சூரா 56க்குரிய அடிக்குறிப்புகள்

*56:13-40 நம்பிக்கை கொண்டு கடவுளை மட்டும் வழிபடுவதன் மூலம் தங்களுடைய ஆன்மாக்களை ஊட்டப்படுத்திக் கொள்கின்ற மக்கள் மேலான சுவனத்திற்கு என்று விதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தூதரையும் பின்பற்றுகின்ற சமகாலத்தவர்கள், மாற்றமின்றி பரம்பரை வழக்கங்களை பின்பற்றுபவர்கள் மற்றும் சீர்கெட்டுப் போன மார்க்கத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களால் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இதனால், மேலான சுவனத்தில் ஒரு சிறப்பான இடம் அவர்களுக்குகென ஒதுக்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு முன்னர் மரணிக்கின்ற அனைவரும், குறைந்த பட்சம் கீழான சுவனத்திற்குச் செல்கின்றனர் (46:15).

*56:40 56:13 -40க்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும்.

*56:75-76 ஏழு பிரபஞ்சங்களில் மிகச்சிறியதும் மிகவும் உள்ளார்ந்ததுமான, நம்முடைய பிரபஞ்சம், பல நூறு கோடி பால் வெளி மண்டலங்களையும், நூறு கோடி, பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களையும், மற்றும் பல நூறு கோடி ஒளி வருடங்கள் பயணிக்கக் கூடிய அளவு பரந்து விரிந்த பரப்பளவையும் கொண்டுள்ளது. இந்த எண்ணற்ற கோடானு கோடிக்கணக்கான விண்ணகப் பொருட்கள் தெய்வீகமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு, மிகச் சரியாக தங்களுடைய சுற்றுப்பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. எவ்வளவு அதிகம் நாம் கற்றுக் கொள்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக இந்தப் பிரமாணம் எந்த அளவு அச்சுறுத்துகின்றதாக உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்கின்றோம். பின் இணைப்பு 6 ஐப் பார்க்கவும்.

*56:79 குர்ஆன் மட்டும் என்பதில் திருப்தியடையாதவர்களாக உள்ள உண்மையில்லாதவர்கள் குர்ஆனைப் புரிந்து கொள்வதிலிருந்து தெய்வீகமான முறையில் தடுக்கப்பட்டு விடுகின்றனர். இந்தக் கருத்து குர்ஆன் முழுவதிலும் மீண்டும் மீண்டும் உள்ளது (17:45-46, 18:57). அதன் விளைவாக, அவர்களால் இந்த வசனத்தை புரிந்து கொள்ள இயலாது. உதாரணத்திற்கு, 7:3, 17:46, 41:44 , & 56:79க்கான இந்த மொழிபெயர்ப்பை மற்ற மொழி பெயர்ப்புக்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.