சூரா 38க்குரிய அடிக்குறிப்புகள்

*38:1 இந்த தலைப்பு எழுத்து (ஸாத்) 7,19, & 38 ஆகிய சூராக்களில் 152 முறைகள் 19 X 8 இடம் பெறுகின்றது (பின் இணைப்பு 1).
**38:1 “ திக்ர்” எனும் வார்த்தை குர்ஆனிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக்காட்டப்பட்டுள்ளது, மேலும் மிகத் தெளிவாக குர்ஆனின் அற்புதக் கணிதக் குறியீட்டைச் சுட்டிக்காட்டுகின்றது. 15:6, 9; 16:44; 21:2, 24; 26:5, & 36:11,69 ஐப் பார்க்கவும்.

*38:23 99என்ற எண் இடம்பெறும் ஒரே இடம் இதுதான். குர்ஆனில் முப்பது வெவ்வேறு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் அவற்றின் கூட்டுத்தொகை 162146, 19 X 8534 ஆக வருகின்றது. பின் இணைப்பு1 ஐப் பார்க்கவும்.

*38:24 99 ஒரு புறத்திலும் அதற்கெதிராக,1 மறு புறத்திலும் என்ற இந்தத் தெளிவான உதாரணத்தில், சரியான தீர்ப்பை வழங்க வேண்டுமென்ற டேவிட்டின் அதீத கவனம் அவரை மன்னிப்புக் கேட்கும்படிச் செய்தது. நாம் இந்த அளவிற்குக் கவனம் கொண்டிருக்கின்றோமா?

*38:32 தன் குதிரைகளினால் ஸாலமன் தன்னுடைய பிற்பகல் தொழுகையைத் தவறவிட்டார். கடவுளை நேசி ப்பதை விடவும் ஸாலமன் தன் குதிரைகளை அதிகமாக நேசித்தார் என்று சாத்தான் வாதிடக்கூடிய சாத்தியத்தை ரத்துச் செய்யும் விதமாக, அவர் தன் குதிரைகளை விட்டு நீங்கிக் கொண்டார்.

*38:34&41 ஸாலமனும், ஜோபும் சோதனை விளிம்பின் இரு எல்லைகளை பிரதிபலிக்கின்றனர். எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் கடவுளை மட்டும் வழிபடுகின்றோமா என்பதைக் காண்பதற்காக செல்வம், உடல் நலம், அல்லது அவற்றின் பற்றாக்குறை, ஆகியவற்றின் மூலமாக நாம் சோதனையில் ஆழ்த்தப்படுகின்றோம்.

*38:41 38:34-41 க்குரிய அடிப்பகுறிப்பைப் பார்க்கவும்.

*38:69 மேலான சமூகத்தாரின் சச்சரவு கடவுளின் பரிபூரணமான அதிகாரத்திற்கு எதிரான சாத்தானின் அறைகூவல் மூலம் துவங்கியது. நிச்சயமாக இது மனித இனத்தின் சரித்திரத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். கடவுளின் பரிபூரணமான அதிகாரம் குறித்து ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க நாம் தவறி விட்டோம். இந்த வாழ்வு நம்மை மீட்டுக் கொள்வதற்கான மூன்றாவது மற்றும் இறுதி வாய்ப்பாக அமைகின்றது. (அறிமுகவுரையையும் பின் இணைப்பு 7ஐயும் பார்க்கவும்).