சூரா 4க்குரிய அடிக்குறிப்புகள்

*4.1 இது இரண்டாவது நீளமான சூராவாகவும், மேலும் இதன் தலைப்பு பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற இதன் குறிக்கோளை சுட்டிக் காட்டுவதாகவும் உள்ளது. எந்த விளக்கமானாலும், அது கண்டிப்பாக பெண்களின் உரிமைக்கு சாதகமாக இருக்க வேண்டுமே அன்றி அதற்கு மாற்றமாக இருக்கக் கூடாது.

*4:3 பலதாரமணம் பற்றிய விரிவான வாதங்களுக்கு பின் இணைப்பு 30-ஐ பார்க்கவும்.9.

*4:11 பொதுவாக ஒரு குடும்பத்திற்கு மகன் பொறுப்பாளியாவான், அதேசமயம் மகள், கணவனால் கவனித்துக் கொள்ளப்படுகின்றார். ஆயினும், இறந்தவருடைய தனிப்பட்ட சூழ்நிலைகளோடு ஒத்து போகும் விதத்தில் ஓர் உயில் விட்டுச் செல்லப்படவேண்டும் என்று குர்ஆனின் 2:180ல் பரிந்துரைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு, மகன் வசதியாகவும் மகள் ஏழையாகவும் இருந்தால், ஒருவர் எல்லா வற்றையுமே, மகளுக்கோ அல்லது மகனுக்கு கிடைப்பது போல் இரண்டு மடங்கு மகளுக்கு கிடைக்கும்படியாகவோ உயில் எழுதலாம்.

*4:15 ஒரு பெண் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான்கு வெவ்வேறு ஆண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நான்கு பேரால் சாட்சி கூறப்பட்டால், அவள் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தானவள் என்பது தெளிவாகின்றது. இப்படிப்பட்ட பெண், கிருமிகளின் இருப்பிடமாகின்றாள், மேலும் சுகாதாரத்திற்காக அவளை தனிமைப்படுத்துவது, சமுதாயத்தை அவளிடமிருந்து பாதுகாக்கும். தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்றுகின்ற வழிக்கான நல்லதோர் உதாரணம் திருணம் ஆகும். அவளை யாரேனும் திருமணம் செய்து கொள்ள விரும்பலாம். மேலும் இவ்விதமாக, அவளையும், சமுதாயத்தையும் பாதுகாக்கலாம்.

*4:16, 5:38 மற்றும் 24:2ல் நாம் காண்பது போல், பாவம் செய்தவர்களை, பொதுமக்களிடம் வெளிப்படுத்துவதே பெரிய தடையாக அமையும். பரஸ்பரக் கவர்ச்சியும்,

*4:24. நம்பிக்கை கொண்டோருடன் போரிடும் நம்ப மறுக்கும் கணவர்களை விட்டு விட்டு, நம்பிக்கை கொண்ட பெண்கள் ஓடி வந்துவிட்டால், மறுமணம் செய்வதற்கு முன்பு விவாகரத்து பெற வேண்டியதில்லை. 60:10ஐ பார்க்கவும்.

*4:25 சீர்கெட்ட முஸ்லிம்களின் சட்டங்களில் கூறப்பட்டிருப்பது போல் விபச்சாரத்திற்கு கல்லால் அடித்துக் கொல்லுவது தண்டனையாக இருக்க சாத்தியமே கிடையாது என்பதை இந்தச் சட்டம் நிரூபிக்கின்றது (24:4ஐ பார்க்கவும்).

* 4:34 கடவுள் , சிறந்த மனோதத்துவ ரீதியான அணுகுமுறையை உபயோகித்து மனைவியை அடிப்பதை தடுக்கின்றார். உதாரணத்திற்கு சந்தை X-ல் நீங்கள் பொருள் வாங்குவதை நான் விரும்பாவிட்டால், நான் உங்களை சந்தை Y-ல் பொருள் வாங்குங்கள் இல்லையேல் சந்தை Z-ல் வாங்குங்கள். அதன்பிறகு வேறு வழி இல்லையென்றால் கடைசியில் சந்தை X-ல் வாங்கும்படி கேட்டுக்கொள்வேன். இது உங்களை அவமதிக்காத நிலையில் சந்தை X-ல் இருந்தும் நீங்கள் பொருள் வாங்குவதை விட்டு உறுதியாகத் தடுக்கின்றது. அதுபோலவே கடவுள், மனைவியை அடிப்பதற்குப் பதிலாக மாற்று வழிகளை தந்துள்ளார். அவளோடு முதலில் விவாதித்த பிறகு, குறிப்பிட்ட எதிர்மறை நடவடிக்கைகளைப் பயன்படுத்தலாம். இந்த சூராவின் கருவே பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் மேலும் பெண்களுக்கெதிராக இருக்கக் கூடிய அடக்குமுறைகளை எதிர்ப்பதுமாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த சூராவின் வசனங்களுக்கு எந்த விளக்கம் கூறினாலும் கண்டிப்பாக பெண்களுக்கு சாதகமாகவே இருக்க வேண்டும். இந்த சூராவின் கருப்பொருள் “பெண்களின் பாதுகாப்பு” ஆகும்.

* *4:34 இந்த சொற்றொடர், கடவுள் கணவரை “கப்பலின் தலைமை மாலுமியைப்” போன்ற பொறுப்பில் அமர்த்துகின்றார் என்பதையே உணர்த்துகின்றது. திருமணம் ஒரு கப்பலை போன்றது, மேலும் அதன் தலைமை மாலுமி, அவருடைய மற்ற அதிகாரிகளோடு கலந்தாலோசனை செய்த பின்னரே கப்பலைச் செலுத்துகின்றார். ஒரு நம்பிக்கை கொண்ட மனைவி எந்த எதிர்ப்புமின்றி கடவுளுடைய இந்த நியமனத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வார். 42.

* 4:46 ராயினா என்ற வார்த்தை சில ஹீப்ரு மொழி பேசும் மக்களால் திரிக்கப்பட்டு ஒரு கெட்ட வார்த்தையைப் போல் உச்சரிக்கப்பட்டது 2:104 ஐ பார்க்கவும்

* 4:48 மரணத் தருவாய் வரை இணைத்தெய்வ வழிபாட்டைக் கடைபிடிப்பது மன்னிக்க இயலாத பாவம் ஆகும். மரணம் வருவதற்கு முன்னர் ஒருவர் இணைத்தெய்வ வழிபாடு உட்பட, தான் செய்த எந்தக் குற்றத்திற்காகவும் எப்போது வேண்டுமானாலும் வருந்தித்திருந்த இயலும்(4:18 & 40:66 ஐ பார்க்கவும்).54.

* 4:78 கடவுள் தான் எல்லாவற்றையும் செய்கின்றார் (8:17) என்றாலும், கெட்ட நிகழ்வுகள் நம்முடைய சுயமான செயல்களின் விளைவுகளாகும் (42:30, 64:11). நமக்குப் பணிபுரிய கடவுள் நெருப்பை படைத்தார், ஆனால் அதனுள் உங்களுடைய விரலை வைப்பது என்று நீங்கள் முடிவெடுக்க இயலும், இவ்விதமாக நமக்கு நாமே தீங்கு இழைத்துக் கொள்கின்றோம். நீங்கள் உங்கள் விரலை நெருப்பில் வைத்தால் அது புண்படுத்தும் என்பது கடவுளின் சட்டம் ஆகும்.

*4:79 வேதத்தின் தூதுத்துவத்திற்கான எந்த ஒரு சான்றும், வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதிற்கு கொடுக்கப்படவில்லை, ஆகையால் தான் “சாட்சியாளராக இருக்கக் கடவுள் போதுமானவர்” என்ற சொற்றொடர் உள்ளது (29:51-52). முஹம்மது என்ற பெயரின் எழுத்தெண் மதிப்பு 92 மேலும் 92+79 = 171 = 19 X9 ஆகும்.

* 4:82 அறியாமைக் காலத்தில் குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட போதிலும் இதில் அறிவிற்குப் புறம்பான எதையும் உங்களால் காண இயலாது; கடவுள் தான் இதன் ஆசிரியர் என்பதற்கு இது இன்னொரு சான்று ஆகும் (அறிமுகவுரையையும் மேலும் பின் இணைப்பு 1ஐயும் பார்க்கவும்).நயவஞ்சகர்களிடம் எவ்வாறு

* 4:89 எல்லா சண்டைகளையும் கட்டுப்படுத்தும் அடிப்படைச்சட்டம் 60:8-9 ல் கூறப்பட்டுள்ளது.

* 4:92 அடிமை முறை ஒழிந்து விட்டதால், குற்றவாளி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு இருந்து பரிகாரம் செய்யவேண்டும்.

* 4:103 ஒரு நாளின் அதிக நேரம் எவரேனும் அல்லது ஏதேனும் உங்கள் மனங்களை ஆக்கிரமித்திருந்தால் அதுவே உங்கள் தெய்வம் ஆகும். கடவுளின் சாம்ராஜ்ஜியத்தில் இடம்கிடைக்க வேண்டுமானால், மேலும் அவருடைய அருளையும், பாதுகாப்பையும் அனுபவிக்க வேண்டுமானால் “ எந்நேரமும்” கடவுளை நினைவில் வைக்கும்படி குர்ஆன் நமக்கு உபதேசிக்கின்றது (2:152 & 200, 3:191, 33:41-42). ஆழ்ந்த உண்மையாகிய இது, நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் நரகத்திற்குச் செல்கின்றார்கள் என்று கடவுள் அறிவிக்கக் கூடிய அநேக வசனங்களுக்கு விளக்கமாக உள்ளது (12:106,23:84-89, 29:61-63, 31:25, 39:38, 43:87). 3:191க்கான அடிக்குறிப்பையும் பின் இணைப்பு 27ஐயும் பார்க்கவும்.

*4:116 இணைத்தெய்வ வழிபாடு என்பதன் சுருக்கமான அர்த்தம் கடவுளுடன் வேறெதுவும் உங்களுக்கு உதவ இயலும் என்று நம்புவது ஆகும்.

* 4:118 கடவுள் நம்பிக்கை உள்ள பெரும்பான்மையினர் இணைத்தெய்வ வழிபாட்டில் விழுந்து விடுகின்றனர் (12:106).

*4:125 ஆதாமின் காலம் முதற்கொண்டே எல்லாத் தூதர்களும் ஒரே மார்க்கத்தையே போதித்துள்ளனர். “ இஸ்லாம்” என்னும் மார்க்கக் கொள்கையின் ஆரம்பத் தூதராக ஆப்ரஹாம் இருந்தார். (22:78, பின் இணைப்பு 26) “இஸ்லாம்” என்பது ஒரு பெயரல்ல, சரியாகச் சொன்னால் அது “ அடிபணிதல்” என்னும் பொருள்படும் வர்ணனை ஆகும்.

* 4:129 - பல தாரமணம் என்று தலைப்பிடப்பட்ட பின் இணைப்பு- 30 ஐப் பார்க்கவும்.

* 4:157-158 இயேசு, அந்த உண்மையான நபராகிய, அவரது ஆன்மா, மற்ற நன்னெறியுடைய நபரின் மரணத்தில் நிகழ்வது போன்ற அதே விதத்தில் உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவருடைய எதிரிகள், கைது செய்தது, சித்ரவதை செய்தது மேலும் சிலுவையில் அறைந்தது அவருடைய உயிருள்ள, ஆனால் ஒன்றுமில்லாத உடலையே. பின் இணைப்புகள் 17 & 22 மற்றும் லிஸா ஸ்பிரே எழுதிய, “ஜீஸஸ்: மித் அன்டு மெஸேஜ்” (யூனிவர்ஸல் யூனிடி, ஃப்ரிமோன்ட், கலிபோர்னியா, 1992 ஐயும் பார்க்கவும்.)

* 4:157-158 இயேசு, அந்த உண்மையான நபராகிய, அவரது ஆன்மா, மற்ற நன்னெறியுடைய நபரின் மரணத்தில் நிகழ்வது போன்ற அதே விதத்தில் உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவருடைய எதிரிகள், கைது செய்தது, சித்ரவதை செய்தது மேலும் சிலுவையில் அறைந்தது அவருடைய உயிருள்ள, ஆனால் ஒன்றுமில்லாத உடலையே. பின் இணைப்புகள் 17 & 22 மற்றும் லிஸா ஸ்பிரே எழுதிய, “ஜீஸஸ்: மித் அன்டு மெஸேஜ்” (யூனிவர்ஸல் யூனிடி, ஃப்ரிமோன்ட், கலிபோர்னியா, 1992 ஐயும் பார்க்கவும்.)