சூரா 41: விவரிக்கப்பட்டது (ஃபுஸ்ஸிலத்)
[41:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
[41:1] ஹா.ம.*
அடிகுறிப்பு

[41:2] மிக்க அருளாளர், மிக்க கருணையாளரிட மிருந்து ஒரு வெளிப்பாடு.
[41:3] அறிந்திருக்கும் மக்களுக்கு, அரபி மொழியிலானதொரு குர்ஆனில், முழுமையான விபரங்களை வழங்குகின்ற வசனங்களைக் கொண்ட ஒரு வேதம்.
[41:4] நற்செய்திகளைத் தாங்கிய ஒன்று, அவ் வண்ணமே எச்சரிக்கும் ஒன்று. ஆயினும், அவர்களில் அதிகமானோர் திரும்பிச் சென்று விடுகின்றனர்; அவர்கள் செவியேற்பதில்லை.
[41:5] அவர்கள், “எங்களுடைய மனங்கள் முடி வெடுத்து விட்டன, உம்முடைய தூதுச் செய்தியின் பால் எங்களுடைய காதுகள் செவிடாகி விட்டன, மேலும் எங்களை உம்மிட மிருந்து ஒரு தடுப்பு பிரித்து வைக்கின்றது. நீர் விரும்பியதைச் செய்து கொள்ளும், அவ்வாறே நாங்களும் செய்வோம்” என்று கூறினார்கள்.
[41:6] கூறுவீராக, “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ள நான், உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக் கவும், மேலும் அவருடைய மன்னிப்பைக் கேட்கவும் வேண்டும். இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு கேடுதான்.
[41:7] “கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக் காதவர்கள், மேலும் மறுவுலகத்தைக் குறித்து, அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருக் கின்றனர்.”
[41:8] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப்பொறுத்த வரை, அவர்கள் நன்கு தகுதியானதொரு வெகுமதியைப் பெறுகின்றனர்.
[41:9] “பூமியை இரண்டு நாட்களில்* படைத்த அந்த ஒருவரை நீங்கள் நம்ப மறுக்கின்றீர்கள், மேலும் அவரே பிரபஞ்சத்தின் இரட்சகராக இருக்கின்ற போதிலும், அவருடன் சமமாக்க, இணைத் தெய்வங்களை நீங்கள் அமைத்துக் கொள்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

[41:10] அவர் அதன் மீது நிலைப்படுத்துபவைகளை (மலைகள்) அமைத்தார், அதனை விளை விக்கக் கூடியதாக ஆக்கினார், மேலும் அதில் வசிப்பவர்கள் அனைவருடைய தேவை களையும் பூர்த்தி செய்யும் பொருட்டு, நான்கு நாட்களில் அதன் வாழ்வாதாரங்களை அவர் கணக்கிட்டார்.
[41:11] பின்னர் அவர் வானத்தின் பால் திரும்பிய போது, அதுவரை அது வாயுவாகவே இருந்தது, மேலும் அதனிடமும் பூமியிடமும்,“விருப்பத்துடனோ அல்லது விருப்பமில்லாமலோ, வாழ்வு நிலைக்குள் வாருங்கள்” என்று கூறினார். அவை, “விருப்பத்துடனே நாங்கள் வரு கின்றோம்” என்று கூறின.
[41:12] இவ்விதமாக, அவர்* இரண்டு நாட்களில் ஏழு பிரபஞ்சங்களை முழுமைப்படுத்தினார், மேலும் ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் உரிய விதிகளை அமைத்தார். மேலும் நாம்* மிகக்கீழான பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம், மேலும் அதனைச் சுற்றிப் பாதுகாவலர்களை அமைத்தோம். சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்தவரின் வடிவமைப்பு இவ்விதமானதாகும்.
அடிகுறிப்பு

எச்சரிக்கை

[41:13] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப் போது, “‘ஆது மற்றும் தமூது ஆகியோரை அழித்த பேரழிவைப் போன்றதொரு பேரழிவைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கின்றேன்” என்று கூறுவீராக.
[41:14] “நீங்கள் கடவுள்-ஐத் தவிர வழிபாடு செய்யக் கூடாது,” என்று கூறியவர்களாக, அவர் களிடமும், அவ்வாறே அவர்களுக்கு முன்ன ரும் அவர்களுக்குப் பின்னரும், அவர்க ளுடைய தூதர்கள் அவர்களிடம் சென்றனர். அவர்கள், “எங்கள் இரட்சகர் நாடியிருந்தால், வானவர்களை அவர் அனுப்பியிருக்க இயலும். நீங்கள் கூறுபவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை அற்றவர்கள் ஆவோம்” என்று கூறினார்கள்.
[41:15] ‘ஆதைப் பொறுத்த வரை, அவர்கள் பூமியின் மீது ஆணவம் கொண்டார்கள், சத்தியத்தை எதிர்த்தார்கள், மேலும், “நம்மை விட வலிமை மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவரான கடவுள், அவர்களை விடவும் வலிமை மிக்கவர் என்பதை, அவர்கள் புரிந்து கொள்ளவில் லையா? அவர்கள் நமது வெளிப்பாடுகளைப் போற்றாதவர்களாக இருந்தனர்.
[41:16] அதன் விளைவாக, ஒரு சில துன்பகரமான நாட்களுக்கு, உக்கிரமான காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம். இவ்விதமாக நாம் இழிவு தரும் தண்டனையைக் கொண்டு இந்த வாழ்க்கையில் அவர்களை துன்புறுத்தினோம், மேலும் மறுவுலகின் தண்டனையோ இன்னும் அதிகமான இழிவு தருவதாகும்; அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
[41:17] தமூதைப் பொறுத்த வரை, நாம் அவர்களுக்கு வழிகாட்டலை வழங்கினோம், ஆனால் அவர் கள் வழிகாட்டலுக்கு மேலாக குருட்டுத் தனத்தையே விரும்பி எடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்கள் சம்பாதித் தவற்றின் காரணத்தால், பேரழிவும் மேலும் இழிவு நிறைந்த தண்டனையும் அவர்களை அழித்தது.
[41:18] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் எப்போதும் காப்பாற்றுகின்றோம்.
[41:19] கடவுள்-ன் எதிரிகள், வலுக்கட்டாயமாக, நரகத்திற்கு வரவழைக்கப்படுகின்ற அந்த நாள் வரும்.
[41:20] அவர்கள் அங்கே சென்றடைந்தவுடன், அவர் களுடைய சொந்தச் செவிப்புலன், கண்கள், மற்றும் தோல்கள் அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி கூறும்.

வீடியோ பதிவு

[41:21] அவர்கள் தங்கள் தோல்களிடம், “ஏன் நீங்கள் எங்களுக்கெதிராகச் சாட்சியம் அளித் தீர்கள்?” என்று கூறுவார்கள். அவை, “கடவுள் எங்களைப் பேசச் செய்தார்; அவர்தான் ஒவ்வொன்றையும் பேசச் செய்கின்றார். அவர் தான் உங்களை முதல் முறை படைத்தவர், மேலும் இப்போது நீங்கள் அவரிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றீர்கள்” என்று பதிலளிக்கும்.
[41:22] உங்களுடைய சொந்தச் செவிப்புலன், உங்களு டைய கண்கள், அல்லது உங்களுடைய தோல் கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் மறைத்துக் கொள்ள எந்த வழியுமில்லை. உண்மையில், கடவுள் நீங்கள் செய்கின்றவற்றில் அதிக மானதை அறியாமல் இருக்கின்றார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள்.
[41:23] உங்களுடைய இரட்சகரைப் பற்றிய இவ்வகையான நினைப்பு உங்களை வீழ்ந்து விடச் செய்யும், மேலும் பின்னர் நீங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவீர்கள்.
[41:24] அவர்கள் இருக்கின்ற வழியிலேயே அவர்கள் தொடர்ந்து சென்றால், நரகமே அவர்களுடைய விதியாக இருக்கும், மேலும் அவர்கள் பிழை பொறுக்கக் கோரினாலும், அவர்கள் பிழை பொறுக்கப்பட மாட்டார்கள்.

ஜின் கூட்டாளிகள்

[41:25] அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் களுடைய கண்களில் அலங்காரமானதாக ஆக்கும் கூட்டாளிகளை அவர்களுக்கு நாம் நியமிக்கின்றோம். இவ்விதமாக, அவர்கள் முந்திய சமூகங்களின் ஜின்கள் மற்றும் மனிதர்களுக்கு நேர்ந்ததைப் போன்ற அதே விதிக்கு உள்ளாவதில் சென்று முடிவார்கள், அவர்களும் நஷ்டவாளிகளாகவே இருந்தனர்.
[41:26] நம்ப மறுப்பவர்கள், “இந்தக் குர்ஆனை கவனித்துக் கேட்காதீர்கள், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, இதனைச் சிதைத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
[41:27] நிச்சயமாக நாம் இந்த நம்ப மறுப்பவர்களைக் கடுமையான தண்டனையைக் கொண்டு துன்புறுத்துவோம். நிச்சயமாக அவர்களுடைய தீய காரியங்களுக்குரிய கூலியை அவர் களுக்குத் திருப்பிக்கொடுப்போம்.
[41:28] கடவுள்-ன் விரோதிகளுக்காகக் காத் திருக்கும் கூலி இத்தகையதேயாகும். நரகம் தான் அவர்களுடைய நிரந்தரமான தங்குமிட மாக இருக்கும்; நம்முடைய வெளிப்பாடுகளைக் கைவிட்டதற்கான ஒரு நியாயமான கூலி.

தீர்ப்பு நாளன்று

[41:29] நம்ப மறுப்பவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களை வழிதவறச் செய்த இரு வகையினரில் உள்ளவர்களையும் - ஜின்கள் மற்றும் மனிதர் கள் - அவர்களை எங்கள் பாதங்களுக்குக் கீழே போட்டு நாங்கள் நசுக்கி, மேலும் அவர் களை மிகக் கீழானவர்களாக ஆக்கி விடுவதற் காக, அவர்களை எங்களுக்குக் காட்டுவீராக” என்று கூறுவார்கள்.

பூரணமான மகிழ்ச்சி: இப்பொழுதும், எப்பொழுதும்

[41:30] “கடவுள் தான் எங்கள் இரட்சகர்,” எனப் பிரகடனம் செய்து, பின்னர் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்றவர்கள் மீது, வானவர்கள் இறங்குகின்றனர்: “நீங்கள் அச்சம் எதுவும் கொள்ள வேண்டாம், அன்றி நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனம் உங்களுக் காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியில் மகிழ்ச்சியடையுங்கள்.
[41:31] “இந்த வாழ்விலும், மேலும் மறுவுலகிலும் நாங்கள் உங்களுடைய தோழர்களாக இருக்கின்றோம். அதிலே நீங்கள் ஆசைப்படும் எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்; உங் களுக்கு வேண்டிய எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்.
[41:32] “(இவ்விதமானது உங்களுடைய) இறுதித் தங்குமிடம், மன்னிக்கின்றதொரு, மிக்க கருணையாளரிடமிருந்து”.

அடிபணிந்தோர்

[41:33] கடவுள்-ன் பால் அழைத்து, மேலும் நன்னெறியான காரியங்கள் செய்து, மேலும், “நான் அடிபணிந்தவர்களில் ஒருவன்”, என்று கூறும் ஒருவரை விட, நல்ல வார்த்தைகளை கூற எவரால் இயலும்?
[41:34] நல்ல பதிலும் கெட்ட பதிலும் சமமானவையல்ல. நீங்கள் இயன்றவரை மிகச் சிறந்த பதிலளிப் பதைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனால், உங்களுடைய விரோதியாக இருந்து வந்த ஒருவனும், உங்களுடைய மிகச் சிறந்த நண்பனாகி விடக்கூடும்.
[41:35] உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களைத் தவிர எவரும் இதனை அடைந்து விட முடியாது. மகத்தான அதிர்ஷ்டசாலிகளைத் தவிர வேறு எவரும் இதனை அடைந்து விட முடியாது.

சாத்தான் உங்களை வசீகரிக்கும் போது

[41:36] சாத்தான் உங்களிடம் ஒரு எண்ணத்தைக் கிசுகிசுத்தால், நீங்கள் கடவுள்-இடம் புகலிடம் தேட வேண்டும். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

கடவுளின் சான்றுகள்

[41:37] இரவும், பகலும், மேலும் சூரியனும், சந்திரனும் அவருடைய சான்றுகளில் உள்ளவைகளாகும். சூரியன் முன்னிலையிலோ, அன்றிச் சந்திரனுக் கோ சிரம் பணியாதீர்கள்; நீங்கள் உண்மை யாகவே அவரை மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால், அவற்றைப் படைத்த கடவுள்-ன் முன்னிலையில் தான் நீங்கள் சிரம்பணிந்து விழவேண்டும்.
[41:38] இதனைச் செய்வதற்கு அவர்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருந்தால், பின்னர் உம் இரட்சகரிடத்தில் இருப்பவர்கள், எப்பொழுதும் சோர்வடையாது இரவும் பகலும் அவரைத் துதிக்கின்றனர்.
[41:39] நிலமானது அசைவற்று இருப்பதை நீர் காண்பதும், பின்னர் அதன் மீது நாம் தண்ணீரைக் கொண்டு பொழிந்தவுடன், அது உயிருடன் துளிர்ப்பதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். நிச்சயமாக, அதனை மீண்டும் உயிர்ப்பித்தவரால் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க இயலும். அவர் சர்வ சக்தியுடையவர்.
[41:40] நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளைச் சிதைப்பவர்கள் நம்மிடமிருந்து மறைந்தவர் களாக இல்லை. நரகத்தில் வீசப்படுகின்ற ஒருவன் மேலானவனா, அல்லது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பாதுகாப்புடன் வருபவரா? நீங்கள் விரும்பிய எதையும் செய்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக அவர் இருக்கின்றார்.

குர்ஆனின் கணித அற்புதம்*

[41:41] குர்ஆனின் சான்றை*, அது அவர்களிடம் வந்த பொழுது, ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள், கண்ணியமானதொரு புத்தகத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களாகி விட்டனர்.
அடிகுறிப்பு

[41:42] கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ எந்தப் பொய்மையும் அதில் நுழைந்திட முடியாது;* ஞானம் மிக்கவர், புகழுக்குரிய வரிடமிருந்து வந்த ஒரு வெளிப்பாடு.
அடிகுறிப்பு

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*

[41:43] முந்திய தூதர்களுக்கு என்ன கூறப்பட்டதோ அதுவே, மிகச் சரியாக உமக்கும் கூறப் பட்டுள்ளது. உம்முடைய இரட்சகரிடம் மன்னிப்பு உள்ளது, அத்துடன் அவரிடம் வலி நிறைந்த தண்டனையும் உள்ளது.
அடிகுறிப்பு

மொழி ஒரு பொருட்டல்ல

[41:44] அரபி மொழி அல்லாத குர்ஆனாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள், “ஏன் அந்த மொழியில் இது இறங்கி வந்தது?” என்று கூறியிருப்பார்கள். அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ, “நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும் மேலும் நிவாரணமும் ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகத் தொலைவி லிருந்து சொற்பொழிவாற்றுவது போன்று, இதன் பால் அவர்கள் செவிடர்களாகவும் மற்றும் குருடர் களாகவும் இருப்பார்கள்” என்று கூறுவீராக.
[41:45] மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்திருந் தோம், மேலும் அதுவும் தர்க்கிக்கப்பட்டது. உம்முடைய இரட்சகரின் முன்னரே தீர்மானிக்கப் பட்ட முடிவு இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில், அவர்கள் மிகவும் அதிகமான சந்தேகங்களைக் கொன்டிருந்தனர்.
[41:46] நன்னெறியான காரியங்கள் புரிகின்ற எவராயினும், தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய் கின்றார், மேலும் தீமைகளைப் புரிகின்ற எவராயினும் தனக்கே கேடாகத்தான் அவ்வாறு செய்கின்றார். உம்முடைய இரட்சகர் ஒரு போதும் மக்களின்பால் அநீதி இழைப்பவர் அல்ல.

இணைத் தெய்வங்கள் தங்களைப் பின்பற்றியவர்களைக் கைவிட்டு விடுகின்றனர்

[41:47] அந்த நேரம் (உலகத்தின் முடிவு)* பற்றிய அறிவு அவரிடமே உள்ளது. அவருடைய அறிவு இல்லா மல், பழங்கள் எதுவும் அவற்றின் பாளைகளி லிருந்து வெளிவருவதில்லை, அன்றி எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதோ அல்லது பிரசவிப் பதோ இல்லை. அவர்களை அவர்: “என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கேட்கின்ற அந்நாள் வரும். அவர்கள், “எங்களில் எவருமே அதற்குச் சாட்சி கூறுபவர்கள் இல்லை என்று நாங்கள் உம்மிடம் பிரகடனம் செய்கின்றோம்” என்று கூறுவார்கள்.
அடிகுறிப்பு

[41:48] அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்த அந்த இணைத்தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும், மேலும் தப்பித்துக் கொள்ளுதல் இல்லை என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.

கெட்ட காலத்தில் நண்பர்கள்

[41:49] நல்ல விஷயங்களுக்காக இறைஞ்சுவதில் மனிதன் ஒருபோதும் சோர்வடைவதில்லை. ஆனால் அவனுக்குத் துன்பங்கள் நேரிட்டால், அவன் மனத்தளர்ச்சியடைந்தவனாகவும், நிராசையடைந்தவனாகவும்ஆகிவிடுகின்றான்.
[41:50] மேலும், சில துன்பங்களை அனுபவித்த பின்னர் அவனுக்கு நாம் அருள்புரிந்தால், அவன், “இது எனக்குரியதே ஆகும். அந்த நேரம் எப்பொழுதேனும் நிகழ்ந்தேறும் என்று நான் நம்பவில்லை. என் இரட்சகரிடம் நான் திரும்பிச் சென்றாலும் கூட, அவரிடமும் நான் மேலான வற்றையே அடைவேன்” என்று கூறுகின்றான். மிகவும் உறுதியாக, நம்ப மறுப்பவர்களுக்கு அவர்களுடைய அனைத்துக் காரியங்களைப் பற்றியும் நாம் தெரிவிப்போம், மேலும் கடுமையான தண்டனைக்கு அவர்களை உட்படுத்துவோம்.
[41:51] மனிதனுக்கு நாம் அருள்புரியும் போது, அவன் திரும்பிச் செல்கின்றான், மேலும் தூரத்திலும் தூரமாகத் தள்ளிச் சென்று விடுகின்றான், மேலும் அவன் ஏதேனும் துன்பத்தை அனுபவிக்கும்போது, அவன் உரத்த குரலில் இறைஞ்சிப் பிரார்த்திக் கின்றான்.
[41:52] பிரகடனம் செய்வீராக: “இது மெய்யாகவே கடவுள்-இடமிருந்து வந்ததாக இருந்து, பின்னர் அதனை நீங்கள் ஏற்க மறுப்பதென முடிவு செய்து விட்டால்? இதனை எதிர்ப்பதென முடிவெடுத்து விட்டவர்களை விட வழிகேட்டில் வெகு தூரம் இருப்பவர்கள் யார்?”

ஒரு மாபெரும் முன்னறிவிப்பு*

[41:53] நம்முடைய சான்றுகளை அறிவிற்கெட்டுகின்ற வரையிலும், மேலும் அவர்களுக்குள்ளேயும், இது சத்தியம்தான்* என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வரை நாம் அவர்களுக்குக் காட்டுவோம். அனைத்து விஷயங்களுக்கும் ஒரு சாட்சியாக, உம்முடைய இரட்சகர் போதுமான வரல்லவா?
அடிகுறிப்பு

[41:54] உண்மையில், தங்கள் இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து அவர்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர். அனைத்து விஷயங்களையும் அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.