சூரா 37க்குரிய அடிக்குறிப்புகள்

*37:5 விண்வெளிப்பொருட்கள் ஒவ்வொன்றும் பூமிக்கிரகத்தில் உதிக்கவும் அஸ்தமிக்கவும் செய்கின்றது. ஒவ்வொரு உதயமும் “ கிழக்கு” என அழைக்கப்படுகின்றது.

*37:6 மிகவும் உள்ளார்ந்த, மேலும் மிகச்சிறிய பிரபஞ்சத்தில் நாம் வசிக்கின்றோம். ஜின்கள் இந்தப் பிரபஞ்சத்திலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

*37:55 சுவனத்திற்குச் சென்று விட்ட மக்கள், தீய விளைவுகள் எதுவுமின்றி, நரகத்திலுள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சென்று சந்திக்க இயலும். மறுவுலகில், எவரொருவரும் கீழ்நோக்கி நகர இயலும், ஆனால் குறிப்பிடப்பட்டதொரு எல்லைக்கப்பால் மேல் நோக்கிச் செல்ல முடியாது. அந்த எல்லை ஒருவருடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது (பின்இனைப்பு 5).

*37:102 மிக்க கருணையாளர் ஒருபோதும் தீமையை ஆதரிப்பதில்லை (7:28). ஜோப் விஷயத்தில் செய்ததைப் போல, ஆப்ரஹாம் தன் மகனை மிக அதிகமாக நேசிக்கின்றார் என்று சாத்தான் வாதிட்டான், மேலும் அந்தக் கடுமையான சோதனையில் ஆப்ரஹாமை ஆழ்த்துவதற்கு அவன் அனுமதிக்கப்பட்டான்.

*37:147 குர்ஆன் 30 எண்களைக் குறிப்பிடுகின்றது : 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,19,20,30,40,50,60,70,80,99, 100, 200, 300,1000, 2000, 3000, 5000, 50000, மற்றும் 100000 . இந்த எண்களின் கூட்டுத்தொகை 162146 அல்லது 19 X 8534 (பின் இணைப்பு1 ஐப் பார்க்கவும்).