படுத்தியுள்ளார் (பின் இணைப்பு 25).

*33:72 பிராணிகள், மரங்கள், நட்சத்திரங்கள் போன்றவை அருள்மிகுந்த இந்த வாய்ப்பைச் சாதகமாக எடுத்துக் கொண்டன. பின் இணைப்பு 7ஐப் பார்க்கவும்.