சூரா 57: இரும்பு (அல்-ஹதீத்)
[57:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[57:1] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.
[57:2] வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. வாழ்வையும் மரணத்தை யும் அவரே கட்டுப்படுத்துகின்றார். அவர் சர்வ சக்தியுடையவர்.
[57:3] அவர்தான் முதன்மையானவர் மேலும் முடிவு மானவர். அவர்தான் மிகவும் வெளியிலிருப் பவர் மேலும் மிகவும் உள்ளிருப்பவர். அவர் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவர்.
[57:4] அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில்* படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டவர். பூமிக்குள் நுழைகின்ற ஒவ்வொன்றையும், மேலும் அதிலிருந்து வெளியில் வரும் ஒவ்வொன்றையும், விண்ணிலிருந்து இறங்கி வரும் ஒவ்வொன்றையும், மேலும் அதில் ஏறுகின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிவார். நீங்கள் எங்கிருந்த போதிலும் அவர் உங்களுடன் இருக்கின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராகக் கடவுள் இருக்கின்றார்.
அடிகுறிப்பு

[57:5] வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. அனைத்து விஷயங்களும் கடவுள் - ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
[57:6] அவர் இரவைப் பகலுடன் ஒன்று சேர்க்கின்றார், மேலும் பகலை இரவுடன் ஒன்று சேர்க்கின்றார். ஆழ்மனதின் எண்ணங்களை முற்றிலும் அறிந்தவராக அவர் இருக்கின்றார்.
[57:7] கடவுள்-மீதும் மற்றும் அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், மேலும் அவர் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து வழங்குங்கள். உங்களில் நம்பிக்கை கொண்டு (தர்மம்) வழங்குபவர்கள் மகத்தானதொரு பிரதி பலனுக்குத் தகுதி பெற்று விட்டனர்.
[57:8] உங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளுமாறு தூதர் உங்களை அழைக்கின்ற பொழுது நீங்கள் ஏன் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளக் கூடாது? நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்களிடமிருந்து ஓர் உறுதிமொழியை அவர் எடுத்திருக்கின்றார்.
[57:9] அவர்தான் உங்களை இருளிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குள் வழிநடத்துவதற்காக, தன்னுடைய அடியாருக்குத் தெளிவான வெளிப்பாடுகளை இறக்கி அனுப்பியவர். கடவுள் உங்கள் பால் இரக்கமுள்ளவராக, மிக்க கருணையாளராக இருக்கின்றார்.

தனிச் சிறப்பு

[57:10] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துச் செல்வங்களையும் கடவுள் தன்வசம் வைத்திருக்கின்ற போது, ஏன் நீங்கள் கடவுள் - ன் நிமித்தம் செலவு செய்யாதிருக்கின்றீர்கள்? உங்களுக்கிடையில், வெற்றிக்கு முன்னரே செலவு செய்து பாடுபட்டவர்கள் மற்றவர்களிலிருந்து சிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் வெற்றிக்குப் பின்னர் செலவு செய்து பாடுபட்டவர்களை விட மிகவும் மேலான ஓர் அந்தஸ்தை அடைகின்றனர். ஒவ்வொரு தரப் பினருக்கும், கடவுள் மீட்சியை வாக்களிக் கின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[57:11] நன்னெறியின் ஒரு கடனை கடவுள்-க்கு கடனாக அளித்து, அதனைத் தனக்குப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ளவும், மேலும் தாராளமான தொரு பிரதிபலனை அடைந்து கொள்ளவும் விரும்புகின்றவர் யார்?

மகத்தான மாபெரும் வெற்றி

[57:12] நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண் களை, அவர்களுக்கு முன்னாலும் மேலும் அவர்களுக்கு வலப்புறமும் தங்களுடைய ஒளிகளுடன் பிரகாசித்தவர்களாக நீர் காணும் அந்நாள் வரும். உங்களுக்குரிய நற்செய்தியாவது, அந்நாளில், ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்பதாகும். அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப்பீர்கள். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.

மிகவும் மோசமான நஷ்டவாளிகள்

[57:13] அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களிடம், “ தயவு செய்து உங்களுடைய ஒளியிலிருந்து கொஞ்சம் கிரகித்துக் கொள்ள எங்களை அனுமதியுங்கள்” என்று கூறுவார்கள். “ உங்களுக்குப் பின்னால் திரும்பிச்சென்று, ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறப்படும். அவர்களுக் கிடையில் ஒரு தடுப்பு அமைக்கப்படும், அவற்றின் கதவுகள் உட்புறத்தின் கருணையை, வெளிப்புறத்தின் தண்டனையிலிருந்து பிரித்து வைக்கும்.
[57:14] அவர்களை அவர்கள், “ நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள் பதிலளிப்பார்கள், “ஆம், ஆனால் நீங்கள் கடவுள்-ன் தீர்ப்பு வரும் வரை, உங்களுடைய ஆன்மாக்களை ஏமாற்றிக் கொண்டீர்கள், தயங்கினீர்கள், சந்தேகித்தீர்கள், மேலும் உங்களுடைய விருப்பம் நிறைந்த எண்ணங்களால் வழிதவறியவர்கள் ஆகிவிட்டீர்கள். மாயைகளின் மூலம் கடவுள்-இடமிருந்து நீங்கள் திசை திருப்பப்பட்டு விட்டீர்கள்.
[57:15] “ஆகையால், இன்றைய தினம் உங்களிட மிருந்தோ, அன்றி நம்பமறுப்பவர்களிடமிருந்தோ ஈட்டுத் தொகை எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. நெருப்புதான் உங்களுடைய தங்குமிடமாக இருக்கும்; அதுவே உங்களுடைய எஜமானாகும், மேலும் துன்பகரமான தங்குமிடமாகும்.”

மார்க்கத்தின் சீரழிவு

[57:16] கடவுள்-ன் செய்திக்காகவும் மேலும் இதிலே வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்திற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் தங்களுடைய இதயங்களைத் திறந்து கொள்ள வேண்டிய நேரம் இது இல்லையா? காலப்போக்கில் தங்களுடைய இதயங்கள் கடினமாகிப்போன முந்திய வேதங்களைப் பின்பற்றியவர்களைப் போன்று அவர்கள் இருக்கக்கூடாது, மேலும், அதன் விளைவாக, அவர்களில் பலர் தீயவர்களாக மாறி விட்டார்கள்.
[57:17] பூமியை, அது இறந்துவிட்ட பின்னர் கடவுள் மீண்டும் உயிர்ப்பிக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, இவ்வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் உங்களுக்கு விவரிக்கின்றோம்.
[57:18] நிச்சயமாக, தர்மம் செய்கின்ற ஆண்களும் பெண்களும், நன்மையின் கடனைக் கடவுள்-க்கு கடனளித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய வெகுமதியைப் பன்மடங்காகப் பெருக்கிப்பெற்றுக் கொள்வார்கள்; அவர்கள் தாராளமானதொரு பிரதிபலனுக்குத் தகுதி பெற்று விட்டனர்.
[57:19] கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக் கை கொண்டவர்கள் புனிதர்களும் உயிர்த்தி யாகிகளும் ஆவார்கள். அவர்களுடைய வெகுமதிகளும் மற்றும் அவர்களுடைய ஒளியும் அவர்களுடைய இரட்சகரிடத்தில் அவர் களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. நம்பிக்கை கொள்ள மறுத்து மேலும் நம் வெளிப் பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.

இவ்வுலக வாழ்வில் மூழ்கி விடுதல் கண்டனம் செய்யப்படுகின்றது

[57:20] இவ்வுலக வாழ்க்கையானது விளையாட்டு மற்றும் வேடிக்கை, மேலும் உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்ளுதல், மேலும் பணத் தையும் பிள்ளைகளையும் பெருக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை விட அதிகம் எதுவுமில்லை என்பதை அறிந்து கெள்ளுங்கள். இது தாவரங்களை விளைவித்து நம்பமறுப்பவர்களை மகிழ்விக்கும் தாராளமான மழையைப் போன்றதாகும். ஆனால் பின்னர் அத்தாவரங்கள் பயனற்ற கூளமாகி, மேலும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன. மறுவுலகில் கடுமையான தண்டனை, அல்லது கடவுள்-இடமிருந்து மன்னிப்பு மற்றும் அங்கீகாரம் ஆகிய இரண்டில் ஒன்றே உள்ளது. இவ்வுலக வாழ்வு தற்காலிகமானதொரு மாயை என்பதை விட அதிகம் எதுவுமில்லை.

புத்திசாலித்தனமான மாற்று ஏற்பாடு

[57:21] ஆகையால், நீங்கள் உங்கள் இரட்சகரிட மிருந்து மன்னிப்பையும், மேலும் வானம் மற்றும் பூமியை சூழ்ந்திருக்கும் அளவு அகலத்தைக் கொண்டதோர் சுவனத்தையும் நோக்கி விரைந்து செல்ல வேண்டும். கடவுள் மற்றும் அவருடைய தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்காக அது காத்துக் கொண்டிருக்கின்றது. தான் நாடுகின்ற எவருக்கும் கடவுள் அளிக்கின்ற அவருடைய அருளானது இத்தகையதேயாகும். கடவுள் எல்லையற்ற கிருபையை உடையவராக இருக்கின்றார்.

ஆழ்ந்த உண்மை*

[57:22] பூமியின் மீதோ, அல்லது உங்களுக்கோ, நிகழ் கின்ற எந்த ஒன்றும் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ளது, இன்னும் படைக்கப்படுவதற்கும் முன்னரே. இதனைச் செய்வது கடவுள் - க்கு எளிதானதேயாகும்.
அடிகுறிப்பு

[57:23] இதன்படி, நீங்கள் தவற விட்ட எந்த ஒன்றிற் காகவும் நீங்கள் துக்கப்படக் கூடாது, அன்றியும் அவர் உங்களுக்கு அளித்த எந்த ஒன்றிற்காகவும் கர்வம் கொள்ளவும் கூடாது. தற்பெருமை நிறைந்தவர்களை, கர்வம் கொண்டவர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.
[57:24] அவர்கள் கஞ்சர்களாக இருக்கின்றனர், மேலும் மக்களைக் கஞ்சர்களாக இருக்கும்படியும் ஏவு கின்றனர். ஒருவர் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் கடவுள் செல்வந்தர், புகழுக்குரியவராக இருக்கின்றார்.

இரும்பு: மிகப் பயன்நிறைந்த உலோகம்

[57:25] தெளிவான சான்றுகளால் ஆதரிக்கப்பட்டவர் களாக நம்முடைய தூதர்களை நாம் அனுப்பி னோம், மேலும் மக்கள் நீதியை ஆதரிக்கும் பொருட்டு, வேதத்தையும் சட்டத்தையும் அவர்களுக்கு நாம் இறக்கி அனுப்பினோம். மேலும் நாம் இரும்பை இறக்கி அனுப்பினோம், அதில் பலமும், மேலும் மனிதர்களுக்குப் பல பயன்களும் உள்ளன. இவை அனைத்தும் விசுவாசத்தின் மீது அவருக்கும், அவருடைய தூதருக்கும் ஆதரவளிப்பவர்கள் யார் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டுவதற்காகவேயாகும். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.

வேதம் வழங்கப்பட்டவர்கள்

[57:26] நாம் நோவாவையும், ஆப்ரஹாமையும் அனுப்பி னோம், மேலும் அவர்களுடைய சந்ததியினருக்கு வேதத்தின் தூதுத்துவத்தையும் மேலும் வேதத்தையும் அளித்தோம். அவர்களில் சிலர் வழிகாட்டப்பட்டவர்களாக இருந்தனர், அதே சமயம் பலர் தீயவர்களாக இருந்தனர்.

மார்க்கத்தின் சீரழிவு

[57:27] அவர்களுக்குப் பிறகும், நம்முடைய தூதர்களை நாம் அனுப்பினோம். மேரியின் மகன் இயேசுவை நாம் அனுப்பினோம், மேலும் இன்ஜீலை (சுவிசேஷம்) நாம் அவருக்குத் தந்தோம், மேலும் அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் கனிவையும் கருணையையும் நாம் அமைத் தோம். ஆனால் அவர்களுக்கு நாம் ஒருபோதும் விதித்திராத துறவறத்தை அவர்கள் கண்டு பிடித்துக் கொண்டனர். அவர்களிடம் நாம் செய்யும் படிக்கேட்டதெல்லாம் கடவுள்-ஆல் அங்கீகரிக் கப்பட்ட கட்டளைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் செய்திருக்க வேண்டியவாறு அத்தூதுச் செய்தியை அவர்கள் உறுதியாகக் கடைபிடிக்கவில்லை. அதன் விளைவாக, அவர்களுக்கிடையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களுக்குரிய பிரதிபலனை நாம் கொடுத்தோம், அதே சமயம் அவர்களில் பலர் தீயவர்களாகவே இருந்தனர்.
[57:28] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ளவும் வேண்டும். அப்போது அவர் தன்னுடைய கருணையிலிருந்து இருமடங்கு வெகுமதியை வழங்குவார், உங்களை வழிநடத்துவதற்காக உங்களுக்கு ஒளியை கொடையளிப்பார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[57:29] இவ்விதமாக, முந்திய வேதத்தைப் பின்பற்று பவர்கள், கடவுள்-ன் கருணைக்கும் மற்றும் அருளுக்கும் அவர்கள் தனியுரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பதையும் மேலும் அருள் அனைத்தும் கடவுள்-ன் கரத்திலேயே உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். தான் நாடுகின்ற எவருக்கும் அவர் அதனை அளிக்கின்றார். கடவுள் எல்லையற்ற அருளை உடையவர்.