சூரா 42க்குரிய அடிக்குறிப்புகள்

*42:1 இந்த தலைப்பு எழுத்துக்கள் குர்ஆனுடைய அற்புதத்தின் முக்கியமானதொரு அங்கமாக அமைகின்றது (40:1ன் அடிக்குறிப்பு).

*42:2 ஐ.ஸீ.க. (ஐன் ஸீன் காஃப்) என்ற இந்த தலைப்பு எழுத்துக்களை இந்த ஒரு சூராவில் மட்டுமே நாம் காண்கின்றோம், மேலும் இந்த சூராவில் இடம் பெற்றுள்ள இந்த மூன்று எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 209, 19 ஒ 11 ஆகும். அத்துடன் “க” என்ற இந்த எழுத்து இந்த சூராவில் 57 முறை, 19 ஒ 3 இடம் பெறுகின்றது. “க” என்ற இத்தலைப்பு எழுத்து காணப்படும் வேறு ஒரே சூரா, சூரா 50 ஆகும், மேலும் அந்த சூராவிலும் இந்த எழுத்து 57 முறைதான் இடம் பெறுகின்றது (பின் இணைப்பு 1 ஐப் பார்க்கவும்).

*42:21 இன்றைய முஸ்லிம் உலகின் இஸ்லாமானது, ஒரு சாத்தானிய மார்க்கமாகி விட்ட அளவிற்கு மிகவும் சிதைக்கப்பட்டு விட்டது. உலமாக்கள் அல்லது மார்க்க அறிஞர்கள், கடவுளால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத, சம்பந்தமில்லாத பல சட்டங்கள், தடைகள், ஆடைக் கட்டுப்பாடுகள், உணவுக் கட்டுப்பாடுகள் , மற்றும் மார்க்க அனுஷ்டானங்களைச் சேர்த்து விட்டனர். கடவுளின் உடன்படிக்கைத் தூதரை அனுப்புவதற்கான முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும் (9:31, 33:67 மற்றும் பின் இணைப்பு 33).

*42:24 நம்ப மறுப்பவர்கள், தங்களுடைய இணைத்தெய்வமான வேதம் வழங்கப்பட்டவராகிய முஹம்மதை நினைவு கூர்வதற்காக 9வது சூராவின் இறுதியில் 2 போலி வசனங்களைச் சேர்த்தனர். இந்த இறைநிந்தனையை அகற்றி சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக திணறடிக்கும் ஆதாரங்களைக் கடவுள் வெளிப்படுத்தியுள்ளார். “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), இந்த வசன எண்ணை (24) நாம் கூட்டினால் நாம் கிடைக்கப் பெறுவது 1254, 19 ஒ 66 (விவரங்களுக்கு தயவு செய்து பின் இணைப்பு 2 & 24 ஐப் பார்க்கவும்).