சூரா 41க்குரிய அடிக்குறிப்புகள்

*41:1 குர்ஆனின் இந்த தலைப்பு எழுத்துக்களின் முக்கியத்துவத்தை, 40:1 க்குரிய அடிக்குறிப்பில் பார்க்கவும்.

*41:9-10 படைப்பின் “நாட்கள்” என்பது ஒரு அளவுகோலாகத் திகழ்கின்றது. இவ்விதமாக, இந்தப் பௌதிகப் பிரபஞ்சம் இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது, அதே சமயம் பூமியின் மீதுள்ள அனைத்துப் படைப்புகளுக்கும் உரிய வாழ்வாதாரங்களைக் கணக்கிட நான்கு நாட்கள் தேவைப்பட்டது. இந்த பூமிக் கிரகத்தில் மட்டுமே உயிர்கள் இருக்கின்றன என்பதையும் இது நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது.

*41:12 கடவுள் மட்டுமே இப்பிரபஞ்சத்தைப் படைத்தார் (18:51),ஆனால் மிகக் கீழே உள்ள இப்பிரபஞ்சத்தில் சில குறிப்பிட்ட பணிகளைக் கையாளுவதில் வானவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். நம்முடைய பிரபஞ்சம் கடவுளின் நேரடி வருகையைத் தாங்க இயலாது (7:143) . நம்முடைய பிரபஞ்சத்தில் வானவர்களின் பங்கை பன்மைப்பதம் மெய்ப்பிக்கின்றது (பின்இணைப்பு 10).

*41:41 “திக்ர்” எனும் வார்த்தை, 38:1ல் தெளிவாக்கப்பட்டுள்ளபடி, குர்ஆனின் கணிதக் குறியீட்டைக் குறிக்கின்றது.

*41:42 குர்ஆனுடைய கணித அற்புதத்தின் தலையாய பணிகளில் ஒன்று, குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தையும் மேலும் ஒவ்வொரு அம்சத்தையும் பாதுகாப்பதாகும். இவ்விதமாக, எந்தக் குறுக்கீடும் உடனடியாக அடையாளம் காணப்பட்டு விடுகின்றது (பின் இணைப்பு 1 & 24).

*41:43 இவ்வசனம் கடவுளின் உடன்படிக்கைத் தூதரைக் குறிக்கின்றது என்று கணிதச் சான்று நிரூபிக்கின்றது. “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (505), “கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725), இந்த வசன எண்ணையும் (43) நாம் கூட்டினால், நமக்குக் கிடைப்பது, 505 + 725 + 43 = 1273 = 19 ஒ 67. பின் இணைப்பு 2 ஐ பார்க்கவும்.

*41:47 கடவுள் இந்த அறிவை தன் உடன்படிக்கைத் தூதரின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் (பின் இணைப்பு 25).

*41:53 இவ்வசனம் 19 எழுத்துக்களால் இயற்றப்பட்டுள்ளது, மேலும் அவற்றின் எழுத்தெண் மதிப்புக்களின் கூட்டுத் தொகை 1387, 19 ஒ 73 ஆகும். 9:33, 48:28, 61:9, & 110:2 ஆகியவற்றுடன், இந்த மாபெரும் முன்னறிவிப்பு, மாற்றமேதும் செய்யப்படாத கடவுளின் தூதுச் செய்தியாக குர்ஆனை முழு உலகமும் ஏற்றுக் கொள்ளும் என விதிக்கப்பட்டுள்ளது என்பதை நமக்குத் தெரிவிக்கின்றது (பின் இணைப்பு 38ஐப் பார்க்கவும்).