சூரா 46க்குரிய அடிக்குறிப்புகள்

*46:6 மத்தேயு 7:21-23 ஐயும் பார்க்கவும்: இயேசு தன்னை “இரட்சகர்” என்று அழைப்பவர்களை தெளிவாகக் கைவிட்டு விடுகின்றார்.

*46:10 இந்தச் சாட்சி, வேதத்தின் சிதைவுறாத சில துண்டுப் பகுதிகளில் இதே 19ன் அடிப்படையிலான கணிதக் குறியீட்டைக் கண்டுபிடித்த யூத குரு ஜுதா (கி.பி. 11ஆம் நூற்றாண்டு) என்னும் பக்திமானாவார் ( பின் இணைப்பு 1 ஐப் பார்க்கவும்).

*46:15 சுவனத்திற்கு செல்லும் தகுதியுடையவர் யார், மேலும் நரகத்திற்குச் செல்லும் தகுதியுடையவர் யார் என்பதைக் கடவுள் முற்றிலும் நன்கறிவார். எவரையெல்லாம் அவர் 40 வயதிற்கு முன்பு மரணத்தில் ஆழ்த்தி விடுகின்றாரோ அவர் சுவனத்திற்குச் செல்ல வேண்டும் என்பது அவருடைய சட்டமாகும். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த தெய்வீகக் கருணையை ஏற்றுக் கொள்வதில் சங்கடம் உள்ளது என்ற இந்த உண்மையில் கடவுளின் அளவற்ற கருணை பிரதிபலிக்கின்றது; அவர்கள், “அவர்களை நரகத்தில் போடுங்கள்!” என்று வாதிடுகின்றனர். பின் இணைப்பு 32ஐப் பார்க்கவும்.

*46:29 பல நூறு கோடி வருடங்களுக்கு முன்னர் சாத்தான் தன்னுடைய பிரசித்தி பெற்ற இறைநிந்தனையைத் துவக்கிய பொழுது அவனுடன் முற்றிலும் இசைந்திருந்த படைப்புக்களே ஜின்கள் ஆவர். சாத்தானின் சந்ததியினராக அவர்கள் இவ்வுலகத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர். ஒரு மனிதன் பிறக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு ஜின்னும் பிறக்கின்றது. புதிதாகப் பிறந்த மனிதனைப் போல அதே உடம்பில் புதிதாகப் பிறந்த ஜின் நியமிக்கப்படுகின்றது, மேலும் சாத்தானின் கண்ணோட்டத்தை இடையறாது தூண்டுகின்றது (பின் இணைப்பு 7).

*46:35 குர்ஆனுடைய மற்றும் கணிதத்தினுடைய சான்றுகள், இங்கே கூறப்படும் தூதர் ரஷாத் கலீஃபா தான் என்பதை நிரூபிக்கின்றன. “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), சூரா எண் (46), மற்றும் வசன எண் (35), ஆகியவற்றை நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 1311 அல்லது 19 X 69 ஆகும். இது குர்ஆனுடைய குறியீட்டுடன் ஒத்திருக்கின்றது (பின் இணைப்பு 2).