சூரா 36க்குரிய அடிக்குறிப்புகள்

*36:1 இந்த தலைப்பு எழுத்துக்களின் விரிவான விளக்கத்திற்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

*36:3 மறுக்க இயலாத கண்கூடான ஆதாரங்களுக்கு பின் இணைப்பு 2 & 26ஐப் பார்க்கவும்.

*36:10 ஒவ்வொருவரும் ஏற்கனவே நம்பிக்கையாளர் என்றோ அல்லது நம்ப மறுப்பவர் என்றோ முத்திரை குத்தப்பட்டுள்ளனர். பின் இணைப்பு 14 ஐப் பார்க்கவும்.

36:13-27 கடவுளின் தூதர்கள் சான்று வைத்திருப்பார்கள், கடவுளை மட்டும் ஆதரிப்பார்கள், மேலும் பணம் கேட்க மாட்டார்கள்.

*36:26 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை; அவர்கள் ஆதாம் மற்றும் ஏவாள் வசித்த அதே சுவனத்திற்கு இடம் பெயர்கின்றனர், அவ்வளவுதான். அவர்கள் வேதம் வழங்கப்பட்டவர்கள், மகான்கள், மற்றும் உயிர்த் தியாகம் செய்தவர்கள் ஆகியோருடன் ஒரு சுறுசுறுப்பான குறைவேயில்லாத மிகச் சிறப்பான வாழ்வில் சேர்ந்து கொள்கின்றனர் (பின்இணைப்பு 17ஐப் பார்க்கவும்).

*36:30 தூதர் தூதுத்துவத்திற்கான திடமான சான்றினைக் காட்டி, கடவுளை மட்டுமே வழிபடுவதை ஆதரித்து, மேலும் நம்மிடம் பணம் கேட்காதிருந்தால், நாம் ஏன் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்? (பின் இணைப்பு 2 ஐப் பார்க்கவும்).

*36:69 “திக்ர்” எனும் வார்த்தை, நிச்சயமாக இலக்கியமோ, அன்றிக் கவிதையோ அல்லாத, குர்ஆனின் கணிதக் குறியீட்டையே அடிக்கடி குறிக்கின்றது. தயவு செய்து, 38:1, 8; 15:6,9; 16:44; 21:2,24; 26:5 & 36:11 ஆகியவற்றில் சரிபார்த்துக் கொள்ளவும்.

*36:83 “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (505), “கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725), சூரா எண்ணையும் (36), வசன எண்ணையும் (83) கூட்டினால், அதன் கூட்டுத் தொகை ஒரு 19ன் பெருக்குத் தொகையைத் தருகின்றது (505+725+36+83=1349=19 X 71). அத்துடன், 29 முத்திரை எழுத்துக்கள் கொண்ட சூராக்களில், சூரா 36, 19வது ஆகும்.