சூரா 60க்குரிய அடிக்குறிப்புகள்

*60:4 “மட்டும்” என்பதற்குரிய அரபி வார்த்தை ( வஹ்தஹு) ஆறுமுறைகள் மட்டுமே குர்ஆனில் இடம் பெறுகின்றன, அவற்றில் ஒன்று குர்ஆனை மட்டும் உறுதியாகக் கடைப்பிடிப்பதைக் குறிக்கின்றது (17:46). கடவுள் மட்டும் என்பதைக் குறிப்பவை 7:70, 39:45, 40:12 & 84 மற்றும் 60:4 ஆகியவற்றில் இடம் பெறுகின்றன. இந்த எண்களின் கூட்டுத்தொகையானது (7+70+39+45+ 40+12+84+60+4) 361 அல்லது 19 X 19 க்குச் சமமாகின்றது. குர்ஆனின் முக்கியமான விஷயம் “கடவுளை மட்டும் வழிபடுங்கள்” என்பதேயாகும் என இது அழுத்தமாகக் கூறுகின்றது. பின் இணைப்பு 1
**60:4 இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்காக, வழிகாட்டலை வேண்டி நாம் பிரார்த்திக்கலாம், மன்னிப்பிற்கல்ல, அதனால் மன்னிக்கப்பட இயலாத ஒரேபாவம் இணைத் தெய்வ வழிபாடேயாகும் என்பது கடவுளின் சட்டமாகும் (4:48& 116).