சூரா 54: நிலவு (அல்-கமர்)
[54:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[54:1] அந்த நேரம் நெருங்கி வந்து விட்டது, மேலும் நிலவு பிளந்து விட்டது*.
அடிகுறிப்பு

[54:2] அப்போது அவர்கள் ஓர் அற்புதத்தைக் கண்டனர்; ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றனர், மேலும், “பழைய மாயாஜாலம்” என்று கூறினார்கள்.
[54:3] அவர்கள் நம்பமறுத்தனர், தங்களுடைய அபிப்பிராயங்களைப் பின்பற்றினர், தங்களுடைய பழைய பரம்பரை வழக்கங்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.
[54:4] அவர்களை எச்சரிப்பதற்கு, போதுமான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு விட்டன.
[54:5] மிகப்பெரும் ஞானம்; ஆனால் அனைத்து எச்சரிக்கைகளும் வீணாகிப் போயின.
[54:6] அவர்களை புறக்கணித்து விடுவீராக; பயங்கரமானதொரு பேரழிவை அழைப்பாளர் அறிவிக்கின்ற அந்த நாள் வரும்.
[54:7] அவர்களுடைய கண்கள் இழிவடைந்த நிலையில், சிதறடிக்கப்பட்ட வெட்டுக்கிளி களைப் போல சமாதிகளிலிருந்து அவர்கள் வெளிவருவார்கள்.
[54:8] அழைப்பாளருக்கு மறுமொழியளித்தவர்களாக, நம்ப மறுப்பவர்கள், “ இது ஒரு கடினமான நாளாகும்” என்று கூறுவார்கள்.
[54:9] அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தார் நம்பமறுத்தனர். நம்முடைய அடியாரை அவர்கள் நம்பமறுத்தனர் மேலும், “புத்தி சுவாதீனமில்லாதவர்!” என்று கூறினர். அவர் துன்புறுத்தப்பட்டார்.
[54:10] அவர் தன் இரட்சகரிடம், “ நான் அடக்குமுறை செய்யப்பட்டவனாக இருக்கின்றேன்; எனக்கு வெற்றியை அளிப்பீராக” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.
[54:11] பின்னர் நாம் தண்ணீரை ஊற்றியவண்ணம், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
[54:12] மேலும் நாம் பூமியிலிருந்து ஊற்றுக்களைப் பொங்கி வரச்செய்தோம். முன்னரே நிர்ணயிக்கப் பட்டதொரு தீர்மானத்தைச் செயல்படுத்த அந்த பெருநீர்ப்பபரப்புகள் ஒன்று கலந்தன.

மரக்கலம்

[54:13] கட்டைகளாலும் கயிறுகளாலும் செய்யப்பட்ட ஒரு படகில் அவரை நாம் சுமந்து கொண்டோம்.
[54:14] நம்முடைய விழிப்பான கண்களின் கீழ் அது ஓடியது; நிராகரிக்கப்பட்டவருக்குரிய ஒரு வெகுமதி.
[54:15] அதனை ஒரு படிப்பினையாக நாம் அமைத் தோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:16] எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[54:17] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின் றீர்களா?
[54:18] ‘ஆதுகள் நம்பமறுத்தனர். அதன் விளைவாக, எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது.
[54:19] தொடர்ச்சியான துன்பமிக்கதொரு நாளில், உக்கிரமான காற்றுகளை நாம் அவர்கள் மீது அனுப்பினோம்.
[54:20] அது மக்களை, அவர்கள் அழுகிப்போன பேரீத்த மரத்தண்டுகளாக இருந்தவர்களைப் போல சுற்றிலும் தூக்கியெறிந்தது.
[54:21] எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[54:22] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:23] தமூதுகள் எச்சரிக்கைகளை ஏற்க மறுத்தனர்.
[54:24] அவர்கள் கூறினார்கள், “ நம்மில் ஒருவரை நாம் பின்பற்ற வேண்டுமா; ஒரு மனிதரை? அப்படி யானால் நாம் வழிதவறிச் சென்று விடுவோம், பின்னர் நரகத்தைச் சென்றடைந்து விடுவோம்.
[54:25] “நமக்குப் பதிலாக, தூதுச் செய்தி அவருக்கு இறங்கி வந்து விட்டதா? இவர் வெளிப்படையான ஒரு பொய்யரே ஆவார்”.
[54:26] வெளிப்படையான பொய்யர் யார் என்பதை அவர்கள் நாளை கண்டு கொள்வார்கள்.
[54:27] ஒட்டகத்தை அவர்களுக்கு ஒரு சோதனையாக நாம் அனுப்புகின்றோம். அவர்களைக் கண் காணிப்பீராக மேலும் பொறுமையுடன் இருப்பீராக.
[54:28] அவர்களுக்கிடையில் தண்ணீர் பங்கு வைக்கப்பட வேண்டும் என அவர்களுக்குத் தெரிவிப்பீராக; அதற்கென நியமிக்கப்பட்ட நாளில் அது (அப் பெண் ஒட்டகம்) அருந்த அனுமதிக்கப்பட வேண்டும்.
[54:29] ஆனால் அவர்கள் தங்களுடைய நண்பனை (அவ்வொட்டகத்தினைக்) கொல்லுமாறு தூண்டினார்கள், அவனும் இணங்கினான்.
[54:30] அதன் விளைவாக, என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது! அவர்கள் எச்சரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
[54:31] அவர்கள் மீது ஒரு அழிவை நாம் அனுப்பினோம், உடனே அவர்கள் அறுவடை செய்யப்பட்ட வைக்கோலைப் போல ஆகிவிட்டார்கள்.
[54:32] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:33] லோத்தின் சமூகத்தார் எச்சரிக்கைகளை ஏற்க மறுத்தனர்.
[54:34] நாம் அவர்கள் மீது பாறைகளைக் கொண்டு பொழிந்தோம். விடியற்காலையில் லோத்தின் குடும்பத்தார் மட்டும் காப்பாற்றப்பட்டிருந்தனர்.
[54:35] அவருக்கும் மற்றும் அவருடைய குடும்பத் தாருக்கும் நாம் அருள்பாலித்தோம்; இவ்விதமாகவே நாம் நன்றியுடையவர்களுக்கு வெகுமதி வழங்குகின்றோம்.
[54:36] நம்முடைய பழிதீர்த்தலைக் குறித்து அவர்களுக்கு அவர் எச்சரித்தார், ஆனால் அவர்கள் எச்சரிக்கைகளைக் கேலி செய்தனர்.
[54:37] அவருடைய விருந்தினர்கள் குறித்து அவர்கள் அவரிடம் பேரம் பேசினர்; அவர்களை நாம் குருடாக்கினோம். என்னுடைய தண்டனையை அனுபவியுங்கள்; நீங்கள் எச்சரிக்கப் பட்டவர்களாக இருந்தீர்கள்.
[54:38] மறுநாள் விடியற்காலையில், பேரழிவை ஏற்படுத்துகின்ற தண்டனை அவர்களைத் தாக்கியது.
[54:39] என்னுடைய தண்டனையை அனுபவியுங்கள்; நீங்கள் எச்சரிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்.
[54:40] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:41] ஃபேரோவின் சமூகத்தார் எச்சரிக்கப் பட்டிருந்தனர்.
[54:42] நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக ஒரு சர்வ வல்லமையுடையவர், சர்வ சக்தியுடையவர் எவ்வாறு பழி தீர்ப்பாரோ அவ்வாறு நாம் அவர்களைப் பழி வாங்கினோம்.
[54:43] உங்களுடைய நம்பமறுப்பவர்கள் அந்த நம்பமறுப்பவர்களை விட மேலானவர்களா? வேதத்தின் மூலம் நீங்கள் விலக்களிக்கப்பட்டு விட்டீர்களா?
[54:44] “நாம் தான் வெற்றியாளர்களாக இருப்போம்,” என்று ஒருவேளை அவர்கள் நினைக்கக் கூடும்.
[54:45] அவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்படுவார்கள்; அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடிவிடுவார்கள்.
[54:46] அந்தநேரம் அவர்களுக்குக் காத்துக் கொண்டிருக் கின்றது, மேலும் அந்த நேரமானது மிகவும் மோசமானதாகவும், மேலும் மிகவும் வலி நிறைந் ததாகவும் உள்ளது.
[54:47] நிச்சயமாக, குற்றவாளிகள் வழிதவறிவிட்டனர், மேலும் நரகத்தைச் சென்றடைவார்கள்.
[54:48] நரக நெருப்பினுள் அவர்கள், நிர்ப்பந்தமாக இழுத்துச் செல்லப்படுவார்கள். தண்டனையின் வேதனையை அனுபவியுங்கள்.
[54:49] நாம் படைத்த ஒவ்வொன்றும் மிகச் சரியாக அளவிடப்பட்டுள்ளது.
[54:50] ஒரு கண்ணிமைப்பிற்குள் நமது கட்டளைகள் நிறைவேற்றப்படும்.
[54:51] உங்களுடைய முந்திய சகாக்களை நாம் அழித்தோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:52] அவர்கள் செய்த ஒவ்வொன்றும் வேதங்களில் பதியப்பட்டுள்ளது.
[54:53] சிறியதோ அல்லது பெரியதோ, ஒவ்வொன்றும், எழுதப்பட்டுள்ளது.
[54:54] நிச்சயமாக, நன்னெறியாளர்கள் தோட்டங் களுக்கும், ஆறுகளுக்கும் தகுதிபெற்று விட்டனர்.
[54:55] கண்ணியமானதொரு அந்தஸ்தில், சர்வ சக்தியுடைய அரசரிடத்தில்.