சூரா 65க்குரிய அடிக்குறிப்புகள்

*65:1 மறுமணத்திற்குத் தகுதியாகும் முன்னர் , விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணிற்குரிய இடைக்காலத் தவணையானது மூன்று மாதவிடாய்க் காலங்கள் காத்திருப்பதாகும். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண் கர்ப்பவதியாக இல்லை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது (2:228).

*65:10-11 தெளிவாக, இங்கே “தூதர்” என்பது குர்ஆன்தான். வசனம் 10, “ ஒரு தூதுச் செய்தியை இறக்கி அனுப்புவதைப்” பற்றிப் பேசுகின்றது, மேலும் 65:11ல் இது குர்ஆனைத்தான் தூதராகச் சுட்டிக் காட்டுகின்றது (பின் இணைப்பு 20).

*65:11 65:10-11க்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும்.

*65:12 நம்முடைய பூமியைப் போன்ற வேறு ஆறு கிரகங்களைக் கடவுள் படைத்துள்ள போதிலும், நம்முடைய கிரகத்தில் மட்டுமே ஜீவராசிகள் உள்ளன. இவ்விதமாக, இக்கிரகத்தின் மீது அதன் குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மட்டுமே உயிர்கள் “பரிணாமம்” அடைந்து விடவில்லை என்று பரிணாமவாதிகளுக்கு தீர்ப்பு நாளன்று எடுத்துக்காட்டப்படும்.