சூரா 6க்குரிய அடிக்குறிப்புகள்

*6:19 இந்த வசனம் மார்க்க வழிகாட்டுதலுக்கு குர்ஆன் மட்டுமே ஒரே மூல ஆதாரம் என்று பிரகடனப்படுத்துகின்றது. எவர்கள் இதோடு கூடுதலாக (வேதம் வழங்கப்பட்டவர் மீது இட்டுகட்டப்பட்டுள்ள பொய்களான) ஹதீஸ்கள் & சுன்னத்து -கள் போன்றவற்றையும் மூல ஆதாரங்கள் என்று பின்பற்றினால் அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் என்று வரையறுக்கின்றது.

*6:23 இப்போதும் எப்போதும், இணைத்தெய்வ வழிபடு செய்பவர்கள், தாங்கள் இணைத்தெய்வ வழிபடு செய்பவர்கள் என்பதை கடுமையாக மறுப்பார்கள்.

* 6:28 இது ஏனெனில், நாம் நம்முடைய உலக பரிமாணத்திற்குள் நுழைந்தவுடன், ஆன்மாக்களின் உலகத்தில் நம்மால் பார்க்க முடிந்த கடவுள் மற்றும் அவருடைய வானவர்கள், மேலும் சுவனம் மற்றும் நரகம் இவை அனைத்தையும் முற்றிலும் தெரியாதவர்களாக ஆகிவிடுவோம். இவ்விதமாக குற்றவாளிகள் நிலையான அந்தப்பரிமாணத்தைப் பார்த்ததற்குப் பிறகும் கூட அவர்களுடைய நடத்தையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

* 6:38 அசலானபாவத்தைச் செய்து விட்ட பின்னர் வருந்தித்திருந்துவதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பைத் தங்களுக்கு அனுகூலமாக ஆக்கிக் கொண்ட படைப்பினங்களில் பிராணிகளும் இருந்தன. (அறிமுகவுரையைப் பார்க்கவும்)

** 6:38 மறுவுலகில் நம்முடைய நிரந்தரமான வாழ்க்கை சம்பந்தமான எல்லா செய்திகளும் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. கடவுளின் உறுதி மிக்க வாக்கான “ இந்த புத்தகத்தில் நாம் எதையும் விட்டு விடவில்லை” என்பதை உண்மையான நம்பிக்கையாளர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொள்வார்கள். மேற்கூறப்பட்ட இந்த கூற்றின், மற்றும் இது போன்ற மற்ற கூற்றுகளின் முக்கியத்துவமும், இவை ஒவ்வொன்றும் 19 அரபி எழுத்துக்களைக் கொண்டதாக உள்ளது என்ற உண்மையின் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றது. (பின் இணைப்பு 19)

*6:44 குற்றவாளிகள் ஜன்னலுக்கு வெளியே எறியப்படுவதற்கு முன்னதாக, அவர்கள் மேல் தளத்தின் உச்சிக்கு எடுத்து செல்லப்படுகின்றனர்.

*6:60 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை; அவர்கள் நேரடியாக ஆதாமும் அவருடைய மனைவியும் முன்பு வாழ்ந்த அதே சுவனத்திற்குச் சென்று விடுவார்கள். நன்னெறியற்றவர்கள் மரணித்து, மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படும் நாள் வரை நீடித்து இருக்கும் ஒரு தீய கனவை அனுபவிப்பார்கள் (2:154, 3:169, 8:24, 16:32, 22:58, 36:26-27, 40:46, 44 : 56 மேலும் பின் இணைப்பு 17 ஆகியவற்றைப் பார்க்கவும்).

*6:92 இன்றைய மிக முக்கியமான சமூகம் அமெரிக்கா ஆகும். அங்கு கடவுளின் செய்தி திரும்பவும் அதன் தூய்மையான நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது. குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டபோது, மக்காதான் மிக முக்கியமான சமூகமாக இருந்தது.

*6:113 நாம் உண்மையில் மறுவுலக வாழ்வில் நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா, அல்லது வெறும் உதட்டளவில் செயல்படுகின்றோமா என்பதை நமக்குக் கூறும் அளவு கோல்களைக் குர்ஆன் வழங்குகின்றது. இந்த மிக முக்கியமான அளவு கோல்கள் இங்கும், மேலும் 17:45-46 மற்றும் 39:45 ஆகியவற்றிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

*6:113-115 குர் ஆனைத் தவிர வேறு ஆதாரங்களை பின்பற்றுவது குர்ஆனின் மீதுள்ள நம்பிக்கையின்மையை பிரதிபலிப்பதாகும்.பின் இணைப்பு -18.

*6:113-115 குர் ஆனைத் தவிர வேறு ஆதாரங்களை பின்பற்றுவது குர்ஆனின் மீதுள்ள நம்பிக்கையின்மையை பிரதிபலிப்பதாகும்.பின் இணைப்பு -18.

*6:121 கடவுள்- ஐத் தவிர மற்றவர்கள் ஏற்படுத்திய உணவு சம்பந்தமான தடைகள் இணைத்தெய்வ வழிபாட்டின் அடையாளமாகும்.

*6:124 பொறாமையும், அகந்தையும் மனிதனுடைய பண்புகளாகும். அவை கடவுளுடைய தூதர்களைத் தேர்ந்தெடுப்பதில் கடவுளுடைய ஞானத்தை கேள்வி கேட்கும்படி சிலரைத் தூண்டுகின்றது. சீர்கெட்ட முஸ்லிம் அறிஞர்கள் இதே போன்ற கூற்றுக்களைக், கடவுளின் உடன்படிக்கை தூதர் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட குர்ஆனின் கணிதக் குறியீடு பற்றியும் கூறினார்கள்.

*6:125 வானத்தை நோக்கிச் செல்லச் செல்ல, பிராணவாயுவின் விகிதம் குறைந்துக் கொண்டே போகும், மேலும் நாம் சுவாசிக்கக் கஷ்டப்படுவோம் என்பதை, குர்ஆன் வெளியாகி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் நாம் அறிந்து கொண்டோம்.

*6:137 விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்டதற்காக, 1978ல் சவூதி அரேபிய இளவரசி சிரச்சேதம் செய்யப்பட்ட, உலகளவில் வெறுக்கத்தக்க அந்த சம்பவம் ஒரு மிகச் சரியான எடுத்துக்காட்டாகும். கடவுள்-ன் சட்டம் விபச்சாரத்திற்கான தண்டனையாக சவுக்கடியையே நிர்ணயம் செய்கின்றது, சிரச்சேதம் செய்வதை அல்ல. (24 :1-2 ) அதே சமயம் இணைத்தெய்வங்களை வழிபடுவோரின் சட்டங்களோ சிரச்தேசம் செய்வதைக் கட்டாயமாக்குகின்றது. 42:21ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ள படி, பாரம்பர்யத்தைப் பின்பற்றுபவர்கள் கடவுள்-ஆல் அங்கீகரிக்கப்படாத ஒரு மார்க்கத்தையே பின்பற்றுகின்றனர்.

*6:141 ஜகாத் தர்மம் மிக முக்கியமானது, எந்த அளவிற்கெனில், மிக்க கருணையாளர், அதனைக் கொடுப்பவர்களுக்கென்று தன் கருணையை வரையறுத்துள்ளார் (7:156). ஆயினும், சீர் கெட்டுப்போன முஸ்லிம்கள் இந்த மிக முக்கியமான கட்டளையைத் தவற விட்டு விட்டனர்; அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஜகாத்தைக் கொடுக்கின்றனர். “நாம் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நாள்” அன்றே ஜகாத் கொடுக்கப்பட்டு விட வேண்டும் என்பதை நாம் இங்கே காண்கின்றோம்.ஆப்ரஹாம் மூலம் நமக்கு வந்துள்ள விகிதம், நமது நிகர வருமானத்தில் 2.5ரூ ஆகும். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட

*6:145-146 நான்கு வகையான பிராணிகளின் பலன்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது : தானாகச் செத்த பிராணிகள், ஓடுகின்ற இரத்தம், (இறைச்சியோடு ஒட்டிக் கொண்டிருப்பது அல்ல) பன்றிகளின் இறைச்சி, அவற்றைப் படைத்தவருக்கு அல்லாமல் மற்றவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகள். இத்தகைய தடைகள் மிகவும் திட்டவட்டமானது என்பதை வசனம் 146 நமக்கு தெரிவிக்கின்றது. கடவுள் நாடியிருந்தால் “இறைச்சியையோ” அல்லது “கொழுப்பையோ” அல்லது “இவ்விரண்டையுமோ” தடை செய்திருப்பார்.

*6:149 குர்ஆனுடைய கணிதக் குறியீடு, இது உலகத்திற்கு கடவுளுடைய செய்தியாகும் என்பதற்கு தெளிவாகப் புரியக் கூடிய, முற்றிலும் மறுக்கவே முடியாத சான்றாக உள்ளது. இந்த அசாதாரணமான அற்புத நிகழ்வை வியந்து பாராட்டி பின்னர் சிரம் பணிந்து விழுந்து மேலும் வெற்றிகொள்ளக் கூடிய இந்த அற்புதத்தை ஏற்றுக் கொள்வதை விட்டும் எந்தவாசகரையும் தடுக்க, ஒரு தெய்வீகத்தடையால் மட்டுமே இயலும் (17:45-46, 18:57, 56:79 மற்றும் பின் இணைப்பு ஒன்றைப் பார்க்கவும்).

* 6:157 இவ்வசனத்தின் எண் (157) மற்றும் இக்குறியீட்டை வெளிப்படுத்திய ரஷாத் கலீஃபாவின் எழுத்தெண் மதிப்பு (1230) ஆகியவற்றின் கூட்டுத்தொகை 1387 அல்லது (19 X73) என கிடைக்கப்பெறும் இந்த உண்மையின் மூலம் குர் ஆனின் கணிதக் குறியீட்டின் பங்கு நமக்குத் தெளிவாகின்றது.

* 6:158 நம்பிக்கை கொண்ட பின்னர், ஆன்மா, கடவுளால் விதிக்கப்பட்ட வழிபாட்டு அனுஷ்டானங்களின் மூலம் தன்னை வளர்த்து விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.