சூரா 3க்குரிய அடிக்குறிப்புகள்

*3:1, 2:1 ன் அடிக்குறிப்பையும், பின்இணைப்பு 1-ஐயும் பார்க்கவும்

*3:18 கடவுளால் விதிக்கப்பட்ட சாட்சிப்பிரமாணம் (ஷஹாதா); கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை”, அரபி மொழியில் “லா இலாஹா இல்லல்லாஹ்” (மேலும் 37:35, 47:19 ஐப் பார்க்கவும்). ஆனால் சீர் கெட்ட முஸ்லிம்கள் முஹம்மது கடவுளின் தூதர் என்று சேர்த்து அறிவிக்கக்கூடிய இரண்டாவது ஷஹாதாவை வலியுறுத்துகின்றனர். பொருள் வரையரைப்படி இது “ஷிர்க்” (இணைத்தெய்வ வழிபாடு) ஆகும், இன்னும் கடவுளையும் அவருடைய தூதரையும் வெளிப்படையாக எதிர்ப்பதும் ஆகும். கூடுதலாக 2:136, 2:285, 3:84, & 4:150- 152ல் உள்ள, கடவுளின் தூதர்கள் மத்தியில் பேதம் காட்டுவதைத் தடைசெய்யும் முக்கியக் கட்டளைகளை இது மீறுகின்றது. “ முஹம்மது” கடவுளின் தூதர் என்று அறிவிப்பதன் மூலம் மற்ற தூதர்களான ஆப்ரஹாம், மோஸஸ், இயேசு, ஸாலிஹ், மற்றும் ஜோனா போன்றோருக்கு அதே போன்ற அறிவிப்பை செய்யத்தவறுவதால் ஒரு பாகுபாடுகாட்டப்படுகின்றது, மேலும் ஒரு முக்கியக் கட்டளை மீறப்படுகின்றது.

*3:51 சுவிஷேசம் முழுவதிலும், இயேசு சொல்வதாக, திரும்பத் திரும்ப மிகத்துல்லியமாக இந்த வாசகம் இடம் பெறுகின்றது. உதாரணத்திற்கு ஜானின் சுவிசேஷம் 20:17 ஐயும் இன்னும் இயேசு, மித் அன்டு மெசேஜ் எனும் லிஸா ஸ்ப்ரே எழுதிய புத்தகத்தின் 4ஆம் அத்தியாயத்தையும் (யூனிவர்ஸல் யூனிடி, ஃப்ரிமோன்ட், கலிபோர்னியா, 1992) பார்க்கவும்.

*3:54-55 இயேசுவின் ஆன்மாவாகிய அந்த அசலான நபர், உயர்த்தப்பட்டார் என்று நாம் அறிகின்றோம், அதாவது அவரது வெறுமையான ஆன்மாவற்ற, ஆனால் உடற்கூற்றுப்படி உயிருடனிருந்த உடம்பை கைது செய்து சித்ரவதை மற்றும் சிலுவையில் அறைந்து கொல்வதற்கு முன்னதாகவே பூமியில் இயேசுவின் வாழ்வு முடிவடைந்துவிட்டது (பின் இணைப்பு 22ல் விவரங்களை பார்க்கவும்).

*3:54-55 இயேசுவின் ஆன்மாவாகிய அந்த அசலான நபர், உயர்த்தப்பட்டார் என்று நாம் அறிகின்றோம், அதாவது அவரது வெறுமையான ஆன்மாவற்ற, ஆனால் உடற்கூற்றுப்படி உயிருடனிருந்த உடம்பை கைது செய்து சித்ரவதை மற்றும் சிலுவையில் அறைந்து கொல்வதற்கு முன்னதாகவே பூமியில் இயேசுவின் வாழ்வு முடிவடைந்துவிட்டது (பின் இணைப்பு 22ல் விவரங்களை பார்க்கவும்).

*3:59 இயேசு மற்றும் ஆதாமின் படைப்பின் ஒற்றுமை கணிதப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுகின்றது. இயேசுவும், ஆதாமும் குர்ஆனில் ஒரே எண்ணிக்கையிலான தடவைகள், ஒவ்வொருவரும் 25 தடவைகள் குறிப்பிடப்படுகின்றனர்.

*3:75 குர்ஆனின் கணிதக் குறியீடு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னதாக, முஹம்மது ஒரு எழுத்தறிவற்ற மனிதர் என்றும் இத்தகைய ஒரு மகத்தான புத்தகத்தை அவரால் எழுதியிருக்க இயலாது என்றும் சில அறிஞர்கள் தவறாக வாதிட்டனர். ‘உம்மி’, எனும் வார்த்தை எழுத்தறிவற்றவர் என்பதைக் குறிக்கின்றது என்றும் வாதிட்டு அவர்கள் அதன் அர்த்தத்தைச் சிதைத்தனர். இந்த வசனம் “உம்மிய்யீன்” என்பதன் பொருள் “பிறசமயத்தவர்” என்பதுதான் என்று நிரூபிக்கின்றது. (மேலும் 62:2, பின் இணைப்பு 28ஐ பார்க்கும்).

*3:81 இந்த முக்கியமான முன்னறிவிப்பு இப்போது நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த வசனத்திலும், சுவிசேஷத்தின் மல்கியா 3:1-21, லூக்கா 17:22-36, மற்றும் மத்தேயு 24:27லும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளபடி, கடவுளின் உடன்படிக்கைத் தூதர், கடவுளின் வேதம் வழங்கப்பட்டவர்களால் ஒப்படைக்கப்பட்ட கடவுளின் தூதுச் செய்திகளைத், தூய்மைப்படுத்தி, மேலும் ஒன்றிணைக்க வேண்டியிருக்கின்றது. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்துத்துவம், பௌத்தக் கோட்பாடு முதலியவை முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டன. சர்வ வல்லமையுடையவரான கடவுளின் நாட்டம், அவரை மட்டும் வழிபடுவது என்னும் ஒரே குடையின் கீழ் அவற்றைத் தூய்மைப்படுத்தி, அவற்றை ஒன்றிணைக்க வேண்டியதாயிருந்தது. கடவுள், தன்னுடைய உடன்படிக்கைத் தூதருக்கு ஆதரவாக அவரின் பெயரை, குர்ஆனின் கணிதக்குறியீட்டின் அடிப்படையில், ரஷாத் கலீஃபா’ என்று, எதிர்வாதம் செய்ய இயலாதபடிகுறிப்பிடத்தக்க, எண்ணற்ற ஆதாரங்களை வழங்கியிருக்கின்றார். உதாரணமாக, ‘ரஷாத்’ என்பதின் எழுத்தெண் மதிப்பு (505), ‘கலீஃபா’ என்பதின் மதிப்பு (725), அத்துடன் வசன எண் (81) இந்த மூன்றையும் கூட்டினால் 1311 அல்லது 19 69 ( விபரமான ஆதாரங்களுக்கு பின் இணைப்பு 2ஐ பார்க்கவும்).

*3:86 3:82-90, வரை உள்ள வசனங்கள் கடவுளின் உடன்படிக்கைத் தூதரை ஏற்க மறுப்பவர்கள், அப்பொழுதிலிருந்து குர்ஆனை நம்பாதவர்கள் என்பதால், அடிபணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) ஆக தொடர்ந்து இருக்க இயலாது என்ற தகவலை நமக்குத் தருகின்றது. 3:86ல் குறிப்பிட்டுள்ள சான்றுகள் கடவுளின் உடன்படிக்கைத் தூதரால் வெளிப்படுத்தப்பட்டுள்ள குர்ஆனின் கணிதக் குறியீட்டைக் குறிக்கின்றது. 3:86 மற்றும் 3:90 இரண்டும் “நம்பிக்கை கொண்ட பின் நம்ப மறுப்பதைப்பற்றி பேசுகின்றது.”

*3:96 இந்த சூரா “ம” எனும் தலைப்பு எழுத்தைக் கொண்டது, மேலும் “மெக்கா” என்பதன் வித்தியாசமான எழுத்தமைப்பாக ‘பெக்கா’ என்று எழுதுவதன் மூலம், குர்ஆனின் கணிதக் குறியீட்டிற்கு ஏற்ப “ம” க்கள் இடம் பெறுகின்றன. ‘மெக்கா’வின் வழக்கமான எழுத்தமைப்பு “ம” வின் எண்ணிக்கையை அதிகப் படுத்தி விடும் (பின் இணைப்பு1).

*3:124-125 முப்பது வெவ்வேறு எண்கள் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் கூட்டு தொகை 162146, 19 X8534 ஆகும். இது குர்ஆனின் கணித அற்புதத்தோடு ஒத்திருக்கின்றது (பின் இணைப்பு ஒன்றை பார்க்கவும்).

*3:124-125 முப்பது வெவ்வேறு எண்கள் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் கூட்டு தொகை 162146, 19 X8534 ஆகும். இது குர்ஆனின் கணித அற்புதத்தோடு ஒத்திருக்கின்றது (பின் இணைப்பு ஒன்றை பார்க்கவும்).

*3:130 வங்கிமுதலீடுகளுக்கு கிடைக்கும் வட்டியும், கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டியும் அளவிற்கதிகமாக (5-15%) இல்லாதிருந்தால் அவை சட்ட பூர்வமாக அனுமதிக்கப்பட்டவையே ஆகும். வங்கிகள், முதலீடு செய்து மேலும் அவற்றின் இலாபங்கள் முதலீட்டாளர்களுக்கும் சென்று சேர்கின்றது. அனைத்து தரப்பினரும் மகிழ்வடைவதாலும், எவரும் பாதிக்கப்படாமலிருப்பதாலும் வங்கிகள் வழங்கும் வட்டியைப் பெற்றுக் கொள்வது முற்றிலும் அனுமதிக்கப்பட்டதே ஆகும் (2:275-ஐ பார்க்கவும்).

*3:159 “கடவுளையே நாங்கள் உறுதியாய் நம்புகின்றோம்” எனும் சொற்றொடரை தாங்கியிருக்கும் ஒரே பணம் U.S.A. வினுடைய பணமேயாகும். உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணமாக இருக்கின்றது என்பதும், மேலும் மற்ற அனைத்து பணங்களும் அதன் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன என்பதும் உண்மையாகும்.

*3:169 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை என்பதைக் குர் ஆனிலிருந்து நாம் கற்றுக் கொள்கின்றோம். அவர்கள் இந்த உலகத்திற்குரிய அவர்களுடைய உடலை விட்டு சிக்கலின்றி வெளியேறி ஆதாமும், ஏவாளும் முன் ஒரு காலம் வாழ்ந்த அதே சுவனத்திற்கு நேரடியாக செல்கின்றனர் (2:154, 8:24, 16:32, 22:58, 44:56 & 36:26-27, பின் இணைப்பு 17 ஐயும் பார்க்கவும்).

*3:179 கடவுளின் உடன்படிக்கைத் தூதருக்கு வெளிப்படுத்தப்பட்ட எதிர்கால நிகழ்வுகளில் உலகின்முடிவு ஓர் உதாரணமாகும். 72:27ன் அடிக்குறிப்பை பார்க்கவும்.

*3:186 நுழைவுச் சோதனைகளில் தேறிய பிறகு, கடவுளை மட்டும் வழிபடுபவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்கள் இப்பொழுதும் எப்பொழுதும் மிகச் சிறப்பான ஒரு வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். 29:2-3, 10:62, மற்றும் 24:55, ஐப் பார்க்கவும்.

*3:191 உங்கள் மனங்களை மிக அதிகமான நேரம் ஆக்ரமித்திருக்கும் எவரேனும் ஒருவர் அல்லது ஏதேனும் ஒன்று தான் உங்களுடைய கடவுள் ஆகும். கடவுளை மிக அதிகமான நேரம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர். 23:84-89 , மற்றும் பின் இணைப்பு-27 ஐ பார்க்கவும். நன்னெறியாளர்களான