சூரா 4: பெண்கள் (அல்-நிசா)
[4:0]கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[4:1]மனிதர்களே, உங்களுடைய இரட்சகரை கவனத்தில் கொள்ளுங்கள், அவர் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து படைத்தார், பின்னர் அதிலிருந்து அதன் துணையைப் படைத்தார், பின்னர் அவ்விருவரிலிருந்து, ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தார். எவர் மீது நீங்கள் சத்தியப் பிரமாணம் செய்கின்றீர்களோ அந்த கடவுள்-ஐக் கண்ணியப்படுத்துங்கள், மேலும் பெற்றோர்களையும் கண்ணியப்படுத்துங்கள். கடவுள் உங்களை * கண்காணிப்பவராக இருக்கின்றார்.

அடிகுறிப்பு

அநாதைகளைக் கவனியுங்கள்

[4:2]அநாதைகளுக்குரிய சொத்துக்களை அவர் களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும். நல்லவற்றிற்கு பதிலாக கெட்டவற்றை மாற்றிக் கொள்ளாதீர்கள்,மேலும் அவர்களுடைய சொத்துக்களை உங்களுடையதுடன் சேர்த்து செலவழித்து விடாதீர்கள். இது மிகப்பெரிய அநீதியாகும்.

பலதார மணத்திற்கான காரணங்கள்

[4:3]அநாதைகளுக்கு நலம் பயக்கும் என்று நீங்கள் எண்ணினால், அவர்களுடைய தாய்மார்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்-இருவரையோ, மூவரையோ அல்லது நால்வரையோ நீங்கள் மணந்து கொள்ளலாம். நியாயமில்லாதவராக ஆகிவிடுவோமோ என்று நீங்கள் அஞ்சினால் ஒருவரை மட்டும் கொண்டோ அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ளதைக் கொண்டோ நீங்கள் திருப்தி கொள்ளுங்கள். கூடுதலாக, இவ்விதமாக செய்து உங்களுக்கு ஏற்படக்கூடிய பணக் கஷ்டத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

அடிகுறிப்பு

[4:4]நீங்கள் பெண்களுக்கு அவர்களுக்கு தகுந்த வரதட்சணைகளை நியாயமாக கொடுக்க வேண்டும். அவர்கள் தாமாக விரும்பி எதையாவது விட்டுக் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். அது உங்களுக்கு உரிமையுடையதாகும்.

[4:5]கடவுள் உங்களை பாதுகாப்பாளர்களாக்கி ஒப்படைத்திருக்கின்ற அநாதைகளின் சொத்துக் களை அவர்கள் பக்குவமடைவதற்கு முன்பு கொடுத்து விடாதீர்கள். நீங்கள் அதிலிருந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள், மேலும் அவர்களைக் கனிவுடன் நடத்துங்கள்.

[4:6]அநாதைகள் தக்க பருவம் அடைந்துவிட்டால் அவர்களை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். போதுமான பக்குவத்தை அவர்கள் அடைந்துவிட்டதை நீங்கள் கண்டறிந்த உடனே அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். அவற்றை அவர்கள் வளர்ச்சி அடைவதற்கு முன்பு விரைவாக, ஊதாரித்தனமாக செலவழித்து விடாதீர்கள். வசதி படைத்த பாதுகாவலர் கூலி எதையும் பெறக் கூடாது. ஆனால், ஏழையான பாதுகாவலர் நியாயமான கூலியைப் பெறலாம். அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுக்கும் போது நீங்கள் சாட்சியாளர்களை வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கிடுபவராக கடவுள் போதுமானவர்.

பெண்களின் வாரிசு சொத்துரிமைகள்

[4:7]பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் ஆண்களுக்கு ஒரு பங்குண்டு. பெற்றோர்களும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் பெண்களுக்கும் ஒரு பங்குண்டு. வாரிசுச் சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அல்லது அதிகமாக இருந்தாலும் சரி, நிச்சயமாக ஒரு பங்கு (பெண்கள் அடைந்தே தீர வேண்டும்).

[4:8]வாரிசு சொத்துக்களைப் பங்கிடும் போது உறவினர்களும், அநாதைகளும், மேலும் தேவை உடையவர்களும் அங்கு இருந்தால், நீங்கள் அதி லிருந்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டும், மேலும் அவர்களை கனிவுடன் நடத்த வேண்டும்.

[4:9]தங்களுக்குப் பின்னால் தங்களுடைய சொந்தக் குழந்தைகளை விட்டுச் செல்வது பற்றி கவலைப் படுபவர்கள், கடவுள்-ஐ கவனத்தில் கொண்டும் மேலும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

[4:10]அநாதைகளின் சொத்துக்களை அநீதமாக செலவு செய்கின்றவர்கள் தங்கள் வயிறுகளுக்குள் நெருப்பை உட்கொள்கின்றார்கள். மேலும் நரகில் துன்பப்படுவார்கள்.

உயில் விட்டுச் செல்லப்படவில்லையென்றால்*

[4:11]உங்கள் குழந்தைகளின் நலனிற்காக ஒரு உயிலைக் கடவுள் விதியாக்குகின்றார். பெண்ணின்* பங்கைப் போல் இரு மடங்கு ஆண் பெறவேண்டும். வாரிசுகள் பெண்களாக மட்டும் இருவருக்கு மேல் இருந்தால், உயிலில் மூன்றில் - இரண்டு பங்குபெற வேண்டும். ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால் அவளுக்கு ஒரு - பாதி கிடைக்க வேண்டும். இறந்தவர் ஏதேனும் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தால் இறந்த வரின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் ஆறில் - ஒரு பங்கை பெறவேண்டும். அவருக்கு குழந்தை கள் இல்லாமல் பெற்றோர் மட்டும் வாரிசாக இருந்தால் அவருடைய தாயார் மூன்றில் ஒரு பங்கைப் பெறவேண்டும். அவருக்கு உடன் பிறந்தவர்கள் இருந்தால் - தாயார் ஆறில் ஒருபங்கைப் பெறவேண்டும். இவை அனைத்தையும் இறந்தவரின் உயில்* ஏதாவது இருந்தால் அதையும், மேலும் எல்லா கடன்களையும் கொடுத்த பிறகுதான் நிறைவேற்ற வேண்டும். உங்கள் பெற்றோர்களும் மற்றும் பிள்ளைகளும் என்று வரும்போது அவர்களில் உண்மையில் உங்களுக்கு சிறந்தவர்கள் மேலும் அனுகூலமானவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியாது. இது கடவுள்-ன் சட்டம் ஆகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

அடிகுறிப்பு

வாழ்க்கைத் துணைகளுக்கான வாரிசுரிமைகள்

[4:12]உங்கள் மனைவியருக்கு குழந்தைகள் இல்லா திருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் நீங்கள் பாதியைப் பெறுவீர்கள். அவர்களுக்கு குழந்தை கள் இருந்தால் நீங்கள் நான்கில் ஒரு பங்கைப் பெறுவீர்கள். இவை அனைத்தையும் அவர்கள் ஏதேனும் உயில் விட்டுச் சென்று இருந்தால் அதையும், மேலும் எல்லா கடன்களையும் கொடுத்த பிறகுதான் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் விட்டுச் சென்றதில், உங்களுக்கு குழந்தைகள் இல்லாதிருந்தால் அவர்கள் நான்கில்-ஒரு பங்கைப் பெறுவார்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் அவர்கள் எட்டில் ஒரு பங்கைப் பெறுவார்கள். இவை அனைத்தையும் நீங்கள் ஏதேனும் உயில்விட்டுச் சென்றிருந்தால் அதையும் மேலும் எல்லா கடன்களையும் கொடுத்த பிறகுதான் நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் ஆணோ அல்லது பெண்ணோ தனி ஆளாக இருந்து அவருக்கு இரண்டு உடன் பிறப்புக்களை, ஆணோ அல்லது பெண்ணோ, விட்டுச் சென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் ஆறில்- ஒரு பங்கு உரிமையை பெறுவார்கள். ஒரு வேளை அதிகமான உடன் பிறப்புகள் இருந்தால், அப்போது அவர்கள் மூன்றில்-ஒரு பங்கை சமமாக பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இவை அனைத்தையும் ஏதேனும் உயில் விட்டுச் சென்று இருந்தால் அதையும் மேலும் எல்லாக் கடன்களையும் கொடுத்தபிறகுதான் நிறைவேற்ற வேண்டும். இதனால் எவரும் பாதிக்கப்படமாட்டார்கள். இது கடவுள் -ஆல் கட்டளையிடப்பட்ட ஒரு தீர்வாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், இரக்கமுள்ளவர்.

கடவுள் அவருடைய தூதர் மூலம் நம்முடன் தொடர்பு கொள்கின்றார்

[4:13]இவை கடவுள்-ன் சட்டங்கள் ஆகும். எவர்கள் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்படிகின்றார்களோ அவர்களை, அவர் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் பிரவேசிக்க செய்வார். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள். இது மகத்தான மாபெரும் வெற்றியாகும்.

[4:14]எவனொருவன், கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்படியாது, மேலும் அவருடைய சட்டங்களை மீறுகின்றானோ

சுகாதாரத்திற்காக தனிமைப்படுத்துதல்

[4:15]உங்களுக்கிடையே உள்ள பெண்களில் எவரேனும் விபச்சாரம் செய்கின்றார்கள் எனில் அவர்களுக்கு எதிராக கண்டிப்பாக உங்களில் இருந்தே நான்கு சாட்சிகள் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு சாட்சியம் அளித்தால் அது போன்ற பெண்களை நீங்கள் அவர்கள் மரணிக்கும் வரை அல்லது கடவுள் அவர்களுக்கு ஒரு வழியை உருவாக்கும் வரை அவர்களுடைய* வீடுகளிலேயே தடுத்து வைத்து இருக்க வேண்டும்.

அடிகுறிப்பு

[4:16]விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.* அவர்கள் வருந்தித்திருந்தி மேலும் சீர்திருத்திக் கொண்டால், நீங்கள் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டும். கடவுள் மீட்சியளிப்பவர், மிக்க கருணையாளர்.

அடிகுறிப்பு

வருந்தித்திருந்துதல்

[4:17]அறியாமையினால் பாவத்தில் விழுந்து விட்டு பின்னர் உடனே அதிலிருந்து வருந்தித்திருந்து பவர்களுடைய வருந்தித்திருந்துதலே கடவுள்-ஆல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. கடவுள் அவர்களுக்கு மீட்சி அளிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[4:18]எவர்கள், மரணம் அவர்களிடம் வரும்வரை பாவங்கள் செய்துவிட்டு, பின்னர் “இப்போது நான் வருந்தித்திருந்துகின்றேன்” என்று கூறினால் அவர்களின் வருந்தித்திருந்துதல் ஏற்றுக் கொள்ளப்படாது. அன்றியும் நம்ப மறுப்பவர்களாகவே மரணிக்கின்றவர்களிடம் இருந்தும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. நாம் இவர்களுக்காக ஒரு வேதனை நிறைந்த தண்டனையை தயார் செய்து இருக்கின்றோம்.

[4:19]நம்பிக்கை கொண்டோரே, பெண்களின் உயிலுக்கு எதிராக அவர்கள் விட்டுச் சென்றதை நீங்கள் அடைவது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் விபச்சாரம் செய்தது நிரூபிக்கப் பட்டாலன்றி நீங்கள் அவர்களுக்கு அளித்த வற்றில் இருந்து எதையும் திரும்பக் கொடுக்கும் படி அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. நீங்கள் அவர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். நீங்கள் அவர்களை வெறுப்பீர் களாயின், கடவுள் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தியுள்ள ஒன்றை நீங்கள் வெறுக்கக் கூடும்.

பெண்களுக்கான பாதுகாப்பு

[4:20]நீங்கள் தற்போதுள்ள மனைவிக்கு பதிலாக, இன்னொரு மனைவியை திருமணம் செய்ய விரும்பினால், நீங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுத்திருந்தாலும், நீங்கள் அவளு க்கு கொடுத்ததில் இருந்து எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளகூடாது. நீங்கள் வஞ்சக மாகவும், குரோதமாகவும், மேலும் பாவகரமாகவும் அதை எடுத்துக் கொள்வீர்களா?

[4:21]அவர்கள் உங்களிடம் முறைப்படி வாக்குறுதி பெற்று நீங்கள் ஒருவருக்கொருவர் அந்தரங்க மாக வாழ்ந்து விட்ட பிறகு அதை நீங்கள் எப்படி திரும்ப எடுத்துக் கொள்ள இயலும்.?

தந்தைக்கான மரியாதை

[4:22]உங்கள் தந்தைமார்கள் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் - ஏனெனில் அது ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் வெறுக்கத்தக்க செயலாகும்-ஏற்கனவே நடந்து விட்ட திருமணங்களுக்கு விதி விலக்கு உண்டு, மேலும் அந்த திருமணங்களை முறித்து விடக் கூடாது.

முறை தவறிய திருமணங்கள் தடை செய்யப்படுகின்றன

[4:23](திருமணம் செய்து கொள்ள) உங்களுக்கு தடுக்கப்பட்டவர்கள், உங்களுடைய தாயார்கள், உங்களுடைய மகள்கள், உங்களுடைய சகோ தரிகள், உங்களுடைய தந்தையர்களின் சகோ தரிகள், உங்களுடைய தாயார்களின் சகோ தரிகள், உங்களுடைய சகோதரரின் மகள்கள், உங்களுடைய சகோதரியின் மகள்கள், உங்களுக்கு பாலூட்டிய தாய்மார்கள், உங்களு க்கு பாலூட்டிய தாய்மார்களால் பாலூட்டப்பட்ட பெண்கள், உங்களுடைய மனைவிகளின் தாயார்கள், எவரோடு நீங்கள் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டீர்களோ, அந்த மனைவி யரின் மகள்கள், ஆனால் திருமண உறவை எற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் அந்த மகளை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். மேலும் உங்களுக்குப் பிறந்த மகன்களை திருமணம் செய்திருந்த பெண்களும் உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளனர். மேலும் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வதும் கூடாது - ஆனால் இவ்வாறு முன்னரே நடந்திருந்தால் அந்த திருமணங்களை முறிக்க வேண்டாம். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

வரதட்சணையும் அவசியம்

[4:24]இன்னும் ஏற்கனவே திருமணம் ஆன பெண்கள், உங்களுடன்* போரிடும் அவர்களுடைய நம்பமறுக்கும் கணவர்களை விட்டு விட்டு புகலிடம் தேடி உங்களிடம் வந்தாலேயன்றி அவர்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டு ள்ளது. இவை உங்களுக்கு கடவுள்-ன் கட்டளைகள் ஆகும். மற்ற அனைத்து வகையினரையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணைகளை கொடுத்து திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விபச்சாரம் செய்யாமல் உங்களுடைய நல்லொழுக்கத்தைப் பேணிக் கொள்ளுங்கள். இவ்விதமாக, அவர்களில் எவரை நீங்கள் விரும்புகின்றீர்களோ அவர் களுக்கு தீர்மானிக்கப்பட்ட வரதட்சணையை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும். நீங்கள் ஒருவருக் கொருவர் ஒப்புக் கொண்டு வரதட்சணையில் அனுசரித்துச் செல்வதில் தவறில்லை. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

அடிகுறிப்பு

[4:25]உங்களில் எவருக்கேனும் சுதந்திரமான நம்பிக்கை கொண்டபெண்களை-திருமணம் செய்ய இயலவில்லை என்றால் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை திருமணம் செய்து கொள்ள லாம். உங்களுடைய நம்பிக்கையை கடவுள் நன்கறிவார், மேலும் நம்பிக்கையைப் பொறுத்தவரை நீங்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்களே. நீங்கள் அவர்களைத் திருமணம் செய்வதற்கு முன்பு அவர்களுடைய பாதுகாவலரிடம் அனுமதி பெற வேண்டும், மேலும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரதட் சணையை நியாயமான முறையில் கொடுத்து விடவேண்டும். அவர்கள் விபச்சாரம் செய்யாமலும், அல்லது இரகசியக் காதலர்களை வைத்துக் கொள்ளாமலும், நீதமாக ஒழுக்கத்தைப் பேணிக் கொள்ளவேண்டும். திருமணம் மூலமாக சுதந்திரமடைந்த பின் அவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் அவர்களுக்குரிய தண்டனை சுதந்திரமான பெண்களுக்குரிய தண்டனையில் பாதியாகும்.* அடிமையை திருமணம் செய்வது என்பது காத்திருக்க இயலாதவர்களுக்கு ஒரு இறுதி புகலிடமாகும். பொறுமையாக இருப்பது உங்களுக்கு சிறந்தது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணை யாளர்.

அடிகுறிப்பு

[4:26]கடவுள் உங்களுக்கு விஷயங்களை விளக்கி மேலும் கடந்த கால முன்னுதாரணங்களின் மூலமாக உங்களை வழி நடத்தி, மேலும் உங்களுக்கு மீட்சி அளிக்க விரும்புகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

கடவுளின் கருணை

[4:27]கடவுள், உங்களுக்கு மீட்சியளிக்க விரும்புகின்றார், அதே சமயம் தங்களுடைய சிற்றின்ப ஆசைகளை பின் தொடர்ந்து செல்பவர்கள், நீங்கள் நல்வழியினின்றும் விலகி பெருமளவில் வழி தவற வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

[4:28]மனித இனம் பலவீனமாகப் படைக்கப்பட்டிருப் பதால் கடவுள் உங்கள் சுமைகளை இலேசாக்க விரும்பு கின்றார்.

கொலை, தற்கொலை மற்றும் சட்ட விரோதமான சம்பாத்தியங்கள் தடுக்கப்பட்டுள்ளன

[4:29]நம்பிக்கை கொண்டோரே, ஒருவர் மற்றொருவர் சொத்துக்களை சட்ட விரோதமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்-ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் விவகாரங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளன. நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளக் கூடாது. கடவுள் உங்கள் மீது கருணை நிறைந்தவராக இருக்கின்றார்.

[4:30]எவன் ஒருவன் கெட்ட எண்ணத்துடன் வேண்டு மென்றே இந்த வரம்பு மீறல்களைச் செய்கின்றானோ, அவனுக்கு நாம் நரகத்தை தண்டனையாக்குவோம். இதைச் செய்வது கடவுள்-க்கு எளிதானது.

[4:31]உங்களுக்கு தடுக்கப்பட்ட பெரும் பாவங்கள் செய்வதை, நீங்கள் தவிர்த்துக் கொண்டால் நாம் உங்கள் பாவங்களை மன்னித்து, மேலும் உங்களை ஒரு கண்ணியமான இடத்தில் பிரவேசிக்க அனுமதிப்போம்.

ஆண்களும், பெண்களும் தனித்தனி தன்மைகள் கொடுக்கப்பட்டவர்கள்

[4:32]கடவுள்-ஆல் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்ட தன்மைகளை அடைய வேண்டும் என்று நீங்கள் பேராசைப்படாதீர்கள். ஆண்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை அனுபவிக்கின்றார்கள், மேலும் பெண்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை அனுபவிக்கின்றார்கள். நீங்கள் கடவுள்-இடம் அவருடைய அருளைப் பொழியும்படி இறைஞ்சிப் பிரார்த்திக்கலாம். கடவுள் அனைத்துப் பொருட் களையும் முழுவதும் அறிந்தவராக இருக்கின்றார்.

கடவுளால் தீர்மானிக்கப்பட்ட வாரிசுரிமை சட்டங்களை ஆட்சேபிக்காதீர்கள்

[4:33]பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விட்டுச் சென்ற பரம்பரை சொத்துக்களில் இருந்து உங்கள் ஒவ்வொருவரின் பங்கை நாம் நிர்ணயித்துள்ளோம். கூடுதலாக திருமணம் மூலம் உங்களுக்கு உறவினர்களானவர்களுக்கு, அவர்களுக்குரிய பங்கை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். கடவுள் எல்லாவற்றையும் பார்க்கின்றார்.

உங்களுடைய மனைவியை அடிக்காதீர்கள்

[4:34]ஆண்கள், பெண்களுக்கு** பொறுப்பாளர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கடவுள் அவர் களுக்கு குறிப்பிட்ட தன்மைகளை கொடுத் துள்ளார், மேலும் அவர்களை வருமானம் ஈட்டுபவர்களாகவும் ஆக்கியுள்ளார். இது கடவுள்-ன் கட்டளையாக இருப்பதால் நன்னெறியுடைய பெண்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் அவர்களுடைய கணவர்களுக்கு அவர்கள் இல்லாத நேரத்திலும் மதிப்பளிப்பார்கள். நீங்கள் பெண்களிடமிருந்து கலகத்தை அனுபவிக்க நேர்ந்தால் முதலில் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தவேண்டும், பின்னர் படுக்கையை விட்டு விலக்கிவைத்தல் (போன்ற எதிர் மாறான நடவடிக்கைகளைப் பயன் படுதலாம்) அதன் பின்னர் (கடைசி மாற்று வழியாக) அவர்களை அடிக்கலாம். அவர்கள், உங்களுக்கு கீழ்படிந்தால் அவர்களுக்கெதிராக வரம்பு மீறுவதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை. கடவுள் மிக உயர்ந்தவர், மேலான அதிகாரம் உடையவர்.

அடிகுறிப்பு

திருமண மத்தியஸ்தம்

[4:35]ஒரு தம்பதியர், பிரிந்துவிடக் கூடும் என்று அஞ்சினால் நீங்கள் கணவனுடைய குடும்பத்தில் இருந்து ஒரு மத்தியஸ்தரையும், மேலும் மனைவி யின் குடும்பத்தில் இருந்து ஒரு மத்தியஸ் தரையும், நியமிக்க வேண்டும்; அவர்கள் சமாதானமாகிவிட தீர்மானித்தால் அவர்கள் ஒன்று சேர்வதற்கு கடவுள் உதவிசெய்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.

முக்கியமான கட்டளைகள்

[4:36]நீங்கள் கடவுள் -ஐ மட்டும் வழிபட வேண்டும் - அவருடன் எந்த ஒன்றையும் இணைக்கக் கூடாது. நீங்கள் பெற்றோர்களுக்கும் உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டார்க்கும், உறவினர் அல்லாத அண்டை வீட்டார்க்கும், நெருங்கிய கூட்டாளிகளுக்கும், வேற்று மனிதர்களான வழிப்போக்கர்களுக்கும் மேலும் உங்கள் பணியாட்களுக்கும் உரிய மதிப்பளியுங்கள். கடவுள் இறுமாப்பு காட்டுபவர்களை நேசிப் பதில்லை.

[4:37]அவர்கள், கடவுள் அவருடைய அருட்கொடை யில் இருந்து வழங்கியதை மறைத்து, தானும் கஞ்சத்தனம் செய்து பிறரையும் கஞ்சத்தனம் செய்ய உபதேசிப்பவர்கள். நாம் நம்ப மறுப்பவர் களுக்கு ஒரு இழிவான தண்டனையை தயார் செய்து வைத்துள்ளோம்.

[4:38]கடவுள்-ஐயும் இறுதி நாளையும் நம்ப மறுத்த நிலையில் அவர்கள் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே பணத்தை தர்மம் கொடுக்கின்றார்கள். ஒருவனது கூட்டாளியாக சாத்தான் இருந்தால், அவன் மிக மோசமான கூட்டாளி ஆவான்.

[4:39]அவர்கள் ஏன் கடவுள்-ஐ மற்றும் இறுதி நாளை நம்பவும், மேலும் கடவுள் அவர்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து கொடுக்கவும்-மறுக்கின்றார்கள்? கடவுள் அவர்களை முழுவதும் அறிந்தவராக இருக்கின்றார்.

தெய்வீக நீதி

[4:40]கடவுள் ஒரு அணு அளவு கூட அநீதி இழைக்க மாட்டார். அதற்கு மாறாக அவர் நன்னெறியான செயலுக்குரிய வெகுமதியை பன்மடங்காக்கி பெருக்குகின்றார். மேலும் அவரிடமிருந்து உயர்ந்த வெகுமானங்களையும் வழங்குகின்றார்.

[4:41]இவ்விதமாக (தீர்ப்பளிக்கும்) அந்த நாள் வரும் போது ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சி யாளரை நாம் அழைப்போம். மேலும் (தூதராகிய) நீரும் இந்த மக்களுக்கிடையில் ஒரு சாட்சியாளராக பணியாற்றுவீர்.

[4:42]அந்த நாளில், நம்ப மறுத்தவர்களும் மேலும் தூதருக்கு கீழ்படியாதவர்களும் தாங்கள் மண்ணோடு மண்ணாகி இருக்க வேண்டும் என்று விரும்பு வார்கள்; ஒரே ஒரு சொல்லைக் கூட அவர்களால் கடவுள்-இடமிருந்து மறைக்க இயலாது.

அங்க சுத்தியை முறிப்பவை எவை

[4:43]நம்பிக்கை கொண்டோரே, போதையில் இருக்கும் போது நீங்கள் தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கூறுவது இன்னதென்று உங்களுக்குத் தெரிய வேண்டும். நீங்கள் சாலைகளில் பயணத்தில் இருந்தாலன்றி தாம்பத்ய உறவிற்குப் பின்னர் குளிக்காமல் தொழக் கூடாது; நீங்கள் நோயுற்று இருந்தாலோ, அல்லது பிரயாணத்திலிருந்தாலோ அல்லது சிறுநீர் கழித்திருந்தாலோ அல்லது வயிற்றில் இருந்து எதுவும் வெளியேறி இருந்தாலோ (காற்று போன்றவை) அல்லது பெண்களுடன் (தாம்பத்ய) உறவு கொண்டு விட்டாலோ மேலும் தண்ணீர் கிடைக்காவிட்டால், நீங்கள் சுத்தமான உலர்ந்த மண்ணைத் தொட்டு பிறகு உங்கள் முகங்களையும், கைகளையும் அதைக் கொண்டு தடவி தயம்மும் (உலர்ந்த அங்கசுத்தி) செய்து கொள்ளவும். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.

[4:44]வேதத்தின் ஒரு பகுதியைப் பெற்றவர்கள், எவ்வாறு வழிகேட்டை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதையும் மேலும் நீங்கள் பாதையில் இருந்து வழிதவற வேண்டும் என்று விரும்புவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?

[4:45]உங்களுடைய எதிரிகள் யார் என்று கடவுள்-க்கு மிகவும் நன்றாக தெரியும். கடவுள்- மட்டுமே ஒரே இரட்சகரும் மேலும் எஜமானருமாவார். கடவுள்-மட்டுமே ஒரே ஆதரவாளர் ஆவார்.

[4:46]யூதர்களாக உள்ளவர்களில் சிலர் உண்மைக்குப் புறம்பாக வார்த்தைகளை சிதைக்கின்றார்கள். மேலும் அவர்கள் “நாங்கள் கேட்டுக் கொண்டோம், ஆனால் கீழ்படிய மாட்டோம்” மேலும் “உங்களுடைய வார்த்தைகள் செவிட்டு காதுகளின் மேல் விழுகின்றன,” மேலும் மார்க்கத்தை பரிகசிப்பதற்காக அவர்களுடைய நாக்குகளை சுழித்து “ராயினா”* (எங்களுடைய மேய்ப்பராக இரும்) என்று கூறுகின்றார்கள். அவர்கள் “நாங்கள் கேட்கின்றோம் மேலும் நாங்கள் கீழ்படிகின்றோம்” என்றும் மேலும் “நாங்கள் உங்களைச் செவியேற்கின்றோம்” மேலும் “உன்ளுர்னா” (எங்களை கண்காணிப் பீராக) என்றும் கூறியிருந்தால் அவர்களுக்கு அது சிறந்ததாகவும் மேலும் அதிக நன்னெறியான தாகவும் இருந்திருக்கும். அதற்கு பதிலாக அவர்களுடைய நம்பிக்கையின்மையால் அவர்கள் கடவுள்-இடமிருந்து தண்டனைக் குள்ளானார்கள். அதன் விளைவாக அவர்களில் பெரும்பான்மையானவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.

அடிகுறிப்பு

[4:47]வேதத்தைப் பெற்றவர்களே, நாம் சில முகங்களை நாடுகடத்துவதற்காக துரத்துவதற்கு முன்னால், அல்லது ஸப்பத்தின் புனிதத் தன்மையை கெடுத்தவர்களை தண்டித்தது போல் தண்டிப் பதற்கு முன்னால், உங்களிடம் இருப்பதை மெய்ப் பிக்க கூடிய இந்த வெளிப்பாடுகளை நீங்கள் நம்ப வேண்டும். கடவுள்-ன் கட்டளை நடந்தே தீரும்.

மன்னிக்க இயலாத பாவம்

[4:48]கடவுள் இணைத் தெய்வ வழிபாட்டை* மன்னிக்கமாட்டார், ஆனால் அவர் தான் நாடுவோருக்கு இதைவிடச் சிறிய குற்றங்களை மன்னிக்கின்றார். எவரொருவர் கடவுள்-உடன் இணைத் தெய்வங்களை ஏற்படுத்துகின்றாரோ, அவர் ஒரு பயங்கரமான குற்றத்தை செய்தவர் ஆவார்.

அடிகுறிப்பு

[4:49]தங்களை தாங்களே உயர்த்திக் கொள்பவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? பதிலாக கடவுள் மட்டுமே சிறிதளவும் அநீதியின்றி தான் நாடு வோரை உயர்த்துகின்றார்.

[4:50]கடவுள்-ஐப் பற்றி அவர்கள் எவ்வாறு பொய்களை இட்டுக்கட்டுகின்றார்கள் என்பதை கவனிப்பீராக; எவ்வளவு பெரிய பாவம் இது!

[4:51]வேதத்தின் ஒரு பகுதியை பெற்றவர்களை, மேலும் அவர்கள் எவ்வாறு இணைத்தெய்வ வழிபாட்டின் மீதும், பொய்யான கொள்கைகளின் மீதும் நம்பிக்கை கொண்டு விட்டு பின்னர், “நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கையாளர்களைக் காட்டிலும் சிறப்பாக வழி நடத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்” என்று கூறுவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?!

[4:52]இவர்கள்தான் கடவுள்-உடைய தண்டனைக் குள்ளானவர்கள், மேலும் யாரை கடவுள் தண்டிக்கின்றாரோ அவருக்கு எந்த உதவியாள ரையும் நீர் காணமாட்டீர்.

[4:53]ஆட்சி அதிகாரத்தில் ஒரு பங்கை அவர்கள் சொந்தமாக கொண்டிருக்கின்றனரா? அவ்வாறு இருந்தால் அவர்கள் மக்களுக்கு ஒரு தானியத்தின் அளவுகூட கொடுக்க மாட்டார்கள்.

[4:54]கடவுள் அவருடைய அருட்கொடைகளை அவர்கள் மீது பொழிந்த காரணத்தால் மக்கள் மீது அவர்கள் பொறாமைப்படுகின்றார்களா? நாம் ஆப்ரஹாமின் குடும்பத்திற்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். நாம் அவர் களுக்கு ஒரு மகத்தான அதிகாரத்தைக் கொடுத்தோம்.

[4:55]அவர்களில் சிலர் அதில் நம்பிக்கை கொண்டனர், மேலும் அவர்களில் சிலர் அதிலிருந்து வெறுப் புற்றுப் பின் வாங்கினர். இவர்களுக்கு நரகம் தான் சரியான தண்டனை ஆகும்.

நரகம் குறித்த உருவக வர்ணனை

[4:56]நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை நம்ப மறுப்பவர்களை நாம் நரக நெருப்பில் தண்டிப் போம். அவர்களுடைய தோல்கள் கருகிவிடும் போதெல்லாம், அவர்களுக்கு நாம் புதிய தோல்களை கொடுப்போம். இவ்விதமாக, அவர்கள் தொடர்ச்சியாக அவதிப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[4:57]நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தமட்டில், நாம் அவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடை களைக் கொண்ட தோட்டங்களுக்குள் அனுமதிப் போம்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். ஒரு பேரானந்தமான நிழலில் அவர்களை நாம் அனுமதிப்போம்.

நேர்மையும் & நீதியும், பரிந்துரைக்கப்படுகின்றது

[4:58]மக்கள் உங்களிடம் நம்பி ஒப்படைத்தவற்றை, நீங்கள் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று கடவுள் கட்டளையிடுகின்றார். மக்களிடையே நீங்கள் தீர்ப்பு கூறினால், நீங்கள் நியாயமாக தீர்ப்பு கூற வேண்டும். கடவுள் எதை உங்களுக்கு பரிந்துரைக்கின்றாரோ, உண்மையில் அதுவே சிறந்த உபதேசமாகும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.

[4:59]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-க்கு கீழ்படியுங்கள், மேலும் நீங்கள் தூதருக்கு கீழ்படியுங்கள், மேலும் உங்களில் அதிகாரம் பெற்றவர்களுக்கு கீழ்படியுங்கள். நீங்கள் கடவுள்-ன் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் சச்சரவு செய்தால், அதை நீங்கள் கடவுள்-இடமும் மேலும் தூதரிடமும் ஆலோசிக்க வேண்டும். இதுவே உங்களுக்கு சிறந்ததாகும், மேலும் உங்களுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும்.

நம்பிக்கையாளர்களா அல்லது நயவஞ்சகர்களா?

[4:60]உமக்கு வெளிப்படுத்தப்பட்டதையும், மேலும் உமக்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டதையும் நம்புகின்றோம், என்று கூறி, பின்னர் அவர் களுடைய இணைத்தெய்வங்களின் நேர்மையற்ற சட்டங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அத்தகைய சட்டங் களைப்புறக் கணிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். உண்மையில், அவர்களை வெகுதூரம் வழிகேட்டில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது சாத்தானின் விருப்பமாகும்.

[4:61]“கடவுள் வெளிப்படுத்தியதின் பக்கமும், மேலும் தூதரின் பக்கமும் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், நயவஞ்சகர்கள் உங்களை முழுவதுமாக தவிர்த்து விடுவதை நீங்கள் காண்பீர்கள்.

[4:62]அவர்கள் செய்த செயல்களின் விளைவாக அவர்களை ஒரு பேரழிவு தாக்கும் போது அது எவ்வாறு இருக்கும்? அப்போது அவர்கள் உம்மிடம் வந்து, “எங்களுடைய எண்ணங்கள் நல்லதாகவும் மேலும் நன்னெறியானதாகவும் இருந்தது!” என்று கடவுள் மீது சத்தியம் செய்வார்கள் .

[4:63]அவர்களின் ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார். நீர் அவர்களை புறக்கணிக்கவும், அவர்களுக்கு தெளிவாக விளக்கவும், மேலும் அவர்களுடைய ஆன்மாக்களை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கவும் வேண்டும்.

கேள்வி கேட்காமல் அடிபணிதல்: உண்மையான நம்பிக்கையாளர்களின் தன்மை

[4:64]கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாமல் எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை. அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களுக்கு தவறிழைத்த நிலையில் உம்மிடம் வந்து மேலும் பாவமன்னிப் பிற்காக கடவுள்-இடம் பிரார்த்தனை செய் திருந்து மேலும் தூதரும் அவர்கள் பாவமன்னிப் பிற்காக பிரார்த்தனை செய்திருந்தால், அவர்கள் கடவுள்-ஐ மீட்சியளிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் கண்டிருப்பார்கள்.

[4:65]உமது இரட்சகர் மீது ஆணையாக, அவர்கள் தங்களுடைய சச்சரவுகளில் தீர்ப்பு கூறுமாறு உம்மிடத்திலே வந்து, பின்னர் உம்முடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வதில், தங்களுடைய உள்ளங்களில் எவ்விதமான தயக்கத்தையும் காணாதவரை உண்மையில் அவர்கள் ஒருபோதும் நம்பிக்கையாளர்கள் அல்ல. அவர்கள் முற்றிலுமானதொரு அடிபணிதலாக அடிபணிந்தாக வேண்டும்.

கடவுளுடைய சோதனைகள் ஒரு போதும் நியாயமற்றதாக இருக்காது

[4:66]“நீங்கள் உங்கள் உயிர்களை அர்ப்பணிக்க வேண்டும்” அல்லது, “உங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டும்” என்று நாம் அவர் களுக்கு கட்டளையிட்டிருந்தால் அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்கள் (அவ்வாறு ஒரு கட்டளை கொடுக்கப் பட்டிருந்தாலும்) அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தார்களோ அதை அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்கு மிகச்சிறந்ததாக இருந்திருக்கும். மேலும் அவர்களுடைய விசுவாசத்தின் வலிமையை நிரூபித்திருக்கும்.

[4:67]மேலும் நாம் அவர்களுக்கு மகத்தானதொரு வெகுமதியும் அளித்திருப்போம்.

[4:68]மேலும் நாம் அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்தியிருப்போம்.

நம்பிக்கையாளர்களின் சமத்துவம்

[4:69]கடவுள்-க்கும் மேலும் தூதருக்கும் கீழ்படிபவர்கள், கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட வேதம் வழங்கப்பட்டவர்கள், பக்திமான்கள், வீர மரணம் அடைந்தவர்கள், மேலும் நன்னெறி யாளர்கள் - இவர்களைச் சார்ந்தவர்களாவார்கள். இவர்கள்தான் சிறந்த கூட்டாளிகள்.

[4:70]கடவுள்-இடமிருந்துள்ள அருட்கொடை இவ்வித மானதே ஆகும்; கடவுள் தான் அறிந்தவர்களில் மிகச் சிறந்தவர்.

[4:71]நம்பிக்கைகொண்டோரே, நீங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருங்கள், மேலும் நீங்கள் தனித்தனியாக ஆயத்தமாகுங்கள் அல்லது எல்லோரும் ஒன்று கூடி ஆயத்தமாகுங்கள்.

[4:72]நிச்சயமாக, தங்களுடைய கால்களைப் பின் இழுத்துக் கொள்பவர்களும் உங்கள் மத்தியில் இருக்கின்றார்கள், பின்னர், ஒரு பின்னடைவு உங்களை துன்புறுத்தும்போது, அவர்கள் “கடவுள் எனக்கு அருள் பாலித்ததால் நம்பிக்கைக்காக உயிரிழந்த அவர்களோடு நான் கொல்லப் படவில்லை,” என்று கூறியிருப்பார்கள்.

[4:73]ஆனால் கடவுள்-இடமிருந்து ஒரு அருட் கொடையை நீங்கள் அடைந்தால், உங்களுக்கும், அவர்களுக்குமிடையில் இதற்கு முன்னர் ஒரு போதும் நட்புறவே இல்லாதிருந்தது போல் அவர்கள் “நான் அவர்களோடு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன், அதன்படி இத்தகைய ஒரு பெரிய வெற்றியில் பங்கெடுத்திருக்க இயலும்” என்று கூறியிருப்பார்கள்.

[4:74]மறுவுலகிற்காக இவ்வுலகைத் துறந்தவர்களே கடவுள்-க்காக சண்டையிடத் தயாராக இருப் பார்கள். எவரொருவர் கடவுள்-ன் காரணமாக சண்டையிட்டு அதன்பிறகு கொல்லப்பட்டாலோ அல்லது வெற்றியை அடைந்தாலோ அவருக்கு நாம் நிச்சயமாக ஒரு சிறந்த வெகுமதியை வழங்குவோம்.

நம்பிக்கையாளர்கள் அச்சமற்றவர்கள்

[4:75]“எங்களுடைய இரட்சகரே, கொடுங்கோன்மை யான மக்களாக இருக்கும் இந்த சமூகத்தை விட்டு எங்களை வெளியேற்றுவீராக. மேலும் நீரே எங்களுடைய இரட்சகராகவும் மேலும் எஜமானராகவும் இருப்பீராக,” என்று பலவீனமான ஆண்களும், பெண்களும், மற்றும் குழந்தைகளும் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் போது கடவுள்-ன் பாதையில் ஏன் நீங்கள் சண்டையிடக் கூடாது?

[4:76]நம்பிக்கை கொண்டவர்கள் கடவுள்-ன் பாதையில் போரிடுகின்றார்கள், அதேசமயம் நம்ப மறுப்பவர்களோ கொடுங்கோன்மைக்காக போரிடுகின்றார்கள். ஆகையால், நீங்கள் சாத்தானுடைய கூட்டாளிகளோடு போரிடுங்கள்; சாத்தானின் சக்தி ஒன்றும் இல்லாதது.

[4:77]“நீங்கள் சண்டையிட வேண்டியதில்லை;நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பதும் மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பதுமே” என்று கூறப்பட்டவர்களிடம், பின்னர், சண்டையிடும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட்டபோது, அவர்கள் கடவுள்-க்கு அஞ்சுவது போல் மக்களுக்கு அவர்கள் அஞ்சியதை, அல்லது அதை விடவும் அதிகமாக அஞ்சியதை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் “எங்கள் இரட்சகரே, ஏன் இந்த சண்டையை எங்கள் மீது கட்டாயப் படுத்தினீர்? நீர் மட்டும் எங்களுக்குச் சிறிது காலம் ஓய்வளித்திருந்தால்,” என்று கூறினார்கள். “இந்த உலகின் பொருட்கள் ஒன்றுமில்லை, அதே சமயம் நன்னெறியாளர்களுக்கு மறுவுலகம் மிகவும் சிறந்தது, மேலும் நீங்கள் ஒருபோதும் சிறிதளவும் அநீதத்தையும் அனுபவிக்கமாட்டீர்கள்” என்று கூறுவீராக.

கடவுள் தான் எல்லாவற்றையும் செய்கின்றவர்

[4:78]நீங்கள் எங்கிருந்தபோதிலும், கடினமான கோட்டைகளுக்குள் வசித்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும், அவர்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் அவர்கள் “ இது கடவுள்-இடமிருந்து கிடைத்தது” என்று கூறுகின்றார்கள், மேலும் ஏதேனும் கெட்டது அவர் களை துன்புறுத்தினால் அவர்கள் உங்கள் மீது பழி சுமத்துகின்றார்கள். “அனைத்தும் கடவுள்- இடமிருந்தே வருகின்றது,” என்று கூறுவீராக. ஏன் இந்த மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்கின்றார்கள்?

அடிகுறிப்பு

கெட்டவை எதுவும் கடவுளிடமிருந்து வருவதில்லை

[4:79]உங்களுக்கு நிகழும் நல்லது எதுவும் கடவுள்- இடமிருந்து வருகின்றது, மேலும் உங்களுக்கு நிகழும் கெட்டது எதுவும் உங்களிடமிருந்தே வருகின்றது. நாம் உம்மை மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பியுள்ளோம்,* மேலும் சாட்சியாளராக இருக்க கடவுள் போதுமானவர்.

அடிகுறிப்பு

[4:80]எவரொருவர் தூதருக்கு கீழ்படிகின்றாரோ, அவர் கடவுள்-க்கு கீழ்படிகின்றார். திரும்பி விடுகின்ற வர்களைப் பொறுத்தவரை நாம் உம்மை அவர்களுக்கு பாதுகாவலராக அனுப்பவில்லை.

[4:81]அவர்கள் கீழ்படிவதாக வாக்குறுதி அளிக்கின் றார்கள், ஆனால் அவர்கள் உங்களை விட்டு விலகியவுடன், அவர்களில் சிலர் அவர்கள் கூறிய தற்கு மாறான எண்ணங்களுக்கு இடமளிக்கின் றார்கள். அவர்களின் ஆழ் மனதின் எண்ணங் களையும் கடவுள் பதிவு செய்கின்றார். அவர்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள், மேலும் உங்களுடைய உறுதியான நம்பிக்கையை கடவுள் மீது வைப்பீராக. ஓர் ஆதரவாளராக இருக்க கடவுள் போதுமானவர்.

கடவுள் தான் ஆசிரியர் என்பதற்கான சான்று

[4:82]அவர்கள் குர்ஆனை ஏன் மிகவும் கவனத்துடன் ஆராய்வதில்லை? கடவுள்-ஐத் தவிர வேறு யாரிடமிருந்தும் இது வந்திருந்தால் இதில் அவர்கள் எண்ணற்ற முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.*

அடிகுறிப்பு

சாத்தானின் வதந்திகளை பற்றி விழிப்புடன் இருங்கள்

[4:83]பாதுகாப்பை பாதிக்கும் ஒரு வதந்தி அவர் களுடைய வழியில் வரும்போது அதை அவர்கள் பரப்பி விடுகின்றார்கள். அதை அவர்கள் தூதரி டமும் மேலும் அவர்களில் அதிகாரம் பெற்றவர் களிடமும் ஆலோசனை செய்திருந்தால், இந்த விஷயங்களை புரிந்து கொள்பவர்கள் அவர்களுக்கு தெரிவித்திருப்பார்கள். கடவுள்-உடைய அருளும் மேலும் அவருடைய கருணை யும் உங்கள் பால் இல்லாதிருந்திருக்கு மேயானால், ஒரு சிலரைத் தவிர, நீங்கள் சாத்தானை பின்பற்றியிருப்பீர்கள்.

[4:84]கடவுள்-ன் நிமித்தம் நீங்கள் சண்டையிட வேண்டும். உங்களுடைய சொந்த ஆன்மாவிற்கு மட்டுமே நீங்கள் பொறுப்பாளியாவீர்கள். மேலும் நம்பிக்கையாளர்களையும் இவ்வாறே செய்யும்படி உபதேசிப்பீராக. நம்பமறுப்பவர்களின் ஆற்றலைக் கடவுள் கட்டுப்படுத்தி விடுவார். கடவுள் மிக அதிகமான ஆற்றலும், மேலும் மிக அதிகமான வல்லமையும் உடையவர்.

பொறுப்பு

[4:85]எவரொருவர் ஒரு நல்ல செயலுக்கு மத்தியஸ்தம் செய்கின்றாரோ அவர் அதனுடைய நன்மையில் ஒரு பங்கைப் பெறுவார். மேலும் எவரொருவர் ஒரு கெட்ட செயலுக்கு மத்தியஸ்தம் செய்கின்றாரோ அவர் அதனுடைய ஒரு பங்கிற்கு உள்ளாக்கப் படுவார். கடவுள் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்துகின்றார்.

நீங்கள் மரியாதையானவராக இருக்க வேண்டும்

[4:86]ஒரு வாழ்த்துரை கொண்டு வாழ்த்தும் போது நீங்கள் அதை விட சிறந்த வாழ்த்துரை கொண்டு, அல்லது குறைந்தபட்சம் அதே போன்ற ஒன்றை கொண்டு பதில் அளிக்க வேண்டும். கடவுள் எல்லா விஷயங்களையும் கணக்கெடுக்கின்றார்.

[4:87]கடவுள் : அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அவர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் நிச்சயமாக உங்களை ஒன்று கூட்டுவார்-அந்த நாள் தவிர்க்க இயலாத நாள். கடவுள்-உடைய விவரிப்பைக் காட்டிலும் எவருடையது அதிக உண்மை நிறைந்தது?

நடந்து கொள்வது

[4:88](உங்களுக்கிடையில் உள்ள) நயவஞ்சகர்கள் சம்பந்தமாக நீங்கள் ஏன் உங்களை இரண்டு பிரிவுகளாக ஆக்கிக்கொள்ளவேண்டும்? அவர் களை அவர்களுடைய சுயமான நடத்தையின் காரணமாக கடவுள் தான் தண்டித்தார். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டவர் களை, வழி நடத்த நீங்கள் விரும்புகின்றீர்களா? எவர்களைக் கடவுள் வழிகேட்டிற்கு அனுப்பி விடுகின்றாரோ, அவர்களை வழி நடத்த ஒரு வழியை உங்களால் ஒரு போதும் காணஇயலாது.

[4:89]அவர்கள் நம்ப மறுத்தது போல் நீங்களும் நம்ப மறுத்து, பின்னர் நீங்களும், அவர்களைப் போன்று ஆகி விட வேண்டும், என்று அவர்கள் விரும்புகின்றார்கள். கடவுள்-ன் பாதையில் உங்களோடு சேர்ந்து அவர்கள் புறப்படத் தயாரா காத வரை அவர்களை நண்பர்களாக கருத வேண்டாம். அவர்கள் உங்களுக்கெதிராகத் திரும்பினால் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும், மேலும் போரில் நீங்கள் அவர்களைச் சந்தித்தால், நீங்கள் அவர்களைக் கொல்லலாம். நீங்கள் அவர்களை நண்பர்களாகவோ அல்லது கூட்டாளிகளாகவோ ஏற்றுக் கொள்ள வேண் டாம்.*

அடிகுறிப்பு

[4:90]எவர்களுடன் நீங்கள் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டவர்களும், மேலும் உங்களுடன் சண்டையிட விரும்பாதவர்களாக உங்களிடம் வருபவர்களும், அன்றி தங்கள் உறவினர் களுடன் சண்டையிடாதவர்களும், இதிலிருந்து விலக் கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் நாடியிருந்தால், உங்களுக்கு எதிராக சண்டையிடுவதற்கு அவர்களை அவர் அனுமதித்திருக்க இயலும். ஆகையால், உங்களை அவர்கள் விட்டு விட்டு, உங்களிடம் சண்டையிடுவதை தவிர்த்துக் கொண்டு, மேலும் உங்களிடம் சமாதானத்தைக் கோரினால் அப்போது அவர்களுடன் சண்டையிட கடவுள் உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

[4:91]உங்களுடனும் மேலும் அவர்களுடைய மக்களு டனும் சமாதானம் செய்து கொள்ள விரும்பும் மற்றவர்களையும் நீங்கள் காண்பீர்கள். ஆயினும் போர் ஆரம்பித்த உடன் உங்களுக்கு எதிராக அவர்கள் சண்டையிடுவார்கள். இந்த மக்கள் உங்களை விட்டு விட்டு, உங்களுடன் சமாதானம் செய்ய முன்வந்து மேலும் உங்களுடன் சண்டையிடுவதை நிறுத்திக் கொள்ளாத வரை அவர்களை நீங்கள் சந்திக்கும் போது அவர்களுடன் சண்டையிடலாம். இவர்களுக் கெதிராக நாம் உங்களுக்கொரு தெளிவான அதிகாரம் அளிக்கின்றோம்.

நீங்கள் கொலை செய்யக் கூடாது

[4:92]ஒரு விபத்தாக இருந்தாலன்றி ஒரு நம்பிக் கையாளர், மற்றொரு நம்பிக்கையாளரை கொலை செய்யக் கூடாது. ஒருவர் எதிர்பாராத விதமாக ஒரு நம்பிக்கையாளரைக் கொலை செய்து விட்டால், அவர் ஒரு நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வது கொண்டும், மேலும் பலியானவரின் குடும்பத்தார் தாமாக ஈட்டுத்தொகையை தர்மமாக விட்டுக் கொடுத் தாலன்றி, பலியானவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்தும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். பலியானவர் ஒரு நம்பிக்கையாளராக இருந்து உங்களோடு போர்புரியும் மக்களைச் சார்ந்தவராக இருந்தாலும், ஒரு நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வது கொண்டு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அவர் நீங்கள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட மக்களைச் சார்ந்தவராக இருந்தால், நீங்கள் ஒரு நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வதோடு கூடுதலாக நஷ்ட ஈடும் கொடுத்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். விடுதலை செய் வதற்கு ஒரு அடிமையை நீங்கள் காணா விட்டால்,* கடவுள்-ஆல் மீட்டுக் கொள்ளப் படுவதற்காக நீங்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு இருந்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கடவுள் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

அடிகுறிப்பு

மன்னிக்கப்பட இயலாததொரு குற்றம்

[4:93]எவர் ஒருவர் வேண்டுமென்றே ஒரு நம்பிக்கை யாளரைக் கொலை செய்து விடுகின்றாரோ, அவருக்குத் தண்டனை நரகமேயாகும், அதில் அவர் என்றென்றும் தங்கியிருப்பார், கடவுள் அவர் மீது கோபம் கொள்கின்றார், மேலும் அவரைக் கண்டனம் செய்கின்றார், மேலும் அவருக்கு ஒரு பயங்கரமான தண்டனையை தயார் செய்து வைத்திருக்கின்றார்.

[4:94]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ன் பாதையில் தாக்கினால், நீங்கள் முற்றிலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடம் ஒருவர் சமாதானத்தைக் கோரினால் இந்த உலகத்தின் வெகுமதிகளைத் தேடியவர்களாக, “நீர் ஒரு நம்பிக்கையாளர் அல்ல” என்று கூறாதீர்கள். ஏனெனில் கடவுள் எண்ணற்ற வெகுமதிகளைக் கொண்டவராக இருக்கின்றார். நீங்களும் அவர்களைப் போன்றேதான் இருந்தீர்கள் மேலும் கடவுள் உங்களுக்கு அருள்புரிந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் (தாக்குவதற்கு முன்னால்) முற்றிலும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

பாடுபடுவோருக்கு உன்னதமான அந்தஸ்துகள்

[4:95]நம்பிக்கையாளர்களுக்கிடையில் ஊனம் ஏதும் இல்லாத நிலையில், சரீர உழைப்பு செய்யாதவர் களும், மேலும் கடவுள்-ன் பாதையில் தங்களுடைய பணத்தையும் மற்றும் தங்களுடைய வாழ்வையும் கொண்டு பாடுபடுவோரும் சமமாக மாட்டார்கள். தங்களுடைய செல்வம் மற்றும் தங்களுடைய வாழ்வைக் கொண்டு பாடுபடுவோரை, சரீர உழைப்பு செய்யாதவர்களுக்கு மேலாக, கடவுள் உயர்த்துகின்றார். அவர்கள் இருவருக்கும் கடவுள் மீட்சியை வாக்களிக்கின்றார், ஆனால் கடவுள் உண்மையாக உழைப்பவர்களை சரீர உழைப்பில்லாதவர்களுக்கு மேலாக ஒரு சிறந்த வெகுமதி கொண்டு உயர்த்துகின்றார்.

[4:96]உன்னதமான அந்தஸ்துகளும், அத்துடன் மன்னிப்பும், கருணையும், அவரிடமிருந்தே வருகின்றன. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

அக்கறையின்மை தண்டனைக்குரியது

[4:97]தங்களுடைய ஆன்மாக்களுக்கு அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளவர் களுடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் வேளையில், அந்த வானவர்கள் அவர்களிடம் “உங்களுக்கு என்னவாயிற்று?” என்று கேட்பார்கள். அவர்கள், “பூமியில் நாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டோம்,” என்று கூறுவார்கள். அவர்கள், நீங்கள் “அவ்விடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்று குடியேறும் அளவிற்குக் கடவுள்-உடைய பூமி போதுமான அளவு விசாலமானதாக இருக்கவில்லையா?” என்று கேட்பார்கள். இவர்களுக்கு இறுதி வசிப்பிடம் நரகமேயாகும், மேலும் இது ஒரு துக்ககரமான விதியாகும்.

[4:98]சக்தி பெற்றிராத அன்றி வெளியேறும் வழிக் கான உபாயத்தைக் கண்டிராத பலஹீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர்.

[4:99]இவர்கள் கடவுள்-ஆல் மன்னிக்கப்படக் கூடும். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.

[4:100]எவரொருவர் கடவுள்-ன் நிமித்தம் குடிபெயர்ந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் உயர்ந்த வெகுமதிகளையும், மேலும் செல்வச் செழிப்பையும் காண்பார். எவரொருவர் கடவுள்-ஐயும் அவரது தூதரையும் நோக்கியவராக அவருடைய வீட்டை விட்டு விட்டு, வேறு இடத்திற்குச் சென்று குடியேறி அதன் பிறகு அவர் மரணித்துவிட்டால் அவருடைய வெகுமதி கடவுள்-இடத்தில் தயாராக உள்ளது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[4:101]போர் காலங்களில் நீங்கள் பயணம் செய்யும் போது, நம்பமறுப்பவர்கள் உங்களை தாக்கக் கூடும் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுடைய தொடர்பு தொழுகைகளை (ஸலாத்) சுருக்கிக் கொள்வதால் உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நம்ப மறுப்பவர்கள் உங்களுடைய தீவிரமான எதிரிகளாவர்.

போர் முன்னெச்சரிக்கைகள்

[4:102]அவர்களுடன் நீர் இருக்கும்போது, மேலும் அவர்களுக்கு தொடர்புத்தொழுகை (ஸலாத்) நடத்தினால், உங்களில் சிலர் பாதுகாப்பிற்கு நிற்கட்டும். அவர்கள் தங்களது ஆயுதங்களை ஏந்திக்கொள்ளட்டும், மேலும் நீர் சிரம் பணியும் சமயத்தில் உங்களுக்கு பின்புறமாக அவர்கள் நின்று கொள்ளட்டும். பின்னர், தொழாத மற்ற பிரிவினர் தங்களுடைய முறையை எடுத்துக் கொண்டு தொழுகையினை உம்முடன் சேர்ந்து தொழட்டும், அதேசமயம் மற்றவர்கள் பாதுகாப்பிற்கு நின்றவாறு தங்கள் ஆயுதங்களை ஏந்தி நிற்கட்டும். நம்ப மறுப்பவர்கள் உங்களை ஒரே தடவையில் தாக்கி முடிப்பதற்காக நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் தளவாடங்களின் மீது கவனமின்றி இருப்பதைக் காண விரும்புகின்றார் கள். மழையினாலோ அல்லது காயத்தினாலோ, உங்களுக்கு இடையூறு ஏற்பட்டால், நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பட்சத்தில், உங்களது ஆயுதங்களைக் கீழே வைப்பதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. கடவுள் நம்பமறுப் பவர்களுக்கு இழிவு மிக்கதொரு தண்டனை யைத் தயார் செய்து வைத்திருக்கின்றார்.

தொடர்புத் தொழுகைகள்

[4:103]நீங்கள் உங்களுடைய தொடர்புத் தொழுகையை (ஸலாத்) நிறைவு செய்தவுடன், நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ* நீங்கள் கடவுள்-ஐ நினைவு கூர்ந்திட வேண்டும். போர் முடிந்தவுடன் நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்; தொடர்புத் தொழுகை கள் (ஸலாத்) நம்பிக்கையாளர்கள் மீது குறிப்பிட்ட நேரங்களில் விதியாக்கப்பட்டுள்ளது.

அடிகுறிப்பு

[4:104]எதிரியைத் தேடிச் செல்வதில் தடுமாறாதீர்கள். நீங்கள் துன்புற்றால், அவர்களும்தான் துன்புறு கின்றார்கள், ஆயினும் அவர்கள் ஒரு போதும் எதிர்பார்க்காததை கடவுள்-இடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[4:105]கடவுள் உங்களுக்கு காண்பித்து இருப் பவற்றிற்கு இணங்க மக்கள் மத்தியில் தீர்ப்புச் செய்வதற்காக, சத்தியத்துடன், இவ்வேதத்தை நாம் உங்களுக்கு இறக்கி அனுப்பியுள்ளோம். துரோகிகளுடன் நீங்கள் அணி சேர வேண்டாம்.

[4:106]நீங்கள் பாவ மன்னிப்பிற்காக கடவுள்-ஐ இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

வரம்பு மீறுபவர்களுக்காக வாதாட வேண்டாம்

[4:107]தங்கள் சொந்த ஆன்மாக்களுக்குத் தீங்கி ழைத்துக் கொண்டவர்களின் சார்பாக வாதாடாதீர்கள்; கடவுள் எந்த துரோகியையும், குற்றவாளியையும் நேசிப்பதில்லை.

[4:108]அவர்கள் மக்களிடமிருந்து மறைத்து விடுகின் றனர், மேலும் அவர் விரும்பாத எண்ணங்களை அவர்கள் கொண்டிருந்த போதிலும் அவர் களுடன் அவர் இருக்கின்றபடியால் கடவுள்-இடமிருந்து மறைப்பது குறித்து பொருட்படுத்து வதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக உள்ளார்.

“ நல்லவராக” நடந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்துவிடுவதில்லை

[4:109]இங்கு நீங்கள் இந்த உலகத்தில் அவர்களின் சார்பில் வாதிடுகின்றீர்கள்; மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவர்களின் சார்பில் கடவுள்-உடன் வாதாடப்போவது யார்? அவர்களின் வழக்கறிஞராக இருக்கப்போவது யார்?

[4:110]எவர் ஒருவர் பாவம் செய்து விட்டோ, அல்லது தன் ஆன்மாவிற்கு தீங்கிழைத்துவிட்டோ, பின்னர் பாவ மன்னிப்பிற்காக கடவுள்-ஐ இறைஞ்சிப் பிரார்த்திப்பாரேயானால், மன்னிக்கக் கூடிய வராகவும்,மிக்க கருணையாளராகவும் கடவுள்-ஐக் காண்பார்.

[4:111]எவர் ஒருவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கின்றாரோ, அவர் தன் சொந்தஆன்மாவிற்குக் கேடாகவே அதைச் சம்பாதிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[4:112]எவர் ஒருவர் ஒரு பாவத்தை சம்பாதித்து, பின்னர் அதற்காக, ஒரு நிரபராதியைக் குற்றம் சுமத்து கின்றாரோ, அவர் ஓர் இறை நிந்தனையையும் மேலும் ஒரு பெருங்குற்றத்தையும் புரிந்தவர் ஆவார்.

[4:113]கடவுள்-ன் அருளும் மேலும் அவரது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், அவர்களில் சிலர் உம்மை வழி தவறச் செய்திருப் பார்கள். அவர்கள் தங்களை மட்டுமே தவறான வழியில் செலுத்திக்கொள்கின்றனர் மேலும் உமக்கு அவர்கள் ஒருபோதும் சிறிதளவும் தீங்கிழைத்து விட இயலாது, கடவுள் உமக்கு வேதத் தையும், ஞானத்தையும் இறக்கி அனுப்பியுள்ளார், மேலும் உமக்கு அவர், நீர் ஒரு போதும் அறிந்திராதவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளார். உண்மையில், உம்மீதான கடவுள்-ன் அருட்கொடை மகத்தானது.

[4:114]தர்மத்தை அல்லது நன்னெறியான செயல்களை அல்லது மக்களுக்கிடையில் அமைதி ஏற்படுத்து வதை ஆதரிப்பவர்களுக்கு தவிர அவர்களு டைய இரகசியக் கூட்டங்களைக் குறித்து வேறு எந்த நன்மையும் இல்லை. எவர் ஒருவர் கடவுள்-ன் போதனைகளுக்கு பதிலளிக்கும்படியாக இதைச் செய்கின்றாரோ அவருக்கு நாம் மகத்தான

[4:115]வழிகாட்டல் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர், தூதரை எதிர்த்துக் கொண்டும் மேலும் நம்பிக்கையாளர் களின் வழியல்லாததைப் பின்பற்றிக் கொண்டும், இருப்பவரைப் பொறுத்தவரை, அவர் தேர்ந் தெடுத்த வழியிலேயே நாம் அவரைச் செலுத்தி மேலும் அவரை நரகிற்கு அனுப்புவோம். என்ன ஒரு துக்ககரமான விதி!

தொரு வெகுமதியை வழங்குவோம்.

[4:116]கடவுள், இணைத்தெய்வவழிபாடு செய்வதை (மரணிக்கும் வரை கடைபிடித்தால்) *மன்னிக்கவே மாட்டார், மேலும் அதைவிடக் குறைவான குற்றங்களை, தான் நாடுகின்றவர்களுக்கு மன்னிக்கின்றார். கடவுள்-உடன் எந்த இணைத்தெய்வத்தையும் வழிபடுகின்ற எவர் ஒருவரும் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்.

அடிகுறிப்பு

[4:117]அவர்கள் அவரைத் தவிர பெண்தெய்வங்களைக் கூட வழிபடுகின்றனர், உண்மை நிலவரப்படி, அவர்கள் கலகக்கார சாத்தானையே வழிபடுகின்றார்கள்.

[4:118]கடவுள் அவனை தண்டனைக்கென தீர்மானித்து விட்டார், மேலும் அவன் கூறினான், “நான் நிச்சயமாக உம்மை வழிபடுவோரில்* ஒரு குறிப்பிட்ட தொகையினரை அணி சேர்த்துக் கொள்வேன்.

அடிகுறிப்பு

[4:119]“நான் அவர்களை வழிகெடுப்பேன், நான் அவர்களை வசீகரிப்பேன், (சில வகை மாமிசங் களை உண்பதை விட்டும் தடைசெய்யும்படியாக) கால்நடைகளின் காதுகளில் அடையாளமிட நான் அவர்களுக்குக் கட்டளையிடுவேன், மேலும் கடவுள்-ன் படைப்பினை உருக்குலைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிடுவேன்.” எவர் ஒருவர் கடவுள்-க்கு பதிலாக சாத்தானை ஒரு இரட்சகராக ஏற்றுக்கொள்கின்றாரோ, அவர் ஆழ்ந்ததோர் நஷ்டத்திற்கு உள்ளாகிவிட்டார்.

[4:120]அவன் அவர்களுக்கு வாக்களிக்கின்றான் மேலும் அவர்களை வசீகரிக்கின்றான்; சாத்தான் வாக்களிப்பது எதுவாயினும் அது ஒரு மாயையே அன்றி வேறில்லை.

[4:121]இவர்கள் நரகத்தை தங்களின் கடைசித் தங்குமிடமாக ஆக்கிக்கொண்டார்கள், மேலும் அதிலிருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள இயலாது.

[4:122]நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை, நாம் அவர்களை ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் அனுமதிப்போம், அவற்றில் அவர்கள் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள். கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதி இவ்வித மானதே. எவருடைய கூற்றுக்கள் கடவுள் - உடையதை விட சத்தியம் நிறைந்தது?

மன்னிக்கப்பட இயலாத பாவம்

[4:123]இது உங்களுடைய விருப்பங்களுக்கோ அல்லது வேதத்தையுடைய மக்களின் விருப்பங்களுக்கோ ஏற்ப உள்ளதல்ல. தீமைபுரிகின்ற எவர் ஒருவரும் அதற்கான தண்டனையைப் பெறுகின்றார், மேலும் கடவுள்-க்கு எதிராக அவருக்கு எந்த உதவியாளரோ அல்லது ஆதரவாளரோ இருக்கமாட்டார்.

[4:124]நம்பிக்கை கொண்டவர்களாக நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை, ஆணோ, பெண்ணோ, சிறிதளவும் அநீதியின்றி அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.

சட்டம்

[4:125]கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிந்து ஆப்ர ஹாமின் மார்க்க கொள்கையான ஏகத்துவத்திற்கேற்ப நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்ற ஒருவரை விட, தன் மார்க்கத்தில் சிறப்பாக வழி நடத்தப்பட்டவர் யார்? கடவுள் ஆப்ரஹாமை அன்பிற்குரியதொரு நண்பராகத் தேர்ந் தெடுத்துக் கொண்டார்.

அடிகுறிப்பு

[4:126]வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. கடவுள் எல்லாப் பொருட்களின் மீதும் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளார்.

[4:127]பெண்களைக் குறித்து அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றார்கள்; “கடவுள் அவர்களைக் குறித்து, வேதத்தில் உங்களுக்கு எடுத்துரைத்துள்ள படியே அறிவுறுத்துகின்றார். நீங்கள் அநாதைப் பெண்களை மணந்து கொள்ள விரும்பும் போது, அவர்களுக்குரிய வரதட் சணைத் தொகையைத் தராது நீங்கள் ஏமாற்றிய அந்த உரிமைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். நீங்கள் அவர்களை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது. அத்துடன் அநாதைச் சிறுவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அநாதைகளை நீங்கள் நீதமாக நடத்த வேண்டும். நீங்கள் நல்லது எதனைச் செய்தாலும் கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவர் ஆவார்,” என்று கூறுவீராக.

ஆப்ரஹாம்: இஸ்லாத்தின் ஆரம்பத்தூதர்

[4:128]ஒரு பெண் தன் கணவனிடமிருந்து கொடுமை யையோ, அல்லது கைவிடப்படுவதையோ உணர்ந்தால், அத்தம்பதியர் தங்களது வேறுபாடு களைக் களைய முயல வேண்டும். ஏனெனில் இணக்கமாகிக் கொள்வதே அவர்களுக்கு நல்லது, சுயநலம் என்பது மனித சுபாவ மாகும்,மேலும் நீங்கள் நன்மை புரிந்து மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால், நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

விவாகரத்து, ஊக்குவிக்கப்படவில்லை

[4:129]நீங்கள் எவ்வளவுதான் கடினமாக முயன்றாலும், ஒரு மனைவிக்கு மேல் நிர்வகிக்கும் போது, நீங்கள் ஒரு போதும் நீதமாக இருக்க இயலாது. ஆகையால், (திருமணத்தை அனுபவித்து மகிழ இயலாமலும் அன்றி இன்னொருவரைத் திருமணம் செய்ய விடாமலும்) அவர்களில் ஒருவரைத் தொங்கலில் விட்டு விடும் அளவிற்கு பாரபட்சமாக இருக்காதீர்கள். நீங்கள் இச் சூழ்நிலையைச் சீர் செய்து மேலும் நன்னெறியைப் பேணிவந்தால், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

அடிகுறிப்பு

[4:130]அத்தம்பதியர் கண்டிப்பாகப் பிரிந்து விட தீர்மானித்துவிட்டால், கடவுள் அவர்களில் ஒவ்வொருவருக்கும் தன் அருட்கொடைகளி லிருந்து வழங்குவார். கடவுள் தாராளமானவர், ஞானம் மிக்கவர்.

[4:131]வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும் என்று நாம் உங்களுக்கு முன்னர் வேதத்தைப் பெற்றவர் களுக்கு கட்டளையிட்டிருக்கின்றோம், இன்னும் உங்களுக்கும் கட்டளையிட்டோம். மேலும் நீங்கள் நம்ப மறுத்துவிட்டால், பின்னர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. கடவுள் தேவையற்றவர், புகழுக்குரியவர்.

[4:132]வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் கடவுள் மட்டுமே பாதுகாப்பவர்.

[4:133]மனிதர்களே, அவர் நாடினால், அவர் உங்களை அழித்துவிட்டு, மேலும் உங்கள் இடத்தில் மற்றவர் களைக் கொண்டுவர இயலும். நிச்சயம் இதனைச் செய்ய கடவுள் ஆற்றலுடையவர் ஆவார்.

[4:134]எவர் ஒருவர் இவ்வுலகின் பொருட்களைத் தேடுகின்றாரோ அவர், கடவுள் தான் இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டின் பொருட்களையும் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.

பலதாரமணம் ஊக்குவிக்கப்படவில்லை

[4:135]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சாட்சியம் அளிக்கும்போது உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது உங்கள் உறவினர்களுக்கோ கூட எதிரானதாக இருந்தாலும் நீங்கள் முற்றிலும் நேர்மையுடன் இருக்க வேண்டும், மேலும் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ இருந்தாலும் கடவுள் அவ்விருவரையும், கவனத்தில் கொள்கின்றார். ஆகையால், உங்கள் தனிப்பட்ட விருப்பங்களினால் பாரபட்சமாகிவிடாமல் இருங்கள். (இக்கட்டளையில்) நீங்கள் விலகிச் சென்றாலோ அல்லது அலட்சியம் செய்தாலோ, பின்னர் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[4:136]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் மீதும், அவருடைய தூதர் மீதும், மேலும் அவருடைய தூதரின் மூலம் அவர் வெளிப் படுத்திய வேதத்தின் மீதும், அதற்கு முன்பு அவர் வெளிப்படுத்திய வேதத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். எவர் ஒருவர் கடவுள் மீதும், அவருடைய வானவர்கள் மீதும், அவருடைய வேதங்கள் மீதும், அவருடைய தூதர்கள் மீதும், இன்னும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றாரோ அவர் உண்மையில் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டார்.

[4:137]நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பின்னர் நம்ப மறுத்து, பின்னர் நம்பிக்கை கொண்டு, பின்னர் நம்ப மறுத்து, பின்னர் நம்ப மறுத்தலில் ஆழமாக மூழ்கி விடுகின்றார்களோ, அவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார், அன்றி அவர்களை எந்த வழியிலும் வழி நடத்தமாட்டார்.

[4:138]நயவஞ்சகர்களிடம், அவர்கள் வலிமிகுந்த தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள் என்று அறிவிப்பீராக.

[4:139]அவர்கள்தான் நம்பிக்கையாளர்களுடன் அல்லாது நம்பமறுப்பவர்களுடன் தங்கள் நட்புறவை வைத்துக் கொள்பவர்கள். அவர்களிடத்தில் கண்ணியத்தை அவர்கள் தேடுகின்றனரா? எல்லாக் கண்ணியமும் கடவுள்-க்கு மட்டுமே உரியது.

[4:140]அவர் உங்களுக்கு வேதத்தில்: கடவுள்-ன் வெளிப்பாடுகள் பரிகசிக்கப்படுவதையும் மேலும் கேலி செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அவர்கள் வேறு விஷயத்தில் முழுமையாக திரும்பாதவரை நீங்கள் அவர்களுடன் அமர வேண்டாம், என்று அறிவுறுத்துகின்றார். இல்லாவிடில், நீங்களும் அவர்களைப் போன்று குற்றத்திற்குள்ளாகி விடுவீர்கள். கடவுள் நயவஞ்சகர்களையும், நம்பமறுப்பவர்களையும் நரகில் ஒன்று கூட்டுவார்.

நீங்கள் பொய்சாட்சி அளிக்கக் கூடாது

[4:141]அவர்கள் உங்களைக் கவனித்தவாறு காத்திருக் கின்றனர்; கடவுள்-இடமிருந்து நீங்கள் வெற்றியை அடைந்தால் (உங்களிடம்) அவர்கள் “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றார்கள். ஆனால் நம்ப மறுப்பவர் களுக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் (அவர்களிடம்) “நாங்கள் உங்கள் பக்கம் நின்று மேலும் நம்பிக்கையாளர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாக்கவில்லையா?” என்று அவர்கள் கூறுகின்றார்கள். கடவுள் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் உங்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வார். கடவுள் நம்ப மறுப்பவர்களை, நம்பிக்கையாளர்களை மிகைத்து வெற்றி கொள்ளும்படி ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்.

[4:142]நயவஞ்சகர்கள் தாங்கள் கடவுள்-ஐ ஏமாற்றிக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றார்கள், ஆனால் அவர்தான் அவர்களை அவ்வாறு வழி நடத்துகின்றார். தொடர்புத் தொழுகைக்காக (ஸலாத்) அவர்கள் எழுந்து நிற்கும் போது, அவர்கள் சோம்பலாக எழுந்து நிற்கின்றார்கள். அது ஏனெனில் அவர்கள் மக்களுக்கு முன்னால் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே இதைச் செய்கின்றார்கள், மேலும் அரிதாகவே அவர்கள் கடவுள்-ஐப்பற்றி நினைக்கின்றார்கள்.

[4:143]அவர்கள் இந்தக் கூட்டத்தோடும் சேராமல், அந்தக் கூட்டத்தோடும் இல்லாமல் நடுவில் தடுமாறுகின்றார்கள். எவரை கடவுள் வழி கேட்டில் அனுப்பிவிடுகின்றாரோ, அவரை வழிநடத்தும் வழியொன்றை ஒரு போதும் நீர் காணமாட்டீர்.

[4:144]நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கையாளர் களுடன் அல்லாது நம்ப மறுப்பவர்களுடன் நீங்கள் நட்புறவு கொள்ளவேண்டாம். உங்களுக்கு எதிராக கடவுள்-இடத்தில் ஒரு தெளிவான சான்றினைத் தர விரும்புகின்றீர்களா?

நயவஞ்சகர்கள்

[4:145]நயவஞ்சகர்கள் நரகின் மிகக் கீழான குழிக்கு அனுப்பப்படுவார்கள், மேலும் அவர்களுக்கு உதவக் கூடிய ஒருவரையும் நீர் காணமாட்டீர்.

[4:146]வருந்தித்திருந்தி, சீர்திருத்தி, கடவுள்-ஐ இறுகப்பற்றி, மேலும் தங்களுடைய மார்க் கத்தை முற்றிலுமாக கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணிப்பவர்கள் மட்டுமே நம்பிக்கை யாளர்களுடன் கணக்கிடப்படுவார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு மகத்தான வெகுமதி கொண்டு அருள்புரிவார்.

[4:147]நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக மாறி மேலும், நம்பிக்கையும் கொண்டுவிட்டால் உங்களைத் தண்டிப்பதால் கடவுள்-க்கு என்ன பலன்? கடவுள் நன்றி பாராட்டுபவர், எல்லாம் அறிந்தவர்.

தங்களை அவர்கள் நம்பிக்கையாளர்கள் என எண்ணிக்கொள்கின்றார்கள்

[4:148]பெரும்அநீதியுடன் ஒருவர் நடத்தப்பட்டால் தவிர, தீயவார்த்தைகள் கூறப்படுவதைக் கடவுள் விரும்புவதில்லை. கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.

[4:149]நீங்கள் நன்னெறியான காரியம் புரிந்தால் - வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாக வோ - அல்லது ஒரு வரம்பு மீறலைப் பொறுத்துக் கொண்டால், கடவுள் பிழை பொறுப்பவராகவும், சர்வ சக்தியுடையவராகவும் இருக்கின்றார்.

தீயவார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்

[4:150]கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்து மேலும் கடவுள்-க்கும் அவருடைய தூதர்களுக்கும் இடையில் பேதம் ஏற்படுத்த நாடி, மேலும், “ நாங்கள் சிலர் மீது நம்பிக்கை கொள்கின்றோம்; இன்னும் சிலரை நிராகரிக்கின் றோம்,” என்று கூறுபவர்கள், மேலும் இடைப்பட்ட ஒரு பாதையை பின்பற்ற விரும்புகின்றவர்கள்;

[4:151]இவர்கள்தான் உண்மையான நம்பமறுப்பவர்கள். நம்ப மறுப்பவர்களுக்கு இழிவு நிறைந்ததோர் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக் கின்றோம்.

[4:152]கடவுள் மீதும் அவருடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, மேலும் அவர்களுக் கிடையில் எவ்வித பேதமும் செய்யாமல் இருப்ப வர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அவர்க ளுடைய வெகுமதியினை அவர் வழங்குவார், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

நீங்கள் கடவுளின் தூதர்களுக்கிடையில் எவ்வித பேதமும் ஏற்படுத்தகூடாது

[4:153]வேதத்தையுடைய மக்கள் விண்ணிலிருந்து ஒரு புத்தகத்தை அவர்களுக்கு கொண்டு வரும்படி உம்மிடம் சவால்விடுகின்றார்கள்! அவர்கள் அதைவிடவும் அதிகமாக “கடவுள்-ஐ எங்களு க்கு உருவமாக காட்டும்” என்று கூறியவர்களாக மோஸஸிடம் கேட்டார்கள். அதன் விளைவாக அவர்களுடைய அகம்பாவத்தின் விளைவாக மின்னல் அவர்களைத் தாக்கியது, கூடுதலாக, அவர்கள் அனைத்து அற்புதங்களையும் கண்ட பின்னரும், அவர்கள் கன்றுக்குட்டியை வழிபட்டனர். இருப்பினும் நாம் இவை அனைத்தையும் மன்னித்தோம் நாம் ஆழ்ந்த அற்புதங்களைக் கொண்டு மோஸஸிற்கு ஆதரவளித்தோம்.

[4:154]மேலும், நாம் அவர்களிடம் உடன்படிக்கை எடுத்தவாறு, சினாய்மலையினை அவர்களுக்கு மேலாக நாம் உயர்த்தினோம். மேலும் நாம் அவர் களிடம் “ நுழைவாயிலில் பணிவோடு நுழையுங் கள்” என்று கூறினோம். மேலும் நாம் அவர் களிடம்” ஸப்பத்தின் புனிதத்தை கெடுக்கா தீர்கள்.” என்று கூறினோம். உண்மையில், நாம் அவர்களிடம் ஓர் உறுதியான உடன்படிக்கை எடுத்தோம்.

[4:155]தங்களுடைய உடன்படிக்கைகளை மீறியதற் காகவும் கடவுள் -ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்ததற்காகவும் வேதம் வழங்கப்பட்டவர்களை நீதமின்றிக்கொலை செய்ததற்காகவும் மேலும் “எங்கள் மனங்கள் முடிவெடுத்துவிட்டன.” என்று கூறியதற்காகவும் (அவர்கள் தண்டனைக்கு உள்ளாகினர்) உண்மையில், கடவுள் தான் அவர்களின் மனங்களை, அவர்களின் நம்ப மறுத்தலின் காரணமாக, முத்திரையிட்டவர், மேலும் இதன் காரணமாகவே, அரிதாகவே தவிர, அவர்கள் நம்பிக்கை கொள்ளத் தவறி விடுகின்றனர்.

[4:156]நம்ப மறுத்துக் கொண்டிருப்பதற்காகவும், மேலும் மேரியைக் குறித்து ஒரு பெரும் பொய்யைக் கூறிக்கொண்டிருப்பதற்காகவும் (அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்). இயேசுவின் * “உடலை” சிலுவையில் அறைதல்

இஸ்ரவேலர்களிடமிருந்து படிப்பினைகள்

[4:157]மேலும் கடவுள்-ன் தூதரும், மேரியின் மகன் இயேசுவுமாகிய மெசையாஹ்வை நாங்கள் கொன்றோம், என்று கோரியதற்காகவும். உண்மையில், அவர்கள் ஒருபோதும் அவரைக் கொல்லவில்லை, அவர்கள் ஒருபோதும் அவரைச் சிலுவையில் அறையவுமில்லை - அவர்கள் செய்ததாக அவர்கள் எண்ணிக் கொள்ளுமாறு செய்யப்பட்டனர். இந்த விஷயத்தில் தர்க்கம் செய்யும் எல்லாப்பிரிவினரும் இப்பிரச்சனை குறித்து முழுக்க முழுக்க சந்தேகத்திலேயே உள்ளனர். அவர்கள் எந்த அறிவும் பெற்றிருக்கவில்லை; அவர்கள் யூகிக்க மட்டுமே செய்கின்றனர். மிக உறுதியாக அவர்கள் அவரை ஒரு போதும் கொல்லவில்லை.*

அடிகுறிப்பு

[4:158]மாறாக, கடவுள் தன்னிடம் அவரை உயர்த்திக் கொண்டார்; கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

அடிகுறிப்பு

[4:159]வேதத்தை உடையவர்களில் ஒவ்வொருவரும் அவரது மரணத்திற்கு முன்பாக அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமா யிருந்தது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவர்களுக்கெதிராக அவர் ஒரு சாட்சியாக இருப்பார்.

[4:160]அவர்களின் வரம்பு மீறல்களின் காரணமாகவும், மேலும் தொடர்ச்சியாக கடவுள்-ன் பாதையை விட்டும் தடுத்துக் கொண்டிருந்ததாலும், யூதர் களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தவற்றில் நல்ல உணவுகளை அவர்களுக்கு நாம் தடைசெய்தோம்.

[4:161]மேலும் தடை செய்யப்பட்ட கடும் வட்டியை செயல் படுத்தியதாலும், மேலும் மக்களின் பணத்தைச் சட்ட விரோதமான முறையில் உட்கொண்டதாலும், அவர்களில் உள்ள நம்பமறுப்பவர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.

[4:162]அவர்களுக்கிடையில் அறிவில் நன்கு ஊன்றியவர்கள், மற்றும் நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உமக்கு என்ன வெளிப்படுத்தப் பட்டதோ அதையும், மேலும் உமக்கு முன்னர் என்ன வெளிப்படுத்தப்பட்டதோ அதையும் நம்புகின்றார்கள். அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடிப்பவர்கள், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பவர்கள்; அவர்கள் கடவுள் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்பவர்கள் இத்தகையவர்களுக்கு நாம் ஒரு மகத்தான வெகுமதி வழங்குவோம்.

கடவுளின் தூதர்கள்

[4:163]நோவாவிற்கும் அவரைத் தொடர்ந்து வந்த வேதம் வழங்கப்பட்டவர்களுக்கும் உள்ளுணர்வு அளித்தது போலவே, உமக்கும் நாம் உள்ளு ணர்வு அளித்துள்ளோம். மேலும் ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப், குலத் தலைவர்கள், இயேசு, ஜோப், ஜோனா, ஆரோன் மற்றும் ஸாலமன் ஆகியோருக்கும், நாம் உள்ளுணர்வு அளித்தோம் - இன்னும் டேவிட்டிற்கு சங்கீதம் தந்தோம்.

[4:164]தூதர்கள் பற்றி உம்மிடம் கூறியும் உள்ளோம், மேலும் நாம் தூதர்களைப் பற்றி உம்மிடம் ஒரு போதும் கூறாமலும் உள்ளோம். மேலும் மோஸஸிடம் கடவுள் நேரடியாக பேசினார்.

[4:165]நற்செய்திகளையும், அதே சமயம் எச்சரிக்கை களையும் ஒப்படைப்பவர்கள் தூதர்கள். இவ்விதமாக, இந்த தூதர்கள் அனைவரும் மனிதர்களிடம் வந்துவிட்ட பின்னர் கடவுள்-ஐச் சந்திக்கும் போது அவர்களுக்கு சாக்குப் போக்கு எதுவும் இருக்காது. கடவுள் சர்வ வல்லமை யுடைவர், ஞானம் மிக்கவர்.

[4:166]ஆனால் கடவுள் உமக்கு என்ன வெளிப்படுத்தி யுள்ளாரோ அதற்கு அவர் சாட்சியாக உள்ளார்; அவர் அதனைத் தன் பேரறிவைக் கொண்டு வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வானவர்களும் கூட சாட்சியாக உள்ளனர், ஆனால் சாட்சி யாளராக இருக்க கடவுள் போதுமானவர்.

[4:167]நிச்சயமாக, எவர்கள் நம்பமறுத்து, மேலும் கடவுள்-ன் பாதையைவிட்டும் தடுக்கின்றார்களோ அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் வழிகெட்டுச் சென்றுவிட்டனர்.

[4:168]எவர்கள் நம்பமறுத்து மேலும் வரம்புமீறுகின்றார் களோ, அவர்களை கடவுள் மன்னிக்கமாட்டார், அன்றி அவர்களை எவ்வகையிலும் வழி நடத்தமாட்டார்;

[4:169]நரகத்தின் பாதைக்குத்தவிர, அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதனைச் செய்வது கடவுள் -க்கு எளிதானதேயாகும்.

[4:170]மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன் தூதர் உங்களிடம் வந்துள்ளார். ஆகையால், உங்கள் சொந்த நலனிற்காக நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் நம்ப மறுத்துவிட்டால், பின்னர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

திரித்துவம்: ஒரு பொய்யான கோட்பாடு

[4:171]வேதத்தையுடைய மக்களே, உங்களுடைய மார்க்கத்தின் வரம்புகளை மீறாதீர்கள், மேலும் கடவுள் ஐப் பற்றி உண்மையைத் தவிர எதையும் கூறாதீர்கள். மெசையாஹ்வும், மேரியின் மகனுமாகிய இயேசு கடவுள்-ன் ஒரு தூதராகவும், மேலும் மேரிக்கு அவர் அனுப்பிய அவரது வார்த்தையாகவும் மேலும் அவரிட மிருந்துள்ள ஒரு வெளிப்பாடாகவுமே இருந்தார். ஆகையால், நீங்கள் கடவுள்-ன் மீதும் மேலும் அவருடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். “திரித்துவம்” என்று நீங்கள் கூறக் கூடாது. உங்களுடைய சொந்த நலனிற்காக நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும். கடவுள் தான் ஒரே ஒரு தெய்வம், அவர் துதிப்பிற்குரியவர்; ஒரு மகனை பெற்றிருப்பதை விட்டும் அவர் மிகவும் மகத்துவம் மிக்கவர். வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மற்றும் பூமியின் மேல் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது. இரட்சகராகவும் மேலும் எஜமானராக வும் இருக்க கடவுள் போதுமானவர்.

[4:172]மெசையாஹ்வானாலும் அன்றி, நெருக்கமான அந்த வானவர்களானாலும் கடவுள்-ன் அடியாராக இருப்பதை ஒரு போதும் ஏளனமாகக் கருத மாட்டார்கள். எவர்கள் அவரை வழிபடுதை ஏளனமாகக் கருதுகின்றார்களோ, மேலும் அடிபணிவதை விட்டும் மிகவும் அகந்தை கொள்கின்றார்களோ, அவர்கள் அனைவரையும் தனக்கு முன்பாக அவர் ஒன்று கூட்டுவார்.

[4:173]நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர் முழுமையாக வெகுமதி அளிப்பார், மேலும் அவருடைய அருளைக் கொண்டு அவர்கள் மேல் பொழிவார். வெறுப்படைந்தும் மேலும் ஆணவங்கொண்டும் திரும்பியவர்களைப் பொறுத்தவரை அவர் அவர்களை வலி மிகுந்த தண்டனைக்கு உள்ளாக்குவார். அவர்கள் கடவுள்-ஐத் தவிர எந்த இரட்சகரையோ, அன்றி மீட்பவரையோ காணமாட்டார்கள்.

குர்ஆனின் கணிதக் குறியீடு: தெளிவாகப் புரியக் கூடிய மறுக்க இயலாத சான்று

[4:174]மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு சான்று வந்துள்ளது. உங்களுக்கு ஆழ்ந்ததோர் வழிகாட்டியை நாம் இறக்கி அனுப்பியுள்ளோம்.

[4:175]எவர்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவரை உறுதியாகப்பற்றிக் கொள்கின்றார்களோ அவர்களை அவர் தன்னுடைய கருணை மற்றும் கிருபையினுள் நுழையச் செய்வார், மேலும், அவர்களைத் தன்பால் ஒரு நேரான பாதையில் வழி நடத்துவார்.

[4:176]அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றார்கள், “தனிநபர் சம்பந்தமாக கடவுள் உங்களுக்கு அறிவுறுத்துகின்றார். ஒருவர் குழந்தைகள் இல்லாதிருந்து இறந்துவிட்டால் மேலும் அவர் ஒரு சகோதரியைக் கொண்டிருந்தால், வாரிசுரி மையில் பாதியை அவள் அடைவாள். அவள் முதலில் இறந்து, அவளுக்கு குழந்தைகள் இல்லா திருந்தால், அவர் அவளின் வாரிசுரிமையை அடைவார். இரண்டு சகோதரிகள் இருந்தால், அவர்கள் வாரிசுரிமையில் மூன்றில் இரண்டினை அடைவர். உடன் பிறப்புகள் ஆண்களாகவும், பெண்களாகவும் இருந்தால், பெண்ணின் பங்கைப் போன்று இரண்டு மடங்கை ஆண் அடைவார்” என்று கூறுவீராக. நீங்கள் வழி தவறி விடாமல் இருப்பதற்காகக் கடவுள் இவ்விதமாக உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார், கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.