சூரா 75: மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் (அல்-கியாமஹ்)
[75:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[75:1] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
[75:2] மேலும் பழிபோடுகின்ற ஆன்மாவின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
[75:3] அவனுடைய எலும்புகளை நாம் மீண்டும் கட்ட மைக்க மாட்டோம் என்று மனிதன் நினைக் கின்றானா?
[75:4] ஆம், உண்மையில்; அவனுடைய விரல் நுனியை யும் மீண்டும் கட்டமைக்கின்ற ஆற்றலுடையவர் களாக நாம் இருக்கின்றோம்.
[75:5] ஆனால் மனிதன் தன் முன்னால் காண் பவற்றை மட்டுமே நம்புகின்ற மனப்பான்மை யுடையவனாக இருக்கின்றான்.
[75:6] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளை அவன் சந்தேகிக்கின்றான்!
[75:7] பார்வை கூர்மையானவுடன்.
[75:8] மேலும் சந்திரன் கிரகணமானவுடன்.
[75:9] மேலும் சூரியனும் சந்திரனும் ஒன்று மற்றொன்றுடன் மோதியவுடன்.
[75:10] அந்த நாளில் மனிதன், “எங்கே தப்பிப்பது?” என்று கூறுவான்.
[75:11] நிச்சயமாக, தப்பித்தல் எதுவுமில்லை.
[75:12] அந்நாளில், உம்முடைய இரட்சகரிடம்தான், இறுதி விதி உள்ளது.
[75:13] அந்த நாளில், மனிதன் தன்னை முற்படுத்திக் கொள்ள அவன் செய்த ஒவ்வொன்றைப் பற்றி யும், மேலும் தன்னைப் பிற்படுத்திக் கொள்ள அவன் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் தெரியப்படுத்தப்படுவான்.
[75:14] மனிதன் தனக்கே நீதிபதியாக இருப்பான்.
[75:15] மன்னிப்புக்கோரல் எதுவும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.

குர்ஆனை விளக்கிக் கூறுவதிலிருந்து முஹம்மது தடுக்கப்பட்டார்

[75:16] அதனை விரைவுபடுத்துவதற்காக உமது நாவை அசைக்காதீர்.
[75:17] அதனைக் குர்ஆனாக ஒன்று சேர்க்க இருப்பது நாம்தான்.
[75:18] நாம் அதனை ஓதிக்காட்டியவுடன், அத்தகைய குர்ஆனை நீர் பின்பற்ற வேண்டும்.
[75:19] பின்னர் அதனை விளக்கிக்கூற இருப்பதும் நாமேதான்.
[75:20] உண்மையில், விரைந்தோடும் இந்த வாழ்வை நீங்கள் நேசிக்கின்றீர்கள்.
[75:21] அதே சமயம் மறுவுலகை அலட்சியம் செய்கின்றீர்கள்.
[75:22] சில முகங்கள், அந்நாளில், மகிழ்ச்சியுடன் இருக்கும்.
[75:23] தங்களுடைய இரட்சகரை நோக்கியவாறு.
[75:24] மற்ற முகங்கள், அந்நாளில், துக்ககரமாக இருக்கும்.
[75:25] மோசமானதை எதிர்ப்பார்த்தவாறு.
[75:26] உண்மையில், (ஆன்மாவானது) தொண்டையை அடையும் போது.
[75:27] மேலும் அதற்கு உத்தரவிடப்படுகின்றது; “சென்று விடட்டும்!”
[75:28] அதுதான் முடிவு என்பதை அவன் அறிவான்.
[75:29] ஒவ்வொரு காலும் மற்ற காலின் அருகே அசைவற்றுக் கிடக்கும்.
[75:30] அந்நாளில், ஒன்று கூட்டுதல், உம்முடைய இரட்சகரிடம்தான் உள்ளது.
[75:31] ஏனெனில் அவன் தர்மத்தையோ, அன்றி தொடர்புத்தொழுகைகளையோ (ஸலாத்) கடைபிடிக்கவில்லை.
[75:32] ஆனால் அவன் நம்பமறுத்தான், மேலும் திரும் பிச் சென்றான்.
[75:33] தன்னுடைய குடும்பத்தாருடன், அவன் ஆணவ மாக நடந்து கொண்டான்.
[75:34] நீ இதற்கு தகுதியானவனாகி விட்டாய்,
[75:35] உண்மையில், நீ இதற்குத் தகுதியானவனாகி விட்டாய்.
[75:36] மனிதன் தான் ஒன்றுமேயில்லாமல் போகப் போகின்றோம் என்று நினைக்கின்றானா?
[75:37] வெளித்தள்ளப்பட்ட விந்தின் ஒரு துளியாக அவன் இருக்கவில்லையா?
[75:38] பின்னர் அவர் அதிலிருந்து ஒரு கருவை உருவாக்கினார்!
[75:39] ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அதனை அவர் ஆக்கினார்!
[75:40] பின்னர் அவர் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப் பிக்கும் திறனற்று இருக்கின்றாரா?