சூரா 34: ஷீபா (ஸபா’)
[34:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[34:1] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றிற்கும் உரியவரான கடவுள்-க்கே புகழ் அனைத்தும் உரியது; அத்துடன் மறுவுலகிலும் அனைத்துப் புகழும் அவருக்கே உரித்தானது. அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.
[34:2] பூமிக்குள் செல்லும் ஒவ்வொன்றையும், மற்றும் அதிலிருந்து வெளிவரும் ஒவ்வொன்றையும், மேலும் வானத்திலிருந்து இறங்கி வரும் ஒவ்வொன்றையும், மற்றும் அதில் ஏறும் ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். அவர்தான் மிக்க கருணையாளர், மன்னிப்பவர்.
[34:3] நம்ப மறுப்பவர்கள், “அந்த நேரம் ஒருபோதும் நிகழாது!” என்று கூறினார்கள். “நிச்சயமாக- என் இரட்சகர் மீது ஆணையாக - மிகவும் உறுதியாக அது உங்களிடம் வரும். அவர்தான் எதிர்காலத்தை அறிந்தவர். ஓர் அணுவின் எடைக்குச் சமமானது கூட அவருக்கு மறைவானதாக இல்லை, அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும் சரியே. அதனை விடச் சிறியதோ அல்லது பெரியதோ கூட (மறைவானதில்லை). அனைத்தும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது,” என்று கூறுவீராக.
[34:4] மிகவும் உறுதியாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து பவர்களுக்கு அவர் வெகுமதியளிப்பார். அவர்கள் மன்னிப்பிற்கும் மேலும் தாராளமான தொரு வாழ்வாதாரத்திற்கும் தகுதியாகி விட்டனர்.
[34:5] நமது வெளிப்பாடுகளுக்குத் தொடர்ந்து சவால் விடுபவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் வலிநிறைந்த இழிவானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[34:6] அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப் பட்டவர்களுக்கு உம் இரட்சகரிடமிருந்து உமக்கு வந்துள்ள இந்த வெளிப்பாடு சத்தியம் என்பதும், மேலும் சர்வ வல்லமையுடைய, மிக்க புகழுக்குரியவரின் பாதையை நோக்கி இது வழிநடத்துகின்றது என்பதும் வெளிப்படை யானதாகும்.
[34:7] நம்ப மறுப்பவர்கள் கூறினார்கள், “நீங்கள் வெவ்வேறாகக் கிழிந்து போன பின்னர், நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களிடம் கூறுகின்ற ஒரு மனிதரை நாங்கள் உங்களுக்குக் காட்டட்டுமா.
[34:8] “ஒன்று, கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை அவர் இட்டுக் கட்டிக் கொண்டார், அல்லது அவர் ஒரு புத்தி சுவாதீனமில்லாதவராக இருக்கின்றார்.” உண்மையில், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் மோசமான தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்; அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டனர்.
[34:9] வானங்களிலும் மற்றும் பூமியிலும், அவர் களுக்கு முன்னாலும் மேலும் அவர்களுக்கு பின்னாலுமுள்ள அனைத்துப் பொருட்களையும் அவர்கள் காணவில்லையா? நாம் நாடியிருந் தால், பூமி அவர்களை விழுங்கும்படி நாம் செய்திருப்போம், அல்லது விண்ணிலிருந்து பாளங்களை அவர்கள் மீது விழும்படிச் செய்திருப்போம். கீழ்ப்படிதலுள்ள ஒவ்வொரு அடியாருக்கும் இது போதுமானதொரு சான்றாக இருக்கவேண்டும்.

டேவிட் மற்றும் ஸாலமன்

[34:10] நம்மிடமிருந்து அருட்கொடைகளைக் கொண்டு டேவிட்டிற்கு நாம் கொடையளித்தோம்: “மலைகளே, அவருடன் அடிபணியுங்கள், மேலும் பறவைகளே, நீங்களும் தான்”. நாம் அவருக்காக இரும்பை மிருதுவாக்கினோம்.
[34:11] “மிகச் சரியாகப் பொருந்துகின்ற கவசங்களை நீர் செய்து கொள்ளலாம், மேலும் நன்னெறிகள் புரிவீராக. நீர் எதனைச் செய்தாலும், அதனைப் பார்ப்பவராக நான் இருக்கின்றேன்”.

முதல் எண்ணெய் வயல்

[34:12] நாம் ஸாலமனுக்கு காற்றை, அவருடைய முடிவின்படி ஒரு மாதம் வந்து கொண்டும் மேலும் ஒரு மாதம் சென்று கொண்டும் பயணிக்குமாறு ஆக்கினோம். மேலும் அவருக்காக ஒரு எண்ணெய் ஊற்றை நாம் பொங்கி வரச் செய்தோம். அத்துடன், அவருடைய இரட்சகரின் அனுமதியின் பேரில், ஜின்கள், அவருக்காக வேலை செய்தன. அவர்களில் எவர் ஒருவர் நமது கட்டளைகளைப் புறக்கணித்தாரோ அவரை, கடுமையானதொரு தண்டனைக்கு நாம் ஆட்படுத்தினோம்.
[34:13] அவர் விரும்பிய எந்த ஒன்றையும் அவர்கள் அவருக்காகச் செய்தார்கள்-மாடங்கள், சிலைகள், ஆழமான குளங்கள் மேலும் கனத்த சமையல் பாத்திரங்கள். டேவிட்டின் குடும்பத்தாரே, உங்கள் நன்றியறிதலைக் காட்டுவதற்காக, (நன்னெறி யான) காரியங்கள் செய்யுங்கள். என்னுடைய அடியார்களில் மிகச் சிலர் மட்டுமே நன்றி யுடையவர்களாக இருக்கின்றனர்.

ஜின்களின் அறிவு எல்லைக்குட்பட்டதே

[34:14] அவருடைய மரணத்திற்கு என்று நிர்ணயிக்கப் பட்ட நேரம் வந்துவிட்ட போது, அவர் மரணித்து விட்டார் என அவர்களுக்குத் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. பிராணிகளில் ஒன்று அவருடைய கைத்தடியைத் தின்ன முயற்சித்து, மேலும் அவர் கீழே சாயும் வரை அறியாதிருந்த அந்த ஜின்கள், அப்போது தான் அவர் மரணித்து விட்டார் என்பதை புரிந்து கொண்டனர். அவர்கள் மெய்யாகவே மறைவானவற்றை அறிந்திருப்பார் களாயின், அவர் மரணித்து விட்டவுடன், அத்தனை கடுமையாக வேலை செய்து கொண்டிருந்ததை நிறுத்தியிருப்பார்கள் என்பதை இவ்விதமாக அவர்கள் புரிந்து கொண்டனர்.
[34:15] ஷீபாவின் சொந்த நாடு, வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரு சோலைகளுடன் ஓர் அற்புதமாக இருந்து வந்தது. உங்களுடைய இரட்சகரின் வாழ்வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் அவருக்கு நன்றியுடை யவர்களாக இருங்கள்-நல்ல நிலம், மேலும் மன்னிக்கின்ற ஓர் இரட்சகர்.
[34:16] அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர், மேலும் அதன் விளைவாக, பேரழிவானதொரு வெள்ளத்தை அவர்கள் மீது நாம் ஊற்றினோம், மேலும் அவர்களுடைய இரு தோட்டங்களையும், கெட்ட சுவை கொண்ட கனிகளையும், முட்செடிக ளையும் மேலும் பற்றாக்குறை மகசூலையும் கொண்ட இரு தோட்டங்களாக நாம் மாற்றியமைத்தோம்.
[34:17] இவ்விதமாக அவர்களுடைய நம்பிக்கை யின்மைக்காக அவர்களை நாம் பழிதீர்த்தோம். நம்ப மறுப்பவர்களை மட்டுமே நாம் பழிதீர்க்கின் றோம் அல்லவா?
[34:18] அவர்களுக்கும் நாம் அருள்பாலித்திருந்த சமூகங்களுக்குமிடையில் வேறு பாலைவனச் சோலைகளை நாம் அமைத்தோம், மேலும் அவற்றிற்கிடையில் பயணத்தை நாம் பாதுகாப்பானதாக ஆக்கினோம்: “இரவுகளிலும் பகல்களிலும் முழுமையான பாதுகாப்புடன் அதில் நீங்கள் பயணம் செய்யுங்கள்”.
[34:19] ஆனால் அவர்கள் (நன்றி கெட்டவர்களாக மாறினார்கள், மேலும்): “எங்கள் இரட்சகரே, (நிறுத்தங்கள் எதுவுமின்றி) எங்கள் பயணங்களின் தூரத்தை நீர் அதிகரித்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்” என்று சவால் விட்டார்கள். இவ்விதமாக அவர்கள் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதி இழைத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்களை நாம் சரித்திரமாக ஆக்கினோம், மேலும் பூமி எங்கிலும் சிறுசிறு சமூகங்களாக அவர்களை நாம் சிதறடித்தோம். உறுதியுடையவர்களாகவும், மேலும் நன்றியுடையவர்களாகவும் இருப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினையை வழங்க வேண்டும்.

பெரும்பான்மையைச் சாத்தான் உரிமை கொண்டாடுகின்றான்

[34:20] சாத்தான், அவனுடைய எதிர்பார்ப்புகளை உடனடியாகப் பூர்த்தி செய்பவர்களாக அவர்களைக் கண்டான். அவர்கள் அவனைப் பின்பற்றினர், ஒரு சில நம்பிக்கையாளர்களைத் தவிர.

குறிக்கோள்: நாம் மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோமா?*

[34:21] அவர்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் இவ்விதமாக மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டிருப் பவர்களை, அதனைப்* பற்றி சந்தேகம் கொண்டிருப் பவர்களிலிருந்து நாம் வேறுபடுத்திக் காட்டுகின் றோம். உம் இரட்சகர் அனைத்துப் பொருட் களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்.
அடிகுறிப்பு

[34:22] “கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண் டிருக்கும் அந்த இணைத் தெய்வங்களை இறைஞ்சுங்கள். வானங்களிலோ, அல்லது பூமியிலோ ஒரே ஓர் அணுவின் அளவு கூட அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்க வில்லை. அதில் எந்தப் பங்கும் அவர்களுக்கு உரியதில்லை, அன்றி அவர்களை அவருடைய உதவியாளர்களாக இருக்கவும் அவர் அனுமதிப்பதில்லை” என்று கூறுவீராக.

பரிந்துரை இல்லை

[34:23] அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருந்தாலே யன்றி, அவரிடம் பரிந்துரை என்பது வீணானதே ஆகும். இறுதியில் அவர்களுடைய மனங்கள் அமைதியடைந்தவுடன் அவர்கள், “உங்களு டைய இரட்சகர் என்ன கூறினார்” என்று கேட்கின்றார்கள். அவர்கள், “சத்தியம்” என்று கூறுவார்கள். அவர் தான் மிக உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர்.
[34:24] “வானங்கள் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வழங்குபவர் யார்?” என்று கூறுவீராக. “கடவுள்” என்றும், மேலும் “வழி நடத்தப்பட்டவர்கள் அல்லது வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டவர்கள் நாங்களா அல்லது நீங்களா” என்றும் கூறுவீராக.
[34:25] “எங்கள் குற்றங்களுக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள், அன்றி நீங்கள் செய்பவற்றிற்கு நாங்களும் பொறுப்பாக மாட்டோம்” என்று கூறுவீராக.
[34:26] “நம்முடைய இரட்சகர் நம் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர் முன்னால் ஒன்று திரட்டுவார், பின்னர் நமக்கிடையில் அவர் நீதமாகத் தீர்ப்பளிப்பார். அவர்தான் நீதிபதி, எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.
[34:27] “அவருடன் பங்குதாரர்களாக நீங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் இணைத் தெய்வங்களை எனக்குக் காட்டுங்கள்!” என்று கூறுவீராக, “அல்ல; அவர்தான் ஒரே கடவுள், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்” என்று கூறுவீராக.

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்

[34:28] எல்லா மக்களுக்கும் நற்செய்தியைத் தாங்கிய ஒருவராகவும், அவ்வண்ணமே ஓர் எச்சரிப் பவராகவும் (ரஷாதே)* உம்மை நாம் அனுப்பியுள்ளோம், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்.
அடிகுறிப்பு

[34:29] அவர்கள், “நீர் உண்மையாளராக இருந்தால், எப்பொழுது இந்த வாக்குறுதி நிறைவேறும்?” என்று சவால் விடுகின்றார்கள்.
[34:30] “உங்களால் ஒரு மணி நேரம் தாமதப் படுத்தவோ அல்லது முற்படுத்தவோ இயலாத, குறிப்பிட்டதொரு நேரம், குறிப்பிட்டதொரு நாள் உங்களுக்கு உள்ளது” என்று கூறுவீராக.
[34:31] நம்பமறுப்பவர்கள், “நாங்கள் இந்தக் குர்ஆனிலோ அன்றி முந்திய வேதங்களிலோ நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள். இந்த வரம்பு மீறுபவர்கள் தங்களுடைய இரட்சகரின் முன் நிற்கின்ற போது உம்மால் மட்டும் அவர்களை பார்க்க முடிந்தால்! அவர்கள் ஒருவர் மற்றவருடன் முன்னும் பின்னும் தர்க்கித்துக் கொள்வார்கள். பின்பற்றியவர்கள் தங்களுடைய தலைவர் களிடம், “நீங்கள் மட்டும் இல்லாதிருந்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருந் திருப்போம்” என்று கூறுவார்கள்.

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று

[34:32] தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம், “வழிகாட்டுதலிலிருந்து, அது உங்களிடம் வந்ததன் பின்னர் நாங்களா உங்களை வேறு வழியில் திருப்பினோம்? அல்ல; நீங்கள் தான் தீயவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார் கள்.
[34:33] பின்பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம், “நீங்கள்தான் இரவும் பகலும் சூழ்ச்சி செய்தீர் கள், அதன் பின்னர் கடவுள்-க்கு நன்றி கெட்டவர்களாக இருக்குமாறும், மேலும் அவருடன் சமமாக இணைத் தெய்வங்களை அமைத்துக்கொள்ளுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டீர்கள்” என்று கூறுவார்கள். தண்டனையை அவர்கள் காணும் பொழுது, அவர்கள் குற்றவுணர்வால் வருத்தப்படுவார் கள், ஏனெனில் நம்ப மறுப்பவர்களின் கழுத்துக்களைச் சுற்றி விலங்குகளை நாம் அமைத்து விடுவோம். அவர்கள் செய்த வற்றிற்காக அவர்கள் நியாயமாகத்தான் கூலி கொடுக்கப்படுகின்றனர் அல்லவா?

ஒவ்வொரு முறையும் !

[34:34] ஒரு சமூகத்திற்கு ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்பிய ஒவ்வொரு முறையும், அந்தச் சமூகத்தின் தலைவர்கள், “உம்முடன் அனுப்பப்பட்ட தூதுச் செய்தியை நாங்கள் மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.
[34:35] அத்துடன் அவர்கள், “அதிகமான செல்வத்துடனும் மற்றும் பிள்ளைகளுடனும், நாங்கள் அதிக சக்தியுடையவர்களாக இருக்கின்றோம், மேலும் நாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம்” என்றும் கூறினார்கள்.
[34:36] “என் இரட்சகர் தான் அனைத்து வாழ்வாதாரங் களையும் கட்டுப்படுத்துகின்றவர்; தான் நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அவர் கொடுக்கின்றார், அல்லது அவற்றைக் குறைக்கின்றார், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்” என்று கூறுவீராக.
[34:37] உங்களுடைய பணமோ அல்லது உங்களுடைய பிள்ளைகளோ உங்களை நம்மிடம் நெருக்க மாகக் கொண்டு வருவதில்லை. நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வை நடத்துபவர்கள் மட்டுமே தங்களுடைய காரியங்களுக்குரிய வெகுமதியை, பன்மடங் காகப் பெருக்கிப் பெற்றுக் கொள்வார்கள். சுவன வீட்டில் அவர்கள் பூரணமான அமைதியுடன் வசிப்பார்கள்.
[34:38] நமது வெளிப்பாடுகளுக்கு தொடர்ந்து அறைகூவல் விடுபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தண்டனையில் தங்கியிருப்பார்கள்.
[34:39] “என் இரட்சகர்தான் அனைத்து வாழ்வாதாரங் களையும் கட்டுப்படுத்துகின்றவர்; தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அவர் அதிகரிக்கின்றார், அல்லது அவற்றைக் குறைக்கின்றார். (கடவுள் நிமித்தம்) எந்த ஒன்றை நீங்கள் செலவிட்டாலும், அதற்காக அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்; வழங்கு பவர்களில் அவர்தான் மிகச் சிறந்தவர்” என்று கூறுவீராக.
[34:40] அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்நாளில், வானவர்களிடம் அவர், “இந்த மக்கள் உங்களை வழிபட்டார்களா?” என்று கூறுவார்.
[34:41] அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர். நீரே எங்கள் இரட்சகரும் எஜமானருமாவீர், அவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஜின்களை வழிபட்டுக் கொண்டிருந்தனர்; அவர்களில் அதிகமானோர் அவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்” என்று பதிலளிப்பார்கள்.
[34:42] அந்நாளில், நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யவோ, அல்லது தீங்கிழைக்கவோ சக்தி எதுவும் பெற்றிருக்க மாட்டீர்கள். மேலும் வரம்பு மீறியவர்களிடம் நாம், “நீங்கள் ஒப்புக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்த நரகத்தின் தண்டனை யைச் சுவையுங்கள்” என்று கூறுவோம்.

குர்ஆனின் கணித அற்புதம்*

[34:43] முற்றிலும் தெளிவான, நமது சான்றுகள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்ட போது, அவர்கள், “இவர் உங்களுடைய பெற்றோர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பாதையை விட்டு உங்களைத் திருப்பி விட விரும்புகின்ற வெறும் மனிதர் தான்” என்று கூறினார்கள். அத்துடன் அவர்கள், “இவை இட்டுக்கட்டப் பட்ட பொய்களாகும்” என்றும் கூறினார்கள். தங்களிடம் வந்த சத்தியத்தைப் பற்றி நம்பிக்கை கொள்ள மறுத்தவர்கள், “இது கண்கூடான மாயாஜாலமாகும்” என்றும் கூட கூறினார்கள்.
அடிகுறிப்பு

[34:44] படிப்பதற்கு வேறு எந்தப்புத்தகத்தையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை, அன்றி உமக்கு முன்னர் வேறொரு எச்சரிப்பவரையும் அவர்களுக்கு நாம் அனுப்பவுமில்லை.
[34:45] அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் நம்ப மறுத்தனர், மேலும் இந்தத் தலைமுறை யினருக்கு நாம் கொடுத்துள்ள (அற்புதத்தில்) பத்தில்* ஒன்றைக் கூட அவர்கள் கண்டிராத போதிலும், என் தூதர்களை அவர்கள் நம்ப மறுத்தபோது, என்னுடைய தண்டனை எவ்வளவு கடுமையானதாக இருந்தது!
அடிகுறிப்பு

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*

[34:46] “ஒரு விஷயத்தைச் செய்யும்படி உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்: இருவர் இருவராகவோ அல்லது தனித்தவர்களாகவோ, கடவுள்-க்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள், பின்னர் சிந்தியுங்கள். உங்களுடைய தோழர் (ரஷாத்) ஒரு கிறுக்கர் அல்ல. அவர் பயங்கரமானதொரு தண்டனையின் வருகைக்குச் சற்று முன்னர், உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப்பவரேயாவார்,” என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

[34:47] “நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்க வில்லை; நீங்களே அதனை வைத்துக் கொள்ளுங்கள் . எனது கூலி கடவுள்-இடமிருந்து மட்டுமே வருகின்றது. அனைத்து விஷயங்களுக்கும் அவர் சாட்சியாக இருக்கின்றார்” என்று கூறுவீராக.
[34:48] “என் இரட்சகர் உண்மையை வெற்றியடையச் செய்கின்றார். அவர்தான் அனைத்து இரகசியங் களையும் அறிந்தவர்” என்று கூறுவீராக.
[34:49] “உண்மை வந்துவிட்டது; அதே சமயம் பொய்மை எதனையும் துவக்கவோ அன்றி அதனை மறுபடியும் செய்யவோ முடியாது” என்று கூறுவீராக.
[34:50] “நான் வழிதவறிச் செல்வேனாயின், என்னுடைய சொந்தக் குறைபாடுகளினாலேயே நான் வழிதவறிச் செல்கின்றேன். மேலும் நான் நேர்வழி நடத்தப்பட்டால், என்னுடைய இரட்சகரின் உள்ளுணர்வே அதற்குக் காரணமாகும். அவர் செவியேற்பவர், அருகிலிருப்பவர்” என்று கூறுவீராக.
[34:51] ஒரு மாபெரும் பயங்கரம் அவர்களைத் தாக்கும் பொழுது, அவர்களை உம்மால் பார்க்க மட்டும் முடியுமேயானால்; அப்போது அவர்களால் தப்பிக்க முடியாது, மேலும் அவர்கள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்படுவார்கள்.
[34:52] அப்போது அவர்கள், “இப்போது நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம்” என்று கூறுவார்கள், ஆனால் அது மிக நீண்ட தாமதமாகி இருக்கும்.
[34:53] கடந்த காலத்தில் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்; அதற்குப் பதிலாக, கற்பனைகளையும்* மற்றும் யூகங்களையும் ஆதரிப்பதென அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.
அடிகுறிப்பு

[34:54] அதன் விளைவாக, அவர்கள் மிகவும் விரும்பிய ஒவ்வொன்றையும் இழந்தவர்களாயினர். முந்திய தலைமுறையினர்களில் அவர்களைப் போன்றவர் களுக்கு நேரிட்ட அதே விதிதான் இது. அவர்கள் மிக அதிகமான சந்தேகங்களைக் கொண்டிருந் தனர்.