சூரா 60: பரிசோதனை (அல்-மும்தஹனஹ்)
[60:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[60:1] நம்பிக்கை கொண்டோரே, உங்களிடம் வந்திருக்கின்ற சத்தியத்தை அவர்கள் நம்ப மறுத்துவிட்ட பின்னரும், அன்பையும் நட்பையும் அவர்கள் பால் காட்டியவர்களாக, என்னுடைய விரோதிகளுடனும் உங்களுடைய விரோதி களுடனும் நீங்கள் நட்புக் கொள்ள வேண்டாம். உங்கள் இரட்சகரான, கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக மட்டுமே, அவர்கள் தூதரையும் மேலும் உங்களையும் தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். என்னுடைய அருட் கொடைகளைத் தேடியவர்களாக, என் நிமித்தம் போராடுவதற்காக நீங்கள் புறப் பட்டால், எவ்வாறு நீங்கள் அவர்களை இரகசிய மாக நேசிக்க இயலும்? நீங்கள் மறைத்துக் கொள்கின்ற ஒவ்வொன்றையும் மேலும் நீங்கள் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் நான் முற்றிலும் அறிந்திருக்கின்றேன். உங்களுக் கிடையில் இதனைச் செய்கின்றவர்கள் உண்மையில் சரியான பாதையிலிருந்து வழிதவறிச் சென்று விட்டனர்.
[60:2] அவர்கள் உங்களை எதிர்கொள்ளும் பொழு தெல்லாம், அவர்கள் உங்களை விரோதிகளைப் போல் நடத்துகின்றனர், மேலும் தங்களுடைய கரங்களாலும் நாவுகளாலும் உங்களைத் துன்புறுத்துகின்றனர். நீங்கள் நம்பமறுக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.
[60:3] உங்களுடைய உறவினர்களும், மற்றும் உங் களுடைய செல்வமும் ஒருபோதும் உங்களுக்கு உதவ இயலாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படுகின்ற நாளில், உங்களுக்கிடையில் அவர் தீர்ப்பளிப்பார். கடவுள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.

ஆப்ரஹாம்: ஒரு முன்னுதாரணம்

[60:4] ஆப்ரஹாம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மூலம் உங்களுக்கு நல்லதொரு முன்னு தாரணம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய சமூகத்தாரிடம் “உங்களையும் கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபடுபவற்றையும் விட்டு நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை நாங்கள் பகிரங்கமாகக் கண்டனம் செய்கின்றோம், மேலும் கடவுள் மட்டும்* என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, எங்களிடமிருந்து பகைமையையும் மற்றும் வெறுப்பையும் தவிர எந்த ஒன்றையும் நீங்கள் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள். ஆயினும், அவர் தன் தந்தையிடம், “உம்முடைய பாவமன்னிப்பிற்காக நான் பிரார்த்திப்பேன்,** ஆனால் கடவுள்-இடமிருந்து உம்மைக் காக்கின்ற எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று கூறிய பொழுது, ஆப்ரஹாம் ஒரு தவறு புரிந்துவிட்டார். “ எங்கள் இரட்சகரே, நாங்கள் உம்மிடம் பொறுப்பேற்படுத்துகின்றோம், மேலும் உமக்கு அடிபணிகின்றோம்; இறுதி விதியானது உம்வசமே உள்ளது.
அடிகுறிப்பு

[60:5] “எங்கள் இரட்சகரே, நம்பமறுப்பவர்களால் அடக்குமுறை செய்யப்பட்டவர்களாக இருக்க எங்களை விட்டுவிடாதீர், மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்”.
[60:6] கடவுள் மற்றும் இறுதி நாளைத் தேடுபவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. திரும்பிச்சென்று விடுபவர்களைப் பொறுத்தவரை, (அவர்களிடம்) கடவுள் எந்தத் தேவையுமற்றவர், மிகவும் புகழுக்குரியவர்.
[60:7] உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பகைமையைக் கடவுள் நேசமாக மாற்றி விடக் கூடும். கடவுள் சர்வ சக்தியுடையவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

நம்பிக்கையற்றவர்களுடனான உறவுகளை வரைமுறைப்படுத்துகின்ற அடிப்படைச் சட்டம்

[60:8] உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிடாத, மேலும் உங்களு டைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற் றாதவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து கடவுள் உங்களைத் தடுக்கவில்லை. நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ளலாம், மேலும் அவர்கள் பால் நீதத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீதிமான்களைக் கடவுள் நேசிக்கின்றார்.
[60:9] உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிட்டு, உங்களுடைய வீடுகளை விட்டு உங்களை வெளியேற்றி, மேலும் உங்களை வெளியேற்றுவதற்காக மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்பவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து மட்டுமே கடவுள் உங்களைத் தடுக்கின்றார். நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டாம். அவர்களுடன் நட்புக் கொள்பவர்கள் தான் வரம்பு மீறுபவர்கள்.

போர் ஏற்பட்டால்

[60:10] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொண்ட பெண்கள் (எதிரியைக் கைவிட்டு விட்டு மேலும்) உங்களிடம் புகலிடம் கேட்கும்போது, நீங்கள் அவர்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய நம்பிக்கையைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவர்கள் நம்பிக்கையாளர்கள் தான் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால், நம்ப மறுப்பவர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விட வேண்டாம். அவர்களுடன் திருமண உறவில் தொடர்ந்திருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப் பட்டவர்கள் அல்ல, அன்றி அவர்களை மணந்து கொள்ள நம்ப மறுப்பவர்களை அனுமதிக்கவும் வேண்டாம். நம்ப மறுப்பவர்கள் செலுத்திய வரதட்சணையை திருப்பிக் கொடுத்து விடுங்கள். அவர்களுக்குரிய வரதட்சணையை நீங்கள் செலுத்தி விட்டால், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் நீங்கள் தவறெதுவும் செய்து விடவில்லை. நம்ப மறுக்கின்ற மனைவியரை (அவர்கள் எதிரியுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால்) நீங்கள் தடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் செலுத்திய வரதட்சணைத் தொகையை நீங்கள் அவர்களிடம் கேட்கலாம், மேலும் அவர்கள் கொடுத்தவற்றை அவர்கள் கேட்கலாம். இது கடவுள்-ன் தீர்ப்பாகும்; அவர் உங்களுக்கிடையில் தீர்ப்பளிக்கின்றார். கடவள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[60:11] உங்கள் மனைவியரில் எவரேனும் எதிரிகளின் பாசறையில் சேர்ந்து கொண்டால், மேலும் சண்டையிடுவதற்கு நீங்கள் நிர்பந்திக்கப் பட்டால், தங்கள் மனைவியரை இழந்த அந்த ஆண்களுக்கு, அவர்கள் தங்கள் மனைவியருக்காகச் செலவு செய்ததைக் கொடுப்பதன் மூலம் நஷ்டஈடு செய்ய எதிரியை நீங்கள் நிர்பந்திக்க வேண்டும். எவர் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அந்தக் கடவுள்-இடம் நீங்கள் பயபக்தியோடிருக்க வேண்டும்.
[60:12] வேதம் வழங்கப்பட்டவரே, (நம்ப மறுப்பவர்களைக் கைவிட்டு விட்டவர்களான) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் புகலிடம் தேடுவதற்காக வந்து, அவர்கள் கடவுள்-உடன் எந்த இணைத் தெய்வங்களையும் அமைத்துக் கொள்ள மாட்டோம், அன்றித் திருடமாட்டோம், அன்றி விபச்சாரம் செய்ய மாட்டோம், அன்றித் தங்களுடைய குழந்தைகளைக் கொல்ல மாட்டோம், அன்றி பொய்மை எதனையும் இட்டுக்கட்ட மாட்டோம், அன்றி உம்முடைய நன்னெறியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியா திருக்கமாட்டோம் என்று உம்மிடம் உறுதிமொழி அளித்தால், நீர் அவர்களுடைய உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளவும், மேலும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படிக் கடவுள்-ஐப் பிரார்த்திக்கவும் வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[60:13] நம்பிக்கை கொண்டோரே, கடவுள் கோபம் கொண்டிருக்கின்ற மேலும் எதிர்பார்க்கவே இயலாதவாறு நம்பமறுப்பில் ஒட்டிக் கொண்டு விட்ட மக்களுடனும் நீங்கள் நட்புக் கொள்ளா தீர்கள்; ஏற்கனவே சமாதிகளில் இருக்கின்ற நம்ப மறுப்பவர்களைப் போல் அதே விதமாக அவர்கள் எதிர்பார்க்க இயலாதவர்களாக இருக்கின்றனர்.