சூரா 7: ஆன்மா தூய்மையடையும் இடம் (அல்-அஃராஃப்)
[7:0]கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[7:1]அ.ல.ம.ஸ.*
அடிகுறிப்பு

[7:2]இவ்வேதம் உமக்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளது- உம்முடைய இதயத்தில் இது பற்றிய சந்தேகத்திற்கு நீர் இடமளிக்க வேண்டாம் - இதனைக் கொண்டு நீர் எச்சரிக்கை செய்யும் பொருட்டும், மேலும் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு நினைவூட்டல் வழங்கும் பொருட்டும்.
[7:3]உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதையே நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்; அவருடன் எந்த இணைத் தெய்வங்களையும் பின்பற்ற வேண்டாம். அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
[7:4]பல சமூகத்தை நாம் அழித்தோம், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்திலோ அல்லது முற்றிலும் விழித்திருந்த நேரத்திலோ, அவர்கள் நம்முடைய தண்டனைக்கு உள்ளானார்கள்.
[7:5]நம்முடைய தண்டனை அவர்களிடம் வந்தபோது அவர்களின் கூற்றெல்லாம், “உண்மையில், நாங்கள் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்” என்பதாகத்தான் இருந்தது.
[7:6]தூதுச் செய்தியைப் பெற்றவர்களை நாம் நிச்சயம் விசாரிப்போம், மேலும் தூதர்களையும் நாம் விசாரிப்போம்.
[7:7]நாம் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்போம், ஏனெனில் நாம் ஒரு போதும் கவனமில்லாமல் இருக்கவில்லை.
[7:8]அந்நாளில் தராசுகள் நீதத்துடன் நிறுவப்படும். எவர்களுடைய எடைகள் கனமாக உள்ளதோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள்.
[7:9]எவர்களுடைய எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் நீதமில்லாமல் நம்முடைய வெளிப்பாடுகளை புறக்கணித்த தன் விளைவாக, தங்கள்*ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.
அடிகுறிப்பு

[7:10]உங்களை நாம் பூமியின் மீது நிலைப்படுத்தி யுள்ளோம், மேலும் அதில் உங்கள் வாழ்விற்கு ஆதாரமான சாதனங்களை நாம் வழங்கியுள் ளோம். அரிதாகவே நீங்கள் நன்றி செலுத்து கின்றீர்கள்.
[7:11]நாமே உங்களைப் படைத்தோம், பின்பு உங்களு க்கு உருக்கொடுத்தோம், பின்னர் வானவர் களிடம், “ ஆதாமின் முன்பு சிரம் பணியுங்கள்” என்று கூறினோம். அவர்கள் சிரம்பணிந்து விழுந்தனர், இப்லீசை(சாத்தானை) தவிர; அவன் சிரம் பணிந்தவர்களில் இருக்கவில்லை.

சோதனை துவங்குகின்றது

[7:12]அவர், “ நான் உனக்கு கட்டளையிட்டபோது சிரம்பணிவதிலிருந்து உன்னைத்தடுத்தது எது?” என்று கூறினார். அவன், “ நான் அவரை விடச் சிறப்பானவன், நீர் என்னை நெருப்பி லிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களி மண்ணிலிருந்து படைத்தீர்” என்று கூறினான்.
[7:13]அவர், “ஆகையால், நீ கீழே இறங்கியாக வேண்டும், ஏனெனில் நீ இங்கு ஆணவம் கொள்வதற்கில்லை, வெளியேறு; நீ இழிவு படுத்தப்பட்டு விட்டாய்” என்று கூறினார்.
[7:14]அவன், “ மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு ஓர் அவகாசம் அளிப்பீராக” என்று கூறினான்.
[7:15]அவர், “உனக்கு ஓர் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது” என்று கூறினார்.
[7:16]அவன் கூறினான், “நான் வழிதவற வேண்டும்* என்று நீர் நாடி விட்டதால், உம்முடைய நேரான பாதையின் மீது நான் அவர்களுக்காக மறைவாக இருந்து நகர்ந்து செல்வேன்.
அடிகுறிப்பு

[7:17]“நான் அவர்களுக்கு முன்னிருந்தும், அவர் களுக்குப் பின்னிருந்தும், அவர்களின் வலப் பக்கமிருந்தும், அவர்களின் இடப்பக்க மிருந்தும் அவர்களிடம் வருவேன், மேலும் அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத் தாதவர்களாகவே நீர் காண்பீர்”.
[7:18]அவர் கூறினார், “இகழப்பட்டவனாகவும், தோற்கடிக்கப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறு. அவர்களில் உன்னைப் பின்பற்று வோரையும், உங்கள் அனைவரையும் கொண்டு நரகினை நான் நிரப்புவேன்.
[7:19]“ஆதாமே, நீர் சுவனத்தில் உம்முடைய மனைவியுடன் வசித்திரும், மேலும் நீர் விரும்பிய வண்ணம் அதிலிருந்து உண்டு கொள்ளும், ஆனால் நீர் பாவத்தில் விழுந்து விடாதிருக்கும் பொருட்டு, இந்த ஒரு மரத்தை மட்டும் நெருங்காதீர்”.
[7:20]சாத்தான், அவர்களுடைய கண்களுக்குத் தெரியாமல் இருந்த அவர்களுடைய உடம்பு களை வெளிப்படுத்துவதற்காக, அவர்களிடம் கிசுகிசுத்தான். அவன் , “நீங்கள் வானவர் களாக ஆகிவிடுவதையும் மேலும் நிலைப் பேறான வாழ்வை அடைந்துவிடுவதையும் தடுப்பதற்காகவே தவிர உங்கள் இரட்சகர் இந்த மரத்தை விட்டும் உங்களைத் தடை செய்யவில்லை” என்று கூறினான்.
[7:21]அவன் அவர்களிடத்தில் “நான் உங்களுக்கு நல்ல உபதேசம் தான் செய்கின்றேன்” என்று சத்தியம் செய்தான்.
[7:22]இவ்வாறு அவன் பொய்களைக் கொண்டு அவர்களை ஏமாற்றினான். அவர்கள் மரத்தைச் சுவைத்த உடன் அவர்களின் உடம்புகள் அவர் களுக்குத் தெரிய ஆரம்பித்தன, மேலும், அவர் கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள முயற்சித்தனர். அவர்களுடைய இரட்சகர் அவர்களை அழைத்தார்; “நான் அம்மரத்திலிருந்து உங்களைத் தடுத்துக் கட்டளையிட்டும், மேலும் சாத்தான் உங்களுடைய தீவிரமான எதிரி என்றும் உங்களை எச்சரிக்கை செய்யவில்லையா?”
[7:23]அவர்கள் “எங்கள் இரட்சகரே, எங்கள் ஆன் மாக்களுக்கு நாங்கள் தீங்கு இழைத்துக் கொண்டோம், அன்றியும் நீர் எங்களை மன்னித்து, எங்கள் மீது கருணை புரியவில்லை யெனில்,நாங்கள் நஷ்டவாளிகளாகி விடு வோம்” என்று கூறினார்கள்.
[7:24]அவர், “ ஒருவருக்கொருவர் பகைவர்களாக கீழிறங்குங்கள், பூமியில் சிறிது காலம் உங்களுடைய வசிப்பிடமும், வாழ்வாதாரமும் இருக்கும்” என்று கூறினார்.
[7:25]அவர், “அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள், அதிலேயே நீங்கள் மரணிப்பீர்கள், மேலும் அதிலிருந்தே நீங்கள் வெளியே கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறினார்.
[7:26]“ஆதாமின் சந்ததியினரே, உங்களுடைய உடம் புகளை மூடுவதற்காகவும், வசதிக்காகவும் நாம் ஆடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம். ஆனால் ஆடைகளில் சிறந்தது நன்னெறியின் ஆடையே ஆகும். அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இவை கடவுள்-ன் சில அத்தாட்சி களாகும்.
[7:27]ஆதாமின் சந்ததியினரே, சுவனத்திலிருந்து உங்கள் பெற்றோர் வெளியேறுவதற்கும், மேலும் அவர்களின் உடம்புகளை வெளிப்படுத்துவதற்காக அவர்களுடைய ஆடைகளை நீக்குவதற்கும் சாத்தான் காரணமாக இருந்தபோது அவன் செய்ததைப் போல் உங்களை ஏமாற்றும்படி அவனை விட்டுவிடாதீர்கள். அவர்களை நீங்கள் பார்க்காத அதே சமயம், அவனும், அவனது வம்சத்தாரும் உங்களைப் பார்க்கின்றனர். நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர்களுக்குத் தோழர்களாக சாத்தான்களை நாம் நியமிக்கின்றோம்.

தலைமுறை தலைமுறையாக வரும் எல்லாத் தகவல்களையும் பரிசீலியுங்கள்

[7:28]அவர்கள் ஒரு பெரும்பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர், “ இதனை நாங்கள் எங்களுடைய பெற்றோர் செய்யக்கண்டோம், மேலும் இதனைச் செய்யுமாறு கடவுள் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்,” என்று கூறுகின்றனர். “கடவுள் ஒருபோதும் பாவத்தை ஆதரிக்கமாட்டார். கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாததை நீங்கள் கூறுகின்றீர் களா?” என்று கூறுவீராக.
[7:29]“என் இரட்சகர் நீதத்தையும், மேலும் ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்திலும் அவருக்கு மட்டும் அர்ப்பணித்தவர்களாக நிற்பதையுமே ஆதரிக் கின்றார். நீங்கள் உங்களுடைய வழிபாட்டைப் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும். உங்களை அவர் துவக்கிய வண்ணமே, நீங்கள் இறுதியில் அவரிடம் திரும்பிச் செல்வீர்கள்” என்று கூறுவீராக.

எச்சரிக்கை: தாங்கள் வழிநடத்தப் பட்டதாகவே அவர்கள் நம்புகின்றனர்

[7:30]சிலரை அவர் வழிநடத்தினார்,அதேசமயம் மற்றவர்கள் வழிதவறும்படி விட்டுவிடப்படு கின்றனர். அவர்கள் கடவுள்-க்கு பதிலாக, சாத்தான்களைத் தங்கள் எஜமானர்களாக எடுத்துக் கொண்டனர், இருப்பினும் தாங்கள் வழிநடத்தப்பட்டதாகவே அவர்கள் நம்புகின்றனர்.

மஸ்ஜிதிற்குச் செல்ல நன்றாக உடையணியுங்கள்

[7:31]ஆதாமின் சந்ததியினரே, நீங்கள் மஸ்ஜிதிற்குச் செல்லும்போது தூய்மையாகவும், மேலும் நன்றாக உடையணிந்தும் இருக்க வேண்டும். மேலும் அளவோடு உண்ணுங்கள் மற்றும் பருகுங்கள்; கண்டிப்பாக, அவர் பெருந்தீனிக்காரர்களை நேசிப்பதில்லை.

புதிதாக கண்டுபிடித்த தடைகள் கண்டனம் செய்யப்படுகின்றன

[7:32]“கடவுள் தன் படைப்பினங்களுக்காகப் படைத்திருக்கின்ற நல்ல பொருட்களையும், நல்ல ஆகாரங்களையும் தடைசெய்வது யார்?” என்று கூறுவீராக. “அத்தகைய வாழ்வாதாரங்கள், நம்பிக்கை கொண்டவர்களால் இவ்வுலகில் அனுபவிக்கப்படுவதற்காக உள்ளவை. இன் னும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் அந்த நல்ல வாழ்வாதாரங்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கென்றே உரியவை களாக இருக்கும்” என்று கூறுவீராக. இவ்வாறு நாம் அறிந்து கொள்ளும் மக்களுக்கு வெளிப்பாடுகளை விவரிக்கின்றோம்.
[7:33]“என்னுடைய இரட்சகர், தீயகாரியங்களை, அவை வெளிப்படையானதானாலும் சரி, மறைவானதானாலும் சரி, மேலும் பாவங்களை, மேலும் நியாயப்படுத்த முடியாத வலுச்சண்டை களை, மேலும் கடவுள்-உடன் சக்தியற்ற இணைத்தெய்வங்களை ஏற்படுத்திக்கொள் வதை, மேலும் கடவுள் பற்றி நீங்கள் அறியாத தைக் கூறுவதை, மட்டுமே தடை செய்கின்றார்” என்று கூறுவீராக.
[7:34]ஒவ்வொரு சமூகத்திற்கும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக் காலம் உண்டு. அவர்களுடைய இக்காலத்தவணை முடிவிற்கு வந்துவிட்டால், அவர்கள் அதனை ஒரு மணி நேரமேனும் தாமதப்படுத்தவோ, அல்லது அதனை முற்படுத்தவோ இயலாது.

உங்களில் இருந்தே தூதர்கள்

[7:35]ஆதாமின் சந்ததியினரே, உங்களில் இருந்தே உங்களிடம் தூதர்கள் வந்து, மேலும் என் வெளிப்பாடுகளை உங்களிடம் ஓதிக்காட்டும் போது, எவர்கள் கவனத்தில் கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றார் களோ, அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[7:36]நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்து, மேலும் அவற்றைப் பின்பற்றுவதை விட்டு மிகவும் ஆணவம் கொள்பவர்களை பொறுத்த வரை, அவர்கள் நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[7:37]கடவுள்-ஐப் பற்றி பொய்களைக் கண்டுபிடிப் பவர்கள் அல்லது அவருடைய வெளிப்பாடு களை ஏற்கமறுப்பவர்களை விடத் தீயவர்கள் வேறுயார்? இவர்கள் வேதத்திற்கு இணங்க அவர்களின் பங்கைப் பெறுவார்கள், பின்னர் அவர்களது வாழ்வுகளை முடிக்க நம்முடைய தூதர்கள் வரும்பொழுது, அவர்கள் “கடவுள்-உடன் நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கூறுவார்கள். அவர்கள், “அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள்,” என்று கூறுவார்கள். அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருந்தனர் என்று அவர்களுக்கெதிராகவே அவர்கள் சாட்சியம் அளிப்பார்கள்.

பரஸ்பரம் பழிபோடுதல்

[7:38]அவர், “ஜின்கள் மற்றும் மனிதர்களின் முந்தைய சமூகத்தினர்களோடு நரகிற்குள் நுழையுங்கள்” என்று கூறுவார். ஒவ்வொரு முறையும் ஒரு கூட்டம் நுழையும் போது, அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் கூட்டத்தைச் சபிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதனுள்வந்தவுடன், கடைசியில் வந்தவர்கள் முன்னர் வந்திருப்பவர்களைப் பற்றி , “ எங்கள் இரட்சகரே, இவர்கள் தான் எங்களை வழிதவறச் செய்தவர்கள், அவர்களுக்கு நரகின் வேதனையை இருமடங்காக்கு வீராக,” என்று கூறுவார்கள். அவர், “ஒவ்வொருவரும் இருமடங்கையே பெறுகீன்றீர்கள், ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று கூறுவார்.
[7:39]முன்னோர்களின் கூட்டம், பின்வந்த கூட்டத் திடம் , “ எங்களுக்கும் மேலாக ஒரு அனுகூலத் தை நீங்கள் பெற்றிருந்ததால், உங்களுடைய சொந்த பாவங்களுக்காகத் தண்டனையை சுவையுங்கள்” என்று கூறும்.

கடவுளின் வெளிப்பாடுகளை நிராகரித்தல் ஒரு மன்னிக்கப்படமுடியாத குற்றம்

[7:40]நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்து மேலும் அவற்றை ஆதரிப்பதை விட்டும் மிக ஆணவம் கொண்டவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப் படமாட்டாது, அன்றியும் ஊசியின் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவனத்தினுள் நுழைய முடியாது. நாம் குற்றவாளிகளை இவ்வாறே பழி தீர்க்கின்றோம்.
[7:41]அவர்கள் நரகத்தை ஒரு தங்குமிடமாக்கிக் கொண்டார்கள்; தங்களுக்கு மேலாக தடுப்புச் சுவர்களைக் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். நாம் வரம்புமீறியவர்களை இவ்வாறே பழி தீர்க்கின்றோம்.
[7:42]நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை -நாம் எந்த ஆன்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சுமத்துவதில்லை-இத்தகையவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.

கடவுளின் கிருபையால்

[7:43]நாம் அவர்களின் உள்ளங்களில் இருந்து எல்லா பொறாமைகளையும் நீக்கிவிடுவோம். அவர் களுக்குக் கீழே ஆறுகள் ஓடும், மேலும் அவர்கள், “ நம்மை நேர்வழி நடத்தியதற்காகக் கடவுள்-க்கே புகழ் அனைத்தும். கடவுள் நம்மை வழி நடத்தியிருக்காவிடில், நாம் வழிகாட்டலை அடைந்திருக்கும் சாத்தியமே யில்லை. நம் இரட்சகரின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்” என்று கூறுவார்கள். அவர்களிடம்: “இதுவே உங்களுடைய சுவனம். உங்கள் காரியங்களின் பிரதிபலனாக, இதற்கு நீங்கள் வாரிசாகி விட்டீர்கள்” என்று கூறப்படும்.
[7:44]சுவனவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள்: “எங்கள் இரட்சகரின் வாக்குறுதி சத்தியம் என்பதை நாங்கள் கண்டு கொண்டோம், உங்கள் இரட்சகரின் வாக்குறுதி சத்தியம் தான் என்பதை நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அவர்கள், “ஆம்” என்று கூறுவார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பார்: கடவுள்-ன் தண்டித்தலானது வரம்பு மீறியவர்கள் மேல் விழுந்துவிட்டது;
[7:45]“அவர்கள் கடவுள்-ன் பாதையிலிருந்து விரட்டுபவர்கள்; மேலும் அதனைக் கோண லாக்க பாடுபடுபவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள்.”
[7:46]ஒரு தடுப்பு அவர்களைப்பிரித்து இருக்கும், அதே சமயம் ஆன்மா தூய்மையடையும் இடமானது* ஒவ்வொரு தரப்பையும் அவர்கள் தோற்றங்களைக் கொண்டே அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய மக்களால் ஆக்கிர மிக்கப்பட்டிருக்கும். அவர்கள் சுவனவாசிகளை, “உங்கள் மீது அமைதி நிலவட்டும்” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள் நினைத்துள்ளது உண்மையாகிவிடாதா என்ற எண்ணத்திற் கிடையில் (சுவனத்தில்) நுழைந்து விடவில்லை.
அடிகுறிப்பு

[7:47]நரகவாசிகளை நோக்கி தங்கள் கண்களை அவர்கள் திருப்பும் போது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, இந்தத் தீய மக்களோடு எங்களைப் போட்டுவிடாதீர்” என்று கூறுவார்கள்.

பெரும்பான்மைக்கு அழிவு

[7:48]அவர்களின் தோற்றங்களை வைத்து அடையாளம் காணப்பட்ட மக்களை அழைத்து ஆன்மா தூய்மையடையும் இடத்தில் வசிப்ப வர்கள் கூறுவார்கள். “உங்களின் பெரும் எண்ணிக்கைகளோ அன்றி உங்கள் ஆணவமோ உங்களுக்கு எந்த வழியிலும் பலனளிக்கவில்லை.
[7:49]“அவர்களைக் கடவுள் ஒரு போதும் கருணை யால் தொடமாட்டார் என்று நீங்கள் சத்தியம் செய்த மக்கள் இவர்கள் தானா?” “சுவனத்தில் நுழையுங்கள்; நீங்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றியும் நீங்கள் கவலையுறவும் மாட்டீர்கள்,” (என்று ஆன்மா தூய்மையடையும் இடத்தில் இருக்கும் மக்களிடம் பின்னர் கூறப்படும்).
[7:50]சுவனவாசிகளை நோக்கி நரகவாசிகள்: “உங்கள் தண்ணீரிலிருந்து கொஞ்சம் அல்லது கடவுள் உங்களுக்கு அளித்த வாழ்வாதாரங்களில் இருந்து கொஞ்சம் எங்களை நோக்கித் திருப்பி விடுங்கள்” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள், “அவற்றை கடவுள் நம்ப மறுப்பவர் களுக்கு தடை செய்துவிட்டார்” என்று கூறுவார்கள்.
[7:51]தங்கள் மார்க்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாதவர்கள், மேலும் இந்த உலக வாழ்க்கையோடு முழுமையாக மூழ்கி விட்டவர் கள், இவர்களை நாம் அந்தநாளில், அந்த நாளை மறந்துவிட்ட காரணத்திற்காகவும், மேலும் அவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளை அலட்சியம் செய்த காரணத்திற்காகவும் மறந்து விடுவோம்.

குர்ஆன்: முற்றிலும் விவரிக்கப்பட்டது

[7:52]நாம் முற்றிலும் விவரிக்கப்பட்டதும், அறிவும், வழிகாட்டலும் கொண்டதும்,மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு கருணையுமானதொரு வேதத்தை அவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம்.
[7:53]அனைத்து (முன்னறிவிப்புகளும்) நிறைவேற்றப் படும் வரை அவர்கள் காத்திருக்கின்றனரா? அவ்வாறு நிறைவேறும் அந்நாளில் அதற்கு முன் இதனை அலட்சியப்படுத்தியவர்கள் “நம் இரட் சகரின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தனர். எங்கள் சார்பாகப் பரிந்துரை செய் வதற்குப் பரிந்துரைப்போர் எவரேனும் உள்ள னரா? எங்கள் நடத்தையை நாங்கள் மாற்றிக் கொண்டு நாங்கள் செய்து கொண்டிருந்ததை விடச்சிறந்த காரியங்களைச் செய்யும் பொருட்டு எங்களை நீங்கள் திரும்ப அனுப்பு வீர்களா? ” என்று கூறுவார்கள். அவர்கள் தங்கள் ஆன்மாக்களை இழந்து விட்டனர், மேலும் அவர்களுடைய சொந்தக் கண்டு பிடிப்புக்களே அவர்களுடைய அழிவிற்குக் காரணமாகிவிட்டன.
[7:54]உங்கள் இரட்சகர்தான் ஒரே கடவுள்: அவர் வானங்கள் மற்றும் பூமியை ஆறு* நாட்களில் படைத்து, பின்னர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக்கொண்டார். பகலை விடாமல் பின் தொடர்ந்தவாறே இரவு அதனை முந்து கின்றது, மேலும் சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவை அவருடைய கட்டளைக் கேற்பப் பணியாற்றும்படிச் செய்யப் பட்டன. நிச்சயமாக, அவர் அனைத்துப் படைப்பு களையும், மேலும் அனைத்துக் கட்டளை களையும் கட்டுப்படுத்துகின்றார். பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள் மிகவும் உயர்ந்தவராக இருக்கின்றார்.
அடிகுறிப்பு

[7:55]நீங்கள் உங்கள் இரட்சகரை பகிரங்கமாகவும், அந்தரங்கமாகவும் வழிபட வேண்டும்; வரம்பு மீறுபவர்களை அவர் நேசிப்பதில்லை.
[7:56]பூமி சீர்செய்யப்பட்ட பின்னர் அதனை சீர்குலைக்காதீர்கள், மேலும் பயபக்தியுடனும், மற்றும் நம்பிக்கையுடனும் அவரை வழிபடுங்கள், நிச்சயமாக, கடவுள்-ன் கருணை நன்னெறியாளர் களால் அடையப்படக்கூடியதாக இருக்கின்றது.
[7:57]அவர்தான் தன் கரங்களில் இருந்து ஓர் அருளாக நற்சகுணத்துடன் காற்றை அனுப்புகின்றவர். அவை கனத்த மேகங்களை ஒன்று சேர்த்தவுடன், நாம் அவற்றை இறந்து போன நிலங்களை நோக்கி செலுத்துகின்றோம், மேலும் தண்ணீரைக் கொண்டு அனைத்துக் கனிவர்க்கங்களையும் விளைவிப்பதற்காக அதிலிருந்து அதனைக் கீழே அனுப்புகின்றோம், . நீங்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, இவ்விதமாக இறந்தவற்றை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றோம்.
[7:58]நல்ல நிலம் தன் இரட்சகரின் அனுமதிப்படி தன் தாவரங்களை விருப்பத்துடன் முளைப்பிக் கின்றது, அதே சமயம் கெட்ட நிலம் பயன்தரக் கூடிய எதையும் மிகக் குறைவாகவே முளைப் பிக்கின்றது. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்விதமாக நாம் வெளிப்பாடுகளை விளக்கு கின்றோம்.

நோவா

[7:59]நாம் நோவாவை அவர் சமூகத்தாரிடம் அனுப்பினோம், அவர், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை, அச்ச மூட்டும் ஒரு நாளின் தண்டனையை உங்களுக் காக நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார்.
[7:60]அவருடைய சமூகத்தாரில் உள்ள தலைவர்கள், “நீர் வழிகேட்டில் வெகு தூரத்தில் இருப் பதையே நாங்கள் காண்கின்றோம்” என்று கூறினார்கள்.
[7:61]அவர் கூறினார், “என் சமூகத்தாரே, நான் வழிதவறியவன் அல்ல; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதர் ஆவேன்.
[7:62]“என் இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு அறிவுரை கூறுகின்றேன், மேலும் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்- இடமிருந்து நான் அறிகின்றேன்.
[7:63]“நீங்கள் கருணையை அடையும் பொருட்டு உங்களை எச்சரிக்கவும் மேலும் உங்களை நன்னெறியின் பால் வழி நடத்தவும், உங்களைப் போன்ற ஒரு மனிதரின் மூலம், உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு நினைவூட்டல் வருவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளதா?”
[7:64]அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் மூடப்பட்ட படகில் காப்பாற்றினோம், மேலும் நம் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர்களை மூழ்கடித்தோம்; அவர்கள் குருடர்களாக இருந்தனர்.

ஹூத்

[7:65]ஆதுகளிடம் அவருடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் , “ என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. இனி யேனும் நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப் பீர்களா?” என்று கூறினார்.
[7:66]அவருடைய சமூகத்தாரில் உள்ள நம்ப மறுத்த தலைவர்கள், “நீர் மூடத்தனமாக நடந்து கொள்வதையே நாங்கள் காண்கின்றோம், மேலும் நீர் ஒரு பொய்யர் என்றே நாங்கள் எண்ணுகின்றோம்” என்று கூறினார்கள்.
[7:67]அவர் கூறினார், “என் சமூகத்தாரே, என்னிடத்தில் எந்த மூடத்தனமும் இல்லை; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதர் ஆவேன்.
[7:68]“என் இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு நேர்மையாக அறிவுரை கூறுகின்றேன்.
[7:69]“உங்களை எச்சரிப்பதற்காக, உங்களைப் போன்ற ஒரு மனிதர் மூலமாக உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளதா? அவர் நோவாவின் சமூகத்தாருக்குப் பிறகு உங்களை வாரிசுகளாக்கியதையும் உங்களை எண்ணிக்கையில் பெருக்கியதையும் நினைவு கூருங்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு, கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள்.”

பெற்றோர்களைக் கண்மூடிப்பின்பற்றுதல்: ஒரு மானிடசோகம்

[7:70]அவர்கள், “ எங்களைக் கடவுள்-ஐ மட்டும் வழிபடும்படிச் செய்யவும், மேலும் எங்கள் பெற்றோர்கள் வழிபட்டவற்றைக் கைவிடும்படிச் செய்யவும்தான் நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எங்களை அச்சுறுத்தும் அந்த அழிவைக் கொண்டு வரும்படி நாங்கள் உம்மிடம் சவால் விடுகின் றோம்” என்று கூறினார்கள்.
[7:71]அவர், “நீங்கள் உங்கள் இரட்சகரின் தண்டனைக்கும், கடுங்கோபத்திற்கும் உள் ளாகிவிட்டீர்கள். கடவுள்-ஆல் ஒரு போதும் அங்கீகரிக்கப்படாத-நீங்களும் உங்கள் பெற்றோர்களும்-இட்டுக் கட்டிய கண்டு பிடிப்புகளுக்குஆதரவாக நீங்கள் என்னிடம் வாதாடுகின்றீர்களா? ஆகையால், காத்திருங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து காத்திருக்கின்றேன்” என்று கூறினார்.
[7:72]பின்னர் நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளால் காத்துக் கொண்டோம், மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை புறக்கணித்து நம்பிக்கை யாளர்களாக இருக்க மறுத்தவர்களை அழித்தோம்.

ஸாலிஹ்

[7:73]தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது: உங்களுக்கு ஓர் அடையாளமாகப் பணியாற்றுவதற்காக, இதோ கடவுள்-ன் ஒட்டகம். கடவுள்-ன் நிலத்திலிருந்து அது உண்ணட்டும், மேலும் ஒரு வலி மிகுந்த தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விடாமல் இருக்கும் பொருட்டு, எந்த தீங்கையும் கொண்டு நீங்கள் அதனைத் தீண்டாதீர்கள்.
[7:74]“அவர் ஆதுகளுக்குப் பின்னர் உங்களை வாரிசுகளாக்கியதையும், பள்ளத்தாக்குகளில் மாளிகைகள் கட்டியும், மேலும் அதன் மலை களில் வீடுகளைக் குடைந்தும் உங்களைப் பூமியில் நிலைப்படுத்தியதையும் நினைவு கூருங்கள். கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் சீர்கெடுப்பவர்களாக பூமியில் சுற்றித்திரியா தீர்கள்.”

செய்தி: தூதுத்துவத்தின் சான்று

[7:75]நம்பிக்கைக் கொண்ட பொதுமக்களிடம், அவருடைய சமூகத்தாரில் இருந்த ஆணவம் கொண்ட தலைவர்கள், “ஸாலிஹ் அவருடைய இரட்சகரால் அனுப்பப்பட்டவர்தான் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?” என்று கூறினர். அவர்கள், “அவர் எங்களுக்குக் கொண்டு வந்த செய்திதான் எங்களை நம்பிக்கையாளர்களாக ஆக்கியது” என்று கூறினார்கள்.
[7:76]ஆணவம் கொண்டவர்கள், “எதன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அதனை நாங்கள் நம்ப மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.
[7:77]அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொலை செய்துவிட்டனர், அவர் களுடைய இரட்சகரின் கட்டளைக்கெதிராகக் கலகம் செய்தனர், மேலும் “ஸாலிஹே, நீர் உண்மையில் ஒரு தூதராக இருந்தால், எந்த அழிவைக் கொண்டு நீர் எங்களை அச்சுறுத்து கின்றீரோ அதனைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.
[7:78]அதன் விளைவாக, அதிர்வு அவர்களை அழித்தது, அவர்களுடைய வீடுகளில் அவர்களை இறந்தவர் களாக விட்டுவிட்டது.
[7:79]அவர், “என் சமூகத்தாரே, நான் என் இரட்சகரின் செய்தியை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், மேலும் உங்களுக்கு உபதேசமும் செய்தேன், ஆனால் உபதேசிப்பவர் எவரையும் நீங்கள் விரும்ப வில்லை,” என்று கூறியவராக, அவர்களிடம் இருந்து திரும்பிச் சென்று விட்டார்.

லோத்: ஓரினப்புணர்ச்சி கடுமையான தண்டனைக்குரியது

[7:80]லோத் தன் சமூகத்தாரிடம் கூறினார், “எத்தகைய தோர் அருவருக்கத்தக்க செயலை நீங்கள் செய்கின்றீர்கள்; இவ்வுலகில் இதற்கு முன்னர் எவர் ஒருவரும் இதனைச் செய்ததில்லையே!
[7:81]“நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண் களுடன் உடலுறவு கொள்கின்றீர்கள். உண்மை யில், நீங்கள் ஒரு வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்.”
[7:82]அவருடைய சமூகத்தார், “அவர்களை உங்களுடைய நகரத்தை விட்டும் வெளியேற்றி விடுங்கள், அவர்கள் தூய்மையாக இருக்க விரும்பும் மக்களாக உள்ளனர்,” என்று கூறியவர் களாக பதிலளித்தனர்.
[7:83]அதன் விளைவாக, நாம் அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றினோம், ஆனால் அவருடைய மனைவியை அல்ல; அவள் அழிந்து போனவர்களுடன் இருந்தாள்.
[7:84]ஒரு குறிப்பிட்ட பொழிவைக் கொண்டு நாம் அவர்கள் மீது பொழிந்தோம்; குற்றவாளிகளுக் குரிய விளைவுகளை கவனியுங்கள்.

ஷுஐப் : ஏமாற்றுதலும், நேர்மையின்மையும் கண்டனம் செய்யப்படுகின்றது

[7:85]மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு சான்று வந்துள்ளது. நீங்கள் வணிகம் செய்யும் போது முழு எடையையும் முழு அளவையும் கொடுக்கவேண்டும். மனிதர்களின் உரிமைகளை அவர்களிடமிருந்து ஏமாற்றி பறித்து விடாதீர்கள். பூமி சீர்செய்யப்பட்ட பின்னர் அதனைச் சீர்குலைக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர் களாக இருந்தால், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
[7:86]“நம்பிக்கைக் கொண்டோரைக் கடவுள்-ன் பாதையில் இருந்து விரட்டியடிக்க நாடி ஒவ்வொரு பாதையையும் தடுத்துக் கொள்வதில் இருந்தும் விலகிக் கொள்ளுங்கள், மேலும் அதனைக் கோணலாக்காதீர்கள். நீங்கள் சொற்பமானவர் களாக இருந்தீர்கள் என்பதையும் மேலும் அவர் உங்களை எண்ணிக்கையில் பெருக்கியதையும் நினைவில் கொள்ளுங்கள். தீயவர்களுக்குரிய விளைவுகளை நீங்கள் நினைவு கூருங்கள்.
[7:87]“இப்போது உங்களில் சிலர் நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதில் நம்பிக்கை கொண்டீர்கள், சிலர் நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டீர்கள், நமக்கிடையில் கடவுள் தன் தீர்ப்பை வழங்கும் வரை காத்திருங்கள்; அவரே மிகச் சிறந்த நீதிபதி.”
[7:88]அவருடைய சமூகத்தாரில் இருந்த ஆணவம் மிக்க தலைவர்கள், “ஷுஐபே, நீர் எங்கள் மார்க்கத் திற்குத் திரும்பாவிட்டால், எங்களுடைய நகரத்தி லிருந்து உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண் டோரையும் நாங்கள் வெளியேற்றி விடுவோம்,” என்று கூறினார்கள். அவர் கூறினார், “ நீங்கள் எங்களை நிர்ப்பந்திக்கப் போகின்றீர்களா?
[7:89]“கடவுள் உங்கள் மார்க்கத்திலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் நாங்கள் மீண்டும் அதற்குத் திரும்பி விடுவோமாயின் நாங்கள் கடவுள்-க்கு எதிராக நிந்தனையைச் செய்தவர்கள் ஆவோம். எங்களுடைய இரட்சகராகிய கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக எவ்வாறு நாங்கள் அதற்கு மீண்டும் திரும்ப இயலும்? எங்கள் இரட்சகரின் அறிவு எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றது. நாங்கள் எங்களுடைய உறுதியான நம்பிக்கையை கடவுள்-ன் மீது வைத்திருக்கின்றோம். எங்கள் இரட்சகரே, எங்கள் சமூகத்தாரின் மீது எங்களுக்கு ஒரு தீர்மானமான வெற்றியை வழங்குவீராக, நீரே மிகச் சிறந்த ஆதரவாளர்”.
[7:90]அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்பமறுத்த தலைவர்கள், “ நீங்கள் ஷுஐபை பின் பற்றினால், நீங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவீர்கள்” என்று கூறினார்கள்.
[7:91]அதிர்வு அவர்களை அழித்தது, அவர்களுடைய வீடுகளில் அவர்களை இறந்தவர்களாக விட்டு விட்டது.
[7:92]ஷுஐபை ஏற்க மறுத்தவர்கள், அவர்கள் ஒரு போதும் உயிர் வாழ்ந்திராதவர்களைப் போல் திடீரென மறைந்து போனார்கள். ஷுஐபை ஏற்க மறுத்தவர்கள் தான் நஷ்டவாளிகளாக இருந்தார்கள்.
[7:93]அவர், “என் சமூகத்தாரே, என்னுடைய இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், மேலும் நான் உங்களுக்கு உபதேசமும் செய்துவிட்டேன். நம்ப மறுக்கும் மக்களுக்காக நான் எப்படி துக்கப்பட இயலும்” என்று கூறியவராக அவர்களிடம் இருந்து திரும்பிச் சென்றுவிட்டார்.

மறைந்திருக்கும் அருட்கொடைகள்

[7:94]எந்த சமூகத்திற்கும் நாம் ஒரு வேதம் வழங்கப்பட்டவரை அனுப்பும் போதெல்லாம், அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்கும் பொருட்டு அதன் மக்களை நாம் துன்பங்களைக் கொண்டும், கஷ்டங்களைக் கொண்டும் வருத்தினோம்.
[7:95]பின்னர் அந்தக் கஷ்டங்களின் இடத்தில் அமைதியையும், வளத்தையும் நாம் மாற்றிய மைத்தோம். ஆனால் அந்தோ, அவர்கள் கவனமற்றவர்களாக மாறி, “ வளத்திற்கு முந்திய அந்தக் கஷ்டத்தை எங்கள் பெற்றோர்கள் - தான் அனுபவித்தார்கள்” என்று கூறினார்கள். அதன் விளைவாக, அவர் கள் சற்றும் எதிர்பாராதபோது அவர்களை நாம் தண்டித்தோம்.

பெரும்பான்மையோர் தவறானதையே தேர்ந்தெடுக்கின்றனர்

[7:96]அந்தச் சமூகத்தார் நம்பிக்கை கொண்டு நன்னெறியாளர்களாக மாறியிருந்தால் நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும், மற்றும் பூமியிலிருந்தும் அருட்கொடைகளைப் பொழிந் திருப்போம். அவர்கள் நம்ப மறுப்பதை தேர்ந்தெடுத்தமையால், அவர்கள் சம்பாதித்த வற்றிற்காக நாம் அவர்களைத் தண்டித்தோம்.
[7:97]தற்போதைய சமூகத்தில் உள்ள மக்கள் நம்முடைய தண்டனை அவர்களிடம் இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது வந்துவிடாது என்று உத்தரவாதம் கொண்டிருக் கின்றனரா?
[7:98]இன்றைய சமூகத்தில் உள்ள மக்கள் நம்முடைய தண்டனை அவர்களிடம் பகலில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது வந்துவிடாது என்று உத்திரவாதம் கொண்டி ருக்கின்றனரா?
[7:99]கடவுள்-ன் திட்டங்களை அவர்கள் சாதாரண மாகஎடுத்துக்கொண்டுவிட்டனரா? நஷ்டவாளிகளைத் தவிர வேறெவரும் கடவுள் -ன் திட்டங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
[7:100]முந்திய தலைமுறையினர்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசுகளாக ஆனவர்களுக்கு, நாம் நாடினால், அவர்களுடைய பாவங்களுக்காக நாம் அவர்களைத் தண்டித்து விட இயலும் என்றும், மேலும் அவர்கள் செவிடர்களாக மாறிப்போகும்படி, அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விட இயலும் என்றும் ஒருபோதும் தோன்றாதா?
[7:101]அந்தச் சமூகங்களின் சரித்திரத்தை நாம் உமக்கு எடுத்துக்கூறுகின்றோம்: அவர் களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள், எதனை ஏற்க முன்னரே மறுத்து விட்டனரோ, அதில் அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. இவ்விதமாக, நம்பமறுப்பவர்களின் இதயங்களில் கடவுள் முத்திரையிட்டு விடுகின்றார்.
[7:102]அவர்களில் பெரும்பாலோரை, அவர்களுடைய உடன்படிக்கைகளை அலட்சியம் செய்பவர் களாகவே நாம் கண்டோம்; அவர்களில் பெரும்பாலோரை தீயவர்களாகவே நாம் கண்டோம்*.
அடிகுறிப்பு

மோஸஸ்

[7:103](அந்தத் தூதர்களுக்கு) பிறகு, ஃபேரோ விடமும் அவனுடைய மக்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் மோஸஸை அனுப்பினோம், ஆனால் அவர்கள் வரம்புமீறினர். தீயவர் களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனிப் பீராக.
[7:104]மோஸஸ் கூறினார், “ஃபேரோவே, நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வந்துள்ள ஒரு தூதராவேன்.”
[7:105]“கடவுள்-ஐப் பற்றி உண்மையைத் தவிர வேறெதுவும் நான் கூறக்கூடாது என்பது என்மீது கடமையாக உள்ளது. நான் உங்களு டைய இரட்சகரிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கின்றேன்; இஸ்ரவேலின் சந்ததியினரை செல்ல விடு.”
[7:106]அவன், “ நீர் உண்மையாளராக இருப்பின், உம்மிடம் ஓர் அத்தாட்சி இருந்தால், அதைக் காட்டுவீராக,” என்று கூறினான்.
[7:107]அவர் தன்னுடைய கைத்தடியை கீழே எறிந்தார், மேலும் அது பயங்கரமானதொரு பாம்பாக மாறியது.
[7:108]அவர் தன்னுடைய கையை வெளியே எடுத்தார், மேலும் அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.
[7:109]ஃபேரோவின் மக்களிடையே இருந்த தலைவர்கள் கூறினார்கள், “இவர் ஒரு திறமை வாய்ந்த சூன்யக்காரரேத் தவிர வேறில்லை.”
[7:110]“உங்களுடைய பூமியிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கு அவர் விரும்புகின்றார், நீங்கள் என்ன பரிந்துரைக்கின்றீர்கள்?”
[7:111]அவர்கள் கூறினார்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் அவகாசமளியுங்கள், மேலும் அனைத்து நகரங்களுக்கும் அழைப்பாளர்களை அனுப்புங்கள்.
[7:112]“அனுபவம் வாய்ந்த சூன்யக்காரர்கள் அனை வரையும் அவர்கள் வரவழைக்கட்டும்.”
[7:113]சூன்யக்காரர்கள் ஃபேரோவிடம் வந்து ,“ நாங்கள் வெற்றி பெற்றவர்களானால் எங்களுக்கு வெகுமதியளிக்கப்படுமா?” என்று கூறினார்கள்.
[7:114]அவன், “ஆம் உண்மையில்; நீங்கள் எனக்கு நெருங்கியவர்களாகவும் கூட ஆகிவிடுவீர்கள்” என்று கூறினான்.
[7:115]அவர்கள், “மோஸஸே, நீர் எறிகின்றீரா, அல்லது நாங்கள் எறிகின்றோமா?” என்று கூறினார்கள்.
[7:116]அவர், “நீங்கள் எறியுங்கள்” என்று கூறினார். அவர்கள் எறிந்தபோது, அவர்கள் மக்களின் கண்களை மயக்கினர், அவர்களைப் பயமுறுத் தினர், மேலும் பெரியதொரு மாயாஜாலத்தை உருவாக்கினர்.
[7:117]நாம் பின்னர் மோஸஸிற்கு “உம்முடைய கைத்தடியைக் கீழே எறியும்,” என்று உள்ளுணர் வளித்தோம். “உடனே அது அவர்கள் பொய்யாகத் தயார் செய்த எல்லாவற்றையும் விழுங்கி விட்டது.

சத்தியம் நிபுணர்களால் அடையாளங்காணப்பட்டது

[7:118]இவ்வாறு, சத்தியம் வென்றது, மேலும் அவர்கள் செய்தது பயனற்றவைகளாக ஆக்கப்பட்டது.
[7:119]அப்பொழுது அங்கேயே அவர்கள் தோற் கடிக்கப்பட்டனர்; அவர்கள் இழிவுப்படுத்தப் பட்டனர்.
[7:120]சூன்யக்காரர்கள் சிரம்பணிந்து கீழே விழுந்தனர்.
[7:121]அவர்கள், “ பிரபஞ்சத்தின் இரட்சகரின் மேல் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம் என்று கூறினர்.
[7:122]“ மோஸஸ் மற்றும் ஆரோனின் இரட்சகர்.”
[7:123]ஃபேரோ கூறினான், “ என்னுடைய அனுமதி இன்றி அவர் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? நகரத்தில், அதனுடைய மக்களை வெளியேற்றுவதற்காக நீங்கள் தீட்டிய சதி திட்டமாகத்தான் இது இருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
[7:124]“நான் உங்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால்களை வெட்டிவிடுவேன், பின்னர் உங்களனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்.”
[7:125]அவர்கள் கூறினர், “பின்னர் நாங்கள் எங்களு டைய இரட்சகரிடமே திரும்பச் சென்றிடுவோம்.
[7:126]“எங்களுடைய இரட்சகரின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காக மட்டுமே நீ எங்களை துன்புறுத்துகின்றாய்.” “எங்களு டைய இரட்சகரே, எங்களுக்கு உறுதிப்பாட்டை வழங்கு வீராக, மேலும் அடிபணிந்தவர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக”.
[7:127]ஃபேரோவின் மக்களிடையே இருந்தத் தலைவர் கள், “மோஸஸையும் அவருடைய மக்களையும் பூமியைச் சீர் கெடுப்பதற்கும், உம்மையும் உம்முடைய தெய்வங்களையும் கைவிட்டு விடுவதற்கும் நீர் அனுமதிப்பீரா?” என்று கூறினார்கள். அவன், “நாம் அவர்களுடைய மகன் களைக் கொல்லுவோம், மேலும் அவர்களுடைய மகள்களை உயிருடன் விட்டுவிடுவோம். நாம் அவர்களை விடவும் மிக அதிக சக்தியுள்ளவர்கள்” என்று கூறினான்.
[7:128]மோஸஸ் அவருடைய மக்களிடம்,“கடவுள்-ன் உதவியைத் தேடுங்கள், மேலும் தொடர்ந்து உறுதியோடிருங்கள். பூமி கடவுள் -க்கு உரியது, மேலும் அவருடைய அடியார்களில் அவர் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அவர் அதனை வழங்கு கின்றார். இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது” என்று கூறினார்.
[7:129]அவர்கள், “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், மேலும் நீர் எங்களிடம் வந்ததற்கு பின்னரும் நாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டோம்” என்று கூறினார்கள். அவர், “உங்களுடைய இரட்சகர் உங்களுடைய எதிரியை அழித்து, உங்களை பூமியின் மீது நிலைப்படுத்துவார், அதன் பின்னர் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதை அவர் பார்ப்பார்” என்று கூறினார்.

கொள்ளை நோய்கள்

[7:130]அவர்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, பின்னர் ஃபேரோவின் மக்களை வறட்சி மற்றும் விளைச்சல் பற்றாக்குறையால் நாம் வருத்தினோம்.
[7:131]நற்சகுணங்கள் அவர்களுடைய வழியில் வந்தபோது, அவர்கள், “ நாங்கள் இதற்குத் தகுதியானவர்கள்” என்று கூறினார்கள், ஆனால் அவர்களை ஒரு கஷ்டம் வருத்தியபோது, அவர்கள் மோஸஸையும் அவருடன் இருந்தவர்களையும் பழி கூறினார்கள். உண்மையில், அவர்களுடைய சகுனங்கள் கடவுள்-ஆல் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது, ஆனால் அவர்களில் பெரும் பாலானோர் அறிவதில்லை.
[7:132]அவர்கள், “ உம்முடைய மாயாஜாலம் கொண்டு எங்களை ஏமாற்றுவதற்கு, எவ்வகையான அத்தாட்சியை எங்களுக்கு நீர் காட்டினாலும் பொருட்டல்ல, நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள்.

எச்சரிக்கைகள் கவனிக்கப்படாமல் போகின்றன

[7:133]அதன் விளைவாக, அவர்கள் மீது வெள்ளம், வெட்டுக்கிளிகள், பேன், தவளைகள், மேலும் இரத்தம் போன்ற - ஆழ்ந்த அத்தாட்சிகளை நாம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் தங்களுடைய கர்வத்திலேயே தொடர்ந்து இருந்தார்கள். அவர்கள் தீயமக்களாகவே இருந்தனர்.
[7:134]அவர்களை ஒரு தொந்தரவு வருத்தியபொழு தெல்லாம், அவர்கள், “மோஸஸே, உம்முடைய இரட்சகரிடம் இறைஞ்சிப் பிரார்த்திப்பீராக - அவருக்கு நீர் நெருக்கமானவர். இந்த தொந்தரவை நீர் நீக்கிவிட்டால், உம்முடன் நாங்களும் நம்பிக்கை கொள்வோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததியினரை உம்முடன் அனுப்பிவிடுவோம்” என்று கூறினார்கள்.
[7:135]இருப்பினும், ஏதேனும் நீண்ட காலத்திற்கு அந்த தொந்தரவை நாம் நீக்கியபோது, அவர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறினார்கள்.

தவிர்க்க முடியாத தண்டனை

[7:136]அதன் விளைவாக, அவர்களுடைய செயல் களுக்கு நாம் பழிவாங்கினோம், மேலும் அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம். அது ஏனெனில் அவர்கள் நம்முடைய அத்தாட்சி களை ஏற்க மறுத்தனர், மேலும் அவற்றைக் குறித்து முற்றிலும் கவனமில்லாமல் இருந்தனர்.
[7:137]அடக்கு முறை செய்யப்பட்ட மக்களை, கிழக்கிலும், மேற்கிலும், பூமிக்கு நாம் வாரிசாக்கினோம் மேலும் அதில் நாம் அருள் புரிந்தோம். அவர்களுடைய உறுதிப்பாட்டிற்காக அவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பொருட்டு, இஸ்ரவேலின் சந்ததி யினருக்கான உம்முடைய இரட்சகரின் அருள்பாலிக்கப்பட்ட கட்டளைகள் இவ்விதம் பூர்த்தியாயின, மேலும் ஃபேரோ மற்றும் அவனுடைய சமூகத்தாரின் செயல்களையும், அவர்கள் அறுவடை செய்த அனைத்தையும் நாம் அழித்தோம்.

எல்லா அற்புதங்களுக்கும் பின்னர்

[7:138]நாம் இஸ்ரவேலின் சந்ததியினரை கடலை கடக்கச் செய்து காப்பாற்றினோம். சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களை அவர்கள் கடந்து சென்றபோது, அவர்கள், “மோஸஸே, அவர்கள் வைத்திருக்கும் தெய்வங்களைப் போல, எங்களுக்கும் ஒரு தெய்வத்தை ஏற்படுத்து வீராக” என்று கூறினார்கள். அவர் கூறினார், “உண்மையில், நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்.
[7:139]“இந்த மக்கள் ஓர் இறைநிந்தனை செய்து கொண்டிருக்கின்றார்கள், ஏனெனில்அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்களோ, அது அவர்களுக்கு பேராபத்தானதாகும்.
[7:140]“இவ்வுலகில் மற்றெவர்களையும் விட அதிகமாக உங்களுக்கு அவர் அருள்புரிந்திருக்கும்போது, உங்களுடைய தெய்வமாக இருப்பதற்கு கடவுள் -ஐத் தவிர மற்றொன்றை உங்களுக்காக நான் தேடுவேனா?”

இஸ்ரவேலின் சந்தியினருக்கு நினைவூட்டல்

[7:141]உங்கள் மகன்களைக் கொலைசெய்தும், உங்கள் மகள்களை உயிருடன் விட்டு வைத்தும், உங்களை மிக மோசமான கொடுமைகளால் துன்புறுத்திய ஃபேரோவின் சமூகத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுதலை செய்ததை நினைவு கூருங்கள். அது உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக் கொரு கடினமான சோதனையாக இருந்தது.

கடவுளின் நேரடி இருப்பை நமது உலகம் தாங்காது

[7:142]நாம் மோஸஸை முப்பது* இரவுகளுக்காக வரவழைத்தோம், மேலும் பத்து* இரவுகளை கூட்டி அவற்றை முழுமைப் படுத்தினோம். இவ்வாறு, அவருடைய உரையாடல் அவருடைய இரட்சகருடன் நாற்பது* இரவுகள் நீடித்தது. மோஸஸ் அவருடைய சகோதரர் ஆரோனிடம், “என்னுடைய மக்க ளுடன் இங்கு தங்கியிருப்பீராக, நன்னெறியைப் பேணிக் கொள்வீராக, மேலும் சீர் கெட்டவர்களின் பாதைகளைப் பின்பற்றாதிருப்பீராக” என்று கூறினார்.
அடிகுறிப்பு

[7:143]மோஸஸ், நாம் நியமித்த நேரத்தில் வந்தபோது, அவருடைய இரட்சகர் அவருடன் பேசினார், அவர், “ என்னுடைய இரட்சகரே, உம்மை நோக்கவும் பார்க்கவும் என்னை அனுமதிப்பீராக” என்று கூறினார். அவர், “நீர் என்னை பார்க்க முடியாது. அந்த மலையை நோக்குவீராக; அது அதனுடைய இடத்திலேயே நிலைத்து இருந்தது என்றால், நீர் என்னை பார்க்க இயலும்,” என்று கூறினார். பின்னர், அவருடைய இரட்சகர் தன்னை மலையினில் வெளிப்படுத்தினார், மேலும் இது அதனை நொறுங்கிப் போகும்படியாக்கியது. மோஸஸ் மயங்கி விழுந்தார். அவர் நினைவை அடைந்த போது, அவர், “நீர் போற்றுதலுக்குரியவர். நான் உம்மிடம் வருந்தித்திருந்துகின்றேன், மேலும் நான் மிகவும் உறுதி அடைந்த ஒரு நம்பிக்கையாளராக இருக்கின்றேன்” என்று கூறினார்.
[7:144]அவர், “ மோஸஸே, என்னுடைய செய்திகளையும், உம்மோடு பேசியதையும் கொண்டும், அனைத்து மக்களில் இருந்தும், நான் உம்மை தேர்ந்தேடுத் துள்ளேன். ஆகையால், நான் உமக்குக் கொடுத்ததை எடுத்துக் கொள்வீராக, மேலும் நன்றியுடையவராக இருப்பீராக” என்று கூறினார்.
[7:145]அனைத்து வகையான ஞான உபதேசங்களையும் மேலும் அனைத்தினுடைய விபரங்களையும் பலகைகளின் மீது அவருக்காக நாம் எழுதினோம்: “நீர் இந்த போதனைகளை உறுதியாகக் கடைப் பிடிக்க வேண்டும், மேலும் உம்முடைய மக்களை யும் இவற்றை உறுதியாகக் கடைப்பிடிக்கும்படி உபதேசிப்பீராக-இவை மிகச் சிறந்த போதனை களாகும். தீயவர்களின் விதியை நான் உமக்கு குறிப்பிட்டு காட்டுவேன்.” தெய்வீகத் தலையீடு நம்பமறுப்பவர்களை

தெய்வீகத் தலையீடு நம்பமறுப்பவர்களை இருளில் வைக்கின்றது

[7:146]நியாயமின்றி, பூமியின் மீது கர்வமோடிருப் பவர்களை என்னுடைய வெளிப்பாடுகளி லிருந்தும் நான் திருப்பிவிடுவேன். அதன் விளைவாக, எல்லா வகையான சான்றை பார்த்த போதும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் வழிகாட்டலைக் கொண்ட பாதையைக் காணும் போது அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் அவர்கள் வழி தவறிய பாதையைக் காணும் போது, அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்வார்கள். இது நம்முடைய சான்றுகளை அவர்கள் நிராகரித்து, மேலும் முழுவதுமாக அதன் மீது கவனமற்றவர்களாக இருப்பதன் விளைவாகும்.
[7:147]எவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளையும் மேலும் மறுவுலகின் சந்திப்பையும் நிராகரிக்கின்றார் களோ, அவர்களுடைய செயல்கள் பயனற்றவைகளாக இருக்கின்றன. அவர்கள் செய்தவற்றிற்குத்தானே அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்?

தங்கக் கன்று

[7:148]அவர் இல்லாத போது, மோஸஸின் மக்கள் அவர்களுடைய ஆபரணங்களைக் கொண்டு ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தைக் கொண்டு பூர்த்தியான ஒரு கன்றுக்குட்டியின்* சிலையைச் செய்தனர். அது அவர்களிடத்தில் பேசவோ அல்லது எந்த ஒரு பாதையிலும் அவர்களை வழி நடத்தவோ முடியாது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை வழி பட்டனர், மேலும் இவ்வாறு தீயவர்கள் ஆயினர்.
அடிகுறிப்பு

[7:149]இறுதியாக, அவர்களுடைய செயலிற்காக அவர்கள் வருந்தி, மேலும் அவர்கள் வழிதவறிச் சென்றுவிட்டதை உணர்ந்த போது, அவர்கள், “எங்களுடைய இரட்சகர் அவருடைய கருணை யைக் கொண்டு எங்களை மீட்டு, மேலும் எங்களுடைய பாவங்களை மன்னிக்கவில்லை யெனில் நாங்கள் நஷ்டவாளிகளாகி விடு வோம்” என்று கூறினார்கள்.
[7:150]மோஸஸ் அவருடைய மக்களிடத்தில் சினமுற்ற வராகவும், அதிருப்தியடைந்தவராகவும் திரும்பிய போது, அவர், “ நான் இல்லாத போது எத்தகையதொரு பயங்கரமான காரியத்தை நீங்கள் செய்து விட்டீர்கள்! உங்களுடைய இரட்சகரின் கட்டளைகளுக்காக நீங்கள் காத்திருக்கக் கூடாதா?” என்று கூறினார். அவர் பலகைகளைக் கீழே எறிந்தார், மேலும் அவருடைய சகோதரரின் தலையை பற்றிப் பிடித்து, அவரை தன்னுடைய பக்கமாக இழுத்தார். (ஆரோன்) “என் தாயின் மகனே, மக்கள் என்னுடைய பலவீனத்தைச் சாதக மாக்கிக் கொண்டனர், மேலும் கிட்டத்தட்ட என்னைக் கொன்றே விட்டனர். என்னுடைய எதிரிகளை மகிழ்ச்சியடைய விட்டு விடாதீர், மேலும் வரம்பு மீறும் மக்களுடன் என்னையும் கணக்கிட்டுவிடாதீர்” என்று கூறினார்.
[7:151](மோஸஸ்) “என்னுடைய இரட்சகரே, என்னை யும், என்னுடைய சகோதரரையும் மன்னிப்பீராக, மேலும் உம்முடைய அருளில் நுழைய எங்களை அனுமதிப்பீராக. கருணையாளர்கள் அனை வரிலும் நீரே மிக்க கருணையாளர்” என்று கூறினார்.
[7:152]நிச்சயமாக, கன்றுக்குட்டியை இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள் அவர்களுடைய இரட்சகரின் கடும் கோபத்திற்கும், மேலும் இந்த வாழ்வில் இழிவிற்கும் உள்ளாகிவிட்டனர். புதுமைகளைப் புகுத்துவோருக்கு இவ்விதமாகவே நாம் பிரதிபலன் தருவோம்.
[7:153]பாவங்கள் செய்துவிட்டுப் பின்னர் அதற்காக வருந்தித்திருந்திப் பின்னர் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, உம்முடைய இரட்சகர்- இதன் பின்னரும்-மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.
[7:154]மோஸஸின் கோபம் தணிந்தபோது, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடு இருப்பவர்களுக்கு வழி காட்டலையும் கருணையும் கொண்ட பலகைகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.
[7:155]பின்னர் மோஸஸ் நாம் உறுதி செய்த உரை யாடலுக்கு வருவதற்காகத் தன் சமூகத்தாரி லிருந்து எழுபது பேரைத் தேர்ந்தெடுத்தார். அதிர்வு அவர்களை ஆட்டிய பொழுது, அவர் கூறினார், “என்னுடைய இரட்சகரே, இவ்விதம் நீர் நாடியிருந்தால் அவர்களுடன் என்னையும் சேர்த்து முன்னரே நீர் அழித்திருக்க இயலும். எங்களில் மூடர்களாக இருப்பவர்களின் செயல் களுக்காக எங்களை நீர் அழித்து விடுவீரா? இது எங்களுக்கென நீர் ஏற்படுத்திய ஒரு சோதனை யாகவே இருக்க வேண்டும். இதைக் கொண்டு, நீர் நாடுவோரைத் தண்டிக்கின்றீர் மேலும் நீர் நாடுவோரை வழிநடத்துகின்றீர். நீரே எங்கள் இரட்சகரும் அதிபதியும் ஆவீர், எனவே எங்களை மன்னிப்பீராக, உமது கருணையைக் கொண்டு எங்கள்மேல் பொழிவீராக; மன்னிப் போரில் நீரே மிகச் சிறந்தவர்.

தேவையானவைகள்: ஜகாத்தின்முக்கியத்துவம்

[7:156]“மேலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும், எங்கள் மீது நன்னெறியினை விதித்திடுவீராக; நாங்கள் உம்மிடம் வருந்தித்திருந்துபவர்களாக இருக்கின்றோம்.” அவர் கூறினார், “என்னுடைய தண்டனை நான் நாடுகின்றவர்கள் மீது ஏற்படும். ஆனால் என்னுடைய கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கும், ஆயினும், அதனை நான் (1) நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்கும், (2) கடமையான தர்மத்தைக் (ஜகாத்)* கொடுப்போருக்கும், (3) நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்வோருக்குமே குறிப் பிட்டுக் கொடுப்பேன், மேலும்
அடிகுறிப்பு

[7:157]“(4)அவர்களுடைய தோரா மற்றும் சுவிசேஷ த்தில்* யாரை எழுதப்பட்டதாக அவர்கள் காண்கின்றார்களோ, அந்த வேற்று இனத்தவராகிய, வேதம் வழங்கப்பட்டவராகிய (முஹம்மது) அந்த தூதரை பின்பற்றுங்கள். அவர் அவர்களை நன்னெறியுடையோராய் இருக்கும்படி உபதேசிக்கின்றார், தீமையிலி ருந்து அவர்களை தடுக்கின்றார், எல்லா நல்ல உணவையும் அவர்களுக்கு அனுமதிக்கின்றார், மேலும் கெட்டவையாக இருப்பவற்றை தடை செய்கின்றார். மேலும் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளையும் மற்றும் விலங்குகளையும் நீக்குகின்றார். எவர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டும், அவருக்கு கண்ணியமளித்தும், அவருக்கு ஆதரவளித்தும் மேலும் அவருடன் வந்திருக்கின்ற ஒளியினை பின்பற்றவும் செய்கின்றார்களோ, அவர்களே வெற்றியாளர்கள்.”
அடிகுறிப்பு

[7:158]“மக்களே, நான் உங்கள் அனைவருக்குமான கடவுள்-ன் தூதராவேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவருக்கே உரியது. அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அவரே வாழ்வையும் மரணத்தையும் கட்டுப்படுத்து கின்றார்” என்று கூறுவீராக. ஆகையால், நீங்கள் கடவுள் மீதும், கடவுள்-ஐயும் அவரது வார்த்தைகளையும் நம்புகின்ற வேற்று இனத்தவராகிய வேதம் வழங்கப்பட்டவராகிய அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் வழி நடத்தப்படும் பொருட்டு அவரைப் பின்பற்றுங்கள்.

வழிநடத்தப்பட்ட யூதர்கள்

[7:159]மோஸஸைப் பின்பற்றுபவர்களில் சத்தியத்திற் கேற்ப வழிநடத்தக் கூடியவர்கள் இருக்கின்றனர், மேலும் அந்தச் சத்தியம் அவர்களை நன்னெறியாளர்களாக ஆக்குகின்றது.

சினாயில் அற்புதங்கள்

[7:160]நாம் அவர்களைப் பன்னிரண்டு குலங்களைக் கொண்ட சமூகங்களாகப் பிரித்தோம், மேலும் அவரது மக்கள் அவரிடம் தண்ணீருக்காகக் கேட்டபோது மோஸஸிற்கு நாம் “உமது கைத்தடியால் பாறையில் அடிப்பீராக” என்று உள்ளுணர்வளித்தோம், உடனே பன்னிரண்டு ஊற்றுக்கள் அதிலிருந்து பொங்கி வழிந்தன. இவ்விதமாக, ஒவ்வொரு சமூகமும் அதற்கான தண்ணீரை அறிந்து கொண்டது. மேலும் மேகங்களை அவர்கள் மீது நிழலிடச் செய்தோம், மேலும் அவர்களுக்கு மன்னா மற்றும் காடைகளை கீழே அனுப்பினோம்: “நாம் உங்களுக்கு வழங்கியுள்ள நல்ல பொருட்களிலிருந்து உண்ணுங்கள்.” அவர்கள் தீங்கிழைத்தது நமக்கல்ல; அவர்கள் தங்களு டைய சொந்த ஆன்மாக்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

அற்புதங்களுக்கு பின்னரும் கலகம்

[7:161]அவர்களிடம், “வசிப்பதற்கு இந்த நகரத்தினுள் செல்லுங்கள், மேலும் நீங்கள் விரும்பிய வண்ணம் அங்கு உண்ணுங்கள், மக்களை இணக்கமாக நடத்துங்கள், மேலும் வாயிலுக் குள் பணிவாக நுழையுங்கள். அப்போது நாம் உங்களுடைய வரம்பு மீறல்களை மன்னிப்போம். நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியைப் பன்மடங்கு பெருக்கித்தருவோம்” என்று கூறப்பட்டதை நினைவு கூர்வீராக.
[7:162]ஆனால் அவர்களில் இருந்த தீயவர்கள் அவர் களுக்குத் தரப்பட்ட கட்டளைகளுக்கு மாற்றாக வேறு கட்டளைகளை அமைத்துக் கொண்டனர். அதன் விளைவாக, நாம் அவர்களுடைய தீய செயல்கள் காரணமாக விண்ணிலிருந்து அவர்கள்மீது தண்டனையை இறக்கினோம்.

கட்டளைகளைப் பின்பற்றுவதுவளத்தைக் கொண்டுவருகின்றது

[7:163]ஸப்பத்தின் புனிதத்தைப் பாழ்படுத்திய கடலோர சமூகத்தாரை, அவர்களுக்கு நினைவூட்டுவீராக. ஸப்பத்தினை அவர்கள் கடைப்பிடித்த போது அவர்களிடத்தில் மீன்கள் அபரிமிதமாக வந்தன. மேலும் அவர்கள் ஸப்பத்தினை மீறிய போது மீன்கள் வரவில்லை. அவர்களுடைய வரம்புமீறல்களின் விளைவாக, இவ்விதமாக நாம் அவர்களை துன்புறுத்தினோம்.

கடவுளின் தூதுச் செய்தியினைப் பரிகசிப்பதும், கேலி செய்வதும்

[7:164]அவர்களில் ஒரு கூட்டத்தினர், “கடவுள் நிச்சயமாக அழித்துவிடவோ அல்லது கடுi மயாக தண்டிக்கவோ போகும் மக்களுக்கு நீங்கள் ஏன் உபதேசிக்க வேண்டும்?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள், “உங்கள் இரட்ச கரிடம் பிழைபொறுக்கத் தேடுங்கள்,” அவர்கள் காப்பாற்றப்பட்டு விடவும் கூடும் என்று பதிலளித்தனர்.
[7:165]அவர்களுக்கு நினைவூட்டப்பட்டவற்றை அவர்கள் புறக்கணித்தபோது, தீயவற்றைத் தடுத்தவர்களை நாம் காப்பாற்றினோம், மேலும் தீமை செய்பவர்களை அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக ஒரு பயங்கரமான தண்டனையைக் கொண்டு வேதனை செய்தோம்.
[7:166]அவர்கள் தொடர்ந்து கட்டளைகளை எதிர்த்த போது நாம் அவர்களிடம், “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்” என்று கூறினோம்.
[7:167]இன்னும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை, அவர்கள் மீது கடும் அடக்குமுறை கொண்டு துன்புறுத்தும் மக்களை அவர்களுக்கெதிராக அவர் எழுப்புவார் என்று உம்முடைய இரட்சகர் தீர்மானித்து விட்டார். உம்முடைய இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதில் மிகத்திறன் வாய்ந்தவர், மேலும் நிச்சயமாக அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[7:168]பூமியெங்கும் அநேக சமூகங்களுக்கு மத்தியில் நாம் அவர்களைச் சிதறடித்தோம். அவர்களில் சிலர் நன்னெறியாளர்களாக இருந்தார்கள், மற்றும் சிலர் நன்னெறியில் குறைவுடைய வர்களாக இருந்தார்கள். நாம் அவர்களை, அவர்கள் திரும்பக்கூடும் என்பதற்காக வளமையையும் கஷ்டத்தையும் கொண்டு சோதித்தோம்.
[7:169]அவர்களைத் தொடர்ந்து வேதத்திற்கு வாரிசு களாக புதிய தலைமுறையினர்களை அவர் மாற்றி அமைத்தார். ஆனால் அவர்கள் அதற்குப் பதிலாக, “ நாங்கள் மன்னிக்கப்படுவோம்“ என்று கூறியவர்களாக இவ்வுலக வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஆனால் அதன் பின்னரும் அவர்கள் தொடர்ந்து இவ்வுலகின் பொருட்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட னர். வேதத்தை உறுதியாகக் கடைப்பிடிப்போம் மேலும் கடவுள்-ஐப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாமலிருப்போம் என்று அவர்கள் உடன்படிக்கை எடுத்துக் கொள்ள வில்லையா? அவர்கள் வேதத்தை கற்றுக் கொள்ளவில்லையா? நிச்சயமாக, நன்னெறி யைப் பேணுபவர்களுக்கு மறுவுலகின் வசிப் பிடம் மிகவும் சிறந்தது. நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[7:170]வேதத்தை உறுதியாகப் பின்பற்றியும் மேலும் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடை பிடித்தும் வருபவர்கள், நாம் பக்தியுள்ளவர்க ளுக்கு வெகுமதியளிக்க ஒருபோதும் தவற மாட்டோம்.
[7:171]நாம் அவர்களுக்கு மேலே மலையை ஒரு குடையைப் போன்று உயர்த்தினோம், மேலும் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று அவர்கள் எண்ணினார்கள்: “நீங்கள் காப் பாற்றப்படும் பொருட்டு, நாம் உங்களுக்கு எதை வழங்கியுள்ளோமோ அதை திடமாக, உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதில் உள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.”

நாம் கடவுளைப்பற்றிய இயற்கையான அறிவு கொண்டவர்களாகப் பிறக்கின்றோம்

[7:172]உம்முடைய இரட்சகர், ஆதாமின் சந்ததிகள் அனைவரையும் ஒன்று கூட்டி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாக வைத்ததை நினைவு கூர்வீராக: “நான் உங்கள் இரட்சகர் அல்லவா?” அவர்கள் அனைவரும், “ஆம், நாங்கள் சாட்சியமளிக்கின்றோம்” என்று கூறினார்கள். இதன்படி மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில், “இதனைப் பற்றி நாங்கள் அறியாதிருந்தோம்,” என்று நீங்கள் கூறிட இயலாது.
அடிகுறிப்பு

[7:173]அன்றியும், “எங்களுடைய மூதாதையர்கள் தான் இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள், மேலும் நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளை மட்டுமே பின்பற்றினோம். மற்றவர்கள் புகுத்திய புதுமைகளுக்காக நீர் எங்களைத் தண்டிப் பீரா?” என்றும் நீங்கள் கூற இயலாது.
[7:174]தங்களை* மீட்டுக் கொள்வதை மனிதர்களு க்குச் சாத்தியமாக்குவதற்காக இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விவரிக்கின்றோம்.
அடிகுறிப்பு

[7:175]நம்முடைய சான்றுகள் வழங்கப்பட்டு, ஆனால் அவற்றைப் புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுத் துக் கொண்ட ஒருவனைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு ஓதிக்காட்டுவீராக. அதன் விளைவாக, அவன் வழிகேடனாக ஆகும் வரை, சாத்தான் அவனைத் துரத்தி சென்றான்.
[7:176]நாம் நாடியிருந்தால், அதன்மூலம் அவனை நாம் உயர்த்தியிருக்க இயலும், ஆனால் அவனோ பூமியுடன் ஒட்டிக் கொள்வதில் உறுதியோடி ருந்தான், மேலும் தனது சுய அபிப்பிராயங் களையே தொடர்ந்து சென்றான். இவ்விதமாக, அவன் ஒரு நாயைப் போன்றவன்; நீர் அதன்மீது செல்லம் காட்டினாலும் அல்லது அதனைத் திட்டினாலும், அது பெருமூச்சு விடுகின்றது. நம்முடைய சான்றுகளை ஏற்க மறுக்கும் மக்களின் உதாரணம் இத்தகையதாகும். அவர்கள் சிந்திக்கும் பொருட்டு, இவ்விவரங்களை விவரித்துக் கூறுவீராக.
[7:177]நம்முடைய சான்றுகளை ஏற்க மறுக்கும் மக்களின் உதாரணம் உண்மையில் கெட்டதே; அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டது அவர்களுடைய சொந்த ஆன்மாக்களுக்குத்தான்.
[7:178]எவரையெல்லாம் கடவுள் வழிநடத்துகின் றாரோ அவர்களே உண்மையில் வழிநடத்தப் பட்டவர்கள், மேலும் எவரையெல்லாம் அவர் வழி கேட்டில் விட்டு விடுகின்றாரோ, அவர்களே நஷ்டவாளிகள்.

சாத்தான் தன் சாம்ராஜ்யத்தினரை மனோவசியம் செய்கின்றான்

[7:179]ஜின்களிலும் மனிதர்களிலும் அநேகரை நாம் நரகத்திற்கென ஒப்படைத்து விட்டோம். அவர்களிடம் உள்ள அறிவு அதனைக் கொண்டு அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், கண்கள் அதனைக் கொண்டு அவர்கள் பார்க்கமாட்டார்கள், மேலும் காதுகள் அதனைக் கொண்டு அவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள் ; அல்ல, அதை விட மிகவும் மோசமானவர்கள்- அவர்கள் முற்றிலும் அறிவில்லாதவர்கள்.
[7:180]மிக அழகிய பெயர்கள் கடவுள் -க்கு உரியன; அவற்றைக் கொண்டு அவரை அழையுங்கள், மேலும் அவருடைய பெயர்களைச் சிதைப்பவர் களைப் புறக்கணியுங்கள். அவர்களுடைய பாவங்களுக்காக அவர்கள் பழிதீர்க்கப் படுவார்கள்.
[7:181]நம்முடைய படைப்பினங்களில், சத்தியத்தைக் கொண்டு வழிநடத்துவோர் உள்ளனர், மேலும் அச்சத்தியம் அவர்களை நன்னெறியுடையவர் களாக ஆக்குகின்றது.
[7:182]நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுப்பவர் களைப் பொறுத்தவரை, அவர்கள் அதனை ஒருபோதும் உணர்ந்து கொள்ளாதபடி நாம் அவர்களைத் தொடர்ந்து வழிநடத்துவோம்.
[7:183]நான் அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் செய் வேன்; என்னுடைய திட்டம் பயங்கரமானது.
[7:184]அவர்களின் நண்பரைக் (தூதரை) குறித்து ஏன் அவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? அவர் புத்திசுவாதீனமில்லாதவர் அல்ல. அவர் ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாளர் மட்டுமே.
[7:185]வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும் இன்னும் கடவுள் படைத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் அவர்கள் காணவில்லையா? அவர்களுடைய வாழ்வின் முடிவு அருகில் இருக்கக்கூடும் என்று அவர்களுக்கு எப்பொழு தாவது தோன்றுகின்றதா? இதைத் தவிர அவர்கள் எந்த ‘ஹதீஸில்‘ நம்பிக்கை கொள் வார்கள்?
[7:186]கடவுள் எவரை வழிகேட்டில் விட்டு விடுகின்றாரோ, அவரை வழிநடத்த எவர் ஒருவருக்கும் வழியில்லை. அவர் அவர்களின் பாவங்களிலேயே அவர்களை மூடத்தனமான தவறுகள் செய்யும்படி விட்டு விடுகின்றார்.
[7:187](அவ்வேளை)* உலக முடிவினைக் குறித்தும், மேலும் அது எப்பொழுது நிகழும் என்றும் அவர் கள் உம்மிடம் கேட்கின்றார்கள். “அதைப் பற்றிய அறிவு என்னுடைய இரட்சகரிடத்தில் தான் உள்ளது. அவர் மட்டுமே அதன் நேரத்தை* வெளிப்படுத்துவார். வானங்கள் மற்றும் பூமியில் அது மிகப் பளுவானது, திடீரென்றே** தவிர அது உங்களிடத்தில் வந்தடையாது” என்று கூறுவீராக. அதனுடைய கட்டுப்பாடு உம்மிடத்தில் இருப்பதைப் போல அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் உள்ளது,” என்று கூறுவீராக, ஆயினும் மக்களில் பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்வதில்லை.
அடிகுறிப்பு

தூதர்கள் சக்தியற்றவர்களே: எதிர்காலத்தை அவர்கள் அறிய மாட்டார்கள்

[7:188]“எனக்கே நன்மை செய்து கொள்ளவோ, அல்லது எனக்கே தீங்கிழைத்துக் கொள்ளவோ, என்னிடத்தில் எந்த சக்தியும் இல்லை. கடவுள் என்ன நாடுகின்றாரோ அதுவே எனக்கு நிகழும். எதிர்காலத்தை நான் அறிந்திருந்தால், நான் என்னுடைய செல்வத்தைப் பெருக்கியி ருப்பேன், மேலும் எந்தத் தீங்கும் என்னைத் தீண்டியிராது. நான் ஓர் எச்சரிப்பவரும், மேலும் நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தியைக் கொண்டவருமே தவிர வேறில்லை” என்று கூறுவீராக.

நம்முடைய குழந்தைகள் இணைத்தெய்வங்களாக ஆக இயலும்

[7:189]அவர் உங்களை ஒரே நபரிலிருந்து (ஆதாம்) படைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு துணையை அவளுடன் அமைதி காணுவதற்காக தருகின்றார். பிறகு அவள் அரிதாகவே அறிந்து கொள்ளக் கூடிய ஒரு மெலிதான சுமையினை அவள் சுமக்கின்றாள். அந்த சுமைகனமானவுடன் அவர்கள் தங்கள் இரட்சகராகிய கடவுள்- இடம் “நீர் எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தருவீரானால், நாங்கள் நன்றி செலுத்துபவர் களாக இருப்போம் ” என்று இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றார்கள்.
[7:190]ஆனால் அவர்களுக்கு அவர் நல்லதொரு குழந்தையினைத் தரும்போது, அவர்கள் அவரு டைய அப்பரிசை அவருக்கு போட்டியான ஒரு இணைத் தெய்வமாக ஆக்கிவிடுகின்றார்கள். கடவுள் எந்த ஒரு பங்காளிகள் கொள்வதை விட்டும், மிக உயர்ந்தவராக உள்ளார்.
[7:191]எந்த ஒன்றையும் படைத்திராத, மேலும் அவைகளே படைக்கப்பட்டவைகளாயிருக்கின்ற இணைத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர் என்பது உண்மையல்லவா?
[7:192]அவர்களுக்கு உதவி செய்யவோ, அல்லது தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவோ, இயலாத இணைத் தெய்வங்கள்?
[7:193]வழிகாட்டலின்பால் அவர்களை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். இவ்வாறாக, நீங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்தாலும் சரி, அல்லது அமைதியாக இருந்து விட்டாலும் சரி, அது அவர்களுக்குச் சமமேயாகும்.
[7:194]கடவுள்-உடன் நீங்கள் பிரார்த்திக்கும் இணைத் தெய்வங்கள் உங்களைப் போன்ற படைப்பினங் களேயாகும். போய் அவைகளைக் கூப்பிட்டுப் பாருங்கள்; நீங்கள் செய்வது சரிதான் என்றால், அவைகள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.
[7:195]அவைகளுக்கு கால்கள் இருந்து அதனால் நடக்கின்றனவா? அவைகளுக்கு கைகள் இருந்து அதனைக் கொண்டு அவைகள் தங்களை காத்துக் கொள்கின்றனவா? அவைகளுக்கு கண்கள் இருந்து அதனைக் கொண்டு அவைகள் பார்க்கின்றனவா? அவைகளுக்கு காதுகள் இருந்து அதனைக் கொண்டு கேட்கின்றனவா? கூறுவீராக, “உங்களுடைய இணைத் தெய்வங் களை அழையுங்கள், எந்த தாமதமுமின்றி என்னை வன்மையாகத் தாக்கும்படி அவை களிடம் கேளுங்கள்.
[7:196]“கடவுள் தான் என்னுடைய ஒரே இரட்சகர் மற்றும் எஜமானர்; இந்த வேதத்தை வெளிப்படுத்தியவர். அவர் நன்னெறியாளர் களைப் பாதுகாக்கின்றார்.
[7:197]“அவருடன் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக் கின்ற இணைத் தெய்வங்களைப் பொறுத்த வரை, அவைகளால் உங்களுக்கு உதவி செய்ய இயலாது, அன்றியும் அவை தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள இயலாது.”
[7:198]வழிகாட்டலின்பால் அவர்களை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் செவியேற்க மாட்டார்கள். மேலும் உம்மை அவர்கள் பார்ப்பதாக நீர் காண்கின்றீர், ஆனால் அவர்கள் பார்ப்பதில்லை.
[7:199]நீர் பிழை பொறுப்பதை வழக்கமாக்கிக் கொள் ளவும், சகிப்புத் தன்மையை ஆதரிக்கவும், மேலும் அறிவில்லாதவரை புறக்கணிக்கவும் வேண்டும்.
[7:200]சாத்தான் ஏதேனும் கிசுகிசுப்பை உம்மிடம் கிசுகிசுத்தால், கடவுள்-இடம் புகலிடம் தேடுங் கள்; அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[7:201]நன்னெறியுடனிருப்பவர்கள், சாத்தான் ஒரு திட்டத்துடன் அவர்களை அணுகும்போதெல்லாம், அவர்கள் நினைவு கூர்கின்றனர், உடனே அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக ஆகிவிடுகின்றனர்.
[7:202]அவர்களுடைய சகோதரர்கள், அவர்கள் வழி கேட்டில் செல்வதற்கு இடைவிடாமல் வசீகரிக் கின்றனர்.
[7:203]அவர்கள் வலியுறுத்தக் கூடிய ஓர் அற்புதத்தை நீர் கொண்டு வராவிடில், அவர்கள், “ஏன் அதற்காக கேட்டுக் கொள்ளக் கூடாது?” என்று கூறுகின்றார்கள். “என்னுடைய இரட்சகரிட மிருந்து எனக்கு வெளிப்படுத்தப்பட்டதையே நான் பின்பற்றுகின்றேன்” என்று கூறுவீராக. இவைகள் உம் இரட்சகரிடமிருந்துள்ள ஞான உபதேசங் களாகும், மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வழிகாட்டலும் கருணையுமாகும்.
[7:204]குர்ஆன் ஓதப்படும்பொழுது, நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, அதனைக் கவனமாக கேட்கவும், மேலும் கவனத்தில் கொள்ளவும் வேண்டும்.
[7:205]உம் இரட்சகரை நீர் உமக்குள்ளாகவும், பகிரங்க மாகவும், அந்தரங்கமாகவும், மேலும் சாந்தமாகவும் பகலிலும் மேலும் இரவிலும் நினைவு கூர்ந்திட வேண்டும்; அறியாதவராக* இருந்திடாதீர்.
அடிகுறிப்பு

[7:206]உம் இரட்சகரிடம் இருப்பவர்கள் அவரை வழிபடுவதை விட்டு மிகவும் பெருமை கொள்ள மாட்டார்கள்; அவர்கள் அவரை துதிக்கின்றனர். மேலும் அவர் முன் சிரம்பணிகின்றனர்.