சூரா 35: துவக்குபவர் (ஃபாதிர்)
[35:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[35:1] புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர், மேலும் சிறகுகள்- இரண்டு, மூன்று, மற்றும் நான்கு (சிறகுகள்) கொண்ட தூதர்களாக வானவர்களை நியமிப்பவர். அவர் நாடுகின்றவாறு படைப்புகளை அவர் அதிகரிக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[35:2] மக்கள் மீது கடவுள் அருளைக்கொண்டு பொழியும் பொழுது, எந்தச் சக்தியும் அதனைத் தடுத்திட முடியாது. மேலும் அவர் அதனைத் தடுத்து நிறுத்திக் கொண்டால், எந்தச் சக்தியும், அவரைத் தவிர, அதனை அனுப்ப முடியாது, அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[35:3] மனிதர்களே, உங்கள் மீதான கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள். கடவுள்-ஐ விடுத்து வானங்களிலும் மற்றும் பூமியிலுமிருந்து உங்களுக்கு வழங்குகின்ற படைப்பாளர் எவரும் இருக்கின்றாரா? அவருடன் வேறு தெய்வம் இல்லை, எவ்வாறு நீங்கள் வழி தவறிச் செல்ல இயலும்?
[35:4] அவர்கள் உம்மை நம்பமறுத்தால், உமக்கு முன்னிருந்த தூதர்களும், நம்ப மறுக்கப் பட்டுள்ளனர். கடவுள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
[35:5] மனிதர்களே, கடவுள்-ன் வாக்குறுதி உண்மை யானதாகும்; ஆகையால், இந்தக் கீழான வாழ்வின் மூலம் கவனம் திருப்பப்பட்டு விடாதீர்கள். வெற்று மாயைகளினால் கடவுள்-இடமிருந்து விலகிச் சென்று விடாதீர்கள்.
[35:6] சாத்தான் உங்களுடைய விரோதியாவான், ஆகவே ஒரு விரோதியைப் போல அவனை நடத்துங்கள். நரகவாசிகளாக இருப்பதற்காக மட்டுமே அவன் தன் கட்சியினரை அழைக் கின்றான்.
[35:7] நம்பமறுப்பவர்கள் கடுமையானதொரு தண்டனை க்கு உள்ளாகிவிட்டனர், மேலும் நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் மன்னிப்பிற்கும் மேலும் மகத்தானதொரு பிரதிபலனுக்கும் தகுதிபெற்று விட்டனர்.
[35:8] ஒருவனுடைய தீய காரியங்கள், அவை நன்னெறி யானவை தான் என்று அவன் எண்ணிக் கொள்ளும் அளவிற்கு, அவனுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்ட ஒருவனை கவனித்துப் பார்ப்பீராக. இவ்விதமாக (வழிதவறிச்செல்ல) நாடுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் (வழிகாட்டப் பட்டவராக இருக்க) நாடுவோரை அவர் வழிநடத்துகின்றார். ஆகையால், அவர்களுக்காகத் துக்கப்படாதீர். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[35:9] கடவுள் தான் மேகங்களைக் கலைப்பதற்காகக் காற்றுகளை அனுப்புகின்றவர், பின்னர் அவற்றைத் தரிசு நிலங்களின் பால் நாம் ஓட்டுகின்றோம், மேலும் அத்தகைய நிலங்களை, அவை இறந்து விட்ட பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் இவ்விதமான தேயாகும்.

அனைத்துக் கண்ணியமும் கடவுளுக்கு உரியது

[35:10] கண்ணியத்தைத் தேடும் எவர் ஒருவரும் அனைத்துக் கண்ணியமும் கடவுள்-க்குரியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நல்ல வார்த்தைகள் அவரிடம் மேலேறிச் செல்கின்றன, மேலும் நன்னெறியான காரியங்களை அவர் உயர்த்துகின்றார். தீய காரியங்களைச் சூழ்ச்சி செய்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகின்றனர்; இத்தகைய மக்களின் சூழ்ச்சிகள் தோல்வியுறும் என விதிக்கப் பட்டுள்ளது.

கடவுள் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்

[35:11] தூசியிலிருந்தும், பின்னர் ஒரு சிறு துளியி லிருந்தும் கடவுள் உங்களைப் படைத்தார், பின்னர் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளின் மூலமாக உங்களை இனப்பெருக்கம் செய்யச் செய் கின்றார். அவர் அறிந்திடாமல், எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதோ அன்றிப் பிரசவிப்பதோ இல்லை. முன்னரே இருக்கின்ற ஒரு பதிவேட்டிற்கு ஏற்பவே அன்றி எவர் ஒருவரும் ஒரு நீண்ட வாழ்வு வாழ்வதில்லை, மேலும் எவர் ஒருவருடைய வாழ்வும் குறுகியதாக மாற்றப்படுவதுமில்லை. இது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.

கடவுளின் மகத்துவத்தைப் போற்றுதல் *

[35:12] இரு கடல்களும் ஒரே மாதிரியானவை அல்ல; ஒன்று புதிதாகவும் மேலும் மதுரமாகவும் இருக் கின்றது, அதே சமயம் மற்றொன்று உப்பாகவும் மேலும் அருந்த இயலாததாகவும் உள்ளது. அவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் மிருதுவான இறைச்சியை உண்ணுகின்றீர்கள், மேலும் அணிவதற்கு ஆபரணங்களைப் பிரித்தெடுத்துக் கொள்கின்றீர்கள். மேலும் அவருடைய வாழ் வாதாரங்களைத் தேடியவாறு, கப்பல்கள் அவற்றினூடே சவாரி செய்வதை நீங்கள் பார்க்கின் றீர்கள், நீங்கள் நன்றியுடையவர்களாக இருந்து கொள்ளுங்கள்.
அடிகுறிப்பு

[35:13] அவர் பகலிற்குள் இரவை ஒன்று சேர்க்கின்றார், மேலும் இரவிற்குள் பகலை ஒன்று சேர்க்கின்றார். முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு கால அளவிற்கு ஓடும்படியாக சூரியனையும் மற்றும் சந்திரனையும் அவர் பணித்துள்ளார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; அரசுரிமை அனைத்தும் அவருக்குரியது. அவருடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் எந்த இணைத்தெய்வமும் ஒரு விதையின் ஓட்டளவிற்குக் கூட சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை.

இணைத் தெய்வங்கள் முற்றிலும்சக்தியற்றவை*

[35:14] அவர்களை நோக்கி நீங்கள் அழைத்தால், அவர் களால் உங்களைச் செவியேற்க இயலாது. அவர் கள் உங்களைச் செவியேற்றாலும், அவர்களால் உங்களுக்கு மறுமொழி அளிக்க இயலாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, அவர்கள் உங்களைக் கைவிட்டு விடுவார்கள். மிகவும் நன்கறிந்தவரைப் போல் எவரும் உங்களுக்குத் தெரிவிக்க இயலாது.
அடிகுறிப்பு

[35:15] மனிதர்களே, நீங்கள்தான் கடவுள்-ன் தேவை யுடையவர்கள், அதே சமயம் கடவுள் எவரொரு வருடைய தேவையுமில்லாதவர், மிக்க புகழுக் குரியவர்.
[35:16] அவர் நாடினால், உங்களை அவர் நீக்கிவிட்டு புதியதொரு படைப்பை மாற்றியமைத்துவிட இயலும்.
[35:17] கடவுள்-க்கு இது ஒன்றும் கடினமானதல்ல.
[35:18] எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் பாவத்தைச் சுமக்க முடியாது. பாவங்களால் சுமையேற்றப்பட்ட ஒரு ஆன்மா தனது சுமையில் ஒரு பகுதியைச் சுமந்து கொள்ளுமாறு மற்றொன்றை இறைஞ்சினாலும், அவர்கள் உறவினர்களாக இருந்த போதிலும், வேறு எந்த ஆன்மாவும் அதன் எந்தப் பகுதியையும், சுமக்க இயலாது. தங்களுடைய தனிமையில் தனித் திருக்கும் போதிலும், தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருப்போர், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்போர் மட்டுமே உமது எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளும் மக்கள் ஆவர். தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் எவராயினும் தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய்கின்றார். இறுதி விதி கடவுள் வசமே உள்ளது.
[35:19] குருடரும், பார்ப்பவரும் சமமானவர்கள் அல்ல.
[35:20] அன்றி இருளும், ஒளியும்.
[35:21] அன்றி நிழலின் குளுமையும், சூரியனின் வெப்பமும் .
[35:22] அன்றி உயிருள்ளவர்களும், மரணித்தவர் களும்; தான் நாடுகின்றோரைக் கடவுள் செவி யேற்கச் செய்கின்றார். சமாதிகளில் உள்ளோ ரைச் செவியேற்பவர்களாகச் செய்ய உம்மால் முடியாது.
[35:23] நீர் ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை .

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*

[35:24] நற்செய்தியைத் தாங்கிய ஒருவராகவும், அவ் வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும், சத்தியத் துடன் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.* ஒவ்வொரு சமூகமும் ஓர் எச்சரிப்பவரைப் பெற்றாக வேண்டும்.
அடிகுறிப்பு

[35:25] அவர்கள் உம்மை நம்ப மறுத்தால், அவர் களுக்கு முன்னர் இருந்தவர்களும் கூட நம்பமறுத்துள்ளனர். தெளிவான சான்று களுடனும், மேலும் சங்கீதம், மற்றும் தெளிவாக விளக்குகின்ற வேதங்களுடனும் அவர் களுடைய தூதர்கள் அவர்களிடம் சென்றார் கள்.
[35:26] அதனைத் தொடர்ந்து, நம்பமறுத்தவர்களை நான் தண்டித்தேன்; என் தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!

கடவுளின் வண்ணமயமான படைப்புகள்

[35:27] கடவுள் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார், அதன் மூலம் பல்வேறு நிறங்களில் கனிகளை நாம் விளைவிக்கின் றோம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வில்லையா? மலைகளும் கூட வெவ்வேறு நிறங்களைக் கொண்டுள்ளன; சிகரங்கள் வெண்மையாகவோ, அல்லது சிகப்பாகவோ, அல்லது வேறு ஏதேனும் நிறத்திலோ உள்ளன. மேலும் அண்டங்காக்கைகள் கறுப்பாக உள்ளன.
[35:28] அத்துடன், மனிதர்கள், பிராணிகள் மற்றும் கால்நடைகளும் பல்வேறு நிறங்களில் வருகின்றன. இதனால் தான் அறிவுடையவர் கள் மட்டுமே கடவுள் மீது உண்மையில் பயபக்தியுடைய மக்களாக இருக்கின்றார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவர்.
[35:29] நிச்சயமாக, கடவுள்-ன் புத்தகத்தை ஓதி வருபவர்கள், தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், மேலும் அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களில் இருந்து - இரகசியமாகவும் பகிரங்கமாகவும் - செலவு செய்பவர்கள், ஒரு போதும் நஷ்டமடையாத ஒரு முதலீட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.
[35:30] தாராளமாக அவர்களுக்கு அவர் பிரதி பலனளிப்பார், மேலும் அவர்கள் மீதான தன் அருட்கொடைகளைப் பெருக்குவார். அவர் மன்னிப்பவர், பாராட்டுபவர்.

குர்ஆன்: அனைத்து வேதங்களையும் பூர்த்தி செய்கின்றது

[35:31] முந்திய அனைத்து வேதங்களையும் பூர்த்தி செய்கின்ற, இந்த வேதத்தில் நாம் உமக்கு வெளிப்படுத்தியவை சத்தியமேயாகும். கடவுள் தன் அடியார்களை முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.
[35:32] தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு வேதத்தை நாம் அனுப்பினோம், மேலும் நம் அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கும் எவரையும் அதனைப் பெறுவதற்கு நாம் அனுமதித்தோம். அதனைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் தங்கள் ஆன்மாக்களுக்கு அநீதியிழைத்துக் கொண்டனர், மற்றவர்கள் பகுதி நேரம் மட்டும் இதனை ஆதரித்தார்கள், அதே சமயம் மற்றவர்கள் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க நன்னெறியான காரியங்கள் புரிய ஆவலுடன் இருந்தனர்; இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.

நம்பிக்கையாளர்கள்

[35:33] அவர்கள் ஏதேனின் தோட்டங்களில் நுழை வார்கள், அங்கே அவர்கள் தங்கத்திலும் மற்றும் முத்துக்களிலுமான காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள், மேலும் அதில் அவர்களுடைய ஆடைகள் பட்டாலானதாக இருக்கும்.
[35:34] அவர்கள் கூறுவார்கள், “நமது எல்லாக் கவலைகளையும் நீக்கியதற்காகக் கடவுள்-ஐப் புகழுங்கள். நம் இரட்சகர் மன்னிப்பவர், பாராட்டுபவர்.
[35:35] “அவருடைய அருளின் வெளிப்பாடாக, நிலையான பேரின்ப வீட்டிற்குள் அவர் நம்மை அனுமதித்துள்ளார். இங்கே ஒருபோதும் நாம் சலிப்படைய மாட்டோம், ஒருபோதும் நாம் சோர்வடையவும் மாட்டோம்.”

நம்ப மறுப்பவர்கள்

[35:36] நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்தின் நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர், அங்கே அவர்கள் ஒருபோதும் மரணத்தின் மூலம் முடிவிற்கு வந்து விட மாட்டார்கள், அன்றி தண்டனை அவர்களுக்கு எப்பொழுதும் குறைக்கப் படவும் மாட்டாது. நன்றிகெட்டவர்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம்.
[35:37] அங்கே அவர்கள், “எங்கள் இரட்சகரே, இங்கிருந்து எங்களை நீர் வெளியேற்றினால், நாங்கள் செய்து கொண்டிருந்த காரியங்களுக்குப் பதிலாக, நாங்கள் நன்னெறியான காரியங்கள் புரிவோம்” என்றவாறு அலறுவார்கள். கவனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடியவர்களுக்கு தொடர்ந்த நினைவூட்டல்களுடன், ஒரு வாழ்க்கை முழுவதுமான வாய்ப்பை நாம் தரவில்லையா? எச்சரிப்பவரை நீங்கள் பெற்றுக் கொள்ள வில்லையா? ஆகையால், (விளைவுகளைச்) சுவையுங்கள். வரம்பு மீறியவர்கள் தங்களுக்கு உதவி செய்ய எவரையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
[35:38] கடவுள் தான் வானங்கள் மற்றும் பூமியின் எதிர்காலத்தை அறிந்தவர். ஆழ்மனதின் எண்ணங்கள் அனைத்தையும் அறிந்தவராக அவர் இருக்கின்றார்.

வெற்றி பெற்றவர்களும், தோற்றவர்களும்

[35:39] அவர்தான் பூமியின் வாரிசுகளாக உங்களை ஆக்கியவர். அதனைத் தொடர்ந்து, நம்ப மறுப்பதைத் தேர்ந்தெடுக்கும் எவராயினும் தனக்கே கேடாகத்தான் அவ்வாறு செய்கின்றார். நம்பமறுப்பவர்களுடைய நம்பிக்கையின்மை அவர்கள் பால் அவர்களுடைய இரட்சகரின் வெறுப்பை மட்டுமே அதிகரிக்கின்றது. நம்ப மறுப்பவர்களுடைய நம்பிக்கையின்மை நஷ்டத் திற்குள் அவர்களை ஆழமாக ஆழ்த்தி விடுகின்றது.
[35:40] “கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; பூமியின் மீது அவர்கள் எதனைப் படைத் திருக்கின்றனர் என்று எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக. வானங்களில் ஏதேனும் பங்குரி மையை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக் கின்றனரா? அதில் சந்தேகம் எதுவும் இல்லாத ஒரு புத்தகத்தை நாம் அவர்களுக்குத் தந்திருக் கின்றோமா? உண்மையில், வரம்பு மீறுபவர்கள் ஒருவர் மற்றவருக்கு அளிக்கும் வாக்குறுதி ஒரு மாயை என்பதை விட அதிகம் எதுவுமில்லை.
[35:41] கடவுள் தான் வானங்கள் மற்றும் பூமியை, அவை மறைந்திடாதவாறு பிடித்துக் கொண்டிருப்பவர். வேறு எவரேனும் ஒருவர் அவற்றைப் பிடிப்பதாக இருந்தால், மிகவும் உறுதியாக அவை மறைந்து போய்விடும். அவர் கனிவானவர், மன்னிப்பவர்.

அவர்களைச் சோதனையில் ஆழ்த்துதல்

[35:42] ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வந்தால், குறிப்பிட்ட தொரு கூட்டத்தாரைவிட சிறப்பாக வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருப்பார்கள் என அவர்கள் கடவுள்-ன் மீது முறைப்படியான சத்தியம் செய்தனர்! அந்த எச்சரிப்பவர் இப்போது அவர்களிடம் வந்து விட்டார், ஆயினும், இது அவர்களை வெறுப்பிற்குள் ஆழமாக ஆழ்த்த மட்டுமே செய்தது.
[35:43] பூமியின் மீது ஆணவத்தையும், மேலும் தீய சூழ்ச்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர், மேலும் தீய சூழ்ச்சிகள் அவற்றைச் சூழ்ச்சி செய்பவர்களை மட்டுமே திருப்பித் தாக்கும். கடந்த காலங்களில் இதே விஷயங்களைச் செய்தவர்களுக்கு நேர்ந்த விதியைத் தவிர வேறெதையும் அவர்கள் பின்னர் எதிர்பார்க்க முடியுமா? கடவுள்-ன் வழிமுறை ஒருபோதும் மாற்ற முடியாதது என்பதை நீர் கண்டு கொள்வீர்; கடவுள்-ன் வழிமுறை மாறாதது என்பதை நீர் கண்டு கொள்வீர்.
[35:44] இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து இவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு நேர்ந்த விளைவுகளைக் கவனித்துப் பார்க்கவில்லையா? இவர்களை விடவும் வலிமை மிக்கவர்களாக அவர்கள் இருந்தனர். வானங்களிலோ, அன்றி பூமியின் மீதோ கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றும் மறைக்கப்பட்டு விட முடியாது. அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.
[35:45] மனிதர்களை அவர்களுடைய பாவங்களுக்காகக் கடவுள் தண்டித்தால், பூமியின் மீது ஒரு உயிர்ப்பிராணியையும் அவர் விட்டு விட மாட்டார். ஆனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒருதவணை வரை அவர்களுக்கு அவர் அவகாசம் அளிக் கின்றார். அவர்களுடைய தவணை பூர்த்தியாகி விட்டவுடன், பின்னர் கடவுள் தன் அடியார்களைப் பார்ப்பவராக இருக்கின்றார்.