சூரா 70: உயரங்கள் (அல்-மஆரிஜ்)
[70:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[70:1] வினா எழுப்புகின்ற ஒருவர் தவிர்த்து விட இயலாத அத்தண்டனையைப் பற்றி வினவக் கூடும்.
[70:2] நம்பமறுப்பவர்களுக்கு, அதனைத் தடுத்து விடக் கூடியவர் எவருமில்லை.
[70:3] கடவுள்-இடமிருந்து; மிகவும் உயர்வான உயரத்தையுடையவர்.
[70:4] வானவர்கள், தங்களுடைய அறிக்கை களுடன், ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானதொரு நாளில் அவரிடம் மேலேறு கின்றனர்.
[70:5] ஆகையால், அழகியதொரு பொறுமையை நீர் மேற்கொள்ள வேண்டும்.
[70:6] ஏனெனில் அவர்கள் அதனை மிகத் தொலை வாகக் காண்கின்றனர்.
[70:7] அதே சமயம் நாமோ அதனை மிக அருகில் காண்கின்றோம்.
[70:8] வானமானது உருக்கப்பட்ட பாறைகளைப் போல் ஆகிவிடும் அந்நாள் வரும்.
[70:9] மலைகள் கழித்த கம்பளி இழையைப் போல் ஆகிவிடும்.
[70:10] எந்த நண்பனும் தன் நெருங்கிய நண்பனைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டான்.
[70:11] அவைகளை அவர்கள் காணும் பொழுது, குற்றவாளியானவன் அந்நாளின் தண்டனையி லிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, தன் சொந்தப் பிள்ளைகளைக் கூட ஈடாகக் கொடுத்து விட முடியுமா என விரும்புவான்.
[70:12] அத்துடன் தன்னுடைய வாழ்க்கைத் துணை யையும், மேலும் தன்னுடைய சகோதரனையும்.
[70:13] அவனை வளர்த்தெடுத்த குலத்தினர் அனை வரையும் கூட.
[70:14] அது அவனைக் காப்பாற்றுமானால், பூமி யிலுள்ள அனைத்து மக்களையும் கூட.
[70:15] அல்ல; அது கொழுந்து விட்டு எரிகின்றது.
[70:16] எரிவதற்கு ஆர்வமாக.
[70:17] திரும்பிச் சென்று விட்டவர்களை அது அழைக் கின்றது.
[70:18] சேர்த்து வைத்துக் கொண்டும் மேலும் எண்ணி வைத்துக் கொண்டும் இருந்தவர்களை.
[70:19] உண்மையில், மனித இனம் கவலையுடையதாக இருக்கின்றது.
[70:20] துன்பத்தால் தீண்டப்பட்டால், நம்பிக்கை இழந்து விடுகின்றது.
[70:21] செல்வத்தால் அருள்பாலிக்கப்பட்டால், கஞ்சத் தனம் செய்கின்றது.
[70:22] வழிபடுபவர்களைத் தவிர.
[70:23] எப்பொழுதும், அவர்களுடைய தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள்.
[70:24] அவர்களுடைய பணத்தில் ஒரு பகுதி ஒதுக்கி வைக்கப்படுகின்றது.
[70:25] ஏழைகள் மற்றும் தேவையுடையவர்களுக்காக.
[70:26] அவர்கள் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை கொள்கின்றனர்.
[70:27] தங்களுடைய இரட்சகரின் கைம்மாறை அஞ்சுபவர்கள்.
[70:28] அவர்களுடைய இரட்சகரின் கைம்மாறு சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக் கூடியதல்ல.
[70:29] அவர்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றுவார்கள்.
[70:30] தங்களுடைய வாழ்க்கைத் துணைகளுடனோ, அல்லது சட்டபூர்வமாக அவர்களுக்குரிய வர்களுடனோ மட்டுமே (அவர்கள் உறவு கொள்வார்கள்.) -
[70:31] எவரொருவர் இந்த எல்லைகளுக்கப்பால் வரம்பு மீறுகின்றாரோ அவர் ஒரு பாவியாவார்-
[70:32] மேலும் நம்பிக்கையாளர்கள் தங்களுடைய வார்த்தையைக் காப்பாற்றுவார்கள்; அவர்கள் நம்பத் தகுந்தவர்களாக இருக்கின்றனர்.
[70:33] அவர்களுடைய சாட்சியம் சத்தியம் நிறைந்ததாக உள்ளது.
[70:34] அவர்கள் தங்களுடைய தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) சரியான நேரத்தில் சீராகக் கடைப்பிடிக்கின்றனர்.
[70:35] சுவனத்தில் கண்ணியமானதொரு அந்தஸ்திற்கு அவர்கள் தகுதி பெற்று விட்டனர்.
[70:36] உங்களுடன் சேர்ந்து கொள்வதிலிருந்து நம்ப மறுத்தவர்களைத் தடுத்துக்கொண்டிருப்பது எது?
[70:37] வலப்புறத்திலும், மேலும் இடப்புறத்திலும், அவர்கள் விரண்டோடுகின்றனர்.
[70:38] பேரானந்தமயமான சுவனத்தில் நுழைவதை அவர்களில் எவரும் எவ்வாறு எதிர்பார்க்க இயலும்?
[70:39] ஒருபோதுமில்லை; அவர்களை நாம் படைத் தோம், மேலும் எதிலிருந்து என்பதை அவர்கள் அறிவார்கள்.
[70:40] கிழக்குகள் மற்றும் மேற்குகளின் இரட்சகர் மீது நான் முறைப்படியான சத்தியம் செய்கின்றேன், நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கின்றோம்-
[70:41] உங்களுடைய இடத்தில் உங்களை விட மேலான மக்களை மாற்றியமைப்பதற்கு; நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டோம்.
[70:42] ஆகையால், அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அந்நாளை அவர்கள் சந்திக்கும் வரை, மூடத்தனமான தவறுகள் செய்யவும் மேலும் விளையாடிக் கொண்டிருக் கவும் அவர்களை விட்டு விடும்.
[70:43] (பலியிடும்) பீடங்களுக்கு ஓட்டி வரப்படு பவற்றைப் போல, சமாதிகளிலிருந்து விரை வாக அவர்கள் வெளியில் வருகின்ற நாள் அதுவாகும்.
[70:44] அவர்களுடைய கண்கள் தாழ்ந்தவைகளாக, இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அது தான் அவர்களுக்காகக் காத்துக் கொண் டிருக்கின்ற அந்நாளாகும்.