சூரா 40க்குரிய அடிக்குறிப்புகள்

*40:1 “ஹாமீம்” ஆகிய இந்த தலைப்பு எழுத்துக்கள் 40-46 சூராக்களில் இடம் பெறுகின்றன. ஹா மற்றும் மீம் ஆகிய எழுத்துக்கள் இந்த ஏழு சூராக்களிலும் இடம் பெறும் மொத்த எண்ணிக்கையாவது 2147 அல்லது 19 X 113 (பின் இணைப்பு 1).

*40:11-12 நம்பமறுப்பவர்கள் இரண்டு மரணங்களை அனுபவிக்கின்றனர், அதே சமயம் நன்னெறியாளர்களான நம்பிக்கையாளர்கள், நாம் ஏற்கெனவே அனுபவித்த மரணத்திற்கு அப்பால், மரணத்தைச் சுவைப்பதில்லை (44:56). பின் இணைப்பு 17ஐ தயவுசெய்து பார்க்கவும். நரகத்திற்குச் செல்லும் காரணம் வெளிப்படையானதாகும்; கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கூட மற்றவர்களை அவருடன் இணைத்துக் கொள்கின்றனர் (39 :45 ஐப் பார்க்கவும்).

*40:34 யூதர்கள், மெஸையாஹ் அவர்களிடம் வந்தபோது அவர் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தனர், கிறிஸ்தவர்கள், முஹம்மது அவர்களிடம் வந்த போது அவர் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தனர், மேலும் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர் முஹம்மது இறுதித் தூதர் என்று நம்புகின்றனர். இந்தத் தவறான அடிப்படையில், கடவுளின் உடன்படிக்கைத் தூதரை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். 3:81-90 மற்றும் 33:7 ஆகியவற்றிலிருந்து, “ கடவுளி ன் உடன்படிக்கைத் தூதர் மீது நம்பிக்கை கொண்டு ஆதரவளிக்க வேண்டும்,” என்ற குர்ஆனின் கட்டளையை ஏற்றுக் கொள்ளத் தவறுபவர்கள், நம்பிக்கையாளர்களாக நீடிப்பதில்லை என்று நாம் அறிந்து கொள்கின்றோம். பின்இணைப்பு 2 & 26 ஐப் பார்க்கவும்.

*40:34 “ இறுதித் தூதர்” என்று கூறுவதற்கு எதிரான தடையுத்தரவிற்கு மிகச்சரியாக நான்கு வசனங்கள், முன்னாலும் அதற்கு நான்கு வசனங்கள் பின்னாலும் ‘ ரஷாத்” என்ற பெயர் அரபி மூலத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

*40:60 பொருள் சார்ந்த வசதிகள் உட்பட, எந்த ஒன்றிற்காகவும் பிரார்த்தித்தல், கடவுளை இறைஞ்சுதல், வழிபாட்டின் ஒரு வடிவமாகும். எனவே தான் நமக்கு ஏதேனும் தேவை ஏற்படும் போதெல்லாம் கடவுளை இறைஞ்சிப் பிரார்த்திக்கும்படிக் கட்டளையிடப்படுகின்றது. ஒரு நாத்திகன் ஒரு போதும் எந்த ஒன்றிற்காகவும் கடவுளை இறைஞ்ச மாட்டான்.

*40:64 15:20, 20:54, 25:2, மற்றும் 35:12-13 ஆகிய வசனங்களுக்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும்.

*40:66 இவ்வசனத்தில் பயன்படுத்தப்படும் “ நஹா” என்ற அரபி வார்த்தை ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றை நிறுத்துவதையே குறிக்கின்றது. உதாரணத்திற்கு 4:171ல் இதே வார்த்தையை பார்க்கவும். 93:7ஐயும் பார்க்கவும்.

*40:72 தங்களைத் தயார் செய்து கொள்ளாதவர்கள், தீர்ப்பு நாளன்று கடவுளின் வருகையின் போது மிகப்பயங்கரமான துன்பத்தை அடைவார்கள். அவர்களுடைய ஆன்மாக்கள் போதுமான வளர்ச்சியையும் ஊட்டத்தையும் பெறாத காரணத்தால், கடவுளின் அருகாமையை அவர்களால் தாங்கஇயலாது. குறிப்பிட்ட இந்தச் சூழ்நிலையை (55:44) வர்ணிக்க “தீக்கனல்” (ஐகேநசnடி) என்பதை நான் பயன்படுத்துகின்றேன். கடவுளால் விதிக்கப்பட்டுள்ள தொடர்புத் தொழுகை போன்ற சடங்குகளின் மூலம் ஆன்மாவின் தயாரிப்பு முழுமையடைகின்றது

*40:78 17:45-46, 18:57 மற்றும் 56:79 ஆகிய வசனங்களில் இருந்து நம்பமறுப்பவர்கள் குர்ஆனை அடைந்து கொள்ள வழி இல்லை என்பதை நாம் அறிந்து கொள்கின்றோம்; நம்பிக்கையாளர்களும் மேலும் உண்மையான தேடுதல் உடையவர்களும் மட்டுமே அதனைப் புரிந்து கொள்ளக் கடவுளால் அனுமதிக்கப் படுகின்றனர். “ மகத்தான அற்புதங்களில் ஒன்றான” (74:30-35), குர்ஆனின் கணிதக் குறியீடு, கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் கடவுளுடைய உடன்படிக்கைத் தூதர் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது (பின் இணைப்பு 2).