சூரா 5க்குரிய அடிக்குறிப்புகள்

*5:2 இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக, புனிதயாத்திரையின் போது வேட்டையாடுதல் மற்றும் தாவரங்களை வெட்டுதல் தடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மக்காவில் குவிந்திடும் நிலையில், வேட்டையாடுதல் அனுமதிக்கப்பட்டதாக இருந்தால் நிலப்பரப்புகள் மிகவிரைவில் அதனுடைய இயற்கை வளங்களை இழந்துவிடும். குவிந்திருக்கும் யாத்திரிகர்களுக்கும், அதேபோல் உள்ளூரைச் சேர்ந்த மக்களுக்கும், மேலும் தீர்ந்து போனவற்றை மீண்டும் நிறைவு செய்வதற்காகவும், பிராணிப்பலி புனிதயாத்திரையின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டிருக்கின்றது. 2:196 ஐ பார்க்கவும்.

*5:3 பன்றியின் “ இறைச்சி” தான் தடுக்கப்பட்டுள்ளது. “ கொழுப்பு” அல்ல. குர்ஆனில் குறிப்பிட்டுத்தடுக்கப்படாத எந்த ஒன்றையும் சட்ட பூர்வமாக அனுமதிக்கப்பட்டது என்றே கருதிக் கொள்ளவேண்டும். 6:145 -146 ஐ பார்க்கவும்.

*5:12 இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள அத்தியாவசியங்களை நீங்கள் நிறைவேற்றினால், கடவுள் உங்களுடன் இருக்கின்றார் என்பதை அவர் உங்களை அறியச்செய்வார். இதனைப்பற்றி எந்தவிதமான சந்தேகமும், உங்களுக்கு இருக்காது. குர்ஆனுடைய அற்புதத்தை புரிந்து கொண்டவர்களுக்கு கடவுளுடைய அத்தாட்சிகளில் கணித அத்தாட்சிகள் மிக முக்கியமானவை ஆகும். (பின் இணைப்பு 1).

*5:19 கடவுளின் உடன்படிக்கை தூதருடைய வருகை குறித்து பைபிள் மற்றும் குர்ஆனில் உள்ள முன்னறிவிப்பு பூர்த்தியாவதை இந்த வசனம் அறிவிக்கின்றது. (மல்கியா 3:1, குர்ஆன் 3:81) இந்த தூதருடைய பெயர்” ரஷாத் கலீஃபா” என குர்ஆனின் உள்ளே, கணித அடிப்படையில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்புமிக்க இவ்வசனம் பிரத்யேகமான சான்றுகள் காட்டப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. “ ரஷாத்”-ன் எழுத்தெண் மதிப்புடன் (505) கலீஃபா வின் எண் மதிப்பையும் (725) இந்த சூரா எண்ணையும் (5) இந்த வசன எண்ணையும் (19) கூட்டுவதன் மூலம், நாம் மொத்தத் தொகையாக 505+725+5+19 = 1254, அல்லது 19 X66 ஐ அடைகின்றோம். பத்தொன்பது, ரஷாத் கலீஃபா மூலம் வெளிப்படுத்தப்பட்ட குர்ஆனுடைய பொது வகு எண்ணாகும். அதிகமான சான்றுகளும் பிரத்யேகமான விபரங்களும் பின் இணைப்பு 2ல் உள்ளது.

*5:27-31 இந்த முதல் கொலையில் சம்பந்தப்பட்ட இருமகன்களுடைய பெயர்களும் இங்கே முக்கியமல்ல, இருப்பினும் பைபிளில் அவைகள், அபெல் மற்றும் கெய்ன் என கொடுக்கப்பட்டிருக்கின்றது. (ஜெனிஸிஸ் 4: 2-9).

*5:38 போலி முஸ்லிம்களால் உத்திரவிடப்பட்டு நடைமுறையில் இருக்கும், திருடனின் கையை கத்தரிப்பது, குர்ஆனின் அடிப்படையில் இல்லாத சாத்தானின் வழிமுறையாகும். இந்த உதாரணத்தின் சிறப்பு முக்கியத்துவத்தைக் கருதி, கையைக் கத்தரிக்காமல் அதில் அடையாளம் தான் இடவேண்டும் என்பதற்கு ஆதரவாக, கணிதச் சான்றை கடவுள் கொடுத்துள்ளார். வசனம் 12:31-ல் ஜோஸஃப்பைக் கண்டு அதிசயித்த பெண்கள் தங்களுடைய கைகளை கத்தரித்துக்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்று; யாராலும் அவ்வாறு செய்ய இயலாது. இவ்விரு வசனங்களின் 5:38 மற்றும் 12:31ன் சூரா எண்ணையும் வசன எண்ணையும் கூட்டினால் கிடைப்பது இரண்டிலுமே 43 தான். மேலும் இந்த கணிதக் கூற்று குர்ஆனின் பத்தொன்பது அடிப்படையிலான குறியீட்டுடன் ஒத்து இருக்க வேண்டும் என்பது கடவுளின் நாட்டமாகவும் கருணையாகவும் உள்ளது. 12:31-க்கு 19 வசனங்களுக்கு பிறகு 12:50ல் இதே வார்த்தையை நாம் பார்க்கலாம்.

*5:44 இயேசு கிறிஸ்துவிற்கு முந்தைய இஸ்ரவேலர்களின் அனைத்து வேதம் வழங்கப்பட்டவர்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட வேதங்களின் ஒரு தொகுப்புதான் தோரா. அதாவது இன்றைய பழைய ஏற்பாடு. குர்ஆனில் எங்குமே தோரா மோஸஸிற்கு கொடுக்கப்பட்டதாக நாம் காணஇயலாது.

*5:51 மற்ற மக்களுடன் கொள்ளும் உறவுகள் 5:57 & 60:8-9ல் உள்ள அடிப்படைச்சட்டத்தின்படியே நெறிப்படுத்தப்படுகின்றது. நண்பர்களாக இருக்க இயலாத யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி வசனம் 5:57 குறிப்பிட்டுக் கூறுகின்றது. அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பரிகாசமும், கேலியும் செய்பவர்கள், அல்லது அவர்களைத் தாக்குபவர்களாக இருப்பார்கள்.

*5:72-76 ஜான் 20:17ல் இயேசு கிறிஸ்து தான் கடவுளும் அல்ல, கடவுளின் மகனும் அல்ல என்று போதித்ததை நாம் காண்கின்றோம். பற்பல மதசாஸ்திர வல்லுநர்கள் மிகவும் கவனமான ஆராய்ச்சிக்குப் பிறகு இன்றைய கிறிஸ்தவம் இயேசு கிறிஸ்துவால் போதி க்கப்பட்ட அதே கிறிஸ்தவம் அல்ல என்ற முடிவிற்கு வந்திருக்கின்றனர். இது பற்றி கூறுகின்ற இரண்டு பிரபல புத்தகங்கள்: த மித் ஆப் காட் இன்கார்னேட் (கடவுள் அவதாரம் என்ற கட்டுக்கதை) (தவெஸ்மின்ஸ்டர் பிரஸ், பிளடெல்பியா, 1977), த மித் மேக்கர் (கட்டுக்கதை புனைவோர்) (ஹார்பர் & ரோவ் நியூயார்க் 1986) கட்டுக்கதை புனைவோர் என்ற புத்தகத்தின் முன் அட்டையில் நாம் பின்வரும் வாசகத்தைப் படிக்கலாம். அந்த வாசகத்தில், “ஹயாம் மக்கோபி என்பவர், கிறிஸ்தவ மதத்தின் ஸ்தாபகர் இயேசு அல்ல, பால்தான் என்பதற்கு புதிய வாதங்களை, இந்த கருத்திற்கு ஆதாரமாகத்தருகின்றார் .... பால் தான் இயேசுகிறிஸ்துவை மனித சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக, உயிர்விட்ட ஒரு தெய்வீகக் காவலர் என்ற அவரது கற்பனைப்பார்வை மூலம் ஒரு புதிய மார்க்கத்தை சிருஷ்டித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.”

*5:97 இணைத்தெய்வ வழிபாடு செய்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் வேதம் வழங்கப்பட்டவரின் சமாதியையும் புனிதமாக்கி இரண்டு புனித மஸ்ஜிதுகளை ஏற்படுத்தி விட்டார்கள். குர்ஆன், ஒரு புனித மஸ்ஜிதைப் பற்றி மட்டுமே கூறுகின்றது.

*5:114-115 வெற்றி கொள்ளக்கூடிய குர்ஆனின் அற்புதம் , (பின் இணைப்பு 1) 74:35 ல் “ மிகப்பெரிய அற்புதங்களில் ஒன்றாகும்” என்று விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு அசாதாரணமான பெரிய பொறுப்பை தன்னுடன் கொண்டு வந்திருக்கின்றது.

*5:116 குர்ஆன் இயேசுவை, “ மேரியின் மகன்” என்று தொடர்ந்து அழைப்பதும், மேலும் பைபிள் அவரை” மனிதரின்மகன்” என்று அழைப்பதும் கவனிக்கத்தக்கது. இறைநிந்தனை செய்தவர்களாக, சிலர் அவரை “கடவுளின் மகன்” என்று அழைப்பார்கள் என்பதை கடவுள் அறிந்தேயிருந்தார்!