சூரா 67: அரசுரிமை (அல்-முல்க்)
[67:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[67:1] அரசுரிமைகள் அனைத்தும் எவருடைய கரங் களில் உள்ளனவோ அந்த ஒருவர் மிகவும் மேன் மையானவர், மேலும் அவர் சர்வ சக்தி யுடையவர்.

நம்முடைய வாழ்வின் நோக்கம்*

[67:2] அவர்தான் உங்களுக்கிடையில் சிறப்பாகச் செயல்படக் கூடியவர்கள் யார் என்பதை பிரித்தறியும் நோக்கத்திற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தவர்.* அவர் சர்வ வல்லமையுடையவர், மன்னிக்கின்றவர்.
அடிகுறிப்பு

[67:3] அவர் ஏழு பிரபஞ்சங்களையும் அடுக்கடுக் காகப் படைத்தார்.மிக்க அருளாளரால் படைக் கப்பட்டவற்றில் எவ்விதமான குறைபாட்டையும் நீர் காணமாட்டீர். தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பீராக; ஏதேனும் குறையை நீர் காண்கின்றீரா?
[67:4] மீண்டும் மீண்டும் உற்றுப் பார்ப்பீராக; விரட்டப் பட்டவையாகவும், தோல்வியுற்றவையாகவும் உம்முடைய கண்கள் திரும்பி வரும்.
[67:5] மிகக் கீழுள்ள பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு நாம் அலங்கரித்தோம், மேலும் சாத்தான்களுக்கெதிராக அதன் எல்லைகளை ஏவுகணைகளைக் கொண்டு பாதுகாத்தோம்; நரகத்தில் ஒரு தண்டனையை நாம் அவர்களுக் காகத் தயாரித்தோம்.
[67:6] தங்களுடைய இரட்சகரின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களுக்கு, ஜஹன்னாவின் தண்டனை. என்ன ஒரு துன்பகரமான விதி.
[67:7] அதிலே அவர்கள் வீசப்படும் போது, அதன் புகைச்சலால் அதன் சீற்றத்தை அவர்கள் செவியுறுவார்கள்.
[67:8] கோபாவேசத்தில் அது கிட்டத்தட்ட வெடிக் கின்றது. ஒரு கூட்டம், அதிலே வீசப்படுகின்ற பொழுதெல்லாம், அதன் பாதுகாவலர்கள் அவர்களை, “எச்சரிப்பவர் ஒருவரை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட் பார்கள்.
[67:9] அவர்கள், “ஆம் உண்மையில்; எச்சரிப்பவர் ஒருவர் எங்களிடம் வரவே செய்தார், ஆனால் நாங்கள் நம்ப மறுத்தோம், மேலும், ‘கடவுள் எந்த ஒன்றையும் வெளிப்படுத்தவில்லை. நீர் முற்றிலும் வழிதவறியவராக இருக்கின்றீர் என்று கூறினோம்,’” என்று பதிலளிப்பார்கள்.
[67:10] அத்துடன் அவர்கள், “ நாங்கள் செவியேற் றிருந்தால் அல்லது புரிந்து கொண்டிருந்தால், நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்!” என்றும் கூறுவார்கள்.
[67:11] இவ்விதமாக, அவர்கள் தங்களுடைய பாவங் களை ஒப்புக்கொள்கின்றனர். நரகவாசி களுக்குக் கேடுதான்.
[67:12] தங்களுடைய தனிமையில் தனித்து இருக்கும் பொழுது, தங்கள் இரட்சகரிடம் பயபக்தி யோடிருப்பவர்களைப் பொறுத்த வரை, அவர் கள் மன்னிப்பையும் மேலும் மகத்தானதொரு பிரதிபலனையும் அடைந்து விட்டனர்.
[67:13] உங்களுடைய கூற்றுக்களை நீங்கள் இரகசிய மாக வைத்துக் கொண்டாலும், அல்லது அவற் றை அறிவித்தாலும், ஆழ்மனதின் எண்ணங் களை அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கி ன்றார்.
[67:14] அவர் படைத்தவற்றை அவர் அறியாமலிருப் பாரா? அவர் மகிமை மிக்கவர், மிகவும் நன்கறிந்தவர்.
[67:15] அவர்தான் பூமியை உங்களுடைய பணிக்கென அமைத்தவர். அதன் மூலைகளில் சுற்றித் திரியுங்கள், மேலும் அவருடைய வாழ்வாதாரங் களிலிருந்து உண்ணுங்கள். இறுதியான அழைப்பு ஆணை அவருக்குரியது.
[67:16] வானத்தில் உள்ள அந்த ஒருவர் பூமியைத் தாக்கி அதனை உருண்டு விழும்படிச் செய்து விட மாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா?
[67:17] வானத்தில் உள்ள அந்த ஒருவர் உக்கிரமான தொரு புயலை உங்கள் மீது அனுப்பி விட மாட்டார் என்று நீங்கள் உத்திரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? அதன் பிறகாவது என்னுடைய எச்சரிக்கையின் முக்கியத் துவத்தை நீங்கள் சரியாக மதிப்பிடுவீர்களா?
[67:18] அவர்களுக்கு முன்னர் மற்றவர்களும் நம்ப மறுத்துள்ளனர்; என்னுடைய பழி தீர்த்தல் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[67:19] வரிசைகளில் அணிவகுத்தவாறும் மேலும் தம் முடைய இறக்கைகளை விரித்தவாறும் அவர் களுக்கு மேலே பறவைகளை அவர்கள் பார்த்த தில்லையா? மிக்க அருளாளர்தான் அவற்றைக் காற்றில் பிடித்துக் கொண்டிருக்கின்றார். அவர் அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவராக இருக்கின்றார்.
[67:20] மிக்க அருளாளருக்கெதிராக உங்களுக்கு உதவக் கூடிய அந்தப்படைவீரர்கள் எங்கே? உண்மையில், நம்பமறுப்பவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.
[67:21] தன்னுடைய வாழ்வாதாரங்களை அவர் நிறுத்தி வைத்துக் கொண்டால், உங்களுக்கு வழங்குவதற்கு யார் இருக்கின்றார்? உண்மையில், அவர்கள் வரம்பு மீறலிலும் வெறுப்பிலும் ஆழமாக மூழ்கி விட்டனர்.
[67:22] தன்னுடைய முகத்தின் மீது குப்புற வீழ்ந்தவாறு நடக்கின்ற ஒருவன் சிறப்பாக வழி நடத்தப் பட்டவனா, அல்லது சரியான பாதையில் நேராக நடக்கின்ற ஒருவனா?
[67:23] “அவர்தான் உங்களைத் துவக்கியவர், மேலும் செவிப்புலனையும், கண்களையும், மற்றும் மூளைகளையும் உங்களுக்கு அளித்தவர். அரிதாகவே நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
[67:24] “அவர்தான் பூமியின் மீது உங்களை அமைத்தவர், மேலும் அவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப் படுவீர்கள்” என்று கூறுவீராக.
[67:25] அவர்கள்: “நீர் உண்மையாளராக இருந்தால், அந்த முன்னறிவிப்பு எப்போது நிகழ்ந்தேறும்?” என்று சவால் விடுகின்றனர்.
[67:26] “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் உள்ளது; நான் தெளிவானதொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று கூறுவீராக.
[67:27] அது நிகழ்வதை அவர்கள் காணும்பொழுது, நம்பமறுத்தவர்களின் முகங்கள் துக்ககரமான தாக மாறிவிடும், மேலும்: “ இதுதான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தது” என்று பிரகடனம் செய்யப்படும்.
[67:28] “கடவுள் என்னையும் மேலும் என்னுடன் இருப் பவர்களையும், அழித்துவிடவோ, அல்லது அவருடைய கருணையைக் கொண்டு எங்கள் மீது பொழியவோ தீர்மானித்த போதிலும், வலி நிறைந்த தொரு தண்டனையிலிருந்து நம்பமறுப்பவர் களைப் பாதுகாக்க யார் இருக்கின்றார்?” என்று கூறுவீராக.
[67:29] “அவர்தான் மிக்க அருளாளர்; நாங்கள் அவர் மீது நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் அவர் மீது பொறுப்பேற்படுத்துகின்றோம். உண்மை யாகவே வெகுதூரம் வழிகேட்டில் இருப்பவர்கள் யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்,” என்று கூறுவீராக.
[67:30] “உங்களுடைய தண்ணீர் ஆழத்திற்குச் சென்று விட்டால், தூய்மையான தண்ணீரை உங்களுக்கு யார் வழங்குவார்?” என்று கூறுவீராக.