சூரா 68: பேனா (அல்-கலம்)
[68:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[68:1] நுவ்ன்,* பேனாவும், மேலும் அவர்கள் (மக்கள்) எழுதுபவையும்.
அடிகுறிப்பு

[68:2] உம்முடைய இரட்சகரிடமிருந்து மகத்தான தொரு அருட்கொடையை நீர் அடைந்து விட்டீர்; நீர் புத்திசுவாதீனமில்லாதவர் அல்ல.
[68:3] நன்கு தகுதியானதொரு பிரதிபலனை நீர் அடைந்து வீட்டீர்.
[68:4] மகத்தானதொரு ஒழுக்க குணத்தைக் கொண்டு நீர் அருள்பாலிக்கப்பட்டுள்ளீர்.
[68:5] நீரும் காண்பீர், மேலும் அவர்களும் காண் பார்கள்.
[68:6] உங்களில் குற்றவாளி என்று முடிவு செய்யப் பட்டவர் எவர் என்பதை.
[68:7] உம்முடைய இரட்சகர் தன்னுடைய பாதையிலி ருந்து வழிதவறிச் சென்று விட்டவர்கள் எவர் என்பதை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் வழி நடத்தப்பட்டவர்கள் எவர் என்பதையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[68:8] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்குக் கீழ் படியாதீர்.
[68:9] நீர் சமரசம் செய்து கொள்ள வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர், எனவே அவர்களும், சமரசம் செய்து கொண்டுவிடலாம் என்பதற்காக.
[68:10] இழிவான சத்தியம் செய்கின்றவன் ஒவ்வொரு வனுக்கும் கீழ்ப்படியாதீர்.
[68:11] அவதூறு கூறும் ஒருவன், புறம் பேசுகின்ற ஒருவன்,
[68:12] தர்மத்தைத் தடுப்பவன், வரம்பு மீறுகின்ற ஒருவன், பாவம் செய்கின்ற ஒருவன்.
[68:13] நன்றி கெட்டவன், மேலும் பேராசைக்காரன்.
[68:14] போதுமான பணத்தையும், பிள்ளைகளையும் அவன் பெற்றிருந்த போதிலும்.
[68:15] நம்முடைய வெளிப்பாடுகள் அவனிடம் ஓதிக்காட்டப்படும் போது, அவன், “கடந்த காலக் கட்டுக்கதைகள்” என்று கூறுகின்றான்.
[68:16] அவனுடைய முகத்தில் நாம் அடையாள மிடுவோம்.
[68:17] காலையில் தாங்கள் அதனை அறுவடை செய்து விடுவதாக சத்தியமிட்ட தோட்டத்தின் சொந்தக் காரர்களை நாம் சோதித்தது போல் அவர் களையும் நாம் சோதித்தோம்.
[68:18] அவர்கள் மிகவும் நிச்சயமான உறுதியுடன் இருந்தனர்.
[68:19] அவர்கள் உறக்கத்திலிருந்த பொழுது உம் முடைய இரட்சகரிடமிருந்து கடந்து செல்கின்ற (புயல்) ஒன்று அதனைக் கடந்து சென்றது.
[68:20] காலைப் பொழுதில், அது தரிசு நிலமாக இருந்தது.
[68:21] காலையில் அவர்கள் ஒருவர் மற்றவரை அழைத் தார்கள்.
[68:22] “ பயிர்களை நாம் அறுவடை செய்து விடலாம்.”
[68:23] அவர்கள் செல்கின்ற வழியில் அவர்கள் ஒருவர் மற்றவரிடம் நம்பிக்கையாகக் கூறிக் கொண் டனர்.
[68:24] அப்பொழுது முதல், அவர்களில் எவரும் ஏழையாக இருக்க மாட்டார்கள் என்று.
[68:25] அவர்கள் தங்களுடைய அறுவடையைக் குறித்து மிகவும் நிச்சயமான உறுதியுடன் இருந்தனர்.
[68:26] ஆனால் அவர்கள் அதனைக் கண்ட பொழுது, அவர்கள் கூறினர் “நாம் மிகவும் தவறானவர் களாக இருந்திருக்கின்றோம்!
[68:27] “இப்போது, நம்மிடம் இருப்பது ஒன்றுமில்லை!”

“கடவுள் நாடினால்” என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும்

[68:28] அவர்களுக்கிடையில் நன்னெறியாளர்கள், “நீங்கள் மட்டும் (கடவுளைத்) துதித்திருந்தால்! என்று கூறினார்கள்.
[68:29] அவர்கள், “எங்கள் இரட்சகர் துதிப்பிற்குரியவர் நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்” என்று கூறினார்கள்.
[68:30] அவர்கள் ஒருவர் மற்றவரைப் பழித்துக் கொள்ளத் துவங்கினர்.
[68:31] அவர்கள் கூறினர், “நமக்குக் கேடுதான். நாம் பாவம் செய்துவிட்டோம்.
[68:32] “நம்முடைய இரட்சகர் இதைவிடவும் சிறப்பான ஒன்றை நமக்குத் தரக்கூடும். எங்கள் இரட்சகரிடம் நாங்கள் வருந்தித்திருந்துகின்றோம்.”
[68:33] பழிதீர்த்தல் இவ்விதமானதாகவே இருந்தது. ஆனால் அவர்கள் மட்டும் அறிந்திருந்தால் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாகும்.
[68:34] நன்னெறியாளர்கள், அவர்களுடைய இரட்ச கரிடம், பேரானந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதி பெற்று விட்டனர்.
[68:35] அடிபணிந்தவர்களைக் குற்றவாளிகளைப் போல் நாம் நடத்துவோமா?
[68:36] உங்களுடைய நியாயத்தில் என்ன கோளாறு?
[68:37] நீங்கள் பின்பற்றுவதற்கு வேறொரு புத்தகம் இருக்கின்றதா?
[68:38] அதில், நீங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும் நீங்கள் காண்கின்றீர்களா?
[68:39] அல்லது, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று நீங்கள் விரும்புகின்ற எதுவாயினும் அதனை உங்களுக்கு வழங்கக்கூடிய முறைப்படியான உறுதிமொழிகளை நம்மிடமிருந்து நீங்கள் பெற்றுள்ளீர்களா?
[68:40] “உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை வழங்குகின்றவர் யார்?” என்று அவர்களைக் கேட்பீராக.
[68:41] அவர்கள் இணைத் தெய்வங்களை கொண்டிருக் கின்றனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களுடைய இணைத் தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்யட்டும்.
[68:42] அவர்கள் வெளிப்படுத்தப்படுகின்ற அந்த நாள் வரும், மேலும் சிரம்பணிந்து விழுமாறு அவர்கள் கட்டளையிடப்படுவார்கள், ஆனால் அவர் களால் இயலாது.
[68:43] அவர்களுடைய கண்கள் தாழ்ந்தவைகளாக, இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர் கள் முழு நலத்துடனும் மற்றும் ஆற்றலுடனும் இருந்த பொழுது சிரம் பணிந்து விழுமாறு அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
[68:44] ஆகையால், இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கின்றேன்; அவர்கள் ஒருபோதும் உணர்ந்து கொள்ளாத புறத்தில் அவர்களை நாம் செலுத்துவோம்.
[68:45] அவர்களுக்குப் போதுமான அளவு நான் அவகாசம் கொடுப்பேன்; என்னுடைய முன்னேற்பாடுகள் எதிர்க்க இயலாதது.
[68:46] அவர்களிடம் நீர் பணம் கேட்கின்றீரா, எனவே அந்த அபராதத்தினால் அவர்கள் சுமை சுமத்தப்படுகின்றனரா?
[68:47] அவர்கள் எதிர்காலத்தை அறிவார்களா? அதனை அவர்கள் பதிவுசெய்து வைத்திருக் கின்றனரா?
[68:48] உம்முடைய இரட்சகரின் கட்டளைகளைச் செயல்படுத்துவதில் நீர் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும், மீனுக்கு உள்ளே இருந்து அழைத்தவர் (ஜோனா) போல் இருக்காதீர்.
[68:49] அவருடைய இரட்சகரின் அருள் மட்டும் இல்லாதிருந்தால், ஒரு பாவியாகப் பாலை வனத்தில் அவர் தூக்கியெறியப் பட்டிருப்பார்.
[68:50] ஆனால் அவருடைய இரட்சகர் அவருக்கு அருள்பாலித்தார், மேலும் அவரை நன்னெறி யாளராக்கினார்.
[68:51] தூதுச் செய்தியை அவர்கள் செவியேற்கும் பொழுது, நம்ப மறுத்தவர்கள் தங்களுடைய பரிகாசத்தைத் தங்களுடைய கண்களில் காண்பிக்கின்றனர். மேலும் , “அவர் ஒரு புத்தி சுவாதீனமில்லாதவர்” என்று கூறுகின்றனர்.
[68:52] உண்மையில் இது உலகத்திற்கான ஒரு தூதுச் செய்தியேயாகும்.