சூரா 38: ஸ (ஸாத்)
[38:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[38:1] ஸ. (ஸாத்)*, மேலும் சான்றைக் கொண்டிருக் கின்ற இந்தக் குர்ஆன்.**
அடிகுறிப்பு

[38:2] நம்பமறுப்பவர்கள் ஆணவத்திலும் மற்றும் எதிர்ப்பிலும் மூழ்கி விட்டனர்.
[38:3] அவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் உதவிக்கு அழைத்தனர்; வீணானது.
[38:4] அவர்களிலிருந்தே, ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வருவது கண்டு அவர்கள் வியப்படைந்தனர். நம்பமறுப்பவர்கள் கூறினார்கள், “ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்.
[38:5] “தெய்வங்களையெல்லாம் ஒரே தெய்வமாக அவர் ஆக்கிவிட்டாரா? இது மெய்யாகவே ஆச்சர்யமாக இருக்கின்றது.”
[38:6] அந்தத் தலைவர்கள் அறிவித்தனர், “சென்று உங்களுடைய தெய்வங்களை வழிபடுவதில் உறுதியோடு விடாமுயற்சியுடனிருங்கள். இதுவே விரும்பத்தக்கதாகும்.
[38:7] “நம்முடைய பெற்றோர்களின் மார்க்கத்தி லிருந்து இதனைப்பற்றி நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இது ஒரு பொய்யே யாகும்.
[38:8] “நமக்குப் பதிலாக, அந்தச் சான்று அவருக்கு ஏன் இறங்கி வந்தது?” உண்மையில், என் சான்றைக் குறித்து அவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். உண்மையில், என் தண்டனையை அவர்கள் இன்னும் சுவைக்கவில்லை.
[38:9] சர்வ வல்லமையுடையவரும், கொடையளிப்ப வருமான, உம் இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனரா?
[38:10] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதி காரத்தை தங்கள் வசம் அவர்கள் கொண்டு ள்ளனரா? அவர்கள் தங்களுக்கே உதவிக் கொள்ளட்டும்.
[38:11] மாறாக, அவர்கள் ஒன்றுதிரட்ட இயன்ற எந்தப் படையானாலும்-அவர்களுடைய கட்சியினர் அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டா லும் - தோற்கடிக்கப்படுவார்கள்.
[38:12] அவர்களுக்கு முன்னர் நோவாவுடைய, ஆதுடைய, மற்றும் பெரும்பலம் கொண்ட ஃபேரோவுடைய சமூகத்தார் நம்பமறுத்தனர்.
[38:13] அத்துடன், தமூது, லோத்தின் சமூகத்தார், (மித்யனின்) வனவாசிகள்; அவர்கள் எதிரிகளாக இருந்தனர்.
[38:14] அவர்கள் ஒவ்வொருவரும் தூதர்களை நம்பமறுத்தனர், மேலும் இவ்விதமாக, என்னுடைய தண்டனை தவிர்க்க முடியாத தானது.
[38:15] இந்த மக்கள் ஒரே ஓர் அடியை எதிர் பார்க்க இயலும், அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் மீண்டுவிட முடியாது.
[38:16] அவர்கள்: “எங்கள் இரட்சகரே, கணக்குக் கேட்கும் நாளுக்கு முன்னர் எங்களுக்குரிய தண்டனையை ஏன் நீங்கள் விரைவு படுத்தக்கூடாது” என்று சவால் விட்டார்கள்.
[38:17] அவர்களுடைய கூற்றுக்களைக் குறித்து நீர் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் வளம் நிறைந்தவரான, நம் அடியார் டேவிட்டை நினைவில் கொள்வீராக; அவர் கீழ்ப்படிந் தவராக இருந்தார்.
[38:18] மலைகளை, அவருடன் சேர்ந்து இரவும் பகலும் துதிக்குமாறு அவருடைய பணிக்கென நாம் ஆக்கினோம்.
[38:19] அத்துடன் பறவைகளும் அவருக்குப் பணி செய்வதற்காக ஆக்கப்பட்டன; அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்தவையாக இருந்தன.
[38:20] நாம் அவருடைய அரசுரிமையைப் பலப்படுத்தி னோம், மேலும் ஞானம் மற்றும் நல்ல தர்க்கி க்கும் திறன் கொண்டு அவருக்குக் கொடையளித்தோம்.
[38:21] அவருடைய வழிபாட்டிடத்திற்குள் இரகசியமாக நுழைந்து, சச்சரவிட்டுக் கொண்ட மனிதர் களைப் பற்றிய செய்தியை நீர் பெற்றீரா?
[38:22] அவருடைய அறைக்குள் அவர்கள் நுழைந்த பொழுது, அவர் திடுக்குற்றார். அவர்கள் கூறினர், “அச்சம் கொள்ளாதீர். நாங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொண் டிருக்கின்றோம், மேலும் நாங்கள் உம்முடைய நியாயமான தீர்ப்பைப் பெற விரும்புகின்றோம். எங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர், மேலும் சரியான பாதையில் எங்களை வழிநடத்து வீராக.
[38:23] “இந்த என்னுடைய சகோதரர் தொண்ணூற் றொன்பது* ஆடுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளார், அதே சமயம் நான் ஒரு ஆட்டைச் சொந்தமாகக் கொண்டிருக்கின் றேன். என்னுடைய ஆட்டையும் அவருடைய துடன் சேர்த்து விட அவர் விரும்புகின்றார், மேலும் தொடர்ந்து என்னை நெருக்கிக் கொண்டிருக்கின்றார்”.
அடிகுறிப்பு

டேவிட்டின் பின்பற்றத்தக்க தெய்வ பக்தி

[38:24] அவர், “உம்முடைய ஆட்டை அவருடையதுடன் சேர்த்துவிடும்படி கேட்டதன் மூலம் அவர் உம்மிடம் நியாயமற்றவராக இருக்கின்றார். தங்களுடைய சொத்துக்களை ஒன்றிணை த்துக் கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் ஒருவரையொருவர் அநியாயமாக நடத்திக் கொள்கின்றனர், நம்பிக்கை கொண்டு நன்னெறிகள் புரிபவர்களைத் தவிர, மேலும் இத்தகையவர்கள் மிகச் சிலரே” என்று கூறினார். அதன் பின்னர், டேவிட் தான் சரியான தீர்ப்பைத்தான் அளித்தோமா என அறிய ஆவல் கொண்டார். நாம் அவரைச் சோதிக்கின்றோம் என்று அவர் எண்ணினார். அவர் பின்னர் தன் இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சிப் பிரார்த்தித்தார், குனிந்து விழுந்தார், மேலும் வருந்தித்திருந்தினார்.*
அடிகுறிப்பு

[38:25] நாம் அவரை இந்த விஷயத்தில் மன்னித்தோம். நம்மிடம் கண்ணியமானதொரு அந்தஸ்தையும், மேலும் அழகியதொரு தங்குமிடத்தையும் நாம் அவருக்கு அளித்தோம்.
[38:26] டேவிட்டே, உம்மை நாம் பூமியின் மீது ஓர் ஆட்சியாளராக ஆக்கியுள்ளோம். ஆகையால், மக்களுக்கிடையில் நீர் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும், மேலும் கடவுள்-ன் பாதையிலிருந்து உம்மை திசை திருப்பி விடாதிருக்கும் பொருட்டு, உம்முடைய சுய அபிப்பிராயங்களைப் பின்பற்றாதீர். நிச்சயமாக, கடவுள்-ன் பாதையிலிருந்து வழிதவறிச் செல்பவர்கள், கேள்விக் கணக்கு நாளை மறந்தமைக்காக கடுமையான தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
[38:27] வானத்தையும், மற்றும் பூமியையும் மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், வீணிற்காக நாம் படைக்கவில்லை. இத்தகைய நினைப்பானது நம்ப மறுப்பவர்களுடைய தேயாகும். ஆகையால், நம்பமறுப்பவர் களுக்குக் கேடுதான்; அவர்கள் நரகத்தில் துன்புறுவார்கள்.
[38:28] பூமியில் தீமைகள் செய்பவர்களை நாம் நடத்துவதைப் போன்று நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் நடத்துவோமா? தீயவர்களை நாம் நடத்து வதைப் போன்று நன்னெறியாளர்களை நாம் நடத்துவோமா?
[38:29] இது உமக்கு நாம் இறக்கி அனுப்பிய, புனிதமான ஒரு வேதமாகும்- ஒருவேளை இதன் வசனங்களை அவர்கள் சிந்திக்கக்கூடும். அறிவுத்திறனுடையவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

ஸாலமனின் பின்பற்றத்தக்க தெய்வ பக்தி

[38:30] டேவிட்டிற்கு நாம் ஸாலமனை அளித்தோம்; ஒரு நல்ல, மேலும் கீழ்ப்படிந்த அடியார்.
[38:31] ஒருநாள், இரவு சூழும் வரை அழகிய குதிரைகளுடன் அவர் தன்னை மறந்து மூழ்கி இருந்தார்.
[38:32] அப்போது அவர் கூறினார், “சூரியன் மறைந்து விடும் வரை,* என் இரட்சகரை வழிபடுவதில் மகிழ்வடைவதை விடவும், பொருள் சார்ந்த விஷயங்களில் நான் மகிழ்ந்திருந்து விட்டேன்.
அடிகுறிப்பு

[38:33] “அவற்றை மீண்டும் கொண்டு வாருங்கள்.” (வழியனுப்புவதற்காக,) அவற்றின் கால் களையும் கழுத்துக்களையும் அவர் தடவிக் கொடுத்தார்.
[38:34] இவ்விதமாக ஸாலமனை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; திரளான பொருள் வளங் களைக் கொண்டு நாம் அவருக்கு அருள் பாலித்தோம், ஆனால் அவர் உறுதியோடு அடிபணிந்தார்.*
அடிகுறிப்பு

[38:35] அவர், “என் இரட்சகரே, என்னை மன்னிப்பீராக, மேலும் வேறு எவரும் ஒரு போதும் அடைந்திராத ஓர் அரசுரிமையை எனக்கு அளிப்பீராக. நீரே கொடையளிப்பவர்” என்று கூறினார்.
[38:36] நாம் (அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித் தோம், மேலும்) அவர் விரும்பிய இடமெல்லாம் மழை பொழியும்வண்ணம், காற்றை அவருடைய கட்டளையின் கீழ் பணித்தோம்.
[38:37] மேலும் சாத்தான்களை, கட்டுமானப் பணியிலும் மேலும் முத்துக்குளிக்கவும்.
[38:38] மற்றவர்களும் அவருடைய கட்டளையின் கீழ் வைக்கப்பட்டனர்.
[38:39] “இவை உமக்கு நமது வாழ்வாதாரங்களாகும்; வரம்புகள் எதுவுமின்றி, நீர் தாராளமாக இவற்றைக் கொடுக்கலாம், அல்லது நிறுத்திக் கொள்ளவும் செய்யலாம்.”
[38:40] நம்மிடத்தில் கண்ணியமானதொரு அந்தஸ் திற்கும், மேலும் அற்புதமானதொரு தங்கு மிடத்திற்கும் அவர் தகுதி பெற்று விட்டார்.

சாத்தான் ஜோபைக் கஷ்டப்படுத்துகின்றான்*

[38:41] நம் அடியார் ஜோபை நினைவில் கொள்வீராக: அவர் தன் இரட்சகரை அழைத்தார், “கஷ்டத் தையும் வலியையும் கொண்டு சாத்தான் என்னைத் துன்பப்படுத்தி விட்டான்.”
அடிகுறிப்பு

[38:42] “உம் பாதத்தைக் கொண்டு தரையில் அடிப் பீராக.ஓர் ஊற்று உமக்கு நிவாரணத்தையும் மேலும் ஒரு பானத்தையும் தரும்”.

கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஏற்றபடியே செய்கின்றார்

[38:43] அவருடைய குடும்பத்தாரை நாம் அவருக்குத் திருப்பித் தந்தோம்; இரு மடங்கிற்கும் அதிக மாக. நம் கருணை இவ்விதமானதேயாகும்; அறிவுத்திறன் பெற்றிருப்போருக்கு ஒரு நினைவூட்டலாகும்.
[38:44] “இப்போது, உமது வாக்குறுதியை நிறைவேற்று வதற்காக, நீர் பூமியில் பிரயாணம் செய்து தூதுச் செய்தியை பிரச்சாரம் செய்ய வேண்டும்.” நாம் அவரை உறுதியுடையவராகக் கண்டோம். எத்தகையதொரு நல்ல அடியார்! அவர் அடிபணிந்த ஒருவராக இருந்தார்.
[38:45] நம்முடைய அடியார்கள் ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜேக்கபையும் நினைவில் கொள்வீராக. அவர்கள் வளம் பெற்றவர்களாகவும், மேலும் பார்வையுடையவர்களாகவும் இருந்தனர்.
[38:46] அவர்கள் மீது மகத்தானதொரு அருட் கொடையை நாம் அளித்தோம்: மறுவுலகத் தைக் குறித்த விழிப்புணர்வு.
[38:47] அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் நன்னெறிமிக்கவர்களில் இருந்தனர்.
[38:48] இஸ்மவேல், எலிஷா, மற்றும் துல்கிஃப்லை நினைவில் கொள்வீராக ; மிகவும் நன்னெறி யாளர்களில் உள்ளவர்கள்.

நன்னெறியாளர்கள்

[38:49] இது ஒரு நினைவூட்டல் ஆகும்: அற்புதமான தொரு விதிக்கு நன்னெறியாளர்கள் தகுதி பெற்று விட்டனர்.
[38:50] ஏதேன் தோட்டங்கள் தங்களுடைய வாயில் களை அவர்களுக்காகத் திறந்து கொள்ளும்.
[38:51] அதில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், பலவகைக் கனிகளும், பானங்களும் அவர் களுக்குக் கொடுக்கப்படும்.
[38:52] அற்புதமான வாழ்க்கைத் துணைகளை அவர் கள் கொண்டிருப்பார்கள்.
[38:53] கேள்விக் கணக்கு நாளன்று இதற்காகத்தான் நீங்கள் தகுதி பெற்று இருக்கின்றீர்கள்.
[38:54] நம்முடைய வாழ்வாதாரங்கள் தீர்ந்து போகாத வை.

நம்பமறுப்பவர்கள்: ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொள்கின்றனர்

[38:55] வரம்பு மீறுபவர்களைப் பொறுத்தவரை, அவர் கள் துன்பகரமானதொரு விதிக்கு உள்ளாகி விட்டனர்.
[38:56] நரகத்தில்தான் அவர்கள் எரிவார்கள்; என்ன ஒரு துன்பகரமான தங்குமிடம்!
[38:57] அதில் அவர்கள் சுவைப்பது என்னவென்றால், நரக பானங்களும் மற்றும் கசப்பான உணவுமே யாகும்.
[38:58] மேலும் அதே வகையில் இன்னும் மிக அதிக மானவையும்.
[38:59] “ இந்த ஒரு கூட்டம் உங்களுடன் நரகத்தினுள் எறியப்பட இருக்கின்றது.” (நரகத்தில் வசிப் பவர்களால்) அவர்கள் வரவேற்கப்பட மாட்டார் கள். நரக நெருப்பில் எரிவதற்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டனர்.
[38:60] புதிதாக வந்தவர்கள், “ நீங்களும் வரவேற்கப் பட்டவர்களாக இருக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு முந்தியவர்களாக இருந்தீர்கள், மேலும் எங்களை வழிதவறச் செய்தீர்கள். ஆகையால், துன்பகரமான இந்த முடிவை அனுபவியுங்கள்” என்று பதிலளிப்பார்கள்.
[38:61] அத்துடன் அவர்கள், “எங்கள் இரட்சகரே, இவர்கள்தான் எங்களை இதனுள் வழி நடத்திச் சென்றவர்கள். நரக நெருப்பின் தண்டனையை அவர்களுக்கு இருமடங்காக்குவீராக” என்று கூறுவார்கள்.

வியப்பு!

[38:62] அவர்கள் கூறுவார்கள், “தீயவர்களில் உள்ள வர்கள் என நாம் கருதிக் கொண்டிருந்த மக்களை (நரகத்தில்) நாம் காணாதிருப்பது எப்படி?
[38:63] “நாம் அவர்களைக் கேலி செய்பவர்களாக இருந்தோம்; அவர்களை விட்டு நம் கண்களைத் திருப்பிக் கொள்பவர்களாக நாம் இருந்தோம்.”
[38:64] இது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வாகும்: நரகத்தின் மக்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவு செய்து கொள்வார்கள்.
[38:65] “ நான் உங்களை எச்சரிக்கின்றேன்; ஒருவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள்-உடன் வேறு தெய்வம் இல்லை என்று கூறுவீராக.
[38:66] “வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றின் இரட்சகர்; சர்வ வல்லமை யுடையவர், மன்னிப்பவர்”.

மிகப்பெரும் சச்சரவு

[38:67] கூறுவீராக, “ இதோ அச்சுறுத்துகின்ற செய்தி.
[38:68] “நீங்கள் முற்றிலும் கவனமற்று இருக்கும் ஒன்று.
[38:69] “ மேலான சமூகத்தாரின் * சச்சரவைப் பற்றி, இதற்கு முன்னர் நான் எந்த அறிவையும் கொண்டிருக்க வில்லை.
அடிகுறிப்பு

[38:70] “என்னுடைய ஒரே பணி எச்சரிக்கைகளை உங்களிடம் ஒப்படைப்பதே என நான் உள்ளுணர் வளிக்கப் பட்டுள்ளேன்.”
[38:71] உம் இரட்சகர் வானவர்களிடம் கூறினார், “களிமண்ணிலிருந்து ஒரு மனிதனை நான் படைக் கின்றேன்.
[38:72] “ அவரை நான் வடிவமைத்து, என் ஆவியிலிருந்து அவருள் நான் ஊதியவுடன், அவர் முன்னால் நீங்கள் சிரம்பணிந்து விழ வேண்டும்”.
[38:73] வானவர்கள் சிரம்பணிந்து வீழ்ந்தனர், அவர்கள் அனைவரும்,
[38:74] சாத்தானைத் தவிர; அவன் மறுத்து விட்டான், மேலும் மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருந்தான்.
[38:75] அவர், “சாத்தானே, என் கரங்களைக் கொண்டு நான் படைத்ததற்கு முன் சிரம்பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது? நீ மிகவும் ஆணவம் கொண்டு விட்டாயா? நீ கலகம் செய்கின்றாயா?” என்று கூறினார்.
[38:76] அவன், “நான் அவரை விடவும் மேலானவன்; என்னை நீர் நெருப்பிலிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தீர்” என்று கூறினான்.
[38:77] அவர் கூறினார், “ஆகையால், நீ வெளியேற்றப் பட்டாக வேண்டும், நீ வெளியேற்றப்படுவாய் .
[38:78] “தீர்ப்பு நாள் வரை என் நிந்தனைக்கு நீ உள்ளாகிவிட்டாய் .”
[38:79] அவன், “என் இரட்சகரே, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசமளிப்பீராக” என்று கூறினான்.
[38:80] அவர் கூறினார், “நீ அவகாசமளிக்கப்பட்டவனாக இருக்கின்றாய் .
[38:81] “நிர்ணயிக்கப்பட்ட அந்நாள் வரை.”
[38:82] அவன் கூறினான், “அவர்கள் அனைவரையும் நான் வழிகேட்டில் அனுப்பி விடுவேன் என்று, உமது மாட்சிமையின் மீது நான் ஆணையிடுகின்றேன்.
[38:83] “முற்றிலும் உமக்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட உம்முடைய வணக்கசாலிகளைத் தவிர.”
[38:84] அவர் கூறினார், “ இது தான் சத்தியம், மேலும் நான் சொல்வதெல்லாம் சத்தியம் தான்.
[38:85] “ உன்னையும் உன்னைப் பின்பற்றிய அனைவரையும் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன்.”
[38:86] கூறுவீராக, “நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை, மேலும் நான் ஒரு மோசடிக்காரனும் அல்ல.
[38:87] “உலகத்திற்கு இது ஒரு நினைவூட்டலாகும்.
[38:88] “மேலும் குறுகியதொரு காலத்திற்குள் நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்.”