சூரா 43க்குரிய அடிக்குறிப்புகள்

*43:1 40:1க்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும். ஹா.ம. என்ற தலைப்பு எழுத்துக்களைக் கொண்ட ஏழு சூராக்களில் “ஹா” (ஹ்ஹா) மற்றும் “ம” (மீம்) ஆகிய எழுத்துக்கள் இடம் பெறும் எண்ணிக்கை முறையே 292 மற்றும் 1855 ஆகும். இதன் கூட்டுத் தொகை 2147 அல்லது 19 X 113 ஆகும்.

*43:3 அரபி மிகத் திறன் வாய்ந்த மொழியாகும், குறிப்பாக கட்டளைகளை, சட்டத்திட்டங்களை தெளிவாகக் கூறுவதிலும் மேலும் சட்டங்களை வலியுறுத்துவதிலும் மிகச் சிறப்பானதாகும். எனவேதான் மக்கள் அனைவரும், அவர்களுடைய மொழிகள் எதுவானபோதிலும், தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக, குர்ஆன் அரபி மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விபரங்களுக்குப் பின் இணைப்பு 4ஐப் பார்க்கவும்.

*43:5 முன்னுரை மற்றும் பின் இணைப்பு 7 ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளபடி இது நம்முடைய ஆதிபாவத்தைக் குறிக்கின்றது.

*43:20 கடவுளை மட்டும் வழிபடுவதற்கோ, அல்லது அவ்வாறில்லாமல் இருப்பதற்கோ, தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நாம் பரிபூரணமாக பெற்றிருப்பதால், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள், தங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டிற்குக் கடவுள் மீது பழிபோட முடியாது.

*43:36-39 தொடர்ந்து உடனிருக்கும் ஒரு கூட்டாளியாக சாத்தானின் ஒரு பிரதிநிதியை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம் (பின் இணைப்பு 7).

*43:38 “கிழக்குகள்” என்பது சூரிய உதயம், சந்திர உதயம், மற்றும் விண்ணகப் பொருட்கள் உதயமாகும் இடங்களைக் குறிக்கின்றது.

*43:43 “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பு (1230) உடன் 43ஐக் கூட்டினால் 1273, 19 X 67 ஆகும்.

*43:61 பின் இணைப்பு 25ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, உலகத்தின் முடிவு குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இயேசுவின் பிறந்த தேதி, இக்கணிப்பு சரியானதுதான் என்பதற்கு முக்கியத்துவமிக்க அடையாளங்களில் ஒன்றை வழங்கியது. இயேசுவின் பிறப்பிற்கு 2280 வருடம் கழித்து (19 X 120) உலகம் முடிவுறும் என நாம் அறிகின்றோம் (பார்க்க 47:18). கூடுதலாக, சந்திர வருடம் (1710) மற்றும் சூரிய வருடம் (2280) ஆகிய இரண்டும் 570 (19 X 30) ஆல் வகுபடக் கூடியதாக உள்ளன, இது இயேசுவின் பிறப்பிலிருந்து முஹம்மதின் பிறப்பு வரைக்கும் உள்ள வருடங்களின் எண்ணிக்கையாகும். இவ்விதமாக, இயேசுவின் பிறந்ததேதி ஒரு அடையாளமாகத் திகழ்கின்றது.