சூரா 50: க (காஃப்)
[50:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[50:1] க., மற்றும் மகிமை மிக்க இக்குர்ஆன்*.
அடிகுறிப்பு

[50:2] அவர்களிலிருந்தே ஓர் எச்சரிப்பவர் அவர் களிடம் வந்தார் என்பதை அவர்கள் வினோத மானதாகக் கண்டனர்! நம்ப மறுப்பவர்கள் கூறினர், “இது உண்மையிலேயே வினோத மானதாகும்.
[50:3] “நாம் இறந்து மேலும் தூசியாக ஆன பின்னர்; இது சாத்தியமற்றதாகும்”.
[50:4] பூமியால் உட்கொள்ளப்படுகின்ற அவர்களி லுள்ள எவர் ஒருவரையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம்; மிகத் துல்லியமான தொரு பதிவேட்டை நாம் வைத்திருக் கின்றோhம்.
[50:5] சத்தியம் அவர்களிடம் வந்த போது அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்; அவர்கள் முற்றிலும் குழம்பியவர்களாக இருக்கின்றனர்.
[50:6] அவர்களுக்கு மேலே உள்ள வானத்தையும், மேலும் ஒரு குறையும் இன்றி, எவ்வாறு நாம் அதனை நிர்மாணித்திருக்கின்றோம், மேலும் அழகுபடுத்தியிருக்கின்றோம் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?
[50:7] மேலும் நாம் பூமியைப் படைத்தோம், அத்துடன் அதன் மீது மலைகளைத் தூவினோம், மேலும் அனைத்து வகையான அழகிய தாவரங் களையும் அதில் வளர்த்தோம்.
[50:8] இது ஓர் அறிவூட்டலாகும், மேலும் பக்தியுடன் வழிபடக்கூடியவர் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டலுமாகும்.
[50:9] மேலும் விண்ணிலிருந்து அருள்பாலிக்கப்பட்ட தண்ணீரை, அதனைக் கொண்டு தோட்டங் களையும் மேலும் அறுவடைக்குரிய தானியங் களையும் வளர்ப்பதற்காக நாம் அனுப்பினோம்.
[50:10] குலைகளில் பழம் கொண்ட, உயரமான பேரீத்தம் மரங்கள்.
[50:11] மக்களுக்கான வாழ்வாதாரங்கள். மேலும் அதனைக் கொண்டு நாம் இறந்து விட்ட நிலங் களை மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம்; இதைப் போலவே நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.
[50:12] அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தவரும், ரஸ்வாசிகளும், மேலும் தமூதுகளும் நம்பமறுத்துக் கொண்டிருந்தனர்.
[50:13] மேலும் ஆதுகளும், ஃபேரோவும், மேலும் லோத்தின் சகோதரர்களும்.
[50:14] மேலும் தோப்புவாசிகளும், டுப்பஹ் சமூகத்த வரும். அவர்கள் அனைவரும் தூதர்களை நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, என் தண்டனை அவர்கள் மீது ஏற்பட்டு விட்டது.
[50:15] முதல் படைப்பால் நமக்கு மிகவும் சுமையாகி விட்டதா? இதனால்தான் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படுதலை அவர்கள் சந்தேகிக் கின்றனரா?
[50:16] மனிதனை நாமே படைத்தோம், மேலும் அவன் தனக்குள் கிசுகிசுத்துக் கொள்வது என்ன என்பதையும் நாம் அறிவோம். அவனுடைய கழுத்துப் பெரு நரம்பை விடவும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக நாம் இருக்கின்றோம்.
[50:17] பதிவு செய்கின்ற இரண்டு (வானவர்கள்), வலப்புறமும் மற்றும் இடப்புறமும், விடாமல் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக் கின்றனர்.
[50:18] விழிப்புடனிருக்கின்ற ஒரு சாட்சியின்றி, எந்த ஒரு கூற்றையும் அவன் கூறுவதில்லை.
[50:19] இறுதியில், தவிர்க்க முடியாத அந்த மரண மயக்கம் வருகின்றது; இதனைத் தான் நீ தவிர்த்து விட முயன்றாய்.
[50:20] கொம்பு ஊதப்படுகின்றது; இதுதான் வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
[50:21] ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு மேய்ப்பவருடனும் மேலும் ஒரு சாட்சியுடனும் வரும்.
[50:22] இதைப் பற்றி நீ கவனமற்றவனாக இருந்து வந்தாய். உன்னுடைய திரையை இப்போது நாம் விலக்குகின்றோம்; இன்றைய தினம், உனது பார்வை எஃகு (போல் உறுதி) ஆக இருக்கின்றது.
[50:23] அக்கூட்டாளி, “இதோ என்னுடைய எதிர்க்க முடியாதசான்று*” என்று கூறினார்.
அடிகுறிப்பு

[50:24] பிடிவாதமான நம்பமறுத்தவன் ஒவ்வொரு வனையும் ஜஹன்னாவிற்குள் வீசுங்கள்.
[50:25] தர்மத்தைத் தடுப்பவன், அத்து மீறுபவன், சந்தேகம் நிறைந்தவன்.
[50:26] கடவுள்-ஐத் தவிர மற்றொரு தெய்வத்தை அவன் அமைத்துக் கொண்டான். கடுமையான தண்டனைக்குள் அவனை வீசுங்கள்.
[50:27] அவனுடைய கூட்டாளி, “என் இரட்சகரே, நான் அவனை வழிதவறச் செய்யவில்லை; அவனே வெகு தூரம் வழிகேட்டில் இருந்தான்” என்று கூறினான்.
[50:28] அவர் கூறினார், “என் முன்னால் சச்சரவு செய்து கொண்டிருக்காதீர்கள்; போதுமான அளவு நான் உங்களை எச்சரித்து விட்டேன்.
[50:29] “இப்போது எதுவும் மாற்றப்பட முடியாது. நான் ஒருபோதும் மக்களுக்கு அநீதமிழைப்பவர் அல்ல”.
[50:30] அந்நாளில்தான் நரகத்தை நாம், “போதுமான வற்றை நீ பெற்றுவிட்டாயா?” என்று கேட்போம் அது, “எனக்கு இன்னும் அதிகமாகத் தருவீ ராக” என்று கூறும்.
[50:31] நன்னெறியாளர்களுக்கு, உடனடியாக சுவனம் முன்வைக்கப்படும்.
[50:32] வருந்தித்திருந்துகின்றவர், உறுதிப்பாடு உடையவர் ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.
[50:33] தங்களுடைய தனிமையிலும், அவர்கள் மிக்க அருளாளரிடம் பயபக்தியுடனிருந்தனர், மேலும் முழுமனதுடன் வந்தனர்.
[50:34] அமைதியோடு அதனுள் நுழையுங்கள்; இதுதான் நிலையான நாளாகும்.
[50:35] அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அதிலே அவர்களுக்குக் கிடைக்கும், மேலும் நாம் அதைவிடவும் அதிகமாக வைத்திருக்கின் றோம்.
[50:36] அவர்களுக்கு முன்னர், அதிக வலிமைநிறைந்த வர்களாக இருந்த, பல தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் பூமியை ஆராய்ந்தனர்; தப்பிக்கும் வழி ஒன்றை அவர்கள் கண்டனரா?
[50:37] ஒரு மனம் கொண்ட, அல்லது செவியேற்கவும் பார்க்கவும் திறன் கொண்ட ஒவ்வொரு வருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.
[50:38] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம், மேலும் எந்தக் களைப்பும் நம்மைத் தீண்டிவிடவில்லை.
[50:39] ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களுக்கு எதிராகப் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உம் இரட்சகரைப் புகழவும் துதிக்கவும் செய்வீராக.
[50:40] இரவுப் பொழுதிலும், மேலும் சிரம்பணிதலு க்குப் பின்னரும் அவருடைய பெயரை நீங்கள் தியானிக்க வேண்டும்.
[50:41] அருகில் உள்ள ஓர் இடத்திலிருந்து அழைப்பவர் அழைக்கின்ற அந்நாளுக்காகத் தயார் படுத்திக் கொள்வீராக.
[50:42] தவிர்த்து விட முடியாத அந்த அழுகையை அவர்கள் செவியேற்கும் பொழுது; அந்த நாளில்தான் நீங்கள் வெளியில் வருவீர்கள்.
[50:43] நாம்தான் வாழ்வையும் மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றோம்; இறுதி விதி நம்மிடமே உள்ளது.
[50:44] அவர்களை வெளித்தள்ளியவாறு, பூமி அவசரமாகப் பிளந்து விடும் அந்நாள் வரும். இவ்வாறு ஒன்று கூட்டுவது நமக்கு எளிதானதேயாகும்.
[50:45] அவர்கள் மீது உமக்கு அதிகாரம் எதுவும் இல்லாத அதே சமயம், அவர்கள் கூறும் ஒவ்வொன்றையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம். ஆகையால், என்னுடைய எச்சரிக்கைகளை அஞ்சுபவர்களுக்கு, இந்தக் குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக.