சூரா 71: நோவா
[71:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[71:1] நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்: “வலி நிறைந்ததொரு தண்ட னை அவர்களை துன்புறுத்துவதற்கு முன்னர் உம்முடைய மக்களை நீர் எச்சரிக்க வேண்டும்”.
[71:2] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, நான் உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப் பவராக இருக்கின்றேன்.
[71:3] “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும், அவரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று உங்களை எச்சரிப்பதற்காக.
[71:4] “அப்போது அவர் உங்களை உங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவார், மேலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத் திற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பார். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், மிகவும் நிச்சயமாக, கடவுள்-ன் நியமனமானது, அதற் குரிய நேரம் வந்துவிட்டவுடன், ஒருபோதும் தாம திக்கப்பட இயலாது”.
[71:5] அவர் கூறினார், “என் இரட்சகரே, இரவும் பகலும் என் சமூகத்தாரை நான் அழைத்து விட் டேன்.
[71:6] “ஆனால் என்னுடைய அழைப்பு அவர்களுடைய வெறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்தது.
[71:7] “உம்மால் மன்னிக்கப்படுவதற்காக அவர்களை நான் அழைத்த பொழுதெல்லாம், அவர்கள் தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல் களை வைத்துக் கொண்டனர், தங்களுடைய ஆடைகளினால் தங்களை மூடிக் கொண்டனர், பிடிவாதம் செய்தனர், மேலும் ஆணவம் கொண்டவர்களாயினர்.
[71:8] “பின்னர் அவர்களை நான் பகிரங்கமாக அழைத்தேன்.
[71:9] “பின்னர் நான் அவர்களிடம் உரக்க பிரகடனம் செய்தேன், மேலும் நான் அவர்களிடம் இரகசிய மாகவும் பேசினேன்.
[71:10] “நான் கூறினேன், ‘உங்கள் இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள்; அவர் மன்னிக்கின்றவர்.
[71:11] “‘அவர் பின்னர் உங்கள் மீது தாராளமாக மழையைப் பொழிவார்.
[71:12] “‘மேலும் பணத்தையும் பிள்ளைகளையும், மேலும் பழத்தோட்டங்களையும், ஊற்றுக்க ளையும் உங்களுக்கு வழங்குவார்’”.
[71:13] நீங்கள் ஏன் கடவுள்-இடம், பயபக்தியோடி ருக்க மனமார முயற்சி செய்யக்கூடாது?
[71:14] அவர்தான் உங்களைப் பல நிலைகளில் படைத் தவர்.
[71:15] ஏழு பிரபஞ்சங்களைக் கடவுள் அடுக்கடுக் காகப் படைத்தார் என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளவில்லையா?
[71:16] அதிலே ஓர் ஒளியாக இருப்பதற்காகச் சந்தி ரனை அவர் வடிவமைத்தார், மேலும் ஒரு விளக் காக இருப்பதற்காகச் சூரியனை அமைத்தார்.
[71:17] மேலும் கடவுள் பூமியிலிருந்து செடிகளைப் போல் உங்களைத் தளிர்க்கச் செய்தார்.
[71:18] பின்னர் அதற்குள்ளேயே உங்களை அவர் திருப்புகின்றார், மேலும் நிச்சயமாக அவர் உங்களை வெளியில் கொண்டு வருவார்.
[71:19] கடவுள் உங்களுக்கு, பூமியை வசிக்கத்தக்க தாக ஆக்கினார்.
[71:20] அதிலே நீங்கள் சாலைகளை அமைத்துக் கொள்ளலாம் என்பதற்காக.
[71:21] நோவா கூறினார், “என் இரட்சகரே, அவர்கள் எனக்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மேலும் பணமும் பிள்ளைகளும் கொண்டு அருள் பாலிக்கப்பட்ட போது, இன்னும் அதிகமாகச் சீர்கெட்டுப் போனவர்களைப் பின்பற்றினர்.
[71:22] “பயங்கரமான சூழ்ச்சிகளை அவர்கள் திட்டமிட்டனர்.
[71:23] “அவர்கள் கூறினர், ‘உங்களுடைய தெய்வங் களைக் கைவிட்டு விடாதீர்கள். வத்து, சுவாஆ, யாகூத், யாஊக், மற்றும் நஸ்ரைக் கைவிட்டு விடாதீர்கள்.
[71:24] “அவர்கள் ஏராளமானோரை வழிதவறச் செய்தனர். ஆகையால், தீயவர்களை ஆழமாக நஷ்டத்தில் மூழ்கடித்து விடுவீராக”.
[71:25] அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர் மேலும் நரக நெருப்பிற்கென நியமிக்கப்பட்டனர். கடவுள்-இடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி யாளர்கள் எவரையும் அவர்கள் காணவில்லை.
[71:26] நோவா மேலும் கூறினார், “என் இரட்சகரே, பூமியில் ஒரே ஒரு நம்ப மறுப்பவனைக் கூட விட்டு விடாதீர்.
[71:27] “ஏனெனில், அவர்களை நீர் விட்டு வைத்தால், அவர்கள் உம்முடைய அடியார்களை வழி கெடுக்க மட்டுமே செய்வார்கள், மேலும் தீயோ ரான நம்ப மறுப்பவர்களைத் தவிர வேறு எந்த ஒன்றையும் பெற்றெடுக்க மாட்டார்கள்.
[71:28] “என் இரட்சகரே, என்னையும் என் பெற்றோ ரையும், மேலும் ஒரு நம்பிக்கையாளராக என் இல்லத்தில் நுழைகின்ற எவரொரு வரையும், மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் மன்னிப்பீராக. ஆனால் நம்ப மறுப்பவர்களுக்கு அழிவைத் தவிர எந்த ஒன்றையும் தந்து விடாதீர்”.