சூரா 42: கலந்தாலோசித்தல் (அல்-ஷுரா)
[42:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[42:1] ஹா.ம.*
அடிகுறிப்பு

[42:2] ‘ஐ.ஸீ.க.*
அடிகுறிப்பு

[42:3] உமக்கும், மேலும் உமக்கு முன்னிருந்தவர் களுக்கும், உள்ளுணர்வளிப்பது சர்வ வல்லமையுடையவரும், ஞானம் மிக்கவருமாகிய, கடவுள் ஆகும்.
[42:4] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்குரியது, மேலும் அவர் மிக உயர்ந்தவர், மகத்தானவர்.
[42:5] அவர்களுக்கு மேலே இருக்கும் வானங்கள், அவர் மீதுள்ள பக்தியின் காரணத்தால் கிட்டத்தட்ட நொறுங்கி விடுகின்றது, மேலும் வானவர்கள் தங்கள் இரட்சகரைப் புகழ்கின்றனர் மற்றும் துதிக்கின்றனர், மேலும் அவர்கள் பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கின் றனர். நிச்சயமாக, கடவுள்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[42:6] அவருடன் மற்ற எஜமானர்களை அமைத்துக் கொள்பவர்கள், கடவுள்தான் அவர்களுடைய பொறுப்பாளராக இருக்கின்றார்; நீர் அவர்க ளுடைய வழக்கறிஞர் அல்ல.
[42:7] இவ்விதமாக நாம் முக்கியமான சமூகத்தையும், அதனைச் சுற்றியுள்ள அனைவரையும் எச்சரிப் பதற்காக, மேலும் தவிர்த்து விட முடியாத அந்த ஒன்று கூட்டும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காக, அரபியிலானதொரு குர்ஆனை உமக்கு வெளிப்படுத்துகின்றோம். சிலர் சுவனத்தைச் சென்றடைவார்கள், இன்னும் சிலர் நரகத்தை.
[42:8] கடவுள் நாடியிருந்தால், அவர்களை ஒரே சமூகமாக அவர் ஆக்கியிருக்க இயலும். ஆனால் தான் நாடியவர்களை அவர் தன் கருணைக்குள் மீட்டுக் கொள்கின்றார். வரம்பு மீறுபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அதிபதியோ, அன்றி ஓர் உதவியாளரோ கிடையாது.
[42:9] அவருடன் வேறு இரட்சகர்களை அவர்கள் கண்டு விட்டனரா? கடவுள் தான் ஒரே இரட்சகரும் மேலும் எஜமானரும் ஆவார். அவர்தான் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றார், மேலும் அவர் தான் சர்வ சக்தியுடையவர்.
[42:10] இத்தூதுச்செய்தியின் எந்தப்பகுதியிலேனும் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், இவ்வாறு செய்வதற்குரிய தீர்ப்பு கடவுள்-இடமே உள்ளது. என் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அவர் மீது நான் பொறுப்பேற்படுத்துகின்றேன், மேலும் அவருக்கே நான் அடிபணிகின்றேன்.

"கடவுளுக்கு நிகர் எவருமில்லை"

[42:11] வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். உங்களிலிருந்தே வாழ்க்கைத் துணைகளை அவர் உங்களுக்காக படைத்தார்-மேலும் அத்துடன் விலங்குகளுக்காகவும். இவ்விதமாக அவர் பெருகுவதற்கான வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகின்றார். அவருக்கு நிகராக எந்த ஒன்றும் இல்லை. அவர்தான் செவியேற்பவர், பார்ப்பவர்.
[42:12] வானங்கள் மற்றும் பூமியின் பரிபூரணமாக கட்டுப்பாடு அவருக்கே உரியது. தான் நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அதிகரிப்பதோ, அல்லது குறைப்பதோ அவர்தான். அனைத்து விஷயங்களையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

மார்க்கம் ஒன்றே ஒன்று தான்

நோவாவிற்கு விதிக்கப்பட்ட அதே மார்க்கத்தைத் தான் அவர் உங்களுக்கும் விதித்துள்ளார், மேலும் நாம் உமக்கு உள்ளுணர்வளித்ததும், மேலும் ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் இயேசுவிற்கும் விதித்ததுமாவது: “இந்த ஒரு மார்க்கத்தை நீங்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதனைப் பிரித்து விடாதீர்கள்” என்பதே.

ஏகத்துவவாதிகளும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களும் எதிரி நிலையில்

அவர்கள் எதனைச் செய்ய வேண்டுமென்று நீர் அழைக்கின்றீரோ அதன்பால் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் பெரும் கோபம் அடைவார்கள். தான் நாடுகின்ற எவரையும் கடவுள் தன்பால் மீட்டுக் கொள்கின்றார்; முற்றிலும் அடிபணிந்தவர்களை மட்டுமே அவர் தன்பால் வழிநடத்துகின்றார்.
[42:14] நேர்மாறாக, அவர்களிடம் அறிவு வந்ததற்குப் பின்னர்தான் தங்களுக்கிடையே பொறாமை மற்றும் கடும் கோபத்தின் காரணமாக, அவர்கள் பிரிவுகளாக உடைந்து போனார்கள். வரையறுக்கப் பட்டதொரு தவணைவரை அவர்களுக்கு அவகாசமளிப்பதென, உம் இரட்சகரிடமிருந்து முன்னரே நிர்ணயிக்கப்பட்டதொரு தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில், வேதத்திற்கு வாரிசுகளான பிந்திய தலை முறையினர், முற்றிலும் சந்தேகத்துடனே இருக் கின்றனர்.

"யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குரிய தூதுச் செய்தி"

[42:15] இதனைத்தான் நீர் பிரச்சாரம் செய்ய வேண்டும், மேலும் நீர் செய்துவர வேண்டு மென உமக்கு கட்டளையிடப்பட்டவற்றை உறுதிப்பாட்டுடன் கடைப்பிடிப்பீராக, மேலும் அவர்களுடைய விருப்பங்களைப் பின் பற்றாதீர். மேலும்: “கடவுள்-ஆல் இறக்கி அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களின் மீதும் நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக் கிடையில் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டு மென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். கடவுள் தான் எங்களுடைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகருமாவார். எங்களுடைய செயல்கள் எங்களுக்கு, மேலும் உங்களுடைய செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் எந்தத் தர்க்கமும் இல்லை. கடவுள் நம் அனை வரையும் சேர்த்து ஒன்றாகத் திரட்டுவார்; இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று பிரகடனம் செய்வீராக.
[42:16] எவர்கள் அவருடைய தூதுச் செய்தியைப் பெற்ற பின்னர், கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக் கின்றனரோ, அவர்களுடைய தர்க்கம் அவர் களுடைய இரட்சகரிடத்தில் செல்லாததாக ஆக்கப்பட்டு விட்டது. அவர்கள் தண்டித் தலுக்கு உள்ளாகிவிட்டனர், மேலும் கடுமை யானதொரு தண்டனைக்குத் தகுதியாகி விட்டனர்.
[42:17] கடவுள்-தான் சத்தியத்தையும் மற்றும் சட்டத்தையும் அறிவிப்பதற்கு, வேதத்தை இறக்கி அனுப்பியவர். நீங்கள் அறிந்துள்ள வாறு, அந்த நேரம் (தீர்ப்புநாள்) மிக அருகில் இருக்கக்கூடும்.

"நம்பிக்கையாளர்கள் தீர்ப்பு நாள் பற்றி கவனத்துடன் இருக்கின்றனர்"

[42:18] அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தான் அதற்கு சவால் விடுகின்றனர். நம்பிக்கை கொண்டோரைப் பொறுத்தவரை, அவர்கள் அதனைக் குறித்துக் கவலையுற்றவர்களாக இருக்கின்றனர், மேலும் அது சத்தியம்தான் என்பதை அவர்கள் அறிவார்கள். நிச்சயமாக, அந்த நேரத்தை மறுப்பவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டனர்.
[42:19] கடவுள் தன்னுடைய அனைத்துப் படைப்பு களையும் முற்றிலும் அறிந்திருக் கின்றார்; தான் நாடுகின்ற எவருக்கும் அவர் வழங்குகின்றார். அவர்தான் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.
[42:20] எவர் மறுவுலகின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருடைய வெகுமதிகளை நாம் பெருகும்படிச் செய்வோம். மேலும் எவர் இவ்வுலகப் பொருட்களைத் தேடுகின்றாரோ, அவருக்கு அதிலிருந்து நாம் வழங்குவோம், பின்னர் மறுவுலகில் அவர் எந்தப் பங்கையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.

"இணைத்தெய்வங்கள்: புதிய மார்க்கச் சட்டங்களை உருவாக்குகின்றன*"

[42:21] கடவுள்-ஆல் ஒருபோதும் அங்கீகரிக்கப் படாத மார்க்கச் சட்டங்களை அவர்களுக்கு விதிக்கின்ற இணைத்தெய்வங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். முன்னரே நிர்ணயிக்கப்பட்ட தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப் பட்டிருப்பார்கள். உண்மையில், வரம்பு மீறுபவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்*.
அடிகுறிப்பு

[42:22] அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் கவலையுற்றவர்களாக வரம்பு மீறுபவர்களை நீர் காண்பீர்; ஒவ்வொன்றும் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும். நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியவர் களைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனத்தின் தோட்டங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்புகின்ற எதனையும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்கள் பெறுவார்கள். இதுவே மகத்தான அருட்கொடையாகும்.
[42:23] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்ற தன் அடியார் களுக்குக் கடவுள்-இடமிருந்துள்ள நற் செய்தி இதுவேயாகும். “நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. உங்களு டைய சொந்த உறவினர்களின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் என்றே உங்களில் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கின் றேன்” என்று கூறுவீராக. எவரொருவர் ஒரு நன்னெறியான காரியத்தைப் புரிகின்றாரோ, அதற்குரிய வெகுமதியை நாம் பெருக்கு வோம். கடவுள் மன்னிப்பவர், நன்றி பாராட்டு பவர்.

"கடவுள் பொய்மையை அகற்றி சத்தியத்தை உறுதிப்படுத்துகின்றார்* அறிந்திருக்கின்றார்."

[42:24] “கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை அவர் (ரஷாத்)* புனைந்து கொண்டார்!” என்று அவர்கள் கூறுகின்றனரா? கடவுள் நாடி யிருந்தால், உம்முடைய மனம் மீது அவர் முத்திரையிட்டிருக்க இயலும், ஆனால் கடவுள் பொய்மையை அகற்றுவதுடன் தன்னுடைய வார்த்தைகளால் சத்தியத்தை உறுதிப்படுத்து கின்றார். ஆழ்மனதின் எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
அடிகுறிப்பு

[42:25] அவர்தான் தன்னுடைய அடியார்களிடமிருந்து வருந்தித்திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றவர், மேலும் பாவங்களை மன்னிக்கின்றவர். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும்
[42:26] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்கள் தான் அவருக்கு மறுமொழி அளிக்கின்றனர். தன்னுடைய அருட்கொடைகளை அவர்கள் மீது அவர் பொழிவார். நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடுமையானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[42:27] கடவுள் தன்னுடைய அடியார்களுக்கு வாழ்வாதாரங்களை அதிகரித்தால், பூமியில் அவர்கள் வரம்பு மீறலைச் செய்வார்கள். இதன் காரணமாகவே அவர் தான் நாடுகின்றோருக்கு மிகச் சரியாக அளவிட்டு அதனை அனுப்பு கின்றார். தன்னுடைய அடியார்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவராகவும் மேலும் பார்ப்பவராகவும் இருக்கின்றார்.
[42:28] அவர்தான் அவர்கள் விரக்தியுற்ற பின்னர் மழையை இறக்கி அனுப்புகின்றவர், மேலும் தன் கருணையைப் பரப்புகின்றார். அவர்தான் ஒரே எஜமானர், மிகுந்த புகழுக்குரியவர்.
[42:29] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பும், மேலும் அவற்றில் அவர் பரப்புகின்ற உயிரினங்களும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். தான் நாடும் போது, அவர் அவற்றை ஒன்று கூட்டும் ஆற்றலுடையவர்.

"ஒரு பின்விளைவு மட்டுமே"

[42:30] உங்களுக்கு நேரிடும் எந்த ஒரு கெட்டதும் உங்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவேயாகும், மேலும் (உங்களுடைய பாவங் களில்) அதிகமானவற்றை அவர் தள்ளுபடி செய்து விடுகின்றார்.
[42:31] நீங்கள் ஒருபோதும் தப்பித்து விட முடியாது, மேலும் கடவுள்-உடன் ஓர் இரட்சகராகவும் மேலும் எஜமானராகவும் உங்களுக்கு எவரும் கிடையாது.
[42:32] கொடிகளைப் போன்ற பாய்மரங்களுடன் கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.
[42:33] அவர் நாடியிருந்தால், தண்ணீரின் மேல் அவை இயங்காது விட்டு விடும் வண்ணம், காற்றுகளை அசைவற்றதாக ஆக்கியிருக்க அவரால் இயலும். உறுதிப்பாடுடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பவர்களுக்கு இவை சான்றுகளாகும்.
[42:34] அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவாக, அவர்களை அவர் அழித்து விட இயலும். மாறாக, (அவர்களுடைய பாவங்களில்) அதிகமானவற்றை அவர் மன்னித்து விடுகின்றார்.
[42:35] நம்முடைய சான்றுகளுக்கெதிராக வாதிடு பவர்கள் தங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதைக் கண்டு கொள்வார்கள்.
[42:36] உங்களுக்குக் கொடுக்கப்பட்டது எதுவா யினும், அது இவ்வுலகின் தற்காலிகப் பொருள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நம்பிக்கை கொண்டு மேலும் தங்கள் இரட்சகர் மீது பொறுப்பேற்படுத்துபவர்களுக்கு, கடவுள் வசம் இருப்பவை மிகவும் மேலானதும் நிலைத் திருப்பதுமாகும்.

"நம்பிக்கையாளர்களின் பண்புகள்"

[42:37] அவர்கள் பெரும் பாவங்களையும் மற்றும் ஒழுக்கக்கேட்டையும் தவிர்த்துக் கொள் வார்கள்,மேலும் அவர்கள் கோபப்படும்போது மன்னித்து விடுவார்கள்.
[42:38] தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிப்பதன் மூலம் தங்களுடைய இரட்சகருக்கு அவர்கள் மறுமொழியளிக்கின்றனர். அவர்களு டைய காரியங்கள்அவர்களுக்கிடையில் உரிய கலந்தாலோசனைக்குப் பின்னர் தீர்மானிக்கப் படுகின்றன, மேலும் நம்முடைய வாழ்வாதாரங் களில் அவர்களுக்கு உரியதில் இருந்து அவர்கள் (தர்மம்) கொடுப்பார்கள்.
[42:39] அவர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப் பட்டால், அவர்கள் தங்களுடைய உரிமைகளுக் காக எழுந்து நிற்பார்கள்.
[42:40] ஓர் அநியாயத்திற்குரிய, நியாயமான கைம்மாறு அதற்குச் சமமானதொரு தண்டனையாக இருப்பினும், பிழை பொறுத்துக் கொண்டு மேலும் நன்னெறியைப் பராமரிப்பவர்கள் கடவுள்-ஆல்வெகுமதியளிக்கப்படுகின்றனர். அநியாயக்காரர்களை அவர் நேசிப்பதில்லை.
[42:41] நிச்சயமாக, தங்களுக்கு அநியாயம் நேரிடும் பொழுது, தங்களுடைய உரிமைகளுக்காக எழுந்து நிற்பவர்கள், எந்தக் குற்றமும் செய்து விடவில்லை.
[42:42] மக்களை அநீதமாக நடத்துவதுடன், மேலும் கோபமூட்டும் விஷயம் எதுவுமின்றி சண்டை யிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். இவர்கள் வலிநிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[42:43] பொறுமையையும் மற்றும் மன்னிப்பையும் மேற் கொள்வது, குணத்தின் மெய்யான பலத்தைப் பிரதிபலிக்கின்றது.
[42:44] கடவுள் வழிகேட்டில் அனுப்பிய எவரும் வேறு எந்த எஜமானரையும் காணமாட்டார், மேலும் தண்டனையை அவர்கள் காணும் பொழுது, இத்தகைய வரம்பு மீறுபவர்கள், “எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கூறுவதை நீர் காண்பீர்.
[42:45] பார்த்துக் கொண்டும், ஆயினும் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சித்துக் கொண்டும், அவமானப் பட்டவர்களாகவும் இழிவடைந்தவர்களாகவும், அவர்கள் அதனை எதிர்கொள்வதை நீர் காண்பீர். நம்பிக்கை கொண்டவர்கள்: “ மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளன்று தங்களுடைய மேலும் தங்கள் குடும்பத்தாருடைய ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்தான் மெய் யான நஷ்டவாளிகள் ஆவார்கள். வரம்பு மீறியவர்கள் நீடித்திருக்கும் ஒரு தண்டனை க்குத் தகுதியாகி விட்டனர்” என்று பிரகடனம் செய்வார்கள்.
[42:46] கடவுள்-க்கெதிராக அவர்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் எவரும் அங்கே இருக்க மாட்டார்கள். கடவுள் வழிகேட்டில் அனுப்பி விட்ட எவரையும் ஒருபோதும் வழிநடத்தப்பட்டவராக்க முடியாது.
[42:47] தவிர்த்து விட முடியாததெனக் கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட ஒரு நாள் வருவதற்கு முன் நீங்கள் உங்கள் இரட்சகருக்கு மறுமொழியளிக்க வேண்டும். அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் அங்கே இருக்காது, அன்றி ஒரு வாதாடுபவரும் இருக்க மாட்டார்.

"தூதருடைய ஒரே இறைப்பணி"

[42:48] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அவர்களுடைய பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை. உம்முடைய ஒரே இறைப்பணி தூதுச்செய்தியை ஒப்படைப்பதேயாகும். மனிதர் களின் மீது நாம் கருணையைக் கொண்டு பொழியும் போது, அவர்கள் பெருமை கொள் கின்றனர், ஆனால் அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவாக, துன்பம் அவர்களை வருத்தும் பொழுது, மனிதர்கள் நம்ப மறுப்பவர்களாக மாறி விடுகின்றனர்.
[42:49] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. தான் நாடுகின்ற எதனையும் அவர் படைக்கின்றார், தான் நாடுகின்ற எவருக்கும் மகள்களை வழங்குகின்றார், மேலும் தான் நாடுகின்ற எவருக்கும் மகன்களை வழங்குகின்றார்.
[42:50] அல்லது, அவர் ஆண்களையும் பெண்களையும் திருமணம் புரியச் செய்து, பின்னர் தான் நாடுகின்ற எவரையும் மலடாக ஆக்கி விடுகின்றார். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.

"கடவுள் எவ்வாறு நம்முடன் தொடர்பு கொள்கின்றார்"

[42:51] உள்ளுணர்வின் மூலமாகவோ, அல்லது ஒரு தடுப்பிற்குப் பின் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி, அவர் மூலம் தான் நாடு கின்றதை வெளிப்படுத்துவதன் மூலமாகவோ தவிர கடவுள்-உடன் மனிதர் எவரும் தொடர்பு கொள்ள இயலாது. அவர்தான் மிகவும் உயர்ந்தவர், ஞானம் மிக்கவர்.
[42:52] இவ்விதமாக, நம்முடைய கட்டளைகளைப் பிரகடனம் செய்கின்ற ஒரு வெளிப்பாட்டினை உமக்கு நாம் உள்ளுணர்வின் மூலம் அளித் தோம். வேதம் அல்லது நம்பிக்கை பற்றி, நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர். இருப்பினும், நம் அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கின்ற எவரையும் வழிநடத்துவதற்காக இதனை ஒரு வழிகாட்டியாக நாம் ஆக்கினோம். நிச்சயமாக, நேரானதொரு பாதையிலேயே நீர் வழிநடத்துகின்றீர்.
[42:53] அப்பாதையானது, வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியின் மீதுள்ள ஒவ்வொன்றும் எவருக்குரியதோ, அந்தக் கடவுள்-உடையது. நிச்சயமாக, அனைத்து விஷயங்களும் கடவுள்-ஆல் கட்டுப்படுத்தப் படுகின்றன.